• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எல். ஆர். ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
எல். ஆர். ஈஸ்வரி பாடல்கள் என் ரசனையில் ..

உண்மையும் இதுதான்... இவரின் குரலில் உள்ள தனி ஈர்ப்பை மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களே அறிந்து, உணர்ந்து திறம்பட வெளியுலகத்திற்குத் தந்தவர்.

முதலில் அப்படியான ஒரு பாடல் ...தமிழ்திரையுலகம் முழுதும் ஒரு முகமாக ரசித்த ஒரு பாடல்...
' மலரென்ற முகம் ஒன்று சிரிக்கட்டும்
மனமென்ற கருவண்டு பறக்கட்டும்...
உறவுக்கும், நிலவுக்கும் துடிக்கட்டும் ,
உலகத்தை ஒரு முறை மறக்கட்டும்..."

லலலலல்லா லல் லலா ....என இவர் குரல் இனிமை பிசகாமல்

என்ற பாடலில் இசையும் , குரல் பாவமும் உற்சாகமாய் ஒரே வேகத்தில்...
இத்தனைக்கும் வார்த்தைகள் நல்ல உச்சரிப்பில் விழும்...
இதில் நாகேஷ் ...லுழிலுழி .லுழிலுழி ...என ராகமியிட்டுச் செல்லும் அழகும் அதற்கு இணையாக..
.குமாரி சச்சுவின் அழகான மேற்கத்திய ஒரு துள்ளல் நடனத்தில் ...

ஆமாம் , காதலிக்க நேரமில்லை திரையில் , முத்துராமன், ரவிச்சந்திரன் ரசிப்பது போல் அனைவரும் ரசிக்கலாம் ....


 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
LR ஈஸ்வரி வாழ்க்கையில் 'பாசமலர்' ஏற்படுத்திய திருப்பம்

"பாசமலர்'' படத்தில் LR ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ'' [
] என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித் தந்தது. 1961ம் ஆண்டு, LR ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

அந்த ஆண்டு, A பீம்சிங் டைரக்‌ஷனில், சிவாஜிகணேசன் -சாவித்திரி நடித்த "பாசமலர்'' படம் வெளிவந்தது. MS விஸ்வநாதன்-TK இராமமூர்த்தி இசை அமைத்தனர்.

மகத்தான வெற்றி பெற்ற அப்படத்தில், "வாராய் என் தோழி வாராயோ, மணப்பந்தல் காண வாராயோ'' என்ற பாடலை LR ஈஸ்வரி பாடினார். இப்பாடல் பெரிய "ஹிட்'' ஆகி, மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது. குறிப்பாக, அன்று முதல் இன்று வரை திருமண வீடுகளில் பாடப்படும் பாடல் இது.

அதுவரை இளம் நடிகைகளுக்குப் பின்னணியில் பாடிவந்த LR ஈஸ்வரி, "பாசமலர்'' வெற்றியைத் தொடர்ந்து, கதாநாயகிகளுக்கும் பாடத்தொடங்கினார்.

டைரக்டர் KS கோபாலகிருஷ்ணன் தயாரித்த "பணமா பாசமா'' என்ற படமும், சூப்பர் ஹிட் படமாகும்.

அப்படத்தில், `எலந்தப் பயம்... எலந்தப் பயம்'' [
] என்ற கிராமியப் பாடலை விஜயநிர்மலாவுக்காகப் பாடினார். இப்பாடல் வரும் கட்டத்தில், தியேட்டர்களில் விசில் சத்தம் காதைப் பிளக்கும்.

டைரக்டர் ஸ்ரீதர், "சிவந்த மண்'' படத்தை வெளிநாடுகளுக்குச் சென்று, பிரமாண்டமாகப் படமாக்கினார்.

அதில் சிவாஜிகணேசனும், காஞ்சனாவும் எகிப்து உடையில் தோன்றும் ஒரு நடனக் காட்சி.

"பட்டத்து ராணி பார்க்கும் பார்வை, வெற்றிக்குத்தான் என” [
] என்று, LR ஈஸ்வரி காஞ்சனாவுக்காகப் பாடிய பாடல் மிக மிகப் பிரமாதமாக அமைந்தது. இடையிடையே சிவாஜி சவுக்கால் அடிப்பார். அப்போது LR ஈஸ்வரி கொடுத்த "ஹம்மிங்'', பாடலுக்கு மேலும் மெருகேற்றியது.

அக்காலக்கட்டத்தில், பின்னணி பாடகிகளில் P சுசீலாவும், S ஜானகியும் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்கள். அவர்களுக்கு இணையாக உயர்ந்தார் LR ஈஸ்வரி. ஓய்வு இன்றி நிறையப் படங்களில் பாடினார்.

"காதோடுதான் நான் பாடுவேன் மனதோடுதான் நான் பேசுவேன்” [
]
"ஆடவரலாம் ஆடவர் எல்லாம் ஆடவரலாம் ஆடவரலாம்.'' [
]
"கண்களும் காவடிச் சிந்தாகட்டும், காளையர் நெஞ்சை பந்தாடட்டும்.'' [https://www.youtube.com/watch?v=XSXjqWSw0SE]
"அம்மம்மா கேளடி தோழி ஆயிரம் சேதி.'' [https://www.youtube.com/watch?v=JJYqlOX6Dvc]
"துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை.'' [https://www.youtube.com/watch?v=glRH8LJGa0s]
"குடிமகனே பெரும் குடிமகனே.'' [https://www.youtube.com/watch?v=JHbrHGd493E]
"பளிங்கினால் ஒரு மாளிகை, பருவத்தால் மணி மண்டபம்.'' [https://www.youtube.com/watch?v=5MDOr0gq0-8]

இப்படி எண்ணற்ற பாடல்கள் LR ஈஸ்வரியின் புகழுக்குப் புகழ் சேர்த்தன. இலட்சக்கணக்கான ரசிகர்களைத் தேடித் தந்தன.

LR ஈஸ்வரி தம் திரை உலக அனுபவங்கள் பற்றிக் கூறியதாவது:-

"கடந்த 40 ஆண்டுகளாக நான் பாடி வருகிறேன். தமிழக அரசு எனக்குக் "கலைமாமணி'' விருது கொடுத்து கவுரவித்தது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா அரசுகள், "நந்தி விருது'' உள்படப் பல விருதுகளை எனக்கு வழங்கியுள்ளன.

ஜெயலலிதா கதாநாயகியாக அறிமுகமான முதல் படம் "வெண்ணிற ஆடை'' அதில் அவர் பாடும் முதல் பாடலான "நீ என்பதென்ன... நான் என்பதென்ன...'' [https://www.youtube.com/watch?v=jFWHNEBg9zY] என்ற பாடலை பாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை மிகப் பெரும் பெருமையாகக் கருதுகிறேன்.

KV மகாதேவன், MS விஸ்வநாதன்-TK இராமமூர்த்தி, வேதா ஆகியோர் இசையமைப்பில் நான் பாடிய ஆயிரக்கணக்கான பாடல்கள் என்றும் சாகாவரம் பெற்றவை.

எப்படி 1961 எனக்குத் திரை உலகில் ஒரு பெரிய உயர்வைக் கொடுத்ததோ, அதேபோல 1985ம் ஆண்டையும் சொல்லலாம். இந்த ஆண்டில்தான் நான் அம்மன் மேல் பாடிய பாடல்கள் வரத் தொடங்கின. அதன் பிறகு தமிழ்நாட்டில் பெரும்பாலும் நான் சென்று பாடாத கோவில்களே இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு ஏராளமான கோவில் கச்சேரிகள் வந்தன.

MGR அவர்கள் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் எல்லாம் அவர் பூரண குணம் அடைய வேண்டி விசேஷப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. அந்தப் பிரார்த்தனைகளில் எல்லாம் நான் பாடிய அம்மன் பாடல்களின் கேசட்டுகள் போடப்பட்டன.

இது எனக்கு பெரிய ஆத்ம திருப்தியைக் கொடுத்தது.''

இவ்வாறு LR ஈஸ்வரி கூறினார்.

"உங்கள் வாழ்க்கையில் இவ்வளவு போராடிப் புகழின் உச்சிக்கு வந்த நீங்கள், அதன் பிறகு உங்களுக்கென்று ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்ளாதது ஏன்?'' என்ற கேள்விக்குப் பதில் அளித்து LR ஈஸ்வரி கூறியதாவது:-

"வறுமையின் பிடியில் சிக்கிக் கிடந்த என் குடும்பத்தை முன்னேறச் செய்யவும், என் தம்பி, தங்கைக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் என் கவனம் முழுவதும் இருந்ததால், என் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. அதற்காக நான் வருத்தப்படவில்லை.

என் தம்பியின் மகன், மகள்கள், பேரன் - பேத்திகள் எல்லோரும் என் மீது காட்டும் அளவு கடந்த அன்பினால் நான் மிக்க மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்'' என்று கூறினார், LR ஈஸ்வரி [எல்லார் ஈஸ்வரி!].
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
"அம்ம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி........."

"வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறுபிள்ளைதான்
நான் அறிந்தாலும் அதுகூட
நீ சொல்லித்தான்........."
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
முத்தாரமே உன் ஊடல் என்னவோ! A.M. ராஜா- மனதை PEACOCK FEATHERஆல் TOUCH பண்ணி, மென்மையாக ஒலிக்கும் ஒரு மந்திரக் குரல்! L.R. ஈஸ்வரியின் அதிரடி அட்டகாசக் குரலுக்கு சொந்தக்காரரான... ஈஸ்வரியுன் இணைந்து பாடிய ஒரு பாடல்!

அத்தானிடம் என் கோபம் செல்லுமோ !_ L.R. ஈஸ்வரி - அதிரடி அட்டகாசக் குரலுக்கு சொந்தக்காரர்!

ராஜாவும், ஈஸ்வரியுமாக இணைந்து கலக்கிய ஒரு பழம்பெரும்
பாடல்!
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
"அம்ம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி........."

"வளர்ந்தாலும் நான் இன்னும்
சிறுபிள்ளைதான்
நான் அறிந்தாலும் அதுகூட
நீ சொல்லித்தான்........."
Semma songs idheyellam ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Superb pa palinkinal oru mallikai,pattathu rani pattu my favourite &her devotional songs
Enakkum Devi... Niraiya perukku fav... Ivangaloda voice & songs rendume wow... Solla வைக்கும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top