• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Amma high jump champion . Ponnuku wall thandi jump panna ladder vendi irukku:D:Dlnteresting sri . Panneer il nanainthu pookal beautiful song
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Amma high jump champion . Ponnuku wall thandi jump panna ladder vendi irukku:D:Dlnteresting sri . Panneer il nanainthu pookal beautiful song
நன்றி ஸ்ரீதேவி அக்கா...
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
super darli...:love::love:
mummy je jump panitanga ,... sumi dummy than poma,,:LOL::LOL:
நன்றி ஹரிதா செல்லம்
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Nice episode Akka???? different a yosichu eluthirukinga...sumi ma role superb
நன்றி கனி டியர்
 




Mahizhini bharathi

இணை அமைச்சர்
Joined
Mar 24, 2019
Messages
701
Reaction score
357
Location
Tamilnadu
அத்தியாயம் – 2

இரவு உணவை முடித்துவிட்டு எல்லோரும் அவரவர் அறைகளுக்கு சென்றனர்.. அதையெல்லாம் கவனித்தவண்ணம் மாடியில் இருக்கும் தன்னுடைய அறைக்குள் சென்று கதவை அடைத்தாள் நித்திலா..!

நேரம் பதினோரு மணியைத் தாண்டிச்செல்ல கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டே அறையின் குறுக்கும் நெடுக்கும் நடைபயின்று கொண்டிருந்தாள் நித்திலா..

தன்னுடைய பேக்கில் உடைகளை எல்லாம் எடுத்து வைத்தவள், ‘எதற்கும் தேவைப்படும்..’ என்று அவளுக்கென அவளின் தந்தை கடைசியாக விட்டுசென்ற மோதிரத்தையும் எடுத்துக் கொண்டாள்..

மீண்டும் கடிக்காரத்தைப் பார்த்தாள் நித்திலா..!

‘எல்லோரும் தூங்கிட்டாங்க.. நம்ம கிளம்பலாம்..’ அவள் அறையைத் திறந்து வெளியே வந்தாள்..

அவள் ஹாலில் நின்று அண்ணனின் அறையையும், அம்மாவின் அறையையும் நோக்கியவள் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, ‘நல்ல தூங்கறாங்க.. நித்தி எஸ்கேப்..’ என்று பின் வாசலை நோக்கி சென்றாள் நித்திலா..

அங்கே தலைக்கு கர்சீப் கட்டிக்கொண்டு தன்னுடைய உடல்வாகிற்கு ஏற்றார் போல இருக்கும் சுடிதாரை அணிந்துகொண்டு கன்னிக்கு பிளாக் கலர் கூலிங்கிளாஸ் அணிந்து ஸ்டைலாக அமர்ந்திருந்த தாயை பார்த்து “அம்மா..” என்று அதிர்ந்து பின் வாங்கினாள்..

அவளின் குரல்கேட்டு திரும்பிய சுமித்ரா, “ஏய் ஏண்டி சத்தம் போட்டு ஊரைக் கூட்டுகிறாய்.. மூச்சு..” என்றவர் ஒரே வார்த்தையில் மகளை அடக்கினார்..

“அம்மா இங்கே என்ன பண்றீங்க..?” அவள் மெல்லிய குரலில்..

“நான் ஓடிப்போக போறேன் நித்தி..” என்று குதுகலத்துடன் கூறினார்..

“அம்மா என்னோட மானத்தை வாங்காதீங்க.. உங்களுக்கு ஓடிபோகும் வயசா..?”

“நீயே ஓடிபோகும் பொழுது நான் ஓடிப்போக கூடாதா..? நான் என்றும் பதினாறு தெரியுமோ நோக்கு..”

தாய் கூறியதைக் கேட்ட நித்தி, ‘ஐயோ ஐயோ எனக்கு இப்படியொரு அம்மா..’ என்று தலையில் அடித்துக் கொண்டாள்..

“எப்படியும் ஓடிபோறது என்று ஆகிருச்சு.. வாங்க சேர்ந்தே ஓடிபோவோம்..” என்றவள் அவரின் கையில் இருந்த பேக்கை ச பார்த்து, “அம்மா இது எதுக்கு..” என்று விசாரித்தாள்..

“அதெல்லாம் உனக்கு எதுக்கு.. வா போகலாம்..” என்றார்..

‘தனியாக ஓடிபோலாம் என்று நினைச்சா இந்த அம்மா என்னோட ஓடிவரேன் என்று கிளம்பீட்டாங்களே..’ மனதிற்குள் நினைத்தாள் நித்தி..

அவள் பின் வாசல் கேட் அருகில் செல்ல, “அடியேய் அங்கே எதுக்கு போறே..” என்று மகளின் கையைபிடித்து இழுத்தார் சுமித்ரா..

“என்னம்மா வெளியே போக வேண்டாமா..”

“வா சுவர் ஏறிக்குதிக்கலாம்..” என்றார் சுமித்ரா..

“அம்மா..” என்று கடுப்புடன் தாயை முறைத்தாள்..

“என்ன உனக்கு ரூல்சே தெரியல.. ஓடிபோகும் பொழுது சுவர் ஏறித்தான் குதிக்கணும்..” என்று மகளை முறைத்தார் சுமித்ரா..

“உங்களால் முடியாத ஒன்றை எதுக்கு முயற்சிக்க நினைக்கிறீங்க..”

“யாரைப் பார்த்து என்ன சொன்னா.. நான் அப்பவே ஹை ஜப்பில் செம்பியன்..” என்றவர் கையில் இருந்த பேக்கை மகளிடம் கொடுத்துவிட்டு சுவரில் ஏறி மறுக்கம் குதித்தார்..

அவர் குதித்ததும், “அம்மா..” என்று பயத்துடன் அழைத்தாள் நித்திலா..

“கையில் இருக்கும் பேக்கை கொடு..” என்று மறுப்பக்கம் நின்று குரல் கொடுத்தும் தான் நித்திலாவிற்கு உயிரே வந்தது.

மறுப்பக்கம் நின்று அவளின் கையிலிருந்த பேக்கை வாங்கிக் கொண்டவர், “நீ சீக்கிரம் ஏறி குதி..” என்றார்..

“அம்மா நான் போயி ஏணி எடுத்துட்டு வரேன்..” என்று அசடுவழிந்த மகளைப் பார்த்தவர்,

“ஒரு சுவரு ஏறிக்குதிக்க முடியாதவளைப் பிள்ளையாக பெத்து வெச்சிருக்கேனே..” என்றவர் தலையில் அடித்துக்கொள்ளும் கேப்பில் போ ஏணி எடுத்து வந்த நித்தி, “அம்மா ஏணி கிடைச்சிருச்சு..” என்று சிரித்துக்கொண்டே

“கருமம் கருமம் சீக்கிரம் ஏறிவா..” என்றார் சுமித்ரா..

மறுப்பக்கம் தாவிக்குதித்த நித்திலா, “ஹப்பாடா அடியேதும் படல..”

“ரொம்ப முக்கியம் வா வந்து காரில் ஏறு..” என்றார்..

அவள் திருதிருவென விழிக்க, “இன்னும் அரை மணி நேரத்தில் ரயில் வந்துவிடும்..” என்று அவளை இழுத்துக்கொண்டு காரிள் ஏறினார்.. கார் ரயில் நிலையம் சென்றது..

அவரின் ஒவ்வொரு செயலையும் கவனித்த நித்திலா, “அம்மா இது எல்லாம்...” என்று இழுத்தாள்..

“ஓடிபோகும் மூஞ்சியைப் பாரு.. " என்று மகளின் மீது எரிந்து விழுந்தவர்,
"நான்தான் பிளான் பண்ணினேன்..” என்றார் கர்வமாக..

“நல்ல அம்மா..” என்றாள் மகள்..

“எதையும் பிளான் பண்ணி பண்ணனும் ஓகே..” என்றவர் வடிவேல் பாணியில்

“ஹா ஹா ஹா..” வாய்விட்டு சிரித்தவள், “நீங்க செம ஷார்ப் அம்மா..” என்றாள்

“ஏய் அம்மா சொல்லாதே.. சுமி இல்ல மேடம் என்று சொல்லு.. நான் ஊர் சுற்ற போறேன்.. சோ நீயும் நானும் சரிசமம்..” என்றார் கறாராக

“சரி சுமித்ரா..” என்று குறுப்புடன் கண்சிமிட்டினாள்..

அதற்குள் ரயில் நிலையம் வந்துவிட காரில் இருந்து இறங்கியவர் டாக்சி டிரைவருக்கு பணத்தைக் கொடுத்துவிட்டு ரயில் நிலையத்தின் உள்ளே நுழைந்தார்..

அவர்கள் செல்ல வேண்டிய ரயில் தார் நிலையில் நின்றிருக்க, “ஏய் சீக்கிரம் ஏறு.. நான் போய் சீட் பிடிக்கிறேன்..” என்றவர் வேகமாக ரயிலில் ஏறினார்..

தாயின் வேகத்தைப் பார்த்த நித்தி, ‘அம்மா அம்மா..’ என்று அவரைப் பின் தொடர்ந்தாள்.. அவர் போய் மகளுக்கு ஜன்னலோரம் இடம்பிடித்தார்..

அவரின் பின்னோடு கம்பார்ட்மெண்டின் உள்ளே நுழைந்தவள், “சுமி வர அவசரத்தில் இரண்டு விஷயத்தை செய்ய மறந்தே போயிட்டேன்..” என்றாள் வருத்ததுடன்..

“இன்னும் என்னடி மறந்து தொலைச்ச..?” என்று கடுப்புடன் கேட்டார்..

“ஒரு சிம்கார்டு வாங்க மறந்துட்டேன்.. அப்புறம் அண்ணாவுக்கு ஒரு லெட்டர் எழுதிவைக்க .மறந்துட்டேன்..”

“நான் ஓடிபோறேன் என்று எழுதி வெச்சிட்டு வந்துட்டேன்..” என்றவர் சொல்ல நித்திக்கு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை..

தன கொண்டுவந்த பேக்கை திறந்து எதையோ தேடியேடுத்தார்..

“இந்த சிம்கார்ட்.. பதினைந்து நாளுக்கு யூஸ் பண்ணிக்கோ..” என்று அவளின் கையில் கொடுத்தார்..

“நீ சரியான கேடிதான்..” சிரித்தாள் நித்திலா

“தேங்க்ஸ் நித்தி..” என்றவர் சொல்ல ரயில் மெல்ல கிளம்பி வேகமெடுத்தது.. அவர் முகத்தில் குளிர் தென்றல் வந்து மோதியது..

மாளிகை சிறையிலே வாழ்ந்த நாள் வரையிலே

சுதந்திரம் இல்லையே விடுதலை கிடைத்தது

வாசலும் திறந்தது பறந்ததே கிள்ளையே..!” அவர் மனம் விட்டு பாடினார் சுமித்ரா.. தாயின் முகம் பார்த்த நித்திலா மனதிற்குள் தன தாயின் மன உணர்வுகளைப் புரிந்தவண்ணம் அந்த பாடலை ரசித்தாள்..

தாயும், மகளும் தங்களின் பயணத்தை இனிதே தொடங்கினர்.. கூண்டுக்குள் அடைபட்டிருந்த கிளிகள் இரண்டும் சிறகு விரித்து பறந்தது.. பயணம் எவ்வாறு அமையும்..????

ஓடிப்போறோமே..!

Nala amma enaku ipd oru amma ilaiye epo paru thitekite irukanga ?????????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top