என்ன கொடுமை சார் இது? 9(b)

Maha

Author
Author
SM Exclusive Author
#18
ப்ரியன்.. ப்ருந்தாவின் மேல் வீசியக் காதல் பார்வையில், விஷ்வாவின் உள்ளம் கோபத்தில் தகித்தது..


ப்ரியன், "ஆங்.. மிஸ்டர் விஷ்வா.. ஒன் கைண்ட் இன்ஃபர்மேஷன்.. நௌ, இட்'ஸ் மை சேர்.. யூ கோ அவுட்.. மீ கோ சிட்.." என்று கைகளை நீட்டி மடக்கி பேசி நக்கலடித்தான்.


எழுந்து கொள்ளாமல் முறைத்துக் கொண்டிருந்த விஷ்வாவைப் பார்த்தவன்.. "இன்னும் என்ன முறைப்பு வேண்டி கிடக்குது? வெளிய போடா அயோக்கிய ராஸ்கல்.." என்றான், வடிவேலு பாணியில்..


இருவரையும் தோற்றுப் போன பார்வைப் பார்த்து விட்டு.. வெளியேறினான், விஷ்வா..!


அவன் சென்றதும் திரும்பிய ப்ரியன் தன்னையே வைத்த விழியெடுக்காது பார்த்து கொண்டிருந்த ப்ருந்தாவிடம், "ஹேய்.. இது ஆஃபிஸ்டி.. எதுக்கு இப்டி பார்த்து வைக்கற.." கேட்டுக் கொண்டே அவளை நெருங்கினான்.


"இது ஆஃபிஸ் ஆச்சே.. எதுக்கு பக்கத்துல வரீங்களாம்?"


"நீ எதுக்கு அப்டி பார்த்தனு கேக்கறதுக்காக வந்தேன்.." என்றான், தன் கைகளால் அவள் கைகளோடு கதை பேசிக் கொண்டே..!


"இல்ல.. இத்தன நாளும் சிரிக்கவே யோசிப்பீங்க.. இப்ப வடிவேலு ஸ்லாங்லலாம் பேசறீங்க.. இந்த ரெண்டு நாளைல சிரிக்கறதுக்கு எதுவும் ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எடுத்தீங்களா என்ன..?"


"ஹ்ம்ம்.. ஆமா.. நேத்து ரெஸ்டாரண்ட்ல பார்த்தியே.. அவன்கிட்ட தான் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன்.."


"அவர் யாருனு ஒண்ணும் நீங்க சொல்லவே இல்லயே.. என்ன தான் ரெண்டு பேருக்கும் ஒண்ணும் இல்ல.. ப்ரேக்கப்னு சொல்லிட்டு போயிருந்தாலும்.. நீங்க ரெஸ்டாரண்ட்குள்ள போறது பார்த்துட்டு என்னால பார்க்காத மாதிரி போக முடியல. ஒரே ஒரு வாட்டி உங்க முகத்தை பார்த்துட்டு போயிடலாம்னு.. ஃப்ரெண்ட் கூட ஷாப்பிங் வந்தவ.. அவள அனுப்பிட்டு உங்க பின்னாடியே நானும் வந்துட்டேன்.." தாயின் மடியை முட்டும் கன்றைப் போல் அவன் நெஞ்சில் தலை சாய்த்து கண்மூடிக் கொண்டாள், ப்ருந்தா.


அவள் மனநிலையை புரிந்து.. ஆறுதலாய் அணைத்துக் கொண்டவன்.. "எனக்கும் ப்ரேக்கப்னு சொன்னதும் கோவம் வந்தாலும்.. நேத்து உன் கண்ணு துணைக்காக என்னைக் கூப்பிட்டதுமே புரிஞ்சது.. நீயும் என்னை மாதிரி தான் தவிச்சுட்டு இருக்கனு.." என்றான், அவள் நெற்றியில் முத்தமிட்டு..!


"சாரிப்பா.. யார் என்ன சொல்லிருந்தாலும் நான் நம்பிருக்கக் கூடாது. ஆனா.. இன்னிக்கு நீங்க வரலனா நாளைக்கு நானே உங்கள பார்க்க வந்துருப்பேன்.."


"அந்த ஃபோட்டோவ நானும் தானப் பார்த்தேன்.. யாரா இருந்தாலும் கோவம் வர தான் செய்யும்.. லீவ் இட் அம்மு.."


"ஆமா.. அந்த ஃப்ரெண்ட் யாரு..? அவர் என்கிட்ட வந்து அப்டி பேசுனதும் எனக்கு ரொம்ப பயமா போயிடுச்சு தெரியுமா?"


"ஹாஹாஹா.. இப்ப நம்ம கம்பெனி திரும்ப கிடைச்சதுக்கு காரணமே அவன் தான் அம்மு.. இல்லனா.. இவ்ளோ சீக்கிரம் நான் நினைச்சது நடந்துருக்காது.." பேச்சோடு பேச்சாக.. நெற்றியில் முத்தமிட்ட அதரங்கள் இப்போது காது மடலைக் குத்தகைக்கு எடுத்திருந்தது.


ஆதவனைப் பற்றி மேலும் கேட்க நினைத்தவளுக்கு மொழியோடு சேர்ந்து சிந்தனையும் சிதைந்து கொண்டிருந்தது. கண்மூடிக் கிறங்கி கொண்டிருந்தவள்.. "பிடிச்சிருக்கு.." என்றாள், கிசுகிசுப்பாய்..!


தன் வேலையை கண்ணாய் செய்த படி.. "என்னது..?" தெளிவில்லாத குரலில் கேட்டான்.


அவனை விலக்கி நிறுத்தி விட்டு,
"காதுமடல் அருகே உதடுகள் நடத்தும்
நாடகம் பிடிச்சிருக்கு.."

என்று தன் ஐஸ்கிரீம் குரலில் பாடினாள்.


"ஹாஹாஹா.. அப்ப நிறைய நாடகம் நடத்தலாமே.." என்றவன் விலக்கியவளை மீண்டும் நெருங்கி.. "அடுத்த லைன் நான் எப்ப பாடறதாம்?" என்று அவள் கண்களுக்குள் விழுந்து கொண்டே கேட்டான்


"பாடலாமே.. இன்னும் பத்து நாளைல.."


"என்ன..? பத்து… ஹேய்.. நிஜமாவா சொல்ற..? உங்க அப்பாகிட்ட பேசிட்டியா?" என்று கண்கள் பளபளக்க.. விலகி நின்றவளை கைப் பிடித்து இழுத்து நெஞ்சோடு இறுக்கிக் கொண்டு கேட்டான்.


"ஹ்ம்ம்.. மனசால ரெண்டு பேரும் பிரிஞ்சிடலாம்னு சொன்னதே போதும். உயிர் போய்டுச்சு தெரியுமா? அதுவும் வேற பொண்ணோட சேர்த்து பார்த்ததும் நான் பட்ட அவஸ்தை.. இனி என்னால முடியாது. கல்யாணம் பண்ணிக்க போறீங்களா இல்லயா?" என்றாள், மிரட்டல் குரலில்..!


என்ன தான் காலையில் அவளைப் பார்க்க சென்ற போது.. வெண்மதி தன் தோழி என்று விளக்கம் கூறியிருந்தாலும்.. அவன்.. அவள் கையைப் பிடித்திருந்த போது.. அது ப்ருந்தாவிற்கு தெரியாதல்லவா? தன்னவனை விட்டு கொடுக்க முடியாது என்ற பிடிவாதமான மனநிலை வந்த பின் தான் ரெஸ்டாரண்டில் அவன் முகம் காணத் தவித்து நின்றாள்.


"நானா வேணாம் சொல்றேன்.. நீதான அப்பாகிட்ட பேசணும் ஆயாகிட்ட பேசணும்னு உளறிட்டு இருந்த?"


"இன்னிக்கு எப்டியும் பேசிடுவேன்.. கொஞ்சம் சிடுமூஞ்சின்றத தவிர உங்கள மறுக்க காரணமில்ல.. அதுவும் இப்பலாம் ஜோக் கூட பண்றீங்க.. கண்டிப்பா அப்பா ஒத்துக்குவார்.. எனக்கு நம்பிக்கை இருக்குது.."


"ஆனா, அப்ப கூட பத்து நாள்ல மேரேஜ்னு எப்டி சொல்லுவார்?"


"அதுலாம் நீங்க ஆன்ட்டிய கூட்டிட்டு வந்து பேசிக்கோங்க.. எனக்கு டென் டேஸ்ல என் ப்ரியன் வேணும்.. அவ்ளோ தான்.."


இது போதாதா..? தன் காதலி தன்னைத் தேடுகின்றாள்.. அதற்காக தன்னை வேண்டுகின்றாள் என்பதில் கர்வம் தலைக்கேறிப் போய்.. அவள் காதலின் கனம் தாங்காமல் தலைசுற்றி நின்றான், ப்ருந்தாவின் ப்ரியன்..!
பாருயா ரொமான்ஸ் பண்றதை.. இனி கெட்டி மேளம் தான் 👌👏👍😊நைஸ் ஸ்ரீ
 

Advertisements

Latest updates

Top