• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 10

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
ப்ருந்தா ப்ரியனிடம் சொன்னதைப் போலவே.. தன் தந்தையிடம் தங்கள் காதலைக் கூறி, திருமணத்திற்கு சம்மதம் வாங்கி விட்டாள். பெரிதாக காதலை எதிர்க்காத ப்ருந்தாவின் அப்பா கிருஷ்ணன்.. ப்ரியனை மட்டுமல்லாமல்.. அவன் குடும்பத்தினரைப் பற்றியும் நன்கு விசாரித்த பின்னரே அவளின் காதலுக்கு பச்சை கொடி காட்டினார்.


அந்த வாரத்திலேயே ஒரு நாள் ப்ரியன்.. தன் வீட்டில் கெட் டூகெதர் பார்ட்டி அரேன்ஞ் செய்து ஆதவனையும், வெண்மதியையும் அழைத்திருந்தான். கூடவே ப்ருந்தாவையும் அழைத்து தன் அம்மா பல்லவியிடம் இவள் தான் உங்கள் மருமகள் என்று கூறி விட்டான்.


ப்ருந்தாவிற்கு வெண்மதியின் மீதிருந்த கோபம்… அவளிடம் பேச ஆரம்பித்ததும் கரைந்து காணாமல் போனது. அவளின் விளையாட்டுதனம் கலந்த பேச்சில் ஈர்க்கப்பட்டாள்.


இருவரும் சேர்ந்து பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த ஆதவன் எங்கே தான் ப்ருந்தாவிடம் ரெஸ்டாரண்டில் வம்பு வளர்த்ததை வெண்மதியிடம் கூறி விடுவாளோ என.. திருதிருவென முழித்து கொண்டு நின்றான்.


அவன் படும் பாட்டைப் பார்த்த ப்ரியன் தனியாக அவனை அழைத்து சென்று, "உன்னை பத்தி நான் அம்முகிட்ட சொல்லிருக்கேன்டா.. அப்டி ஒண்ணும் உன்னை போட்டு குடுத்துட மாட்டா.. நீ வயித்து வலிக்காரன் மாதிரி மூஞ்சிய வச்சிக்காம கொஞ்சம் நார்மலா இரு மச்சி.." என்று கூறி விட்டு, அடக்கமாட்டாமல் சிரித்தான்.


"உனக்கு என்னைப் பார்த்தா சிரிப்பாணியா இருக்குதா?" என்று இவன் அவனை மொத்தினான்.


ப்ருந்தாவின் பாந்தமான அழகில் பல்லவி அசந்துவிட்டார் என்றால்.. அவளின் மென்மையான குணத்தில் வீழ்ந்து விட்டார் என்றே சொல்லலாம். எனவே, ப்ரியன் கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும்.. எங்கே மகன் மீண்டும் சண்டை, ப்ரேக்கப் என்று மனம் மாறி விடுவானோ என பயந்தவர்.. ப்ருந்தா தன் தந்தையிடம் பேச அழைத்த போது உடனே தலையாட்டி விட்டார்.


பின்பு, பெரியவர்கள் பேசி பத்து நாட்களில் எல்லாம் கல்யாணம் வைக்க முடியாது.. அடுத்த மாத இறுதியில் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம் என முடிவு எடுக்கப்பட்டு, இன்று இதோ.. இந்த சுபயோக சுபதினத்தில்.. ப்ருந்தாவை தன்னுடையவளாக்கிக் கொண்ட பூரிப்பில்.. கேமரா மேன் அலைக்கழிப்பதையும் அருண் ஐஸ்கிரீம் தந்ததைப் போல்.. முகம் கொள்ளா புன்னகையுடன்.. ஏற்று நின்றிருக்கிறான் ப்ரியன்.


உடலெங்கும் கற்கள் பதித்த பேர்ல் நிற லெஹங்காவில் தேவதையாய் ஜொலித்த ப்ருந்தாவை திருட்டுப் பார்வைப் பார்த்து கொண்டிருந்தவன்.. சட்டென முகம் மாறிப் போய்.. தூரத்தில் ஒரு பெண்ணிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்த ஆதவனை, தன்னருகே நின்றிருந்த சிறுவன் ஒருவனை அனுப்பி அழைக்க செய்தான்.


சிரித்து கொண்டே வந்த ஆதவன், "எதுக்குடா கூப்பிட்ட? ஆமா.. அந்த பொண்ணு ப்ருந்தாவுக்கு சொந்தமா? நல்லா கம்பெனி குடுக்கறாங்க மச்சி.. செத்த நேரம் பேசலாம் நினைச்சா.. அதுக்குள்ள கூப்பிட்டுட்ட..? வேற ஒண்ணுமில்ல.. என்னடா நம்ம ஃபேமிலி மேன் ஆகிட்டோமே.. இவன் மட்டும் இன்னும் பேச்சிலராவே இருந்து.. பொண்ணுங்கக்கிட்ட கடலை ஃபேக்டரி நடத்தறானேனு உனக்கு ஜெலஸ்டா.. அதுவும் அந்த பொண்ணு உனக்கு மச்சினிச்சி முறை வருது.. எங்க நம்ம மச்சினிச்சி இவன் அழகுல மயங்கிடுவாளோனு ஃபியர்.. கரெக்ட்டா? மோர் ஓவர்…"


அதற்கு மேல் பொறுக்க முடியாமல்.. வேகமாக ஆதவனின் வாயை மூடிய ப்ரியன்.. "இன்னொரு வார்த்தை பேசின.. ஃப்ரெண்ட்னு பார்க்காம கொன்னுடுவேன்.." என்றான், எச்சரிக்கும் குரலில்..!


"அடக் கொலகார பாவி.. எதுக்குடா என்னைக் கூப்பிட்ட? அத சொல்லு மொத.."


"எங்கடா சொல்ல விடற? மொத ப்ருந்தாவுக்கு டச் - அப் பண்ணிட்டு இருக்க உன் ஆள அந்த பக்கம் கூட்டிட்டு போ.."


ஆதவன் வெண்மதியைத் திரும்பி பார்த்தான். அவள் ப்ருந்தாவிடம் என்னவோ பேசி சிரித்தவாறே.. முகத்தில் துளிர்த்திருந்த வேர்வையை கர்ச்சீஃபால் ஒற்றிக் கொண்டிருந்தாள்.


"எதுக்குடா..? இருக்கட்டும்.. ப்ருந்தாவுக்கு ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்.."


"வேணாம் மச்சி.. ப்ருந்தா சூது வாது தெரியாதவடா.. வெண்மதி மாதிரி கிடையாது.. அவ பாட்டுக்கு எதையாவது சொல்லி குடுத்துடப் போறா ஆதவ்.. உன் கைய காலா நினைச்சு கேக்கறேன்.. அவள கீழ இறங்க சொல்லு மச்சி.." என்று ஆதவனின் கைகளை பிடித்துக் கொண்டான்.


ஆதவன் கண்களில் சிகப்பு சீரியல் பல்புகள் போட்டதைப் போல்.. தீப்பொறி பார்வைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.. யோசனையுடன் இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து கொண்டே மேடையேறினான் விஷ்வா.


ப்ரியன்.. பல்லவியிடம், 'விஷ்வா வேறொரு பெரிய வெளிநாட்டு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து விட்டான். இது அவனுக்கொரு நல்ல வாய்ப்பு. இனி நம் கம்பெனியில் பார்ட்னர்ஷிப் இல்லை' என்று மட்டும் தான் கூறியிருந்தான். துரோகியாய் மாறிய நண்பனைப் பற்றி வேறு எதுவும் பேசவும் விரும்பவில்லை.


பல்லவிக்கு விஷ்வாவின் வீட்டு நிலைமை நன்றாக தெரியும். விஷ்வாவின் அப்பா ஒரு குடிகாரர். அம்மா தான் காய்கறிகள் விற்று அவனைப் படிக்க வைத்தார். ஆதலால்.. பல்லவி ப்ரியனிடம் மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை. ஆனால், இத்தனை நாளும் தன் மகனின் நண்பனை தன் மகனாகவே நினைத்திருந்தவர்.. மகனின் திருமணத்திற்கு அவன் குடும்பத்தினரை அழைக்காமல் எப்படி இருப்பார்? இந்த விஷயத்தில் ப்ரியனும் எதுவும் செய்வதற்கு இல்லை.


இப்போது இதோ.. மேடைக்கு தன் அன்னையுடன் வந்து கொண்டிருக்கிறான். விஷ்வாவின் அம்மா தம்பதிகளை ஆசிர்வதித்து பரிசுப் பொருளை ப்ரியன் கையில் தந்து விட்டு.. விஷ்வாவைக் காட்டி, "இவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லக்கூடாதா பிரியா? உன் கூட இருந்தா பொறுப்பா இருப்பான்.. கொஞ்ச நாள்ல இவனுக்கும் ஒரு பொண்ணு பார்த்து முடிச்சு வச்சிட்டா நிம்மதினு நினைச்சேன்.. இப்ப என்னடான்னா தனியா வேலை பார்க்கப் போறேன்னு சொல்றான்.. இதுக்கா நான் ரோட்டோரமா.. வெயில்ல கிடந்து காய் வித்தேன்?" என்று கவலைப்படுவதற்காகவே ஜென்மம் எடுத்த அந்த தாய் வேதனையோடு ப்ரியனிடம் புலம்பினார்.


ப்ரியனுக்கு நெஞ்சோரம் ஈரம் கசிந்தாலும்.. விஷ்வாவின் செயலால் கசிந்த இரத்தமே இன்னும் உலராமல் இருக்கும் போது.. தன்னால் என்ன செய்து விட முடியும் என அமைதியாகவே இருந்தான்.


தன்னை விட ப்ரியனையே உயர்த்தி பேசும் தாயின் மேல் எப்போதும் போல் இப்போதும் விஷ்வாவிற்கு கட்டுக்கடங்காமல் கோபம் கொப்பளித்தது.


"ம்மா.. வந்த இடத்துல என்னத்த பேசிட்டு இருக்கீங்க..? கிஃப்ட்ட குடுத்தாச்சு தான? கீழ இறங்குங்க.." என்று கையைப் பிடித்து கீழே விட்டு விட்டு வந்தவன்.. ஆதவன் கண்களைக் கூர்மையாய் பார்த்துக் கொண்டே, "என்ன மிஸ்டர் ஆதவன்.. எங்க இன்ஜினியர உங்களுக்கு முன்னாடியே தெரியும் போலயே.." என்று கேட்டான்.


ப்ரியன், "என்கிட்ட கேளுடா ஃப்ராடு.. ரொம்ப நல்லாவே தெரியும்.. என்னாங்குற இப்ப?" என்று அடிக்குரலில் உறுமினான்.


"ஓ! அப்ப ரவிக்கு எதுவும் தெரியாது?" என்று.. தன்னை புத்திசாலி என்றெண்ணி உளறி விட்டான்.


'இவன் இப்படி ரவியோடு சம்மந்தப்படுத்தி நினைத்துக் கொண்டிருக்கிறானா?' என்று இருவரும் சுதாரித்து கொண்டனர்.


"ஏன் தெரியாது விஷ்வா சர்..? எங்கள இன்ட்ரடியூஸ் பண்ணி விட்டதே ரவி சர் தான்.. என்னை உங்ககிட்ட அனுப்பினதும் அவர் தான்.. ஃபங்கனுக்கு கூட வந்துருக்காரு.. வாங்க பேசி ரொம்ப நாளாச்சுனு என்கிட்ட சொன்னீங்களே.. வாங்க நான் கூட்டிட்டு போறேன்.." என்றான் ஆதவன்.


உள்ளுக்குள் சற்று பயம் தோன்றினாலும்.. "பரவால்ல.. என் ஃப்ரெண்ட்ட பார்த்துக்க எனக்கு தெரியும்.." என்று கெத்தாகவே கூறி.. மேடையை விட்டு கீழே இறங்கினான்..


"இனி உன் திசைக்கே வர மாட்டான்னு நினைக்கிறேன்.."


ஆமோதிப்பாய் தலையசைத்துப் புன்னகைத்த ப்ரியன்.. ப்ருந்தாவைப் பார்த்தான்.


விஷ்வா இருவரிடமும் பேசுவதைப் பார்த்தவள்.. மீண்டும் ஏதேனும் ப்ரச்சனை செய்வானோ என கலக்கத்தோடு பார்த்திருந்தாள். அவளை ப்ரியன் கண்களால் சமாதானப்படுத்திக் கொண்டிருந்த இடைவெளியில்.. ஆதவன் வெண்மதியை கைப் பிடித்துத் தனியே தள்ளிக் கொண்டு போனான்.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super...???
Appada marriage mudunchuthu...??
Lovely priyan..??
Suthu vathu theriyatha ponnu brindha venmathi ketothutova ila ... Ava kettorukanum ???
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
நைஸ்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Nice epi??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top