• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nanum ready சந்தியா உங்களோட சேர்ந்து ஓடறதுக்கு ???
நன்றி ஸ்ரீதேவி அக்கா:love::love: வாங்க வாங்க ஓடிப்போலாம்;)
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் அனிதாக்கா..

ஐயோ உங்களுக்கு மகேஷ் பாபுதான் ஜோடி.. எதுக்கு கவலை பியூட்டிஃபுல் லேடி.. உங்களின் ஏஜ் ரொம்ப கம்மி.. இது என்ன இதைவிட இன்னும் சூப்பராக உங்களை வர்ணிக்கிறேன்..

சாப்பாடு முக்கியம் டியர்.. ஓட உடம்பில் தெம்பு வேண்டும் இல்ல.. சோ ரொம்ப முக்கியம்..

ரொம்ப தேங்க்ஸ் அக்கா உங்களோட புது அவதாரத்தை நானும் பார்க்க போறேன்..;););) இது தொடக்கமா:unsure::unsure::unsure:
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
நன்றி சக்தி அக்கா.. எங்க அடுத்த பதிவிற்கு கமெண்ட் போடவே இல்ல.. என்ன காரணம் அக்கா.. இது வீக் எண்டா இல்லையே..:unsure:
Nan innum pakkavah illa
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வார்மப் பண்ணியாச்சு வாங்க ஓடலாம்...

???

கதையின் நாயகிகளை அறிமுகப்படுத்திட்டீங்க... சூப்பர் ???

லொகேஷன் செம்ம, பீச்சோரமா காத்து வாங்கிட்டே ஓடலாம் ????
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
.
 




Last edited:

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
(Posted the same comment twice due to network error, since there is no option to delete, I have removed the contents! Jorry!)
 




Mugil Nila

நாட்டாமை
Joined
Jul 28, 2018
Messages
65
Reaction score
4
Location
Erode
ஹாய் நட்பூஸ்,

என்னோட ஓடிவர இத்தனை பேர் இருக்கீங்களா..?:love::love::love: என்னால இப்பொழுது கூட நம்ப முடியல.. பக்கம் பக்கமா ஸ்டோரி எழுதும் பொழுது எல்லாம் கமெண்ட் செக்சன் பக்கம் யாருமே வருவதில்லையே..? அது ஏன் ஏன் ஏன்:unsure::unsure::unsure: எனக்கு விடை தெரியல..

சரி விளையாட்டு எல்லாம் அப்புறம் நான் ஓடிபோலாமா ஸ்டோரி எழுதறேன்.. என்னை துவைத்து தோரணமாக தொங்கவிட எல்லோரையும் அழைக்கிறேன்.. நீங்க எவ்வளவு கழுவி கழுவி ஊத்தினாலும் ஸ்டோரி முடிக்காமல் விட போவதில்லை..:ROFLMAO::ROFLMAO: என்னோட ஓடி போலாமா டைட்டில் பார்த்து யார் ஓடிபோனாங்களோ இல்லையோ என்னோட காய்ச்சல் ஓடியே போச்சு மக்கா.. :ROFLMAO::ROFLMAO:உங்களோட கமெண்ட்ஸ் பார்த்து..:love:

இது ஓடிப்போக சரியான டைம் மிட் நைட் என்று சொன்னாங்க.. அதனால நான் மிட் நைட் ல ஓட போறேன்.. என்னோட நீங்களும் ஓடிவாங்க..

இப்படிக்கு குட்டி எபி மட்டும் கொடுத்துவிட்டு ஓடிபோகும்;);)

சந்தியா ஸ்ரீ:p

ஓடிபோலாமா..?​

அத்தியாயம் – 1

நீலநிற கடல் மங்கை அவளோ சிவப்பு நிற சேலை உடுத்திக் கொண்டு பொற்பாவை கோலத்தில் இருந்தாள்.. சூடும் சூரியன் குளிரும் செந்நிலவாக மாறி மேற்கில் மறைந்து கொண்டிருந்தான்.. அந்தி மாலைபொழுது அழகாக மயங்கிக் கொண்டிருந்தது..

கன்னியாகுமரி கடற்கரை அழகை வர்ணிக்க இது மட்டும் போதுமா..? திருவள்ளுவர் சிலை சூரியனின் வெளிச்சத்தில் பொன்னிறமாக மாறிட, விவேகானந்தர் மண்டபம் பொற்கோவில் போன்ற பிரமையை உருவாக்கியது..

அந்த மாலைபொழுதின் அழகை எல்லாம் ரசித்த வண்ணம் பஸில் ஜன்னலோரம் அமர்ந்திருந்தவளின் முகத்தில் வந்து மோதியது இளமாலைத் தென்றல்.. அது அவளின் கூந்தலைக் கலைத்துவிட்டது..

முகத்தை மறைக்கும் முடியைக் காதோரம் ஒதுக்கிய நித்திலா மாலை ஆபீஸ் வேலை முடிந்து, ‘இன்னைக்கு அம்மா என்ன செஞ்சி வெச்சிருப்பாங்க..?’ என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி பயணித்து கொண்டிருந்தாள்..

அதற்குள் அவள் இறங்கும் இடம் வந்துவிட பஸில் இருந்து இறக்கிவள் வீட்டை நோக்கி நடந்தாள்.. அவள் வீட்டிற்குள் நுழைய கேட்டைத் திறக்கும் நேரத்தின் வீட்டின் உள்ளிருந்து பேச்சுக்குரல் கேட்டது..

“இந்த குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம்.. உங்க மகளோட அழகிற்கும், அறிவிற்கும் ஏற்ற குடும்பம்.. வேண்டாம் என்று சொல்லாதீங்க..” என்றவரின் குரல் தெள்ள தெளிவாக வீட்டின் வாசல் வரை கேட்டது..

‘மாப்பிள்ளை தரகரின் குரல்’ என்று உணர்ந்தவளின் முகம் சிவந்துவிட, ‘நான் கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுகிறேன் என்று இவரிடம் எப்பொழுது சொன்னேன்..’ என்று மனதிற்குள் தீவிரமாக யோசித்தாள்..

அதற்குள், “என்னோட பொண்ணேதான் அந்த பையனுக்கு வேண்டும் என்றால் ஒரு மாசம் முடியும் வரையில் அவங்களை காத்திருக்க சொல்லுங்க தரகரே..” என்று நித்திலாவின் தாய் சுமித்ராவின் குரல் கேட்டது..

“ஒரு மாதம் அவங்க எப்படி காத்திருப்பாங்க..”

“அதுக்காக நான் என் பிள்ளை பிடித்து கட்டாயப்படுத்தி திருமணம் பண்ணிவைக்க முடியுமா..?” சுமித்ராவின் குரலில் மெல்லிய எரிச்சல்..

“என்னம்மா பிடிகொடுக்காமல் பேசறீங்க..” என்று தாழ்ந்து வந்தது தரகரின் குரல்..

“இல்லண்ணா காபி குடிக்க கொடுத்துவிட்டுதான் சொல்றேன்..” சுமித்ராவின் குரலில் குறும்பு வெளிப்பட்டது.. நித்திலாவின் முகம் மலர்ந்தது..

“என்னம்மா இதிலும் விளையாட்டா..? சீக்கிரம் ஒரு முடிவு சொல்லுங்க..” என்றவரின் குரல்கேட்டு எதுவும் அறியாத பிள்ளை போல வீட்டின் கேட்டைத் திறந்தாள் நித்திலா..

அவரை வழியனுப்ப வாசல் வரையில் வந்த சுமித்ரா மகளைக் கேள்வியாக நோகினார்.. அவளோ கோபமாக இருப்பது போல சடாரென்று வீட்டிற்குள் சென்றுவிட்டாள்..

அதனாலோ என்னவோ அவருக்கு மகளின் மீது எந்த சந்தேகமும் வரவில்லை.. அவரை வாசல் வரை சென்று வழியனுப்பிய சுமித்ரா மீண்டும் வீட்டின் உள்ளே நுழையும் பொழுது,

“ஓடோ ஓடோ ஓடோடி போறேன்..

காதல் பாதை தேடோடி போறேன்..” என்ற பாட்டை போட்டுகொண்டு தன்னுடைய அறைக்குள் செல்லும் மகளைப் பார்த்தவருக்கு விஷயம் புரிந்துவிட, அவரின் உதட்டில் குறும்புப் புன்னகை அரும்பென்று மலர்ந்தது..

‘மகளே ஓடியா போக போறே.. நீ எப்படி ஓடுகிறாய் என்று நானும் பார்க்கிறேன்..’ என்று சமையலறைக்குள் நுழைந்தார் சுமித்ரா.. அவரின் திட்டம் அறியாத மகளோ அறையின் உள்ளே ஓடிபோவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தாள்..

அழகான வட்ட முகம், வில்லென புருவம், மீன் போன்று இரு விழிகள், நேரான மூக்கு அதன் வலதுபுறம் மின்னும் வெள்ளை மூக்குத்தி, சிவந்த ரோஜாப்பூ போல இதழ்கள்.. காதோடு கதை பேசும் ஜிமிக்கி..!

அளவான உடல்வாக்கை உடைய சந்தன நிறத்தில் வடித்தெடுத்த செப்பு சிலையழகி..! வயது இருபத்தி மூன்று.. படிப்பை முடித்துவிட்டு பிரைவேட் நிறுவனம் ஒன்றில் பி.ஏ.வாக வேலை செய்கிறாள்..

அவளின் அம்மா ஒரு கவர்மென்ட் ஸ்டாப்.. நித்திலாவின் அப்பா தாசில்தார் வேலையில் இருக்கும் பொழுது இறந்துவிட அவரின் வேலை மனைவியான சுமித்ராவிற்கு கிடைத்தது..

இப்பொழுது அவர் ரிட்டயர்டு ஆக இன்னும் ஒரு வருடம் மட்டுமே இருக்கிறது.. ஒரு மகன் கலையரசன். அவனுக்கு திருமணம் முடிந்துவிட்டது.. அவர்கள் நால்வரும் ஒற்றுமையாக ஒரே வீட்டில் இருக்கின்றனர்..

இப்பொழுது மகளுக்கு பெண்பார்க்க ஆரம்பித்து இருக்கிறார் சுமித்ரா. அவரின் விருப்பத்திற்கு அடிபணிய மனம் நினைத்தாலும் அவளின் சின்ன சின்ன ஆசைகள் அவளை அடிபணிய விடவில்லை..

ஆசை யாரை விட்டது..?! இனி நடப்பதெல்லாம் நன்மைக்கே..!

ஓடிபோலாமா..???
Super d.... heroin...???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top