என்ன கொடுமை சார் இது? 10(b)

#1
வெண்மதி பேபி பிங்க் நிறத்தில் பாவாடை, தாவணி அணிந்திருந்தாள். தாவணியிலும், ப்ளவுஸிலும் ஆரி வொர்க் செய்திருந்த அந்த உடையில் அப்சரஸ் போல் காண்போரின் கண்களை நிறைத்தாள்.


மணமகன் அறைக்கு இழுத்து சென்றவன்.. அவள் நெற்றியோரம் சிலும்பிக் கொண்டிருந்த முடிகளை விரல்களால் ஒதுக்கி கொண்டே, "ஹேய் போங்கு.. டுடே யூ லுக் கார்ஜியஸ்டி.." என்றான்.


"அப்ப இத்தன நாளும் கேவலமா இருந்தேனா?"


"அத என் வாயால வேற நான் சொல்லணுமா?" என்று கேட்டு.. அவளிடமிருந்து சில பல பரிசுகளை பெற்று கொண்டான்.


"மங்க்கி, டாங்க்கி.. ஆன்ட்டிகிட்ட ஏண்டா என்னை இன்ட்ரடியூஸ் பண்ணி விட மாட்டேங்குற?"


நெற்றி முட்டி, "ரெண்டு பேய்ங்களயும் தனிதனியா சமாளிக்கவே இங்க அல்லு விடுதாம்.. இதுல ரெண்டு பேயும் ஒண்ணா சேர்ந்தா என் நிலைமை அந்தல சிந்தல ஆகிடாது?" என்றான், அவள் புருவங்களை இதழ்களால் வருடிக் கொண்டே..!


இதழ் வருடலில் சிலிர்த்து கொண்டிருந்தவள்.. அவன் பேசியதைக் கேட்டு, "என்னடா சொன்ன.. நான் பேயா..?" கேட்டு கொண்டே.. அவனின் புதிய ரேமண்ட் ஷர்ட்டைப் பிடித்து இழுத்து, தள்ளி விட்டு, வயிற்றில் பன்ச் செய்து என.. கோபம் கொண்டு மூச்சிறைத்து நின்றாள்.


"கூல் கூல் டார்லிங்.. உண்மைய தானடி சொல்றேன்..?"


"நீ அடங்க மாட்ட.. இரு நானே போய் ஆன்ட்டிகிட்ட பேசிக்கறேன்.." என்று வெளியேறப் போனவளைப் பிடித்து இழுத்து.. "உங்க அண்ணா சொன்ன டைம் முடிய தான் இன்னும் அஞ்சு மாசம் இருக்கே.. அதுவரை நான் கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா விட மாட்ட போலயே.." என்று அலுத்துக் கொண்டான்.


"ஏன் நாங்க இன்ட்ரடியூஸ் ஆகறதுல உனக்கு என்ன இஷ்யூ?"


"ஒண்ணுமில்லயே.. ஒண்ணுமே இல்ல.." என்று அவள் இடை வளைத்து இறுக்கி.. அதற்கு மேல் அவளைப் பேச விடாமல்.. அவள் சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை செவ்வனே செய்தான்.


மூளையின் செல்களை அசமந்தமாக்கி.. உடலின் செல்களை மட்டும் விழிக்கச் செய்து கொண்டிருந்தவனிடம் இருந்து.. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மீட்டு கொண்டு திமிறியவள்.. "டேய் ஆதூ.. கேடிடா நீ.. பேசிட்டு இருக்கும் போதே என்ன காரியம் பண்ணி வைக்கற..?" என்று அதற்கும் மொத்தினாள்.


ஆதவனின் அன்னையிடம் பேசியே தீர வேண்டும் என ஒற்றைக் காலில் நின்றவளை.. வேறு வழியின்றி.. பார்கவியிடம் அழைத்துச் சென்றான்.


பார்கவி, தன்னருகே வந்து நின்ற மகனிடம்.. "என்னை இங்க உட்கார வச்சிட்டு நீ எங்கடா போய் தொலஞ்ச? எனக்கு யாரையுமே தெரியல.. பேச்சு துணைக்கு கூட ஆள் இல்ல.." என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டார்.


"அதனால தான் அந்த ஆரஞ்ச் சாரி கட்டிருக்க ஆன்ட்டி அரண்டு போய் அந்த பக்கம் போய் உட்கார்ந்தாங்களா?"


"ஆமா.. சும்மா ரெண்டு வார்த்தை பேசுவோம்னு இந்த புடவைல நான் நல்லாயிருக்கேனா? இல்ல கல்யாணப் பொண்ணு போட்டிருக்க மாதிரி லெஹங்கா போட்டா நல்லாயிருக்குமானு தான் கேட்டேன்.. மூஞ்சிய திருப்பிக்கிட்டு அந்த பக்கம் போய் உட்கார்ந்துட்டா.." என்று முகத்தை தோளில் இடித்து கொண்டார்.


ஆதவன் அருகிலிருந்த வெண்மதி பற்களால் உதட்டை இறுக்கமாகக் கடித்து சிரிப்பை அடக்கினாள்.


"உங்கள கல்யாண வீட்டுக்கு கூட்டிட்டு வந்தேனா? இல்ல ஃபேஷன் ஷோக்கு கூட்டிட்டு வந்தேனா? எப்ப பாரு யார்கிட்டயாவது இது நல்லாயிருக்கா? அது நல்லாயிருக்குதானு நொய் நொய்னுட்டே இருக்கணுமா? மனசுல இளமை ஊஞ்சலாடுதுனு நினைப்பு.." என்று கடுப்படித்தான்.


"போடா.. பொறாமை பிடிச்சவனே.. வெவ்வவெவ்வவெவ்வ.."


"நானு? உங்களப் பார்த்து? பொறாமை?" ஆதவனின் உடல்மொழியில் வெண்மதி அதற்கு மேல் சிரிப்பை அடக்க முடியாமல்.. அருகிலிருந்த சேரில் (chair) அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தாள்.


இத்தனை நாளும் எப்போதும் தன்னை வெறுப்பேற்றும் ஆதவனையே இன்று ஒருவர் டென்ஷன் செய்கிறார்.. தனக்கு ஒரு மகத்தான கம்பெனி கிடைத்துள்ளது என்பதில் ஏகக் குஷியாகிப் போனாள்.


அவன் அறிமுகம் செய்யாமலே.. இவளாகவே பார்கவியிடம், "ஆன்ட்டி.. இந்த சாரி கொஞ்சம் ஓல்டு டிசைனாத் தெரியுது.. ஆனாலும் இதுல நீங்க ரொம்ப யங்கா இருக்கீங்க ஆன்ட்டி.." என்றவளைப் பார்த்த ஆதவன், 'அடி பாதகத்தி' என வாயில் கை வைத்து அதிர்ச்சியாகப் பார்த்தான்.


"நிஜமாவா சொல்ற? ஆமா.. நீ இவ்ளோ அழகா இருக்கியே.. எப்டிமா?" என்று அவள் கன்னம் வருடி அதிசயித்தார்.


"அது நான் அப்புறம் சொல்றேன் ஆன்ட்டி.. இப்ப வாங்க நம்ம சாரி கலெக்ஷன்ஸ் பார்ப்போம்.. நியூ டிசைன்ஸ் ஆன்லைன்ல நிறைய கிடைக்குது.." என்று ஆதவனை இடித்துத் தள்ளி விட்டு.. தன் மொபைலுடன் பார்கவியின் அருகே அமர்ந்து விட்டாள்.


'ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா… ஒண்ணு கூடிட்டாய்ங்க!!! இதுக்கு தான இத்தன நாளும் மீட் பண்ண விடாம பார்த்துட்டு இருந்தேன். இனி நம்ம இன்ட்ரடியூஸ் பண்ணி வைக்கவே தேவையில்ல. அய்யய்யோ.. ஆதவா.. உன் பர்ஸ பனால் ஆக்கப் போகுதுங்கடா. இன்னும் கொஞ்ச நேரம் இங்க நின்னா க்ரெடிட் கார்ட் நம்பர் கேக்கும்ங்க.. நைஸா எஸ்ஸாகிடு' என்று மனதிற்குள் அலறிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நழுவினான், ஆதவன்.
 

Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top