• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

எவ்வளவோ பண்ணிட்டோம் இத பண்ணமாட்டோமா ?? 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
எவன் ஒருவன் சிறுவயதில் ...இவன் என் நண்பன் என்று தோள்களில் கைபோட்டு சுற்றினானோ ,
அவனே இன்று வளர்ந்தபின் அத்தோள்களை அறுக்க பார்க்கிறான் ....
ஜாதி என்னும் அருவாள் கொண்டு !!!


அத்தியாயம் 3 :

பத்மகேசன் பவன்புத்ராவை பற்றி அறியாமல் தனது ஆட்களை திட்டிக்கொண்டிருக்க அங்கு வந்த அவரின் வலதுகை பரமேஷ்
மற்றவர்களை போகசொல்லிவிட்டு அவரிடம் பேசுகிறான் .

பரியா மற்றும் ப்ரியா இருவரும் அங்கு மறைந்திருந்து கேட்க ,

￰பரமேஷ் நேற்று அந்த கலவரத்தில் பவன்புத்ராவை பார்த்ததை பற்றி பத்மகேசனிடம் விவரிக்க ஆரம்பித்தான்.( வாங்க அங்க என்ன ஆச்சுன்னு நாமளும் பார்ப்போம் ).

கலவரம் நடந்து கொண்டிருந்த இடத்தில் சிறிதும் பதறாமல் , ஏதோ பிடித்த படத்தை ரசித்து பார்ப்பது போலான உடல்மொழியுடன் தனது பைக்யை நிறுத்தி , அதன் மேல் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான் பவன்புத்ரா .

தற்பொழுது அவன் பின்னால் பல போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்க, அதிலிருந்து இறங்கியவர்கள் இவனின் அருகில் வரிசையாய் நிற்க, அவனோ இது எதையுமே கவனித்தது போல் இல்லை.

அவ்வூரில் ஜாதி என்பது மிகபிரதானமாய் இருந்தது.

தேர்தல் நெருங்கும் வேளையில் கலவரத்தை உருவாக்கினால் அது ஆளுங்கட்சிக்கு எதிராய் திரும்பும் என்பதற்காக ***** கட்சியை சார்ந்த ஒருவர் பத்மகேசனிடம் பணம் கொடுத்திருந்தார்.

அதன்பெயரிலே அவரது ஆட்கள் இந்த கலவரத்தை உருவாக்கியது.

இதையறியாமல் இத்தனை நாள் ஒன்றாய் வாழ்ந்தவர்கள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொண்டிருந்தனர் .

தொடர்ச்சியான வண்டிகளின் சத்தத்தில் கூட்டத்தில் இருந்தவர்களில் ஒரு சிலர் திரும்பிப் பார்த்தனர் .

அதில் நேற்றுவரை ஒன்றாய் சுற்றிக்கொண்டிருந்ததை மறந்து அவன் வேறு ஜாதி என்பதை மட்டுமே கண்களில் கொண்டு ஒருவனை அடித்துக்கொண்டிருந்தவன் திரும்பி பார்த்து , அய்யயோ இவன் எதுக்கு இங்க வந்துருக்கான் என முனங்கினான்.

இத்தனை நேரம் அடிவாங்கியவன் இவனின் முனங்களில் நிமிர , எதிரில் அமைதியாய் வண்டியில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்த பவன்புத்ராவை பார்த்தவனின் கண்களில் கலவரம் சூழ்ந்தது . ஆத்தாடி ....இவனா ...இவன் எதையாவது வித்தியாசமா பண்ணி தொலைப்பானே என்றவனின் குரலே நடுங்கியது .

இவர்கள் மட்டுமில்லாமல் கூட்டத்திலிருந்த பத்மகேசனின் ஆட்களும் , இவனை பார்த்ததில்லை எனினும் அறிந்திருந்ததால் , அடக்கி வாசிங்க என ஒருவருக்கொருவர் கண்களால் பேசிக் கொண்டார்கள் .

சிறிது நேரம் ரசித்து பார்த்த பவன்புத்ரா அவர்கள் தன்னை பார்த்துவிட்டபிறகு பின்வாங்குவதை போல் தெரிய , அவனின் இதழ்கள் புன்னகையில் வளைந்தது .

பத்மகேசனின் ஆட்களுக்கோ நேரம் போவது புரிய என்னசெய்வது என முழிக்க ,இவனை பற்றி அறியாமல் ஒருவன் கூட்டத்தினுள் மேலும் கலவரத்தை தூண்டுவதற்க்காய் ***ஜாதியின் தலைவரின் மேல் கல்லை எரிய மீண்டும் அவ்விடம் போர்களமானது .

இவனை பற்றி அறிந்திருந்த மற்ற போலீசார் , இவனின் அடுத்த செயலை ஆவலாய் பார்க்க ஆரம்பித்தனர் .

பவன்புத்ராவோ , போர் அடிப்பது போல் இருக்கே என இரண்டு கைகளையும் மேலாய் தூக்கி சோம்பல் முறித்தான் .

அவனுக்கருகில் இவனை ஒத்ததுபோல் வயதுடைய போலீகாரன் ஒருவன் நின்றிருந்தான்.

அவனிடம் , சார் படம் போரடிக்குதே சூடு ஏற்றலாமா என்றவன் ஒற்றை புருவத்தை தூக்கி கண்காட்ட..., அடுத்த நொடி போலீஸ்காரர்கள் நரிகளின் மீது பாயும் சிங்கமாய் மாறி கூட்டத்தின் நடுவே பாய்ந்தனர் .


ஏட்டையா அதோ அந்த நீல சட்டைகாரன கால்ல போடுங்க... முருகேசன் சார் உங்க பின்னாடி ஒருத்தன் பம்முறான் பாருங்க அவனை மண்டைல கவனிங்க என ஒவ்வொருத்தரையும் சுட்டிக்காட்டி சொல்ல , அவர்களும் இத்தனை நாள் கேஸ் எதுவும் வரமால் அளுத்திற்க , கிடைச்சுது சான்ஸுன்னு பிரித்து மேய்ந்தனர் .

இதை அனைத்தையும் மறைவாய் நின்று பார்த்தகொண்டிருந்த பரமேஷ் , என்னடா இவன் !! போலீஸ்காரன்னா எல்லோரையும் அரஸ்ட்டு பண்ணி கூட்டிட்டு போறதவிட்டுட்டு , இங்கேயே எல்லாரோடையும் ப்பூய்ஸையும் பிடிங்கிடுவான் போலயே என இவனின் செயலை கண்டு புலம்பியவனை , களைப்பதுபோல் ஒலித்த விசில் சத்தத்தில் எவன்டா அவன் என பார்க்க அங்கு வாயில் வைத்த விரலை எடுக்காமல் இடைவிடாமல் விசிலடித்து கொண்டிருந்தான் பவன்புத்ரா.

இதற்க்கு முன் இப்படி அடிவாங்கியிறாததால் போலீசாரின் ஸ்பெஷல் கவனிப்பில் வலி தாங்கமுடியாமல் இருந்த பத்மகேசனின் ஆட்களில் சிலர், டேய் என்னடா இவன் ....இங்க நம்ம உசுறு போற மாதிரி அடி வாங்கிட்டு இருக்கோம் .., இவன் என்னவோ முதல் நாள் முதல் ஷோக்கு வந்தவன் மாதிரி விசில் அடிச்சுட்டு இருக்கான் என பொறுமினான்.

டேய் நாதாரி ..., வாயமூட்றா. அவன் விசில் அடிச்சா கூட பரவாயில்ல , ஆனா அதுக்கு நடுவுல அவன் மூச்சு விட்ற கேப்ல நம்ப மூச்ச எடுக்க கோர்த்துவிட்றான்டா என்றான் மற்றவன் அழாகுறையாக.


இவர்கள் பேசுவதை
கேட்டு கொண்டிருந்த பரமேஷ் , அடேயப்பா ... இவன் விரல் கூட இங்க ஒருத்தன் மேல படல..., ஆனா மொத்த பேரையும் இப்படி அலற வைச்சுட்டானே என மனதில் அவனை வியந்த வண்ணம் இருந்தான்.

அவன் எந்த நேரத்துல நினைச்சானோ அதுக்கு ஆப்படிப்பதுபோல் இருந்தது அடுத்ததாய் அவன் செய்தது . அத்தனை நேரம் போலீசார் கலவரம் செய்தவர்களை பிரியாணி போடுவதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் கண்களில் ஒருவன் வேகமாய் அரிவாளை எடுத்து ஒரு போலீஸாரின் பின் வெட்ட வருவதை பார்த்தவன் , அவ்வளவுதான் வேகமாய் பாக்கெட்டில் இருந்த துப்பாக்கியை பட்டென்று எடுத்து பொட்டென்று அவனின் காலில் சுட்டான் .

ஒரு நிமிடம் துப்பாக்கிச் சத்தத்தில் அந்த இடமே அமைதியாகியது. இந்த மாதிரி சூழ்நிலையில் அவ்வூரில் எந்த போலீஸ்காரர்களும் துப்பாக்கியை உபயோகப்படுத்துவதில்லை. சொல்லப்போனால் கலவரத்தின் நடுவே அடிவாங்கிய போலீஸ்காரர்களே அதிகம் . இவனோ அசால்டாய் எடுத்துச் சுட்டுவிட ஒரு நிமிடம் அனைவரும் அதிர்ந்தனர் .

அந்த அதிர்ச்சி மறைவதற்குள்ளாகவே தன் அருகில் முதலில் நின்றிருந்தவனுக்கு பவன்புத்ரா கண்காட்ட...பதிலுக்கு அவன் செய்த சைகையில் அடுத்த நொடி அங்கு ஒரு மாருதி வந்து நின்றிருந்தது.


ஏன்டா நாயே ! போலீஸ்காரனையே வெட்ட வருவியா என்றபடியே குண்டடி பட்டிருந்தவனை தூக்கி மாருதியில் போட்டவன் மறுபக்கம் ஏறி வண்டியை கிளப்பினான் . உணர்வுகளுக்கும் அவனை கண்டால் பயமோ வண்டியை கிளப்பியவனின் முகத்தில் மருந்திற்கும் இவ்வுணர்ச்சிகளும் இல்லை.

அங்கு நின்றிருந்தவர்களின் இச்செயலை எதிர்பார்க்காததால் இப்பொழுது என்ன செய்வது என முழித்திருந்தனர்.

போலீஸ்காரர்களோ இது வாடிக்கை தான் என சிரித்துக் கொண்டு, ம்ம்க்கும் ஒருத்தன் சிக்கிட்டான் . இம்முறை சார் , இவனா என்னவிதமா திரும்ப கொண்டுவரப்போறார் என தங்களுக்குள் விவாதிக்க ஆரம்பித்தனர் .

பரமேஷிற்கோ , இங்கே என்ன நடக்குது என முடியை பிய்த்துக் கொள்ளாத குறை.


இதுவரை பரமேஷ் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டுக கொண்டிருந்த பத்மகேசன், டேய் என்னடா ஆச்சு ! சுட்டவனை ஸ்டேஷன் கூட்டிட்டு போயிட்டானா.

அதற்க்கு பதிலாய் பரமேஷோ , வழக்கமான போலீஸ்னா அப்படித்தான் பண்ணிருக்கணும்..ஆனா இவன் சரியான வில்லங்கம் புடிச்சவனாச்சேணா.

அப்படி என்னதடா பண்ணி தொலைச்சான்.

கலவரம் நடந்த இடத்தையே நாலஞ்சு தடவை சுத்தி சுத்தி வந்தான்ணா . நான் கூட இன்னும் யாரையும் அள்ளிட்டு போபோறானோன்னு பார்த்தா , அவன் ஏற்கனவே தூக்கிட்டுபோனவன குப்பையாக்கி போட இடம் தேடி இருக்கான்ணா.

என்னடா சொல்ற... நாதாரி புரியிற மாதிரி சொல்ல மாட்டியா.

என்னத்தணா சொல்ல சொல்ற . கார்ல தூக்கி போடும்போதாச்சி அவனுக்கு கால்ல மட்டும்தான் காயம் .திரும்பி வெளியே போடும்போது காலு எங்கடா இருக்குனு தேடறாப்புல இருந்தான் ணா.


ஆனா அண்ணா அவனுக்கு நம்ப தான் இந்த கலவரத்துக்கு காரணம்னு தெரியாது .அவன் அவனோட மேல்அதிகாரிங்களுக்கு கூட பயப்படமாட்டானாம்ணா.

பத்மகேசனோ , டேய் ....அவன புகழ்ந்துதள்ளவா இங்கிட்டு வந்த .எவண்டா அவன்***** து அவனுக்குபோய் பயந்துகிட்டு . நம்ப மினிஸ்டர்ட ஒரு வார்த்த சொன்ன அடுத்த நொடி அவன வேற ஊருக்கு மாத்திட்ட போறாரு என போனை எடுத்தார்.

அதை பிடுங்கிய பரமேஷ் ,அய்யோ அண்ணா நீங்க வேற அப்படி ஏதும் பண்ணி தொலைக்காதீங்க. இப்போதான் அவன பத்தி விசாரிச்சுட்டு வாரேன் , அவன் சொந்த ஊர் மன்னவனுர்.....பெரிய தலைக்கட்டோட பேரன். நம்ப மினிஸ்டர் அவங்களுக்கு ரொம்ப நெருக்கம் . போலீஸ்காரனுக்கு கொஞ்சம் பணம் ,பின்புலம் இருந்தாலே துள்ளுவானுங்க , இவனுக்கு கேட்கவா வேணும் என நீளமாய் அவன் பவன்புத்ராவை பற்றி விசாரித்ததை சொல்லினான் .

சிறிது நேரம் யோசித்த பத்மமகேசன் , இப்ப என்னடா பண்றது என அவனையே கேட்டார்.

இவங்கள மாதிரி பெரிய இடத்தை எப்பவும் பகைச்சுக்க கூடாதுனு நீதானணா சொல்லுவ என்று பரமேஷ் பதில் சொல்லும்போதே, அவர்கள் இருந்த எதிர்ப்பக்கத்தில் இருந்து எவரோ அழைப்பது போல் கேட்டதில் பேசியவாறே அங்கிருந்து நகர்ந்தனர்.
அவர்கள் சென்றபின் பரியாவோ , என்ன நடந்திருக்கும்... ஒருவேளை இப்படி இருக்குமோ? இல்ல ஒருவேளை அப்படி இருக்குமோ ?என மனதில் பேசுவதாய் எண்ணி வெளியே பேசிக் கொண்டிருந்தாள்.


அக்கா ...அக்கா என ப்ரியா கூப்பிட கூப்பிட பரியா திரும்பாமல் இருக்க , அவளின் காதருகில் சென்று யக்க்க்காவ் என கத்தினாள்.

எரும எரும ...கூப்பிட்ட திரும்ப போறேன் அதைவிட்டுட்டு , எதுக்குடி இப்போ காதுஜவ்வு கிழிர மாதிரி கிட்ட வந்து கத்தி தொலைக்குற .

ஹான் ஏன் சொல்லமாட்டா , இங்க ஒருத்தி தொண்டைத்தண்ணி வத்த கத்திட்டுஇருக்கேன் . நீ நல்லா கனவு கண்டுட்டு ,ஏன் கத்துறனா கேக்குற உன்ன என முறைத்தவள் தொடர்ந்து , ஆமா அந்த பவன்புத்ரா கூட டூயட் ஆடி முடிச்சிட்டியா இல்ல நேரம் ஆகுமா ?

ஐயையோ இந்த பக்கிக்கு எப்படி தெரிஞ்சிது என்று குழம்பி
இல்லாத மூளையை கசக்கியவள் , ஹீஹீ குட்டிமா என சமாளிக்கிறேன் பேர்வழிஎன அசடு வழிந்தாள்.

உவ்வேக்...அக்கா தயவு செஞ்சி எக்ஸ்பிரசன மாத்து சகிக்கல என்றவள் தொடர்ந்து, ஏதோ ஸ்ரீ ராமா ஜெயம் சொல்ற மாதிரில பத்ரா பத்ரா னு புலம்பிட்டு இருந்த. மறைக்காம உண்மையை சொல்லுக்கா.

அது ப்ரி மா ...வந்து...பத்ரா...ஆங்..

எம்மாடியோவ்...விடாம பேசுற எங்க அக்கவையே வாயில டைப் அடிக்க வச்சிட்டாரே, அந்த பவன்புத்ரா பெரியஆள் தான் போல .

இன்னும் அமைதியா இருந்தா இவ உன்ன ஓட்டி தள்ளிடுவா பரி என உசுப்பிய மனசாட்சியை , எல்லாத்துக்கும் அந்த பத்ரா தான் காரணம் இப்போ யாரு அவனை என் நியாபகத்துல வர சொன்ன என பழியை அவன் மேல் போட்டாள்.( அடி ஆத்தி இது என்னமா புது டிஸைனா இருக்கு ...நீயா அவனை நினைச்சிப்புட்டு அந்த புள்ளைய திட்டுற ).
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
ப்ரிகுட்டி லூசு மாதிரி பேசாத . அந்தமாதிரிலாம் எனக்கு எவனையும் தெரியாது . இப்போ நீ சொல்லி தான் இப்படி ஒரு பேரே கேக்குறேன் என வேகவேகமாய் மூச்சுவாங்க சொல்லிமுடித்தாள் பரியா.

ஹாஹா , அக்கா நான் கூட ஒரு டவுட்லதான் இருந்தேன் , ஆனா இப்ப கன்ஃபார்ம் ஆயிடுச்சு. எப்படி எப்படி பவன்புத்ரா -ற பெயரையே இப்போ நான் சொல்லித்தான் நீ கேட்கிறாயா .....ஹா ஹா ஹா ....

ஏய் என்னடி ஓவரா பண்ணிட்டு இருக்க.கிளம்பர ஐடியா இருக்கா இல்லையா ...வளவளன்னு பேசாம கிளம்பு என முகத்தை தூக்கி வைத்துக் கொண்டாள் பரியா.

அச்சிசோ ...எங்க அக்காக்கு கோவம் வந்துடுச்சு போல. சரி சரி, நான் எதுவும் சொல்லல என அமைதியான ப்ரியா..., திடீரென ஹா ஹா ஹா என சிரித்தாள் .

பரியா அவளை புரியாமல் பார்க்க, ம்ம்க்கும் அக்கா ஒன்னே ஒன்னு மட்டும் கேட்டுக்கட்டுமா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் என கெஞ்சினாள் .

பரியாவும் சரி என தலையசைக்க , அது எப்படிகா ! காதல் வந்துவிட்டா உடனே எல்லோரும் அவங்க ஆளுக்கு செல்லப்பேர்லாம் வச்சுட்ரீங்க. எப்படி எப்படி பவன்புத்ரா டு பத்ரா வா ஹாஹா எப்படிகா இப்படிலாம்.

திருத்திருக்வென முழித்த பரியா கோபம் போல் முகத்தை வைத்து , இப்போ வாய மூடிட்டு வரப்போறியா இல்லை நான் தனியா போகட்டுமா என அதட்டினாள் .

ம்ம்க்கும் நாங்க சிங்களுனு கொஞ்சநாள்ள நீ மிங்கிள் ஆகபோற தெனாவட்டு பேசுறீங்களோ. நாங்களும் ஒருத்தன கரெக்ட் பண்ணுவோம்..., நாங்களும் செல்லப்பெயர் வெப்போம் ..., நாங்களும் செல்லமா கூப்பிட்டு கொஞ்சுவோம் என தங்கள் அன்னை வழக்கமாய் கோபத்தில் நொடிப்பது போல் நொடித்தாள்.

தங்கையின் பேச்சில் வந்த சிரிப்பை அடக்கிய பரியா, முகத்தை சீரியஸாய் மாற்றி... ப்ரிக்குட்டி நாங்க நாங்கனு சொல்றியே மீதிப்பேர் யாருடா குட்டி ? ஒருவேளை எல்லாருமா ஒரே பையனயா என பாதியில் நிறுத்தி கண்ணடித்தாள்.

ஆத்தாடி என்னது என பதறிய ப்ரியா தமக்கையின் கண்களில் தெறித்த கேலியில் , உன்னை என பல்லைக்கடித்து சுற்றுமுற்றும் தேடியவள் கிடைத்த கல்லை தூக்க.


ஐயையோ ப்ரிகுட்டி... நான் உன் ஒரேஒரு அக்காடா....நம்ப அம்மா அப்பாக்கு ஒரே ஒரு மூத்தபொண்ணுடா என கத்தியவாறு ஓட , ப்ரியா அவளைத் துரத்திக் கொண்டு ஓடினாள்.

ஓடிக்கொண்டிருந்த இருவரின் முன்பும் வேகமாய் வந்த அந்த இருசக்கர வாகனம் கிரீச்சிட்டு நிற்க , அதிலிருந்து வெள்ளை நிற டீஷர்ட் ப்ளூஜீன் போட்டு கண்களில் போட்டிருந்த கருப்பு கண்ணாடியை கழட்டியவாறு இறங்கினான் அவன்.

திடீரென ஓர் வண்டி முன் வந்ததில் தடுமாறிய பரியா மற்றும் ப்ரியா இருவரும் அந்த வழியில் இருந்த சேற்றில் விழுந்தனர் .

ச்சேய் இடியட் என திட்டிகொண்டே எழுந்தவர்களில் ப்ரியா , ஹலோ அறிவில்லையா இப்படியா திடுதிப்புனு வருவாங்க என கத்த தொடங்கினாள்.

அவளின் கையை பிடித்த பரியா , பத்ரா என சொல்ல....ஒரு நொடி புரியாமல் விழித்த ப்ரியா அவளின் அக்காவையும், அந்த பைக்கில் வந்தவனையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டிருந்தாள் .

அட இது என்ன இந்த பொண்ணுங்க நடுவுல வந்துட்டு நம்மள ஏசுராங்க என நினைத்து பதிலுக்கு திட்ட போனவன் பக்கத்திலிருந்தவள் ஏதோ சொல்ல திட்டிக்கொண்டிருந்தவள் அமைதியாகியதை கண்டு யார் இவர்கள் என்பதை போல் பார்த்திருந்தான்.

டேய் பவனஜ் ! என்னடா இன்னும் நீ போலையா என கேட்டவாரே வந்த ஒருவன் இவர்களை பார்த்து யார் என பவனஜிடம் கண்களால் கேட்க அவனோ தெரியாது என தோள்களை குலுக்கினான் .

பவனஜா என குழப்பத்துடன் ப்ரியா தன் அக்காவை பார்க்க இப்பொழுது விழிப்பது
பரியாவின் முறையாகியது .


- பண்ணிடுவோம் ....
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
யமுனா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top