• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience என் எழுத்து பயணம் ஒரு பார்வை.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
ஹாய் ஹாய் மக்களே,

வணக்கம் அனைவருக்கும். ரொம்ப நாட்களாக இதை பற்றி நான் உங்களிடம் பேச வேண்டும் என்று நினைத்து இருந்தேன், இன்று அதற்க்கான சந்தர்ப்பம் அமையவும், என்னுடைய எழுத்து பயணத்தில் நான் சந்தித்த அனுபவங்களை பற்றி கூறுகிறேன்.

என் எழுத்து பயணம் 2014ஆம் ஆண்டு தொடங்கியது. கோடிஉமா என்ற பெயர் உங்களில் பலருக்கு தெரிந்து இருக்கலாம், தெரியாமலும் இருக்கலாம். இந்த பெயரில் தான் என் முதல் எழுத்து பயணம் தொடங்கியது.

என் எழுத்து மக்களிடையே சென்று சேர வேண்டும் என்று அப்பொழுது நினைக்கவில்லை, பொழுது போக்கிற்காக தொடங்கியது தான். கழுவி கழுவி ஊத்தினாலும் எழுதுறதை மட்டும் அப்போ நிறுத்தவே இல்லை.

காரணம் வாசகர்கள் nice என்று சொல்லும் அந்த வார்த்தை மனதிற்கு தரும் மழிழ்ச்சி அளவில்லாமல் இருந்ததால். அந்த ஒற்றை வார்த்தைக்காக விடாமல் எழுதினேன். ஆனால் அங்கே தான் பெரும் தவறும் செய்தேன், வெறும் அந்த வார்த்தை மட்டும் போதுமா?

முதல் முறையாக எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொள்ள தயாரானேன். லாஜிக் இல்லை உங்க கதைல, என்ன கதை இது? எழுதுறதை நிப்பாட்டுங்க. இப்படி பல கருத்துகளை எதிர்கொண்டேன். புக் ஒன்று வெளியான பிறகு, அடுத்து எதுவும் வந்தபாடில்லை.

காரணம், என் எழுத்தில் மெருகு இல்லை. கதைக்கான லாஜிக் இல்லை, அது இல்லையென்றாலும் கதைக்குரிய பலம் என்று எதுவும் இல்லை. நொந்து போய் இதை கைவிடலாமா என்று யோசித்த வேளையில் தான், என் உடன் பிறவா தங்கை சரயு எனக்கு தைரியம் அளித்தாள்.

அதன் பிறகு சஷி அக்காவிடம் வந்தேன், அழகாக கதையை எப்படி கொடுக்க வேண்டும், என்ன தவறு செய்கிறேன் எல்லாம் சுட்டிக் காட்டினார்கள். பெயரையும் நாடு இரவில், உமா தீபக் என்று மாற்றி அமைத்து புதிதாக பிறந்தது போல் என் எழுத்து பயணத்தை திரும்பவும் ஆரம்பித்தேன்.

சிறு சிறு கதைகள் முதலில் எழுதி கொடுத்தேன், அக்ஷயாவிற்கு. நன்றாக அது செல்லவும், அடுத்து பெரிய கதைக்கு அக்கா ஆரம்பத்தில் கற்று கொடுத்ததை வைத்து “துருவ காதல்” தொடங்கினேன்.

அது தான் என் எழுத்து பயணத்தில் டர்னிங் பாயிண்ட். faiq அண்ட் காவியஹரிணி இவர்களின் காவியம் படைத்து, இன்று மறைக்கப்பட்டு வரும் ஒரு ஊரை பற்றி விளக்கினேன். கீழடி, மதுரை அருகே இருக்கும் ஒரு ஊரை நம் ஆராய்ச்சியாளர்கள் கண்டு எடுக்கப்பட்டது, அதற்க்கான fund இல்லாமல் இப்பொழுது அதை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை பற்றி கூறி இருந்தேன்.

இக்கதை தான் என்னை, என் எழுத்தை திரும்பி பார்க்க வைத்தது. உமா தீபக் என்ற பெயர் அதன் பின் இன்று பலருக்கும் தெரிந்து இருக்கும், ஆனால் இத்தோடு நான் வளர்ந்துவிட்டேன் என்று எண்ணி முடங்கவில்லை.

ஏனெனில் கற்றுக் கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கிறது, எனக்கு முன்னே எழுத வந்தவர்களும் சரி, என்னோடு பயனித்தவர்களும் சரி, எனக்கு பின்னே எழுத வந்தவர்களும் சரி என்னை விட அழகாகவும், நேர்த்தியாகவும் எழுதி, அவர்களுக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு :

அழகி அக்கா, வா நிஷா இவர்கள் எனக்கு பின் வந்து எழுத வந்தவர்கள். இன்று அவர்கள் எழுத்து பேசப்படுகிறதே, எதனால்? அவர்கள் எழுத்தில் அவர்கள் கொண்ட நம்பிக்கை தானே .

அந்த நம்பிக்கை நமக்கும் வேண்டும், என் கதை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இப்பொழுது இல்லையென்றாலும், ஒரு நாள் நானும் சிறந்த எழுத்தாளராக மாறுவேன் என்ற நம்பிக்கை வேண்டும்.

confidence boss confidence..

புதிதாக எழுத வருபவர்கள், இப்படி பெரிய எழுத்தாளர்களோடு போட்டியிட்டால் நாம் தோற்று விடுவோமே என்ற எதிர்மறை எண்ணத்தை தயவு செய்து விட்டு ஒழியுங்கள். நமக்கு நம் எழுத்தில் முதலில் நம்பிக்கை வைப்போம், நிச்சயம் இவர்களோடு போட்டியிட்டு நானும் ஜெய்ப்பேன் என்று நம்பிக்கையோடு எதிர்கொள்ளுங்கள்.

நிச்சயம் வெற்றி உங்கள் பக்கம் தான். வாசகர்களை கட்டி இழுப்பது, அபிமான எழுத்தாளர்களை மட்டும் அல்ல, நல்ல எழுத்துக்களை கூட தான். அவர்களை நம் வசப்படுத்துவது, நம் கைகளில் தான் இருக்கிறது.

ஆகையால், நம்பிக்கையோடு எழுத வாருங்கள், இன்று இல்லை என்றாலும் ஒரு நாள் உங்கள் எழுத்துக்கான அங்கீகாரம் நிச்சயம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

my best wishes to each and all new writers and upcoming writers..

cheer up..

அன்புடன்,

உமா தீபக்..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai
Super????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
உண்மையான வார்த்தைகள் உமா.
நம் எழுத்து மேல் திறமை மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெல்லலாம்.
எத்தனை காலம் இருந்தோம் என்பதை விட எத்தனை பேரால் பேசப்பட்டோம் என்பது தானே முக்கியம்.
நல்ல கோணத்தில் இன்னும் நிறையப் பேரால் நீங்களும் நானும் பேசப்பட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.????
 




umadeepak25

அமைச்சர்
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,547
Reaction score
7,648
உண்மையான வார்த்தைகள் உமா.
நம் எழுத்து மேல் திறமை மேல் நமக்கு நம்பிக்கை இருந்தால் நிச்சயம் வெல்லலாம்.
எத்தனை காலம் இருந்தோம் என்பதை விட எத்தனை பேரால் பேசப்பட்டோம் என்பது தானே முக்கியம்.
நல்ல கோணத்தில் இன்னும் நிறையப் பேரால் நீங்களும் நானும் பேசப்பட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.????
Nandri akka ?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top