• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

என்ன கொடுமை சார் இது? 6 (a)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

ஶ்ரீவிஜய்

மண்டலாதிபதி
Joined
May 13, 2019
Messages
138
Reaction score
685
Location
Chennai
ப்ரியன் தன் காதல் கதையைக் கூறுமாறு கேட்டதும்.. ஆதவன், "நிஜமாகவே தெரிஞ்சுக்கணுமா? அது பெரிய கதையாச்சே.." என்றான்.


"பரவாயில்ல சொல்லு.. இன்னிக்கு நான் ஃப்ரீ தான்.."


"அப்ப சரி.. வா.. நம்ம வெளில போய் பேசலாம்.. இங்க இந்த ஓல்டு லேடி ஒட்டு கேக்கும்.."


"ஏண்டா.. அம்மாவுக்கு இன்னும் வெண்மதி பத்தி தெரியாதா?"


"தெரியாது மச்சி.. தெரிஞ்சா இப்பவே வீட்டுக்கு கூட்டிட்டு வர சொல்லிடுவாங்க.. அவளும் எப்ப வரட்டும்னு கேட்டுட்டே இருக்கா.. ரெண்டும் சேர்ந்தா என் நிலைமை என்னாகும்? கொஞ்சம் யோசிச்சு பாரேன்.. அதான் கொஞ்ச நாளாவது நிம்மதியா இருந்துட்டு போலாமேனு சொல்லல.."


"சரி வா.. அப்டியே வெளில டின்னர் முடிச்சிட்டு வந்துடலாம்.."


ஆதவன் - வெண்மதியின் காதல் கதையைக் கேட்ட ப்ரியன்.. "அப்ப இந்த ரெஸ்டாரண்ட் தான் ஃபர்ஸ்ட் டைம் உன் ஆளக் கூட்டிட்டு வந்தியா?" என்று கேட்டான்.


"ஆமா மச்சி.. நீ கேட்டதும் சென்டிமென்டலா இருக்குமேனு தான் இங்க வந்தேன்.."


ப்ரியன், "பார்டா.. நீ கூட சென்டிமென்ட் பார்ப்பியா.. ஹய்யோ.. தெய்வமே.. வெக்கம் வேற படறானே.. ஹாஹாஹா.." என்று வாய்விட்டு சிரித்துக் கொண்டே.. "அதான் அவங்க அண்ணா ஓகே சொல்லிட்டாரே.. அப்புறம் ஏன் இன்னும் கல்யாணம் பண்ணிக்காம இருக்கீங்க..?" என்று கேட்டான்.


"அவ இன்னும் குழந்தையாம்.. ரெண்டு வருஷம் போகட்டும்னு சொல்லிட்டார். அவர் சொன்ன டைம் முடிய இன்னும் ஆறு மாசம் இருக்குது. அதான் என் நிலைமை இப்டி பைப் ஏறி குதிக்க வேண்டியதா இருக்குது.." என்று கன்னத்தில் கை வைத்துக் கொண்டான்.


"யாரு? வெண்மதி குழந்தையா? இன்னிக்கு நான் போலீஸ்னு வாய் கூசாம பொய் பேசறாடா.." என்று அதிர்ச்சியானக் குரலில் கூறிக் கொண்டிருக்கையில்..


"இருடா வர்றேன்.." என்று எழுந்த ஆதவன்.. இவர்களதில் இருந்து இரண்டு டேபிள் தள்ளி இருந்த டேபிள் சென்று.. அங்கிருந்த பெண்ணிடம்.. "ஹாய்.. ஐ'ம் ஆதவன்.. இவ்ளோ நேரம் என்னைத் தான பார்த்துட்டு இருந்தீங்க? இங்க இருந்து ரொம்பக் கஷ்டப்பட்டு எக்கி எக்கி பார்த்துட்டு இருந்தீங்களா.. அதான் நீங்க படறக் கஷ்டம் தாங்காம நானே உங்க முன்னாடி வந்துட்டேன்.. இப்ப நல்லா தெரியறேன் தான? நல்லாவே பார்த்துக்கோங்க.. நான் ஒண்ணும் தப்பாலாம் நினைச்சுக்க மாட்டேன். அப்புறம் நான் என் பேர சொன்ன மாதிரி நீங்களும் உங்க பேர சொன்னா.. கூப்பிடறதுக்கு வசதியா இருக்கும்.. அதுக்கு தான். யுவர் குட் நேம் மேம்..?" என்று வழக்கம் போல் தன் சேட்டையை ஆரம்பித்து விட்டிருந்தான்.


அவன் எழுந்து சென்றதும்.. எங்கே போகிறானெனத் திரும்பி பார்த்த ப்ரியனின் விழிகள்.. முதலில் திகைப்பைக் காட்டி, ஆதவனின் பேச்சில் சிரிப்பை வெளிப்படுத்தி, அதற்கு எதிர்வினையாய் அப்பெண்ணின் மிரண்ட பார்வையை உள்வாங்கி, அவள் விழிகள் தன்னைத் துணைக்கழைத்ததில் கர்வப்பட்டு, என வர்ண ஜாலங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.


அவளின் மீதிருந்த பார்வையை அகற்றாமல்.. மெதுவாக எழுந்து சென்று ஆதவனின் அருகில் போய் நின்றான்.


இவனைப் பார்த்த ஆதவன்.. "பாரு மச்சி.. வர வர.. எங்க போனாலும் இந்த பொண்ணுங்க தொல்லை கொஞ்சம் ஜாஸ்தியா தான் ஆகிடுச்சு.. இருந்தாலும் என்னை மாதிரி அழகா பொறந்த பசங்க அதுக்கெல்லாம் கவலைப்பட்டுட்டு இருந்தா முடியுமா..? பாவம் அந்த பொண்ணுங்க மனசு உடைஞ்சிட மாட்டாங்க..? அது தான் என் கவலைய ஒரு ஓரமாத் தூக்கி வச்சுட்டு.. இவங்க மனசு நோகக் கூடாதுனு வந்து பேசிட்டு இருக்கேன்.." என்றான்.


ப்ரியன் எழுந்து வந்ததும்.. அந்த பெண் ஆதவன் பேச்சில் மேலும் மிரண்டு.. மெதுமெதுவாக நகர்ந்து ப்ரியனை ஒட்டினாற் போல் நின்று கொண்டாள்.


அவள் மனம் பாதுகாப்பிற்காய் தன்னை நாடுவதை உணர்ந்து கொண்ட ப்ரியனின் மனம்.. இரண்டு நாட்களாய் கொதித்துக் கொண்டிருந்தது சட்டென மாறி.. பனிநிலவாய் ஒரே நொடியில் குளிர்ந்து போனது.


ப்ரியனைப்‌ பார்த்து விட்டு..‌ கண்களில் குழப்பத்தோடு ஆதவனைப் பார்த்தாள்.


அவளின் குழப்பத்தை உணர்ந்து கொண்டவன், "என்‌ ஃப்ரெண்ட்.. ஆதவன்" என்றான்.


தன் அழகிய புருவங்களை சுருக்கியவளைப் பார்த்து, "உனக்கு தெரியாது.. நேத்து தான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம்.." என்று மீண்டும் அவள் விழிகளின் கேள்விக்கு பதில் தந்தான்.


இன்னமும் அவள் விழிகளைப் படித்துக் கொண்டே.. "சாப்ட்டியா?" கேட்டான்.


ஆயிற்று எனும் விதமாய் தலையசைத்தாள்.


"தனியாவா வந்த..?"


ஆமாமென மீண்டும் தலையாட்டினாள்.


"சரி, பில் நான் பே பண்ணிடறேன். நீ போ..‌"


தயங்கி நின்றவளைப் பார்த்தவன்.. "போ.." என்றான், மீண்டும் அழுத்தமாக..!


கைப்பையை எடுத்துக் கொண்டு, திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே வெளியேறினாள்.


சென்றவளையேப் பார்த்து கொண்டிருந்த ஆதவனைப் பார்த்த ப்ரியன், "கின்னஸ் ரெக்கார்ட்.." என்றான், சற்றும் சம்மந்தமில்லாமல்..!


புரியாமல் திரும்பிய ஆதவன், "எது..?" கேட்டான்.


"நீ இவ்ளோ நேரம் உன் திருவாய மூடிட்டு இருக்கறது.."


"என்ன கிண்டலா? யாருடா அந்த பொண்ணு..? இவ்ளோ நேரம் ஒண்ணும் தெரியாதவன் மாதிரி என் கதையக் கேட்ட? ஆனா.. உனக்கே பெரிசா ஒரு கதை இருக்குது போலயே?"


ப்ரியன், "எப்டிடா கண்டுபிடிச்ச?" என்றான், விழிகளில் ஆச்சர்யத்தைக் காட்டி..!


"ஆமா.. இத கண்டுபிடிக்க க்ரைம் ப்ரான்ச் விவேக் வரணுமாக்கும்..? நான் தான் பார்த்தேனே.. அந்தம்மா என்னவோ என்னை வில்லன பாக்கற மாதிரி பார்த்துட்டு.. இவர் பக்கம் வந்து நிக்கறாங்க.. இவர் என்னடான்னா கௌதம் மேனன் ஹீரோ மாதிரி லுக் விட்டுட்டு.. கண்ணாலயே ப்ரொடெஸ்ட் குடுக்கறாரு.. அவங்க கண்ணு கேக்கற எல்லா கேள்விக்கும் இவரு அப்டியே கூகுளா மாறி பதில் சொல்றாரு.. அப்புறம் சாப்ட்டியானு வாய் கேக்குது.. ஊட்டி விடட்டுமானு கண்ணு கேக்குது.. தனியாவா வந்துருக்கனு வாய் கேக்குது.. துணைக்கு வரட்டுமானு கண்ணு கேக்குது.. அப்புறம் என்ன..? ஆங்.. வள்ளல் பெருந்தகையா மாறி பில் பே பண்றாராமாம்.. ஷப்பப்பப்பா.. இதுக்கு மேலயுமா நான் கண்டுபிடிக்கறதுக்கு இருக்குது..?"


"ஹாஹா.. டேய் உனக்கு வாய் வலிக்காதா மச்சி..? தண்ணியக் குடி.. தண்ணியக் குடி.."


"கடுப்படிக்காதடா.. ஒழுங்கா அந்த பொண்ணு யாருனு சொல்லு.."


"ப்ருந்தா.. என்னோட அம்மு.." என்றவனின் கண்களில் வலியும், நிம்மதியும் ஒரே நேரத்தில் வெளிப்படுவதைக் கண்ட ஆதவன்..


"எதுவும் ப்ரச்சனையா மச்சி..?" என்று கேட்டான்.


பெருமூச்சை வெளியேற்றிய ப்ரியன்.. 'கம்பெனி கைவிட்டு போனதால் ப்ருந்தாவும் கை விட்டு விட்டாள்' என்றான்.


அவன் சொன்னதைக் கேட்ட ஆதவன், "நோ..‌ ஷி நெவர்.. பணத்துக்காக லவ் பண்ண பொண்ணு கண்ல இத்தனை ஏக்கம் இருக்காது.." என்றான்.


"என்னடா சொல்ற.."


"ஆமா மச்சி.. நான் பார்த்தேன்.. அந்த பொண்ணு எவ்ளோ நேரம் இங்கயே பார்த்துட்டு இருந்தா தெரியுமா? இப்ப தெரியுது.. உன் முகத்தை ஒரு வாட்டி பார்த்துட மாட்டோமானு தான் பார்த்திருக்கா.. நான் பேச ஆரம்பிச்சதும் கூட உன்னைத் தானத் தேடுனா?"


"ஹ்ம்ம்.. அது தான் நானும் யோசிக்கறேன். நேத்து அவ்ளோ வெறுப்பா பேசினவ.. இப்ப இப்டி…" என்று வாக்கியத்தை முடிக்காமல்.. நேற்று ப்ருந்தா பேசியதை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்த்தான்.


நேற்று விஷ்வாவின் சுயரூபம் தெரிந்து.. நொந்து போன மனதுடன் நிறுவனத்தை விட்டு வெளியேறி.. தன் டோமினாரில் வாசலைக் கடக்கும் நேரம்.. வேகமாக வந்து நின்ற ஆட்டோவில் இருந்து இறங்கினாள் ப்ருந்தா..


'ப்ரியன்..'


'அம்மு.. என்ன இந்த நேரத்துல வந்துருக்க? ஃபோன் கூட பண்ணல..?'


'நம்ம ப்ரேக்கப் பண்ணிக்கலாம் ப்ரியன்..' என்றவளின் முகத்தில் வெறுப்பின் பிரதிபலிப்பு.


'ஹேய்.. என்னடி உளர்ற?'


'ஆமா.. உங்களப் பத்தி இப்ப தான் எனக்கு நியூஸ் வந்தது.. இனி நம்ம ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல ப்ரியன்..'


'அம்மு.. என்னாச்சு? ஏன் திடீர்னு இப்டி லூசு மாதிரி பேசற?'


'இனி லூசாகிடக் கூடாதேனு பேசறேன்.. உங்கள மாதிரி ஒருத்தருக்கு கழுத்த நீட்டறதுக்கு லைஃப் ஃபுல்லா கல்யாணம் பண்ணிக்காமலே இருந்துடுவேன்..'


'இப்ப என்னாச்சு சொல்லப் போறியா இல்லயாடி? யார் உன்கிட்ட என்ன சொன்னா? என்ன நியூஸ் வந்தது?'


'விஷ்வாண்ணா எல்லாத்தையும் சொல்லிட்டார்..' என்றவள்.. கையெடுத்துக் கும்பிட்டு, 'இப்டிப்பட்ட ஒருத்தர் எனக்கு வேணவே வேணாம்.. குட் பை..' என்று விட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி சென்று விட்டாள்.


நேற்றைய சம்பவத்தை யோசித்துக் கொண்டிருந்த ப்ரியனின் தோள்களைப் பிடித்து உலுக்கினான், ஆதவன்.


"டேய்.. மச்சான்.. என்னாச்சு? ஏன் இப்டி சைட்டிஷ்ஷ பறிகொடுத்த குடிகாரன் மாதிரி முழிச்சிட்டிருக்க..?"


நக்கலடித்தவனை முறைத்த ப்ரியன்.. மீண்டும் தீவிரமான முக பாவத்துடன், "நீ சொன்னப்புறம் தான் யோசிக்கறேன் ஆதவ்.." என்றான்.


"என்னனு.. சைட்டிஷ்ஷ எப்டி பறிகொடுத்தோம்னா..?"


"ப்ச்.. டேய்.."


"சரி.. சரி.. சொல்லு.."


"நேத்து இருந்த டென்ஷன்ல என்னால எதையும் யோசிக்க முடியலடா.. நேத்து அம்மு நம்ம பிரேக்கப் பண்ணிக்கலாம்.. ஒத்து வராது சொன்னாளே தவிர.. கம்பெனி பத்தி அவ பேசவே இல்ல.. இந்த விஷ்வா தான் என்னவோ ப்ளே பண்ணிருப்பானோனு தோணுது.."


"ஹ்ம்ம்.. காலைல மொத வேலையாப் போய் அவன் சட்டையப் புடி.. ஏன் மச்சி.. நீ ஏன் போலீஸ்க்கிட்ட போய் அவன் மேல ஒரு கம்ப்ளெய்ண்ட் குடுக்கக் கூடாது..?


"இல்ல ஆதவ்.. அவன் எல்லா டாக்யூமெண்ட்ஸூம் பக்காவா வச்சிருக்கான். போலீஸ்க்கு போனாலும் நோ யூஸ். நான் தான் ஏதோ கம்பெனி அக்ரிமென்ட்னு சொன்னதும் கண்ண கட்டிட்டு வெத்து பத்திரத்துல சைன் பண்ணி தொலைச்சிருக்கேனே.." தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து உள்ளம் குமுறினான்.


தொடர்ந்து, "மோர் ஓவர்.. எப்டி எனக்கு தெரியாம என் கம்பெனிய அவன் எடுத்துக்கிட்டானோ... அதே மாதிரி அவனுக்கே தெரியாம நான் எடுத்துக்கணும்.. அப்ப தான் என்னோட வலி என்னனு அவனுக்கு புரியும்.." என்று கண்கள் சிவந்தான்.


ப்ரியன் டென்ஷனாவதை உணர்ந்து… அவன் மனநிலையை மாற்ற எண்ணி, "சரிடா.. கண்டிப்பா உன் கம்பெனி உன்கிட்ட வரும்.. அத விடு.. உன் ஆளு பத்தி சொல்லு.. என்ன பண்றாங்க..?"


காதலியின் நினைவில் டென்ஷன் குறைந்து, மென்மையாய் புன்னகைத்தவன்.. "ப்ருந்தா.. சி. ஏ. படிச்சிட்டே ஒரு ஆடிட்டர்கிட்ட வொர்க் பண்ணிட்டு இருக்கா.. அப்பா ரிஜிஸ்டர் ஆஃபீஸ்ல வொர்க் பண்றாரு.. அம்மா அக்கௌண்டண்ட்.. ஒரு தம்பி விஷூவல் கம்யூனிகேஷன் படிச்சிட்டு இருக்கான்.. ஒரு வீடு முடிச்சதுல கிரஹபிரவேசத்துக்கு இன்வைட் பண்ணிருந்தாங்க.. அப்ப தான் பார்த்தேன்.." என்று கண்களில் அவளுக்கான காதலை ஏந்தி.. அவளை முதன்முதலில் பார்த்த தருணத்தை.. ஆதவனிடம் காட்டும் சாக்கில், நினைவுப் பெட்டகத்திலிருந்து எடுத்து.. தன் மனக் கரத்தால் மீட்ட ஆரம்பித்தான்.
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Super..??
Priyan, brindha love story ah waiting ka..
Tension la ava yanna sonnanu kuda olunga kekala.. pavam priyan??
 




Sowdharani

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,438
Reaction score
1,923
Location
Chennai
vaai pesurathum kannu pesurathum super
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top