என்ன கொடுமை சார் இது? 7

Premalatha

General
SM Team
#11
Thirty two இனிய காலை வணக்கம் ஈஈஈ என்று காட்டனுமா... 🤣🤣 எப்படி அக்கா இப்படி பின்னுறீங்க... செம்ம செம்ம👌👌

பிரியன் வைட்டிங் பார் யுவர் ரீடார்ன் 👍👍
 

Maha

Author
Author
SM Exclusive Author
#16
மறுநாள் காலையில் கண்விழித்த ப்ரியன்.. காலை உணவினைக் கூடத் தவிர்த்து விட்டு.. விஷ்வாவை சந்திக்க கிளம்பி விட்டான்.


நிறுவனத்தின் உள்ளே சென்றவன்.. நேரே விஷ்வாவின் கேபினுக்குள் போய் அமர்ந்து விட்டான். விஷ்வா இன்னும் வந்திருக்கவில்லை.


ப்ரியனும், விஷ்வாவும் பத்தாம்‌ வகுப்பு முதல் ஒன்றாகவே படித்தவர்கள். தன்னிடம் வலிய வந்து நட்பு பாராட்டிய விஷ்வாவை, தன்னை விட வசதி குறைவானவன் என்றாலும் நன்றாக படிக்கும் விஷ்வாவை.. ப்ரியனுக்கு மிகவும் பிடித்திருந்தது.


பள்ளி படிப்பை முடித்ததும்.. 'உங்க அப்பா இருந்திருந்தா உன்னை ஃபாரின் அனுப்பி படிக்க வச்சிருப்பார்' என்ற வருத்தம் கொண்ட அன்னையிடம் கூட.. 'ஆனா, ஃபாரின்ல என் விஷ்வா இருக்க மாட்டானேம்மா' என்று தன் நண்பனைப் பிரிய முடியாதென கல்லூரியிலும் ப்ரியன்.. விஷ்வாவுடனே தன் படிப்பைத் தொடர்ந்தான்.


படிப்புகள் முடிந்ததும் வேறு நிறுவனத்தில் சொற்ப சம்பளத்திற்கு வேலைக்கு சென்று கொண்டிருந்த விஷ்வாவை.. ப்ரியன் தான் பார்ட்னர்ஷிப்பில் நிறுவனம் துவங்கலாம் என விஷ்வாவை விட அதிக பணம் போட்டு.. பிவி கன்ஸ்ட்ரக்ஷன்ஸை ஆரம்பித்தான்.


அரைமணி நேரத்திற்கு பின் வந்த விஷ்வா.. "வாடா என் உயிர் தோழா.. ‌என்ன இந்த கம்பெனில இன்னும் நீ பார்ட்னர்ங்கற நினைப்புலயே மறந்து போய் எப்பவும் போல கிளம்பி வந்துட்டியா..? ஜோ ஜேட்.. ஜோ ஜேட்.." என்று போலியாக இரக்கம் காட்டினான்.


அவனை அமைதியாகவே பார்த்திருந்த ப்ரியன்.. "ஏன் விஷ்வா இப்டி பண்ணின..? என்னை ஏமாத்தி என் முதுகுல குத்தற அளவுக்கு.. என் மேல உனக்கு அப்டி என்னடா கோவம்..? எதுக்கு இந்த நம்பிக்கை துரோகம்..?" என்று கேட்டான்.


"ஏன்? என்ன? எதுக்கு? ஹாஹாஹா.." மென்மையாக ஆரம்பித்து வாய்விட்டு நகைத்தவன்..‌ சட்டென ஆக்ரோஷமாக, "நீ ஏண்டா அப்டி பண்ணின..?" என்று கத்தினான்.


புரியாது நின்ற ப்ரியன்.. "எப்டிடா..?" கேட்டான்.


ப்ரியனுக்கு முகம் காட்டாமல் திரும்பி.. அறையின் ஜன்னலருகே சென்றவன், "பாரதி.." என்று கூறி விட்டு.. ஒரு முறை ஆழமூச்செடுத்துக் கொண்டு.. மீண்டும் திரும்பி வேக எட்டுக்களோடு வந்து.. ப்ரியனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு "பாரதிடா.. ஷி இஸ் மை லவ்.. எஸ்.. மை லவ் பாரதி.." என்று ஹிஸ்டீரியா பேஷண்ட்டைப் போல் கத்தினான்.


அதிர்ந்து நின்ற ப்ரியன்.. அவன் பிடித்திழுக்க சட்டையைக் கொடுத்து விட்டு அசையாமலே நின்றான். 'விஷ்வா பாரதியை விரும்பினானா?' இது அவனுக்கு புதிய செய்தி..


மூளை யோசிக்கும் திறனை இழந்து.. அசைவற்று நின்றிருந்தவனை.. கோபத்தில் பிடித்து உலுக்கினான், விஷ்வா.


"ஞாபகம் இருக்காடா உனக்கு..? டென்த் படிக்கும் போது எக்ஸாம் ஃபீஸ் கட்ட வழியில்லாம நின்னவனுக்கு ஆறாங்கிளாஸ் படிக்கற சின்னப் பொண்ணு அவளோட சேவிங்ஸ்னு பத்து ரூபாய குடுத்தா.."


இந்த இடத்தில் ஆதவனாக இருந்திருந்தால் பக்கென்று சிரித்து வைத்திருப்பான்.. ஆனால் இந்த ப்ரியன் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் பார்த்திருந்தான்.


"உன்னைப் பார்க்கறதுக்கு முந்தி அவள தான் நான் பார்த்தேன்.. இன்ஃபாக்ட் பாரதிகிட்ட பழகறதுக்காக தான் உன்கிட்ட நான் வழிய வந்து பேசினேன். உன் ஃப்ரெண்ட்ஷிப் மூலமா அவள நெருங்க நினைச்சேன்.. ஆனா, நம்ம ப்ளஸ்1 போகும் போது.. உங்க வீட்ல அவள வேற ஸ்கூல் மாத்திட்டாங்க"


ப்ரியன் என்னும் சிலை உயிர் பெற்று கோப முகம் காட்டியது. "அதுலாம் பப்பி லவ்டா அறிவு கெட்டவனே.."


"நோ..‌ அவள அப்பவே மறந்திருந்தா அது பப்பி லவ்.. ஆனா, இன்னும் மனசுல பதிஞ்சு போனவள மறக்க முடியலடா.. இதுவா பப்பி லவ்?"


இப்போது ப்ரியன் விஷ்வாவின் சட்டையை பிடித்து, "ராஸ்கல் எவ்ளோ தைரியம் இருந்தா மறக்க முடியலனு என்கிட்டயே சொல்லுவ?" என்று உறுமினான்.


"ஆமாண்டா.. தைரியம் தான்.. நானும் உன் ஸ்டேட்டஸ்க்கு ஈக்குவலா இருந்திருந்தா.. அவளுக்கு அலையன்ஸ் பார்க்க ஆரம்பிக்கும் போது நான் உன் கண்ணுக்கு தெரிஞ்சிருப்பேன்.. நான் ஒண்ணுமில்லாதவன்னு தான என்னை விட்டுட்டு, உன் ஸ்டேட்டஸ்க்கு ஏத்த மாதிரி மும்பை பிஸினஸ்மேன உன் வீட்டு மாப்பிள்ளை ஆக்கின..? அதான் நான் உன் கம்பெனிய உனக்கே தெரியாம உன்கிட்ட இருந்து பறிச்சேன். இப்ப நானும் உனக்கு ஈக்குவலான பணக்காரன் தான்.."


ப்ரியன் அவனைப் பேச விட்டு அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான்.


"ஆனா, என் காதல் திரும்ப கிடைக்காதே.. அப்ப நீ மட்டும் உன் காதலிய கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா லைஃப என்ஜாய் பண்ணலாமா? அதுக்கு தான் உனக்கு வச்சேன் அடுத்த ஆப்பு.. நேத்து பிருந்தா வந்து பிரேக்கப்னு சொல்லிருப்பாளே.. ஹாஹாஹா.. நேத்து நீ மஞ்சமாக்கான் மாதிரி முழிச்சிட்டு இருந்தத இங்க இருந்து பார்த்துட்டு தான் இருந்தேன்.."


ப்ரியன் கோபமிகுதியில் பல்லைக் கடித்தான். ஆனாலும் அவனே சொல்லட்டும் என முகத்தை பாறையாக வைத்து கொண்டு அமைதி காத்தான்.


"என்ன செல்லோ.. நான் என்ன பண்ணிருப்பேன்னு யோசிக்கறியா? ஒண்ணும் இல்ல.. அந்த ஆந்திரா பார்ட்டிக்கு ஒரு வில்லா முடிச்சு குடுத்தோமே.. அந்த ப்ராஜெக்ட் பண்ணும் போது.. நீ போட்ட ப்ளான்ல இது சொத்த அது சொட்டனு சொல்லிட்டே இருந்துச்சே அவர் பொண்ணு.. அப்ப உங்க ரெண்டு பேரையும் கொஞ்சமா.. கொஞ்சமே கொஞ்சமா கவர் பண்ணி வச்சிருந்தேன். அத தான் சமயம் பார்த்து நேத்து உன் ஆளுக்கு அனுப்பிட்டு.. கால் பண்ணி சும்மா உன்னைப் பத்தி ரெண்டே ரெண்டு பிட்ட போட்டேன் மச்சான்.. சத்தியமா அவ்ளோ சீக்கிரம் வருவானு நான் கூட எதிர்பாக்கலடா.." என்று கூறி விட்டு வடிவேலு ஜோக்கைப் பார்த்தவன் போல விழுந்து விழுந்து சிரித்தான்.


ப்ரியன் நிதானமாக யோசித்தான். விஷயம் என்னவென்று அறியாத பொழுது பிருந்தாவைப் பற்றி அரித்துக் கொண்டிருந்த மனம்.. இப்போது விஷயம் தெரிந்த பின்.. 'ஓ! அதான் நேத்து வெண்மதியோட சேர்த்து பார்த்ததும் அப்டி முறைச்சாளா? சரி.. அவளை எப்படியும் சமாதானப்படுத்தி விடலாம்.. தற்போது விஷ்வாவிடம் இருந்து நிறுவனத்தை அவன் பெயருக்கு மாற்றிய ஆவணங்களைக் கைப்பற்ற வேண்டும்.' என்றே யோசித்தது.


(எல்லாரும் இப்டி தான் இருப்பாங்க போல ஃப்ரெண்ட்ஸ்.. நம்மள சமாதானப்படுத்தறது எல்லாம் அப்புறமாம்.. அவங்க வேலை தான் அவங்களுக்கு முதல் முக்கியமாம் பாருங்களேன்.. ஹூம்ம்..)


எனவே, வந்த கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு.. பொறுமையாகவே பேசினான். "இங்க பாரு விஷ்வா.. நீ பாரதிய விரும்பறனு ஒரு வாட்டியாவது என்ட்ட சொல்லிருக்கலாம் தானடா? எதுவும் சொல்லாம எனக்கு எப்டி தெரியும்? என்னைக்காவது ஸ்டேட்ஸ் பத்தி உன்கிட்ட பேசிருக்கேனா நானு?" என்று கேட்டான்.


"எத்தன வாட்டி மறைமுகமா உன்கிட்ட சொல்லிருக்கேன் தெரியுமா? அப்பலாம் மாங்கா மாதிரி இருந்துட்டு.. இப்ப வந்து சொல்லிருக்கலாம்லன்னா என்ன அர்த்தம்..? எனக்கு சத்தியமா புரியலடா ப்ரியன்.. செங்கலயும், சிமெண்டயும் கட்டி அழறவன் எப்டிடா ப்ருந்தா மாதிரியான ஒரு பொண்ணு மனசுல இடம் பிடிச்ச..? ஆறு மாசம் முந்தி நீ லவ் பண்ற விஷயத்த சொன்னதும்.. நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்.."


பறந்து கொண்டிருந்த பொறுமையை இழுத்துப் பிடித்த ப்ரியன்.. "சரி நடந்தத மாத்த முடியாது விஷ்வா.. இப்ப பாரதி வேற ஒருத்தரோட வைஃப்.. நீ மனசுல நினைக்கறது கூட தப்பு.. மறந்துடு.. இதனால நம்ம ஃப்ரெண்ட்ஷிப்குள்ள ப்ரச்சனை வரணுமா? எப்பவும் போல நம்ம கம்பெனிய ரன் பண்ணலாம்டா.. என்ன சொல்ற?" என்று தன்மையாகவே பேசினான்.


"தெரியாம தான் கேக்கறேன்.. என்னைப் பார்த்தா உனக்கு கேனயன் மாதிரி இருக்குதா? இவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி என் பேருக்கு நான் மாத்துவேனாம்.. அத இவர் நோகாம திரும்ப குடு கேப்பாராம்.. நானும் இந்தா மச்சினு தர்ட்டி டூ காட்டிட்டே.. குடுக்கணுமாம். போடா டுபுக்கு.." என்றவன்..


ப்ரியனை சுற்றி வந்து, எம்.டி நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து சுழற்றிக் கொண்டே.. "ஸ்டேட்ஸ் பத்தி நீ வேணும்னா எதுவும் நினைக்காம இருக்கலாம் மச்சி.. ஆனா, நான் நினைச்சேன்.. சின்ன வயசுல இருந்தே உன்னை மாதிரி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவன் இல்ல நானு.. உனக்கு தான் தெரியுமே.. குடிகார அப்பனுக்கு பிறந்து நான் பட்டக் கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? அதனால தான் கல்யாணமாவது பணக்காரப் பொண்ணாப் பார்த்து பண்ணிட்டு லைஃப்ல செட்டில் ஆகலாம்னு நினைச்சேன்.. உன் தங்கச்சியக் கட்டினா சொத்தும் வரும்.. சொசைட்டில மதிப்பும் வரும்னு ப்ளான் போட்டேன். அது தான் சொதப்பிடுச்சு.. ஆனா, என்னை என்னடா பண்ண சொல்ற? செகண்ட் ஆப்ஷனா வச்சிருந்த கம்பெனி ப்ளான் பக்காவா வொர்க் அவுட் ஆகிடுச்சு.." என்று டேபிளில் வலக்கையை ஊன்றி கன்னத்தைத் தாங்கி பாவம் போல் இமைக் கொட்டினான்.


இவ்வளவு நேரம் தன் தங்கையின் மேல் உள்ள நண்பனின் காதலை உணராமல் போனோமே‌ என்று மனதின் ஓரம் தோன்றிய குற்ற உணர்ச்சியோடு நின்றிருந்த ப்ரியன்.. இப்போது அவன் பணத்திற்காக என்றதும்.. கட்டுக்கடங்காத கோபத்தோடும், தன் இத்தனை வருட நட்பு இப்படி தோற்று போன வருத்தத்தோடும்.. இனி, இவனிடம் பேசி ப்ரயோஜனம் இல்லை என்ற ஞானோதயத்தோடும் அங்கிருந்து விறுவிறுவென வெளியேறி விட்டான்.


"என்ன கொடுமை சார் இது..? அவன் பணம் போட்டு.. வெயில்ல கல்லோடயும், மண்ணோடயும் நின்னு வளர்த்த கம்பெனிய ஒருத்தன் பிடுங்கிட்டேன்னு சொல்றேன்.. சட்டையப் புடிச்சி ஏண்டா இப்டி பண்றனு நாலு இழுப்பு இழுக்காம.. எனக்கென்னனு விளக்கெண்ண மாதிரி போறான்? அது சரி.. கேக்கும் போதெல்லாம் சைன் பண்ணும் போதே மூளை வேலை செய்யல.. இப்ப மட்டும் செஞ்சுடப் போகுதா என்ன..? புவர் பாய்.." என்று வாய் விட்டு தன் நண்பனுக்காக போலியாக வருத்தப்பட்டான்.


அவனுக்கு தெரிந்திருக்கவில்லை, புவர் பாய் ப்ரியனல்ல தான் தானென்று..! தன் மீது பாயப் போகும் புலி.. ஒன்றல்ல இரண்டு என்பதை.. அறியாமல் போனான், விஷ்வா.
அட பஞ்சத்துக்கு பொறந்த பரதேசி🙄 மித்ரா துரோகி முகரக்கட்டை சும்மா வா சொன்னாங்க எதையோ குளிப்பாட்டி எங்கயோ கொண்டு வைச்சா மாதிரி.... இவனை எல்லாம் 😠அந்த மூஞ்சிக்கு லவ்வு ஒரு கேடு
Nice ஸ்ரீ 👌👏👍😊
 

Advertisements

Latest updates

Top