• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எழுதுகிறேன் ஒரு கடிதம் - 16

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
வணக்கம் தோழமைகளே, இன்றைய கடிதம்... படித்துவிட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். சென்ற பதிவிற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.
04BD79F1-A481-4DF3-93C1-FB2E73F841D2.jpeg
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அத்தியாயம் - 16

அரண்மனையப் போலிருந்த அந்த வீட்டில் தன்னுடைய சிம்மாசனமான சாய்வு நாற்காலியில் ஏதோ தீவிரமாக சிந்தித்தபடி அமர்ந்திருந்தார் லிங்கேஷ்வரன். தேஜூவினுடைய தாத்தா. வயது எண்பதைத் தாண்டிய பொழுதும் பேச்சிலும் பார்வையிலும் கூர்மை குறையாமல் இருந்தது. தங்களுடைய பிள்ளைகளே தோளைத் தாண்டி வளர்ந்து விட்ட பிறகும் கூட இன்னமும் அப்பா என்றால் சிம்ம சொப்பனம் தான் மகன்கள் மூவருக்கும் அந்த வீட்டில்.

அந்த வீட்டிற்கு வந்த மருமகள்கள் மூவருமே குணவதிகளாக அமைந்துவிட இன்று வரை அந்தக் கூட்டுக் குடும்பம் கட்டுக் குலையாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு அந்த வீட்டில் உதித்தப் பெண் வாரிசு தேஜஸ்வினி. அதுவும் தன் காதல் மனைவியை அப்படியே அச்சாகக் கொண்டுப் பிறந்தவள் மீது கொள்ளைப் பிரியம் பெரியவருக்கு.

தன்னுடைய ஆசைப் பேத்திக்குத்தான் வரன் தேடும் படலம் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது கடந்த ஒரு வருட காலமாகவே. தேஜூ பிகாம் முடித்த கையோடு வரன் பார்க்கத் தொடங்கியவர்களுக்கு இன்னும் ஒன்றும் திருப்திகரமாக அமையவில்லை.

அவளும் சம்ரிதியுடன் இணைந்து விளையாட்டாக சி.ஐ.எம்.ஏ இன்டர் வெற்றிகரமாக முடித்திருந்தாள். அடுத்து ஆறு மாத காலமாவது ஆர்டிகள்ஷிப் செய்தால் தான் பைனல் எக்சாம் எழுத முடியும் என்பதால் இவர்களுடைய ஆடிட்டர் மூலமே அதற்கும் ஏற்பாடு செய்து இப்பொழுது சமீபமாக பெண்கள் இருவரும் அதற்கு செல்லத் தொடங்கியிருந்தார்கள்.

வரும் வரன் எதுவுமே திருப்திகரமாக இல்லை பெரியவருக்கு. என்னதான் பாரம்பரியமிக்கக் குடும்பமாக இருந்தாலும் தந்தையின் தயவை எதிர்பார்க்காமல் சுயம்புவாக முன்னேறிய ஒருவனைத் தேடிக் கொண்டிருந்தார் லிங்கேஷ்வரன். மகன்கள் மூவருமே ஆள் மாற்றி ஆள் கொண்டு வரும் ஜாதகத்திலெல்லாம் ஏதாவது ஒரு குறை கண்டுபிடித்துக் கொண்டிருந்தார் மனிதர்.

குணமிருப்பவனிடம் புத்திக் கூர்மை இல்லை. இது இரண்டும் இருந்தால் ஆள் பார்க்கத் தோரணையாக இல்லை. பேச்சு சாமர்த்தியம் இல்லை. இப்படி பல இல்லைகள் தொல்லைகளாக மாறி அவரை இம்சித்துக் கொண்டிருந்தது. இது அனைத்தும் ஒருங்கே அமையப் பெற்றவனாக இருந்தால் அவன் இந்நாட்டிலேயே இல்லை.

லிங்கேஷ்வரன்தான் எல்லைக் கோடு விதித்திருந்தாரே பேத்தியைத் திருமணம் முடித்து அனுப்ப. மாப்பிள்ளை உள்ளூரைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் அதாவது திருச்சிக்குள்ளேயே மாப்பிள்ளை இருக்க வேண்டும். அதிகபட்ச தூரமென்றால் கரூர், தஞ்சாவூர் வரைதான். அதையும் தாண்டியெனறால், பேத்தியை அவ்வளவு தூரமாக எல்லாம் கட்டிக் கொடுக்க மனம் வரவில்லை கிழவனாருக்கு.

இந்தச் சிந்தனையிலேயே அமர்ந்திருந்தவரைக் கலைத்தது ஆசைப் பேத்தியின் குரல். "தாத்தா என்ன யோசனையெல்லாம் பலமா இருக்கு?" என்று கேட்டபடியே அவர் கால்களுக்கருகில் வந்தமர்ந்தாள் தேஜூ.

"எல்லாம் உன் கல்யாண விஷயம்தான் ராஜாத்தி" பரிவுடன் அவள் தலைக் கோதியவாறே தொடர்ந்தார் பெரியவர்.

"வர வர திருச்சியில பயலுகளுக்குப் பஞ்சமாகிப் போச்சு போல... தோரணையா ஒருத்தன் சிக்க மாட்டேங்குறான். அதான் என் பேத்திக்கின்னு பிறந்த மகராசா எங்கய்யா இருக்க நீ ன்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்."

"பேசாம எனக்கு வீட்டோட மாப்பிள்ளையா பார்த்திடுங்க தாத்தா." சலுகையாக அவர் மடியில் தலை சாய்த்துக் கொண்டே கூறினாள் தேஜூ.

"ஆங் அது சரி வராது ராஜாத்தி. வீட்டோட இருந்துட்டா நாளைப்பின்ன இந்தப் பயலுக அவரை மதிக்காமப் போயிட்டானுங்கன்னா? உன் மாப்பிள்ளை ஒத்த வார்த்தை சொன்னா அதுக்கு மறுப்பா மூச்சு கூட விடக்கூடாது இவனுங்க ஆறு பேரும். அப்படித் தோரணையான ஒருத்தனைத் தான் தேடுறேன். ஒன்னும் சிக்க மாட்டேங்குது"

"என் வீட்டுக்கே வந்து என்னையவே கட்டிக்கிட்டு என் அண்ணன் தம்பிங்களையே மிரட்டிருவானா அவன்? விடுவேனா நானு? கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டிட மாட்டேன்" கையில் அணிந்திருந்த வளையலை மேலேற்றி விட்டவாறு சிலிர்த்துக் கொண்டு பதிலளித்தாள் தேஜூ.

"அதுக்கில்ல ராஜாத்தி, உங்க ஏழு பேருக்கும் பெருசா வயசு வித்தியாசம் கிடையாது. எல்லாரும் அடுத்தடுத்துப் பிறந்துட்டீங்க. உனக்குப் பார்க்குற மாப்பிள்ளையாவது கொஞ்சம் தலைமைப் பண்பு இருக்குறவனா பார்த்துட்டோமுன்னா எங்க காலத்துக்கு அப்புறமும் மாப்பிள்ளை நம்ம குடும்பத்தைப் பார்த்துக்கிடுவாருல்ல."

அதட்டியும் பேசத் தெரியணும் அனுசரிச்சும் போகத் தெரியணும். அந்தக் குணம் எல்லாருக்குமெல்லாம் வந்துடாது. உங்கப்பாமார் மூணு பேரும் கொண்டு வந்த வரன்கள்ல ஒன்னுல கூட அந்த மாதிரி இல்ல. ஒருத்தன் முகத்தைப் பார்த்தா தெரியாது அவன் குணம் என்னன்னு, கண்ணே காட்டிக் கொடுத்துடுமே குணத்தை" மூச்சு வாங்கப் பேசி முடித்தார் லிங்கேஷ்வரன்.

கண்களைப் பற்றிப் பேச்சு வந்ததும் தேஜூவின் மனதிற்குள் பளிச்சென்று மின்னி மறைந்தது தன்னை ஆழ்ந்து நோக்கும் ஒரு ஜோடிக் கண்கள். சுரேஷ் ஆதித்யாவின் கண்கள். கண்ணில் படாதது கருத்தில் பதியாது என்று தான் அவளும் நினைத்திருந்தாள்.

ஆயினும் தூக்கத்தில் கூட அவளை அந்தக் கண்கள் இம்சித்துக் கொண்டுதான் இருந்தன. தூக்கத்தில் மட்டுமல்ல சம்பந்தமேயில்லாமல் சம்ரிதியுடன் கிளாசுக்கு செல்லும் பொழுது, ஐஸ்க்ரீம் பார்லரில், இவ்வளவு ஏன் வீட்டுத் தோட்டத்தில் உலவும் பொழுது கூட அந்தக் கண்கள் அவளை உற்று நோக்குவதாய் தோன்றும். சுற்றி வரத் தேடியும் பார்ப்பாள். யாரும் இருக்க மாட்டார்கள். தலையில் அடித்துக் கொண்டு பிரமை என்று எண்ணிக் கொள்வாள்.

இன்று தாத்தாவும் கண்களைப் பற்றிப் பேசவும் அவளுக்கு சுரேஷ் ஆதித்யாவின் நினைவுதான் வந்தது. அந்த நினைவுடனே, "அப்ப நீங்க அவனைத்தான் பார்க்கணும் தாத்தா. நீங்க கேட்குற க்வாலிபிகேஷன்ஸ் எல்லாம் அவன் கிட்ட மட்டும் தான் இருக்கு" மனதிற்குள் பேசுவதாக எண்ணிக் கொண்டு வாய்விட்டே சொல்லியிருந்தாள் தேஜூ.

"யாரை ராஜாத்தி சொல்ற?" என்று தாத்தா வினவவும் முதலில் திருதிருத்தவள் பின் சுதாரித்துக் கொண்டு, "அதான் தாத்தா மித்ரன் மாமா... அவங்க தான் நீங்க கேட்குற மாதிரியே இருப்பாங்க. ஆனா என்ன இருக்குற ஊருதான் சிங்கப்பூர். நீங்கதான் சிங்காரத்தோப்பு தாண்டக் கூடாதுன்னு சொல்லியிருக்கீங்களே, அதனால் அவரும் ரிஜெக்டட்" என்று கூறிவிட்டு விட்டால் போதுமென்று அந்த இடத்தைக் காலி செய்திருந்தாள் தேஜூ.

இதற்கு மேல் அங்கு அமர்ந்திருந்தால் கிழவர் தன் வாயாலேயே எல்லாம் வரவழைத்துவிடுவார் என்று தோன்றியதால் வாய்க்கு வந்ததை உளறிவிட்டுப் பறந்திருந்தாள். தாத்தாவோ இது ஏன் நமக்குத் தோணாமல் போனது என்று யோசிக்கத் தொடங்கிவிட்டார்.

ராஜன் இறந்த வீட்டில் தான் மித்ரனை அவரும் கொஞ்சம் ஊன்றிக் கவனித்திருந்தார். அன்பு, பாசம், அழகு, கருணை, கம்பீரம், பொறுப்புணர்வு, ஆளுமைத்திறன், சுறுசுறுப்பு அனைத்தையும் ஒருங்கே பெற்றவன். இப்பேற்பட்ட மாப்பிள்ளை எங்கு தேடினாலும் கிடைப்பது கஷ்டம்தான்.

கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு இத்தனை நாள் நெய்க்கு அலைந்திருக்கிறோமே என்று நொந்து கொண்டவர் இதற்கு மேலும் தாமதிக்க விரும்பாமல் உடனடியாக தேஜூவின் தந்தையை அழைத்துவிட்டார் இது குறித்துப் பேசுவதற்கு.

'சம்ரிதி இருக்கும் போது நம்ம பொண்ணுக்கு எப்படிப்பா கேட்கறது' என்று தேஜூவின் தந்தை வெகுவாகத் தயங்க, "யார்றா இவன் சுத்த கூறு கெட்டவனா இருக்கான். அவங்க ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பினா நாம நடுவுல போறது தப்பு. கேட்டுப் பார்ப்போம். அப்படி எதுவும் இல்லைன்னா நாம நம்ம பிள்ளைக்குக் கேட்குறதுல என்ன தப்புங்குறேன்?" என்று அடித்துப் பேசினார் கிழவர்.

தூரத்தைத் தவிர மித்ரனிடம் சொல்வதற்குக் குறையாக ஒன்றும் இல்லையே. அதுவும் கூட திருமணத்திற்குப் பிறகு சென்னைக்கே வந்துவிடுமாறு கொஞ்சம் தயவாக அழைப்பு விடுத்தால் மித்ரன் ஒப்புக் கொள்வதற்கும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கருதினார் லிங்கேஷ்வரன்.

"சரி நான் உங்க மருமகள்கிட்ட சொல்லி லெக்ஷ்மி அண்ணிகிட்ட பேசச் சொல்றேன்ப்பா" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தேஜூவின் தந்தை. ஆனால் தந்தை மறுநாளே கல்யாணப் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு வருவார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

சுஜாதா, லெக்ஷ்மி மற்றும் சம்ரிதியைப் பார்க்கவென சென்னையிலிருந்து கிளம்பி வந்திருந்தார். இம்முறை உடன் விஸ்வநாதனும் வந்திருந்தார். சம்ரிதி தேஜூவுடன் ஆர்ட்டிகள்ஷிப் ட்ரெயினிங்கிற்கு சென்றுவிட இவர்கள் மூவருமாக மட்டும் கிளம்பி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்திருந்தார்கள்.

பெண்கள் இருவரும் சக்கரத்தாழ்வாரை வணங்கிவிட்டு வருவதாகக் கூறிச்செல்ல விஸ்வநாதன் மட்டும் கோவில் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். சரியாக அந்த நேரம் அங்கு வந்து சேர்ந்தார் லிங்கேஷ்வரன். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்து முடித்தவுடன் பேச்சைத் தொடங்கினார் லிங்கேஷ்வரன்.

"விஸ்வநாதா உன் கடைசிப் பையனுக்கு எதுவும் வரன் பார்க்குறியாப்பா?"

"இன்னும் அந்தப் பேச்சே ஆரம்பிக்கலீங்க மாமா. அவன் ரொம்ப பிசியாவே இருக்கான். கொஞ்சம் ப்ரீயாகட்டும்னு பார்க்குறேன்" யோசனையாகப் பதிலளித்தார் விஸ்வநாதன்.

"வெளியில பார்க்குறீங்களா இல்ல சம்ரிதியையே முடிக்கலாமுன்னு இருக்கீங்களா?"

"இல்லயில்ல வெளியிலதான் பார்க்கணும். சம்ரிதியைப் பேசி முடிக்கிற மாதிரியெல்லாம் எந்த ஐடியாவும் இல்லை" அவசரமாக மறுத்தார் விஸ்வநாதன்.

"நாங்க என் பேத்தி தேஜஸ்வினிக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம். அதான் உங்க பையனைக் கேட்கலாமுன்னு" என்று கூறி சற்று நிறுத்தியவர், "உனக்கு விருப்பமில்லைன்னாலும் உன் வீட்டம்மாவுக்கு ஆசை இருக்கலாம் இல்லையா? தன் தம்பி மகளைத் தன் பையனுக்குக் கட்டி வைக்கணுமுன்னு, அதுனால நீ வீட்ல கலந்து பேசிட்டு சொல்லு. எல்லாருக்கும் விருப்பம்னா நாம மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பத்திப் பேசலாம்" என்று முடித்தார் பெரியவர்.

விஸ்வநாதன் யோசிக்க தொடங்கினார். தேஜஸ்வினி நல்ல கலகலப்பான பெண். மார்டனாகவும் இருப்பாள். மித்ரனுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தமாக இருப்பாள் என்று தோன்றியது. தான் எதிர்பார்த்தது போல் பிசினஸ் பின்புலமும் இவர்களுக்கு இருக்கிறது. என்ன நாம் கணினித்துறையில் எதிர்பார்த்தோம் இவர்கள் ஜவுளி மற்றும் நகைக்கடை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் பரவாயில்லை இந்த சம்பந்தத்தையே முடித்துவிடலாம் என்று முடிவு எடுத்துக் கொண்டார் விஸ்வநாதன்.

தன் பதிலை எதிர்பார்த்துக் காத்திருந்த பெரியவரிடம் "எல்லாரும் கோவிலுக்கு தான் வந்தோம் சுஜாதாவும் லெக்ஷ்மியும் இப்ப வந்திடுவாங்க. அவங்க கிட்டயே கேட்கலாம்" என்றும் கூறிவிட்டார்.

சற்று நேரத்தில் சுஜாதாவும் லக்ஷ்மியும் வந்துவிட அனைவரும் ஒன்றாகவே வீட்டிற்கு கிளப்பினார்கள். வீட்டிற்கு வந்தவுடன் மறுபடியும் ஒருமுறை தேஜஸ்வினியின் தாத்தா அனைத்தையும் விளக்கிக் கூற கேட்ட சுஜாதாவிற்கும் லக்ஷ்மிக்கும் கொஞ்சம் கதி கலங்கித் தான் போனது.

முதலில் சுதாரித்த சுஜாதா, "மித்ரன் நியூசிலாந்து போய் இருக்கான். அவன் வரட்டும். அவன் கிட்ட கேட்டுட்டு முடிவு எடுக்கலாம் பெரியப்பா" என்று கூறினார்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
லிங்கேஸ்வரன் லக்ஷ்மியைப் பார்க்க அவரோ, "வாழப்போவது பிள்ளைங்க தானே மாமா, நம்ம ஆசையை அவங்க மேல திணிக்கக் கூடாது. அவங்க வாழ்க்கை அவங்களே முடிவு எடுக்கட்டும்" என்று கூறி ஒதுங்கிக் கொண்டார்.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே சம்ரிதியை ட்ராப் செய்ய வந்த தேஜூவும் தன்னுடைய தாத்தாவின் காரை அங்கே பார்த்துவிட்டு அவளும் வீட்டிற்குள் நுழைந்திருந்தாள்.

அமைதியாக உள் நுழைந்து "வாங்க தாத்தா" என்று இவரை வரவேற்ற சம்ரிதியை அருகில் அழைத்து அமர்த்திக்கொண்டார் லிங்கேஸ்வரன். அவள் தலையை ஆதுரமாக வருடிக்கொண்டே, "ராஜாத்தி ஏன்டா இப்படி இருக்க? பழையபடி கலகலப்பா இருடா. நாங்களெல்லாம் இருக்கோம்ல உனக்கு" என்று கூறினார். பதிலாக ஒரு புன்னகை மட்டுமே கிடைத்தது பெண்ணிடமிருந்து.

"உனக்கு மித்ரன் மேல எதுவும் ஆசை இருக்கா ராஜாத்தி?" நேரடியான கேள்வி லிங்கேஸ்வரனிடமிருந்து. சற்று நேரம் தடுமாறிய சம்ரிதி,

"அப்படியெல்லாம் எதுவும் இல்ல தாத்தா. எனக்கு மத்த மூணு மாமா மாதிரிதான் மித்ரன் மாமாவும்" மெல்லியக் குரலில் பதில் வந்தது சம்ரிதியிடமிருந்து.

"இல்லடா தேஜூவுக்கும் மித்ரனுக்கும் கல்யாணம் பேசலாம்னு பார்க்கிறோம். அதான் உன்கிட்ட ஒரு தடவைக் கேட்டிடலாமுன்னு பார்த்தேன்" மீண்டும் தெளிவுபடுத்திக் கொண்டார் பெரியவர்.

"அப்படியெல்லாம் எதுவும் இல்லை தாத்தா. இவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிகிட்டா முதல்ல சந்தோஷப்படுறது நானாதான் இருக்கும்" இம்முறைத் தெளிவாக அவர் முகம் பார்த்துக் கூறியவள் எழுந்து அவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

இதையெல்லாம் கேட்ட தேஜூவிற்குத்தான் ஐயோவென்றிருந்தது. தான் எதற்காக சொன்னோம், இந்தத் தாத்தா அதைப் பிடித்துக் கொண்டு எங்கு வந்து நிற்கிறார்? விறுவிறுவென்று சம்ரிதியின் பின்னால் சென்றவள் அவளைத் தன்னை நோக்கித் திருப்பி, "இங்க பாரு ரிதி, இது ஒன்னும் விளையாட்டில்ல. வாழ்க்கை. ஏன் அப்படி சொன்ன தாத்தாக்கிட்ட? நீ மித்ரன் மாமா மேல ஆசைப்படலை? உண்மையைச் சொல்லு" என்று சம்ரிதியிடம் கேட்க அவளோ,

"நான் எப்போதும் சொல்றது தான் தேஜூ. நீயா எதையாவது கற்பனை பண்ணிக்காதே. நீ அவங்களைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு நீயும் சந்தோஷமா இரு" என்று ஆரம்பித்தவள், "மித்ரன் மாமாவையும் சந்தோஷமா வைச்சுக்கோ" என்று முடித்தாள். இதைச் சொல்லும் பொழுது மட்டும் குரல் கெஞ்சலாக வெளிவந்தது.

கோபமாக சம்ரிதியை உறுத்து விழித்த தேஜூ அங்கிருந்து வெளியேற அவளுடைய தாத்தாவும், "மித்ரன் வரவும் கேட்டுச் சொல்லுங்க. மேற்கொண்டு பேசலாம்" என்று கூறிவிட்டு விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டார்.

சம்ரிதி அவளுடைய மாமரத்து ஊஞ்சலைத் தேடி வந்துவிட்டாள். மித்ரனுடனான அவளுடைய நினைவுகளனைத்தும் இந்த ஊஞ்சலில் தானே பெரும்பாலும் நடந்திருந்தது. முதல் முதலில் மித்ரனை 'அத்தான்' என்று அழைத்ததில் தொடங்கி, முதல் முறையாகக் கரம் பற்றி 'இந்த அத்தானை நம்புறதானே' என்பது வரை அவளது உள்ளத்தில் பொத்தி வைத்தக் காதலுக்கு சாட்சி இந்த ஊஞ்சலே.

'என் மேல எப்படி மாமா காதல் வந்தது உங்களுக்கு? நான் உங்க ஆசை ராஜா மாமாவோட பொண்ணுங்குறதால தானே? இல்லாட்டி நீங்க என்னைத் திரும்பிக் கூடப் பார்த்திருக்க மாட்டீங்க. நான் உங்க மாமா பொண்ணு இல்லையாம். அப்போ மத்த பொண்ணுங்க மாதிரிதானே நானும் உங்களுக்கு? இந்த விஷயம் எனக்குத் தெரிய வராமலே போயிருந்தா சந்தோஷமா உங்களைக் கல்யாணம் பண்ணி இருப்பேன்.

இப்ப இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு அதை மறைச்சு உங்களை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இதை உங்ககிட்ட சொல்லவும் முடியாது. உங்ககிட்ட மட்டுமில்ல இந்த விஷயத்தை யாருகிட்டயும் சொல்றதுக்கு என் மனசுல தெம்பு இல்லை மாமா.

நீங்க தேஜூவைக் கல்யாணம் பண்ணிக்கோங்க. அவ ரொம்ப நல்லவ மாமா. அவ உங்களை நல்லா பார்த்துப்பா. அவதான் உங்களுக்கு ஏத்த ஜோடி எல்லா விஷயத்திலேயும். நான் உங்க ரெண்டு பேர் கண் முன்னாடி கூட வரமாட்டேன் மாமா. இப்பப் போனா தேவையில்லாத சந்தேகம் வரும். உங்க கல்யாணம் முடிஞ்ச கையோட நான் அம்மாவைக் கூட்டிட்டு கண்காணாம எங்கேயாவது போயிடுறேன்.

அதுவுமில்லாம என் கூட நடக்காட்டியும் கல்யாணக் கோலத்துல உங்களைப் பார்க்கணுமுன்னு இப்பவும் இந்த பாழும் மனசு ஆசைப்படுதே. இந்த ஒரே ஒரு ஆசை மட்டும் நிறைவேறினா போதும் மாமா. நான் அதுக்கப்புறம் எந்த வகையிலும் உங்க ரெண்டு பேருக்கும் தொந்தரவா வரவே மாட்டேன்.

இந்த இடத்துல வைச்சுதான் உங்களை முதல்முதலா அத்தான்னு கூப்பிட்டேன். அதுதான் கடைசித் தடவைன்னு அந்த ஆண்டவன் முடிவு பண்ணிட்டான் போல. சொல்லாமலே நாம ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் உணர்ந்து காதலிக்கிறோமுன்னு அவ்வளவு பெருமைப்பட்டேன். இப்போ சொல்லாமலே அந்தக் காதல் முடிஞ்சும் போச்சு' என்று விரக்தியாக சிந்தித்துக் கொண்டாள் சம்ரிதி.

முக்கியமான ஒரு விடயத்தை மட்டும் மறந்திருந்தாள் சம்ரிதி. அது மித்ரன். கடலளவு இவள் மேல் காதல் கொண்டுள்ளவன் இவள் தன்னுடைய மாமா பெற்ற மகள் இல்லை என்கிற ஒற்றைக் காரணத்துக்காக இவளை வெறுத்து விடுவானா என்ன? அதையும் இவள் சொல்லாமல் இருக்கும் பொழுது, அவன் எப்படித் தேஜூவைத் திருமணம் செய்ய ஒப்புக் கொள்வான்? தன்னுடைய இடத்திலிருந்து மட்டுமே சிந்தித்துப் பார்த்தவள் மித்ரனுடைய கோணத்திலிருந்து சிந்திக்க மறந்திருந்தாள்.

ⰎⰎⰎⰎⰎⰎⰎⰎⰎⰎ

இங்கு இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்க, மித்ரன் நியூசிலாந்தில் உள்ள குகையொன்றில் அமர்ந்து அவனுடைய மெஷின் லாங்குவேஜ் கோடிங்குடன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தான். மீண்டும் ஒரு மூன்று மாதத்திற்கு ஒரு சிறு பகுதி கோடிங் மட்டும் முடித்துக் கொடுப்பதற்காக இவனை வரவழைத்திருந்தார்கள்.

மூன்று நாடுகளுடைய பாதுகாப்புத் தொடர்பான செயற்கைக் கோள் வடிவமைப்பாதலால் அதனுடைய உள் கட்டமைப்புத் தொடர்பான பணிகள் அனைத்துமே ரகசியமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூன்று நாடுகளுமே ஒருமனதாக நியூசிலாந்து நாட்டிலுள்ள ஒரு தீவினுடைய குகைகளைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

அதில் மித்ரனுடைய பணி வெறும் மூன்று மாத காலம் மட்டுமே. சில விஞ்ஞானிகள் வருடக் கணக்கில் இந்தப் பணிக்காக தம் நாடு மறந்து, குடும்பம் மறந்து அயராது பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். தொலைத் தொடர்பும் கிடையாது. மாதத்திற்கு ஒரு முறை இராணுவக் கப்பல் இவர்களுக்கான உணவுப் பொருடகளுடன் அந்தத் தீவிற்கு வரும். அப்பொழுது மட்டுமே அங்குள்ளவர்களால் தங்கள் குடும்பத்தார்களுடன் பேசிக் கொள்ள முடியும்.

மூன்று மாத காலம் எந்தவித தகவல் தொடர்பும் இல்லாமல் எப்படி என்று தான் மித்ரன் வெகுவாக யோசித்தான். வாங் லீ தான் இது யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு என்று கூறி உற்சாகமூட்டி மித்ரனை வற்புறுத்தி அனுப்பி வைத்தான். வந்த பிறகு அங்குள்ள இயற்கை சூழ்நிலை மித்ரனுக்குமே மிகவும் பிடித்திருந்தது.

சம்ரிதியுடன் கனவிலேயே குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான். பெண்ணவளின் நடவடிக்கைகள் மித்ரனையும் பாதித்திருந்தது. எப்பொழுதுமே சம்ரிதி அலைப்பேசி உபயோகிப்பது கிடையாது. ராஜனுக்குப் பிடிக்காததால் இவளும் அதைத் தேவையில்லை என்று ஒதுக்கி இருந்தாள். வீட்டுத் தொலைப்பேசி மட்டுமே. அதிலும் பொதுவான நல விசாரிப்புகள் மட்டுமே பெரும்பாலும் நடைபெறும் இருவருக்கிடையில்.

இப்பொழுது மாமா இறந்த பிறகு தொலைப்பேசியில் கூட அவளுடன் பேசுவது அரிதாகிப் போயிருந்தது. அப்படியே பேசினாலும் வெறும் ஒற்றை வார்த்தைப் பதில்கள் தான் வந்தது சம்ரிதியிடமிருந்து. திருச்சிக்கு அடிக்கடி செல்ல முடியாதபடி மித்ரனுக்கும் வேலை பிடித்துக் கொண்டது.

என்ன தான் பிரச்சனையோ இந்தப் பெண்ணுக்கு என்று புலம்ப மட்டுமே முடிந்தது மித்ரனால். லெக்ஷ்மி அத்தை, தேஜூ யாரிடம் கேட்டாலும் 'நன்றாகத் தான் இருக்கிறாள், அப்பாவைத் தேடுகிறாள் போல' போன்ற பதில்கள் தான் வந்தன.

குழம்பிப் போனவன், 'இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. அவள் சி.ஐ.எம்.ஏ பைனல் எக்சாம் முடிந்தவுடன் திருமணம் முடித்து தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு வந்த பிறகு அவளிடம் பேசி சரி செய்து கொள்ளலாம்' என்று ஒருமனதாக முடிவெடுத்திருந்தான் மித்ரன்.

அன்று இராணுவக் கப்பல் வரும் நாள். மித்ரன் நியூசிலாந்து வந்தும் இரண்டு மாத காலம் போயிருந்தது. இரண்டு மாதமும் அவன் யாருக்கும் பேசவில்லை. சரி இன்று அம்மாவுடன் பேசுவோம் என்று கப்பலுக்கு வந்திருந்தான்.

சுஜாதாவின் கைப்பேசிக்கு வந்த அழைப்பை விஸ்வநாதன் தான் ஏற்றுப் பேசினார். சுஜாதா கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போயிருந்தார் மறதியாக. ஆரம்ப கட்ட நல விசாரிப்புகளைத் தொடர்ந்து,

"மித்ரா உனக்கும் வயசு இருபத்தியெட்டு ஆகப் போகுது. கல்யாணத்துக்குப் பார்க்க ஆரம்பிக்கலாமின்னு நினைக்கிறேன்" நேரடியாகப் பேச்சைத் தொடங்கினார் விஸ்வநாதன்.

"ஓ..." கொஞ்சம் ஸ்ருதி இறங்கிப் போய் பதில் வந்தது மித்ரனிடமிருந்து. அவர் பேசுவதும் தெளிவாகக் கேட்க முடியவில்லை மித்ரனுக்கு. ஒரே இரைச்சலாக இருந்தது. லைன் அவ்வளவு க்ளியராக இருக்கவில்லை.

"பொண்ணு யாரு தெரியுமா? இவளும் உன் மாமா பொண்ணுதான். சம்ரிதியோட சித்திப் பொண்ணு தேஜூ" என்றார் விஸ்வநாதன்.

மித்ரனுக்குக் காதில் விழுந்ததெல்லாம் 'மாமா பொண்ணு சம்ரிதி' மட்டும்தான். அதுவுமே விட்டுவிட்டு அரைகுறையாகத் தான் கேட்டது. முதலில் அவள் படிப்பு முடியவில்லையே என்று யோசித்தவன் பின் தந்தையே மனமிறங்கி வந்து கேட்கும் பொழுது நாம் தடை சொல்ல வேண்டாம் என்று நினைத்தவன்,

"உங்க இஷ்டப்படி செய்ங்கப்பா" என்று முடித்திருந்தான்.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
மித்ரனின் சம்மதம் கிடைத்தவுடன் அதைத் தேஜூவின் வீட்டிற்குத் தெரியப்படுத்தியவர் அடுத்தக்கட்ட வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டார் விஸ்வநாதன். இருவருடைய ஜாதகமும் வேறு நன்றாகப் பொருந்தி வர நிச்சயதார்தத்திற்கு நாளும் குறிக்கப்பட்டது.

மூணு மாசம் எப்படி மித்ரா பேசக் கூட இல்லாமல் இருப்பது என்று சுஜாதா மலைத்ததால், மித்ரன் அவனுடைய வேலை முடிந்ததும் நியூசிலாந்தில் இருந்து நேரடியாக சென்னைக்கு வந்து தாயாருடன் இரண்டு நாள் தங்கிவிட்டுப் பிறகு சிங்கப்பூர் கிளம்புவதாகக் கூறி அதற்குத் தகுந்த பயண ஏற்பாடுகளையும் செய்திருந்தான்.

அப்படி மித்ரன் இந்தியா வரும் நாளில் நிச்சயம் செய்வதாகப் பேசி முடிவெடுக்கப்பட்டது. சுஜாதாவால் இதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏன் இவ்வளவு அவசரம் என்று கேட்டதற்கு விஸ்வநாதன் ஒரு லட்சார்ச்சனையே செய்து முடித்தார்.

"உனக்கு உன் தம்பி பொண்ணை என் பையனுக்குக் கட்டி வைக்கணுமுன்னு ஆசை. உன் ஆசையை அவன் மேல திணிக்க பார்க்குற" அப்படி இப்படி என்று ஆடித் தீர்த்துவிட்டார் மனிதர்.

பார்த்திபனும் நேஹாவும்தான் சுஜாதாவை சமாதானம் செய்வார்கள். "எதுவா இருந்தாலும் மித்ரன் வரட்டும்மா. பேசிக்கலாம்." என்று.

"எப்படிடா, அதான் அவன் வந்து இறங்குற அன்னைக்கே நிச்சயதார்த்தம் வைக்கிறதா உங்கப்பா பேசி வைச்சிருக்காரே. அப்புறம் எப்படி அவன்கிட்ட பேச" என்று குழம்பிப் போனார் சுஜாதா.

"கல்யாணம் இல்ல நிச்சயதார்த்தம் கூட அவன் விருப்பப்பட்டா மட்டும் தான் நடக்கும். அவனுக்குப் பிடிக்காத விஷயத்தை யாராலும் கட்டாயப்படுத்தி செய்ய வைக்க முடியாதும்மா. நீங்க கவலைப்படாம இருங்கம்மா."

"இதுல இன்னொரு பொண்ணு வாழ்க்கையும் அடங்கியிருக்கு பார்த்திபா. அதான் எனக்குப் பயமாயிருக்கு. பெண் பாவம் பொல்லாதது." என்ன யோசித்தும் சுஜாதாவால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.

தேஜஸ்வினி நிச்சய ஏற்பாடுகள் நடக்கும் வேகத்தைப் பார்த்து மிரண்டே போனாள். நாள் நெருங்க நெருங்க அவளால் இயல்பாக இதை எதிர்கொள்ள முடியவில்லை. சம்பந்தமேயில்லாமல் அந்தக் கண்கள் மீதும் கண்களுக்குச் சொந்தக்காரன் மீதும் கோபம் கோபமாக வந்தது. 'இவன் பாட்டுக்கு வந்து லவ் பண்றேன்னு சொல்லிட்டு இப்போ அம்போன்னு விட்டுட்டுப் போயிட்டான்' என்று சுரேஷ் ஆதித்யாவை மனதிற்குள் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

தன்னுடைய நண்பர்கள் மூலமாக முயன்று சுரேஷ் ஆதித்யாவினுடைய கைப்பேசி எண்ணையும் வாங்கி இருந்தாள். அழைக்கத்தான் இன்னும் மனம் வரவில்லை.

மித்ரன் அங்கு சந்தோஷத்தின் உச்சியில் இருக்க, சம்ரிதி இன்னும் கொஞ்சம் தன் கூட்டுக்குள் சுருங்கிப் போனாள். இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, இவர்களனைவராலும் ஏதோ ஒரு விதத்தில் எதிர்பார்க்கப்பட்ட நிச்சயதார்த்த நாளும் வந்து சேர்ந்தது.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Mee came sangi kaa.. ?????

Yakka ennaka entha idathula mudichirukeenga.. haiyoo ipo mithu vanthu aaduvaane.. ??? sooper.. avan thaan sammuva kalyanam panni vittutu poyitaana kovathula..

Theju enna aaguna.. athi payal enga ponaan.. nalla vela pass aagunaanga.. enaku harini niyabagam vanthuruchi.. avalum 6 maasam velaki ponum nu ponaa aalaye kaanom.. ???

next ud epo kaa varum.. ??
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நானும் வந்துட்டேன்,
சங்கீதா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சங்கீதா டியர்
 




Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top