• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஏரிக்கரை 10 (pre final )

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
அதிசயங்கள் ஏதும் இல்லை ஆனாலும் வியந்து கொண்டே இருக்கிறேன்.... மழலையின் குறும்பில்......


ஏரிக்கரை 10 :

"இறைவனின் நிழல் "

வருபவர்களை வரவேற்பது போல தலை சாய்த்து நிற்கும் பூக்களையும் தலையை அசைத்தவாறு விளையாடிக் கொண்டிருந்த மழலைகளையும் நின்று ரசிக்க நேரமில்லாமல் அங்கிருந்த அலுவலகஅறையினுள் நுழைந்தார்கள் அரசுவும் முகிலும் . அங்கிருந்தது அன்று அக்குழந்தையை எடுத்து சென்ற அப்பெண்மணியே.... அவரே அவ்வில்லநிறுவனர் அவரின் முன்னிருந்த டேபிளில் சாரதாம்மாள் , நிறுவனர் என்ற பெயர் பலகை இருந்தது .

உள்ளே வந்தவர்களை கண்டவர் , வாங்க சார் உக்காருங்க ...இருவரும் அமர்ந்ததும் ....சொல்லுங்க சார் , என்ன விஷயமா வந்திருக்கீங்க ...

அரசு ,மேடம் நான் இன்ஸ்பெக்டர் அரசு... இவர் இன்ஸ்பெக்டர் முகில் ....நாங்க ஒருத்தர பத்தி தெரிஞ்சுக்கிறதுக்காக வந்திருக்கோம் .

சொல்லுங்க சார் ...யாரை பத்தி தெரியணும் .

அரசு , மேடம் ஒரு 25 வருஷத்துக்கு முன்னாடி மீனவர் ஒருவர் குழந்தையை கொண்டுவந்து உங்க கிட்ட ஒப்படைச்சதா தெரிஞ்சிது . நாங்க அந்த குழந்தையை பத்திதான் விசாரிக்க வந்தோம் .

சார் ...நான் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காதீங்க .... நீங்க எதுக்காக இப்போ அதை பற்றி விசாரிக்க வந்துருக்கீங்கனு தெரிஞ்சுக்கலாமா.

அரசு , நிச்சயமா மேடம் ....அந்தகுழந்தையோட அம்மா தன் தப்ப உணர்ந்துட்டாங்க தப்புக்கான தண்டனையையும் அனுபவிச்சிட்டாங்க .... இத்தனை நாள் தன்னோட மகனை தானே கொன்னுட்டோமோன்னு தவிச்சிட்டு இருந்தவங்க இப்போ தன் பிள்ளை உயிரோட இருக்கிறதாவும் , கண்டுபிடிச்சி தர சொன்னதுனாளையும் இந்த கேச விசாரிச்சு அந்த மீனவரை சந்திச்சோம் . அவர் தான் குழந்தையை உங்க ஆசிரமத்துல விட்டதா சொன்னாரு .

இவன் சொன்னதை கேட்டு பாஸ் என்ன இப்டி அண்ட புளுகு ஆகாச புளுகு புளுகுறாரு என திறந்தவாய் மூடாமல் பார்த்திருந்த முகிலின் தொடையை அழுத்தி கிள்ளினான் .

முகில், ஆஆஆ ....என வலியில் கத்தியவன் சாரதாம்மாள் கவனிப்பதை உணர்ந்து, ஹீஹீ ஆமா அம்மா என்றான் .

சாரதாம்மாள் , அவன் இங்க தான் வளர்ந்தான் ஆனா இப்போ இங்க இல்ல ...அவன் எங்க இருக்கானும் எனக்கு தெரியாதுங்களே ..

முகில் , ஏன் அவன் இங்கிருந்து போனான்.

சாரதாம்மாள், சார் இந்த இல்ல விதிப்படி ஒருத்தர் 20 வயசு வரைக்கும் தான் இங்க இருக்க முடியும் . அதுகப்றம் தனக்கான வேலைய தேடிக்கிட்டு அவங்க இங்கேயிருந்து வெளியேறிடணும் . அதுபடிதான் அவனும் இங்கேயிருந்து போனான் .

அரசு , அவர் போகும்போது எங்க போறாருனு எதுவும் உங்ககிட்ட சொல்லலையா .

சாரதாம்மாள், இல்ல சார் அவன் அத பத்திலாம் ஒன்னும் சொல்லல ...ஆனா அவனுமே அவங்க அம்மாவை தேடிட்டு தான் இருந்தான் .

அவர் சொன்னதைக்கேட்டு ஏதோ கேட்க வந்த அரசுவை தடுத்தது குழந்தையின் அழுகுரல் .

குழந்தையை தூக்கிவந்த அவ்வில்லத்தில் பணிபுரியும் பெண் ...மன்னிச்சிக்கோங்க மா , பாப்பா அழுகையை நிறுத்தவே மாடிக்குறா உங்க கிட்ட வந்தா சமாதானம் ஆகிடுவானுதான் கூட்டிட்டு வந்துட்டேன் .

உடனே அக்குழந்தையை வாங்கி சமாதானம் செய்தவரை பார்த்து தன் தாயை பற்றி நினைத்தவனின் உதடுகள் புன்னகை பூத்தது .

அக்குழந்தையை பார்த்த முகிலிற்குகோ எங்கோ பார்த்ததுபோல் தோன்ற யோசித்தவன் சிந்தனையின் முடிவில் அதிர்ந்து அரசுவின் கையை சுரண்டினான் ....
முகில் ,பாஸ்....பாஸ்


அரசு , என்னடா

முகில் , பாஸ் இந்த குழந்தை மிஸஸ் .சுஜித்ரா சுரேந்தர் குழந்தை மாதிரியே இருக்கு பாஸ் .

அரசு , உளறாதடா

முகில் , அச்சோ பாஸ் ...நான்சொல்றத கேளுங்க. நான் அவங்க வீட்டுக்குப்போனப்போ ஹால்லயே போட்டோ மாட்டிவைச்சிருந்தாங்க பாஸ் . எனக்கு நல்ல நியாபகம் இருக்கு இது அவங்க பாப்பா தான்.இவன் சொன்னதை கேட்டு யோசனையுடன் ...மேடம் இந்த குழந்தை எப்படி இந்த இல்லத்திற்கு வந்துச்சின்னு நாங்க தெரிஞ்சிக்கலாமா .

சாரதாம்மாள் , நிச்சயமா ....நானும் யார்கிட்ட சொல்றதுன்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன் .எங்க இல்லத்திற்கு வெளியே பெரிய மணி வச்சிருக்கோம். குழந்தைகளை விட வருகிரவங்க நிச்சயம் தன்னோட அடையாளம் வெளிப்படுத்த விரும்பமாட்டாங்க... அதுனால தான் நிறைய குழந்தைகள் குப்பைதொட்டில கிடக்குது . அதுக்காகத்தான் நாங்க அந்த மணி வச்சிருக்கோம் . குழந்தையை கொண்டுவந்து அந்த மணியடிச்சிட்டு அவங்க போய்டலாம் , நாங்க குழந்தையை கொண்டுவந்துருவோம் .ஆனா எனக்கு கடைசியா வந்த மூணு குழந்தைங்க விசயத்துல தான் கொஞ்சம் சந்தேகமா இருக்கு .

அரசு , எதுனால மேடம்

சாரதாம்மாள் , இந்த மூணு குழந்தைகளுமே வரும்பொழுது சில காயங்களுடன் இருந்திச்சி சார் ...அதுமட்டுமில்லாம அந்த காயங்களுக்கு பக்குவமா மருந்தும் போட்டிருந்திசி .அந்த விஷயம் தான் கொஞ்சம் நெருடல் ஆஹ் இருக்கு .

முகில் , பாஸ் நான் சொன்னேன்ல அந்த குழந்தை தான் இது ...அப்றம் பாஸ் அந்த ரெண்டு குழந்தைங்களும் காணாம போன ரெண்டுகுழந்தைகள்னுதான் நினைக்கிறேன் . நம்ப உண்மைய சொல்லி குழந்தைகள கூட்டிட்டு போய்டலாமா .

அரசு , கூட்டிட்டு போய்.

முகில் , என்ன பாஸ் ...அவங்க குடும்பத்துல இருக்கவங்க கிட்ட கொடுப்போம் .

அரசு , வேணாம் டா அங்க கூட்டிட்டு போனா குழந்தைங்களோட அம்மா இல்லாததுல சரியா யாரும் பாதுக்கமாட்டாங்க ...அதுவும் அந்த சுரேந்தர் வீட்ல அவருக்கு அடுத்த கல்யாணம் பண்ண பிளான் போடறாங்கனு நீ தான சொன்ன. அவங்க எப்படி இந்த குழந்தையை பார்த்துப்பாங்க . அதுவே இங்க பாரு இந்தம்மா எவ்ளோ பாசத்தோடு அந்த குழந்தையை கொஞ்சிறாங்க . நம்ப எதுவும் சொல்ல வேணாம் ,வேணும்னா அந்த கேச ஹாண்ட்ல் பண்ற போலீஸ் கண்டுபிடிச்சா பாப்போம் .

சாரதாம்மாள் ,சாரி சார் உங்கள விசாரிக்க விடாம நான்பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் .சொல்லுங்க சார் வேற எதுனா அவனை பத்தி தெரியனுமா .

முகில் ,மேடம் அவர் பத்தி குறிப்பிட்டு சொல்ற மாதிரி எந்த விசயம்னா இருக்கா...இருந்தா சொல்லுங்ளேன் எங்களுக்கு தேட வசதியா இருக்கும் .

சிறிது நேரம் யோசித்தவர் ...சிரிப்புடன் ஒன்னே ஒன்னு இருக்கு சார் என்றார் .

அவர் சிரிப்பை அடக்குவதை கண்ட முகில் , மேடம் சிரிப்பு வர அளவுக்கு என்ன விஷயம் இருக்கு .

சாரதாம்மாள் , அது ஒண்ணுமில்லை தம்பி மை டியர் பூதம்னு ஒரு படம் வந்திச்சி தெரியுங்களா ?

அரசு , மேடம் அந்த படத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம் ...

சாரதாம்மாள் , ஹாஹா அதுஒண்ணுமில்லை சார் . அந்த படம் பார்த்ததுல இருந்து அவன் ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லுவான் .எத்தனையோ தடவ அப்டி சொல்லதனு நான் சொன்னாலும் அவன் கேக்கவே இல்ல.

அரசு , என்ன வார்த்தை மேடம் .

சாரதாம்மாள் , மை டியர் மாதா .

அவர் சொன்ன பதிலில் அதிர்ந்துபோன இருவரும் ஒரே சமயத்தில் எழுந்து நின்றனர் .


சில மணிநேரத்திற்கு முன்பு :

அரசுவின் பைக்கில் இருவரும் ஆசிரமத்தை நோக்கி சென்று கொண்டிருந்த போது எதிரே மோதுவதுபோல் வந்த காரை கண்டு சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்திய அரசுவை தொடர்ந்து பைக்கில் இருந்து இறங்கிய முகில் , ஹேய் ...யார்யா அது ராங் சைட்ல அதுவும் இவ்ளோ வேகமா ஓட்டிடுவரது ? குடிச்சிருக்கியா ? இறங்குயா முதல்ல என கத்த ...காரிலிருந்து இறங்கினான் அவன் .

இறங்கும்போத "ஓ மை டியர் மாதா " என சொல்லிக்கொண்டே இறங்கியவன், மன்னிச்சுக்கோங்க சார்... அம்மாவுக்கு உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போயிட்டு இப்போ தான் வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் . அவங்கள பத்தியே யோசிச்சிட்டு வந்ததுல சரியா கவனிக்கல சாரி சார் .

தாய்க்கு உடம்பு சரியில்லை என சொன்னவுடன் அமைதியாகி விட்ட முகில், அவனின் தாய் பாசத்தை கண்டு வியந்து சரி சரி பார்த்து கார ஓட்டிட்டு போங்க என்றான் .

அமைதியாய் தங்களை பார்த்துகொண்டிருந்த அரசுவிடம் செல்ல நகர்ந்தவனின் காதில் கார்காரன், மன்னிச்சிக்கோ "மை டியர் மாதா " சீக்கிரமா வீட்டுக்கு போய்டலாம் என சொன்னதை கேட்டு அரசுவிடம் , பாஸ் எல்லோரும் இப்போ ஸ்டைல் னு சொல்லிக்கிட்டு பெத்த அம்மாவை மீ- னு கூப்டுகிட்டு திரியும் போது இவன் இன்னும் மாதா னு எவ்ளோ மரியாதையா கூப்புட்றான்ல என அந்த கார்காரனை பத்தி சிலாகித்தான் .


தற்பொழுது :

கை அருகில் கிடைத்தவனை தவறவிட்டதை எண்ணி நொந்துகொண்டே இருவரும் அவ்வில்லத்தை விட்டு வெளிவருகையில் அரசுவின் கைபேசி ஒலியெழுப்பியது .

எடுத்து பேசியவன் என்னனன என அதிர்ச்சியாய் கேட்க ..

முகில் , பாஸ் என்னாச்சி

அரசு , அந்த நிர்மலாவை காணோமாம் டா.

முகில் , நிர்மலாவா அது யாரு பாஸ்.

அரசு , டேய் அவங்க தான் டா நம்ப சந்தேகப்படற கொலைகாரனோட அம்மா .கேஸ் பைலை ல இருந்துச்சே நீ பார்க்கலையா ?? வசந்த் கிட்ட சொல்லி தண்டனை முடிஞ்சபிறகு அவங்க எங்க இருக்காங்கனு விசாரிக்க சொல்லிருந்தேன் டா ..

முகில் , பாஸ் அப்போ அந்த காருக்குள்ள இருந்த மை டியர் மாதா ??????


------------------------------------------------
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top