என்ன கொடுமை சார் இது? 2 (b)

Sanshiv

Author
Author
SM Exclusive Author
#12
ஆதவன் செம கேரக்டர்... ரொம்ப interestingah கொண்டு போறீங்க. Keep rocking
 
#14
.....ஹா ஹா செம செம நான் படிக்கும் போது ஆதித்யன் அப்படினு கெஸ் பன்னேன் ஆனா ஆதவன் ....நைஸ் ........ரெண்டும் செம ஜோடி....... ப்ரியன் மனநிலையை அப்படியே மாதிட்டங்க..... சூப்பர் சூப்பர்
 
#16
செம ஜாலியான எபி..
.ரீட் பண்ண பிறகு
குதூகலம் குற்றலா அருவியாய் கொட்டுகிறது...🤗🤗🤗🤗🤗
ஆதவன் .. Awesome man...😍😍.
 

Yuvakarthika

Author
Author
SM Exclusive Author
#19
வெளியே.. ப்ரியன் இன்னும் தூங்காமல் லேப்டாப்பில் நிறுவனத்தில் தான் ஏமாற்றப்பட்ட விவரங்களைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். ‘கண்டிப்பா நமக்கு வழி இல்லாமப் போகாது’ காதில் வெண்மதியின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது.

திடீரென, “ஹாய் ப்ரியன்..” என்ற உற்சாகக் குரலில் தூக்கி வாரிப் போட்டுக் கொண்டு நிமிர்ந்தான். தன் அருகில் மடியில் அமராதக் குறையாக இடித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தவனைப் பார்த்ததும் தானாய் புன்னகை மலர்ந்தது, அவன் இதழ்களில்..!

“ஹாய்.. என்ன உங்க பேய்க்கு பேயோட்டியாச்சா?”

“போங்க பாஸ்.. எனக்கு வெக்க வெக்கமா கம்மிங்..” என்று ப்ரியனின் தோளில் முகம் சாய்த்து கொண்டான்.

“ஹாஹா..”

“அது சரி.. நானெல்லாம் வேலை நேரத்துலயே ஒழுங்கா வேலை செய்ய மாட்டேன்.. நீங்க என்ன இப்டி மிட் நைட்ல மிச்சமில்லாம வேலைய முடிச்சிட்டு இருக்கீங்க போலயே?”

“அது.. கொஞ்சம் கம்பெனி டீடெய்ல்ஸ்..”

“கம்பெனி? என்ன கம்பெனி பாஸ்? ஐஸ் கம்பெனியா?”

“ஹாஹா.. இல்ல.. கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி”

“ஊஊ.. வாவ்!!!” என்று கண்களை விரித்தவன்.. நம்ம லைனா நீங்க? ப்ரியன்.. இப்ப நம்ம நெருங்குனப் பங்காளி ஆயிட்டோம்” என்று ஹைஃபை கொடுத்தான்.

“அப்ப நீங்களும் கன்ஸ்ட்ரக்ஷன் ஃபீல்டு தானா?”

“ஆமா பாஸ்.. ஏண்டா இதப் படிச்சோம்னு தமிழ்நாட்டுல அம்புட்டு பயலும் ஃபீல் பண்றப் படிப்பு.. எங்களுக்கு வேலை கிடைக்குதோ இல்லயோ.. எங்கள வச்சு மீம் க்ரியேட்டர்ஸ்க்கு நல்லா வேலை கிடைக்குது.. ஹூம்ம்..”

“ஹாஹா.. இன்ஜினியரா நீங்க?”

“சரியாப் போச்சு.. அதத் தான இவ்ளோ நேரம் சொல்லிட்டு இருக்கேன்..?”

“ஓகே, எந்த கம்பெனில வொர்க் பண்றீங்க?”

“சென்னைல ‘தேவேந்திரன் கன்ஸ்ரக்ஷன்ஸ்’. தெரிஞ்சிருக்கணுமே உங்களுக்கு..”

“வாட்!!! தேவேந்திரன் கன்ஸ்ட்ரக்ஷன்ஸா? அது என் ஃப்ரெண்டோட கம்பெனியாச்சே..”

“யாரு? ரவீந்திரன்?”

“எஸ்.. தேவா அங்கிளோட ஒரே பையன் அவன் தான? ஹி இஸ் மை பெஸ்ட் ஃப்ரெண்ட்..”

“அவர் தான் என்னோட பாஸ்..”

"ஓ!! தேவா அங்கிள் ஃபீல்டு பத்தி எனக்கு நிறைய அட்வைஸ் குடுப்பார்.. நைஸ் மேன்.." என்ற ப்ரியனின் மனம்.. 'அத்தனை அட்வைஸைக் கேட்டும் நிறுவனத்தைக் கோட்டை விட்டு விட்டோமே' என அடித்துக் கொண்டது. பின் அவனாகவே, "பாருங்களேன்.. நீங்க உங்க பேரயே சொல்லல..” என்றான்.

“ஹாஹாஹா.. 'உஃப்' என்று ஊதினால் அணையும் தீக்குச்சி அல்ல இவன்.. ஆயிரம் கரங்கள் கொண்டு மறைத்தாலும் மறையாதவன் இவன்.. இவன் இல்லயேல் அண்ட சராசரமே இல்லாமல் போகும்.. ஹாஹாஹா..”

சற்று முன் வெண்மதியிடம் வம்பு வளர்த்தவனைப் பார்த்திருந்தாலும்.. இப்போது ஒரு மாதிரி திருதிருவென முழிக்கவே செய்தான், ப்ரியன்.

‘என்னக் கொடுமை சார் இது? பேர தானக் கேட்டேன்!!!’

“புரியல.. சூர்யாவா உங்க பேரு?”

“அது தான் இல்ல.. ஆதவன்..” என்றான், புருவங்களை உயர்த்தி..!

“ஆதவன்?" 'வெண்மதி - ஆதவன்..' என்று சொல்லிப் பார்த்து விட்டு.. “தட்’ஸ் நைஸ்” என்றான், முகம் மலர..!

“அந்த போங்கு என் பேருக்காகவே என்னை லவ் பண்ணுதுங்க, ப்ரியன்..”

ப்ரியன், “ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிட்டு ’ங்க’ போடறியே ஆத..” என்று சொல்லி வாய் மூடும் முன்..

“ஆமாண்டா ப்ரியன்.. நானே சொல்லணும் நினைச்சேன்டா.. ஃப்ரெண்ட்ஸா ஆனதுக்கப்புறம்டா மச்சிய விட்டுட்டு ‘ங்க’ போட்டோம்னாடா.. நட்புக் குத்தம் ஆகிடும்டா. இப்ப நீ சொல்லிட்ட தானடா.. இனி பாருடா.. உன்னை டால்டா ஆக்காம விட மாட்டேன்டா.. ப்ரியன்டா.. ஈஈஈ..”

அவன் ‘ஆமாண்டா’ என்று ஆரம்பிக்கையில் திகைப்பாய் பார்த்திருந்த ப்ரியன்.. பேசி முடிக்கையில் கடகடவென சிரிக்க ஆரம்பித்துவிட்டான்.

“ஹாஹா.. யூ ஆர் இன்ட்ரஸ்டிங் மேன்”

இருவரும் சிறிது நேரம் பேசி முடித்து.. ஆதவன் கிளம்பும் போது.. “வா ஆதவ்.. கீழ எங்க வீட்டு வழியா போகலாம்..” என்றான்.

“யாரைப் பார்த்து வாசல் வழியாகப் போக சொன்னாய்? மூச்சைப் பிடித்து.. சுவரேறி குதித்து.. சுற்றும் முற்றும் பார்த்து யார் கண்ணிலும் படாமல்.. கைகள் நோக பைப்பைப் பற்றி.. மேலேறி மொட்டை மாடியில் குதித்து.. காதலியைக் காண ஓடோடி வந்த இந்த சுத்த வீரனைப் பார்த்தா வாசல் வழியேப் போகச் சொல்கிறாய்..? வேதனை.. அவமானம்.. வெட்ட்ட்...கம்..!” என்று கைகளைக் குவித்து நெற்றியில் குத்திக் கொண்டான்.

தான் பேசுவதை விழி மூடாமல் பார்த்து கொண்டிருந்த ப்ரியனின் முன் சொடுக்கு போட்ட ஆதவன், “ப்ரியன்.. ஆர் யூ ஆல்ரைட்?” என்று கேட்டான்.

“ஹ்ம்ம்.. நான் நல்லா தான் இருக்கேன்.. பட், வெண்மதிய நினைச்சா தான் பாவமா இருக்குது..”

“ம்க்கும்” என்று இதழ் வளைத்தவன்.. “அவக்கிட்ட மாட்டிட்டு முழிக்கற நான் தான் பாவம்.. போக போக நீயே புரிஞ்சிக்குவ..” என்று கூறி விட்டு.. நேரமாகி விட்டதென தன்னோடு தங்க சொன்ன ப்ரியனை மறுத்து விட்டு.. சொன்னது போலவே.. பைப் வழியே கீழிறங்கி.. கேட்டை (gate) தூரத்தில் இருந்து ஓடிச் சென்று.. ஒரே தாவலில் தாண்டி அந்த பக்கம் குதித்து சென்றவனை.. மேலிருந்து புன்னகை மாறாமல் பார்த்திருந்தான், ப்ரியன்.

ஏதோ ஒரு நிம்மதி உணர்வில் தளும்பிய மனதோடு கண்ணயர்ந்தாலும்.. ஓரத்தில் ப்ருந்தாவின் நினைவு முள்ளாய் குத்திக் கொண்டே இருந்தது.
Semma update ppa 😍dialogues ellam alluthu👍😂😂😂😂
 

Advertisements

Latest updates

Top