• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஓடிப்போலாமா? - 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ஹாய் ஹாய் நட்பூஸ்,

இதோ ஓடிபோலாமா அடுத்த யூடியுடன் வந்துவிட்டேன்.. ;);)ஹீரோ அண்ட் ஹீரோயின் intro பண்ணவே டைம் இல்ல..:cautious::cautious: இதில் இன்னும் எட்டு யூடியில் ஸ்டோரி முடிந்துவிடும்..:love::love: நான் அப்படியே எஸ்கேப் ஆகிருவேன்..:ROFLMAO::ROFLMAO: உங்களை எல்லோரையும் ஹாப்பியா பார்த்துக் கொள்கிறேனா..??:unsure::unsure: சரி இதில் சுமிம்மா என்ன பண்றாங்க என்று பாருங்க..:cool::cool: என்ன திட்டுவதாக இருந்தாலும் கமெண்ட்ஸ் செக்சனுக்கு வாங்க..:LOL::LOL: என்னை திட்டி தீர்க்க உங்களுக்கு எல்லாம் முழு பர்மிஷன் தரேன்..:ROFLMAO::ROFLMAO: பாவாடை சட்டையில் சுமிம்மாவை தேடினேன் கிடைக்கல.. பட் இரட்டை ஜடையில் சுமிம்மா பிக்சர் போடுகிறேன்...savithiri.jpg
இப்பொழுது யூடி தந்துவிட்டு உங்களின் கைக்கு சிக்காமல் எஸ்கேப் ஆகும் சந்தியா ஸ்ரீ (சிரி)ஈஈஈஈஈ...
 




Last edited:

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
அத்தியாயம் – 7

சூரியனோ மேற்கு நோக்கிப் பயணிக்க கீழ்வானம் சிவக்க தொடங்கியது.. வெண்ணிற மேகங்கள் எல்லாம் பொன்னிறமாக மாறியது.. மாலைநேரத்தில் தென்றல் இதமாக வீசிக்கொண்டிருந்தது..

ஆழியார் பஸ்ஸ்டாப் வந்து பஸ்ஸிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.. அதன் அருகில் இருந்த டெய்லர் கடை ஒன்று காலி செய்துக் கொண்டிருந்தனர்..

அப்பொழுது அங்கே வந்த டெய்லர் கடைகாரர், “அம்மா இது எல்லாம் உங்களோட பொண்ணுங்களா..?” என்று கேட்டார்..

அவரை புரியாத பார்வைப் பார்த்த சுமிம்மா, “ம்ம் என்னோட பொண்ணுங்கதான்..” என்றார்..

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க, “நான் கடை காலி செய்கிறேன்..” என்றார்..

“அதுக்கு நான் என்ன செய்யறது..” என்று கேட்டார் சுமிம்மா..

“இல்லம்மா இந்த பெண் போடும் அளவிற்கு ஒரு பாவாடை சட்டை இருக்கிறது வாங்கிக்கோங்க..” அவர் தயக்கமாகக் கேட்டார்..

எல்லோரும் சுமிம்மாவைக் கேள்வியாக பார்க்க, “என்ன விலை என்று சொல்லுங்க.. நான் வாங்கிக் கொள்கிறேன்..” என்றார்..

அதைக் கவனித்த அனிதா, “நம்ம யாரும் பாவாடை, சட்டை போடமாட்டோமே அப்புறம் எதற்கு அதை காசு கொடுத்து வாங்கறாங்க..” சந்தேகமாகக் கேட்டாள்..

“எனக்கும் அதுதான் புரியல..” உதட்டைப் பிதுக்கினாள் வித்யா..

“அப்பா இன்னைக்குதான் ஒரு கேள்விக்கு முறைக்காமல் பதில் சொல்றாங்க.. பெரிய அதிசயம்..” குறும்புடன் கூறினாள் அனிதா

மற்றவர்கள் அமைதியாக நின்றிருக்க நித்திலா மெளனமாக புன்னகைக்க கண்டுகொண்ட நிரஞ்சனின் பார்வையில் சுவாரசியம் அதிகரித்தது..

அவரிடம் பாவாடை, சட்டையை விலைபேசி வாங்கிய சுமிம்மா, “நான் இந்த துணியைப் போட்டுப் பார்க்கணுமே” என்றவரைத் திகைக்க வைத்தார் சுமிம்மா..

“என்னது..” என்று எல்லோரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து நிற்க “இதுக்கே அதிர்ச்சியானால் எப்படி..?” என்றவர் துணியுடன் சென்றார்..

அவரை திகைப்புடன் பார்த்த அந்த டெய்லர், “இதுக்குப் பின்னாடி வீடு இருக்கு போய் மாற்றிவிட்டு வாங்க..” என்றவருக்கு வழி சொன்னார்..

“இந்த அம்மாவிற்கு எவ்வளவு ஆசை பாரு..” - கார்த்திகா..

“அவங்க வயசில் இதெல்லாம் நடந்திருக்காது..” - வித்யா

“இந்த வயசில் இவ்வளவு துணிச்சலாக இதை செய்யறாங்க இல்ல அதை நம்ம பாராட்டனும்..” - சங்கரி

சசிதரன் எப்பொழுதும் போலவே மெளனமாக இருக்க மகேஷ் ரோட்டை வேடிக்கைப் பார்த்தான்.. நித்திலா எதையோ நினைத்து சிரித்துக்கொண்டிருக்க நிரஞ்சனின் பார்வை அவள்மீது படிந்தது..

அந்த வீட்டில் இருந்து வந்த ஒரு பெண்மணி சிரிப்புடன், “அந்த அம்மா உங்களை கூப்பிடறாங்க..” என்றார்..

இவர்கள் எல்லோரும் சென்று பார்க்க நீலநிறத்தில் பாவாடை சட்டை அணிந்து இரட்டை ஜடை பின்னலிட்டு மடித்து கட்டியிருந்தார்.. தோளில் மெரூன் கலர் துப்பட்டா போட்டு பின் பண்ணியிருந்தார்..

எந்த விதமாக விஷமமும் இன்றி கள்ளம்கபடம் இல்லாத புன்னகையுடன் அவர்கள் முன்னே வந்து நின்ற சுமிம்மா, “நான் நல்ல இருக்கிறேனா..?” என்று ஆர்வத்துடன் கேட்டார்..

அவரைப் பார்த்த நிரஞ்சன், “உங்களுக்கென்ன சுமிம்மா சூப்பரா இருக்கீங்க..” என்றான்..

அவரோ, “அடபோப்பா.. எனக்கு வெக்கம் வெக்கமா வருது..” என்றவர் முகத்தை மூடிக்கொண்டார்..

“பாருடா சுமிம்மாவுக்கு வெக்கமெல்லாம் வருது..” அவரைக் கலாய்த்தாள் அனிதா..

“சுமிம்மா உங்களுக்கு பாவாடை, சட்டை சூப்பராக இருக்கு..” என்று அவரைக் கட்டிகொண்டாள் சங்கரி..

“நிஜமாவா..” என்றவர் தயக்கத்துடன் கேட்க, “சத்தியமா நாங்க எல்லோரும் பொய் சொல்வோமா..” கேட்டாள் வித்யா..

ஆளுக்கு ஒரு விஷயம் சொல்ல அதையெல்லாம் ரசித்து சிரித்த சுமிம்மாவைப் பார்த்த நித்திலாவின் கண்கள் எதையோ நினைத்து கலங்கியது.. அனால் நொடிபொழுதில் தன் மீட்டெடுத்தாள்..

“சுமிம்மா ஒரு செல்பி..” என்ற நித்திலாவுடன் எல்லோரும் சேர்த்து நிற்க அங்கே செல்பி மூமெண்ட் சூப்பராக இருந்தது..

அவரைப் பாவாடை சட்டையில் பார்த்த சங்கரி மட்டும் அன்று முழுவதும் சிரித்துக்கொண்டே இருந்தாள்..

அங்கே குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்த சுமிம்மா, “எனக்கு அந்த பம்பரம் வேண்டும்..” என்று அடம்பிடிக்க விழி பிதுங்கி நின்றனர் ஆண்கள்..!

சசிதரன் அருகில் இருந்த பெட்டிக்கடையில் சென்று பம்பரம் வாங்கிவர, “எனக்கு இது வேண்டாம்.. எனக்கு அந்த பம்பரம்தான் வேணும்..” என்றார்..

“சுமிம்மா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவராக தெரியல..” அனிதா கேட்க, “எனக்கு ஓவராக தெரியல..” என்றவர் அவர்களின் அருகில் சென்று “டேய் எனக்கு அந்த பம்பரம் வேணும் கொடுங்கடா..” என்றார்..

“அதெல்லாம் முடியாது.. பம்பரம் கொடுத்தால் என்ன திரும்ப தருவீங்க..” என்று பேரம் பேசினார் பிள்ளைகள்..

“பம்பரம் தந்தால் உங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித்தர்றேன்” என்றார்..

“இதில் உங்களுக்கு என்ன கலர் வேண்டும்..” என்ற பிள்ளைகள் அவரின் முன்னே பம்பரத்தை நீட்டினர்..

“எனக்கு பிங்க் கலர் பம்பரம்தான் வேணும்..” என்றவர் அந்த கலரில் இருந்த மரபம்பரத்தை தேடி எடுத்தார்..

அவர் பம்பரம் வாங்கிவிட்டு திரும்பும் பொழுது ஒருவனின் கையில் இருந்த பட்டத்தைப் பார்த்தவர், “எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்று குழந்தை போல அடம்பிடித்தார்..

“என்னம்மா இப்படி அடம்பிடிக்கிறீங்க..” என்று கேட்டான் நிரஞ்சன்..

“எனக்கு அந்த பட்டம் வேணும்..” என்றவர் சொல்ல, “சரி அதையும் வாங்கிட்டு வாங்க..” என்றவன் சிரித்துக்கொண்டே.

அவரின் செயல்கள் மற்றவரின் கண்களுக்கு வித்தியாசமான தெரிந்தாலும் யாரும் அவரை தொல்லை என்று நினைக்கவில்லை.. மாறாக அவரின் செயல்களை ரசிக்கவே செய்தனர்..

“நாங்க போய் இவங்களுக்கு எல்லாம் ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருகிறோம்..” என்றவன் நித்திலாவின் பக்கம் திரும்பினான்..

அவனின் பார்வையின் பொருளை உணர்ந்த நித்திலா, “வாங்க..” என்று முன்னே நடக்க, நிரஞ்சனோ குறுஞ்சிரிப்புடன் அவளை பின் தொடர்ந்தான்..

அதற்குள் கார்த்திகா அங்கிருந்த பெட்டிகடைக்கு கடைக்கு சென்றாள்.. இளநீர் கடையைப் பார்த்த சசிதரன், ‘ஒரு இளநீர் குடிக்கலாம்..’ என்று சென்றான்..

மகேஷ் அங்கிருந்த ஒரு கடைக்குள் நுழைய அனிதாவும், வித்யாவும் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர்..

அவன் இளநீர் குடித்துக் கொண்டிருக்க நிரஞ்சனும், நித்திலாவும் தனியே செல்வதைக் கவனித்துவிட்டு, ‘இவங்க எங்கே போறாங்க..’ என்று அவர்களைத் தொடர்ந்து வந்தாள் வித்யா..

அவர்கள் சென்ற திசையறியாமல் நின்ற வித்யா அங்கிருந்த சசிதரனைப் பார்த்து, “எங்க நிரஞ்சனும், நித்தியும் எங்கே போனாங்க..” என்று கேட்டாள்..

அவனோ கையில் இருந்த இளநீரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவளைப் பார்த்து திருதிருவென விழித்தான்..

“ஏன் இந்த முழி முழிக்கிறீங்க.. அவங்க எங்கே போனாங்க..” என்றவள் பொறுமையுடன்

அவனோ அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பக்கத்தில் இருக்கும் ஐஸ்கிரீம் பார்லரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு, மறுபடியும் கையிலிருந்த இளநீரை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு மீண்டும் வித்யாவை ஒரு பார்வை பார்த்தான்.. ஆனால் அவளின் கேள்விக்கு மட்டும் அவன் பதில் சொல்லவே இல்லை..!

“டேய் எதுக்குடா இந்த முழி முழிக்கிற..” என்றவள் பொறுமையை இழுத்து பிடித்தவண்ணம்..!

அவன் அதற்கும் அதே மாதிரி பார்வையை சுழற்றிட, “என்னை கொலைகாரி ஆக்காதே.. கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா..” என்றவள் கடுப்புடன்..!

அப்பொழுதும் அவன் அமைதியாக நின்றிருக்க, “அண்ணா அந்த அருவாளை கொஞ்சம் கொடுங்க..” என்று இளநீர் வேட்டுபவரிடம் இருந்து அருவாளை வாங்கினாள் வித்யா..

“பதில் சொல்லுடா..” என்றவள் கேட்க அவன் அப்பொழுதும் அதே பார்வை பார்க்க, “சுமிம்மா..” என்று கத்தினாள் வித்யா..

அவளின் குரல்கேட்டு எல்லோரும் வந்துவிட, “இவ என்ன அருவாளுடன் நின்றிருக்கிற..” என்று ஐஸ்கிரீம் பார்லரை விட்டு வெளியே வந்த நிரஞ்சன் கேட்டவன் அவளின் அருகில் சென்றான்..

அதற்குள் எல்லோரும் ஒன்று கூடிவிட கூட்டத்தை விளக்கி உள்ளே நுழைந்த சுமிம்மா, “வித்யா அருவாளை கொடு.. எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்..” என்றார்..

“இவன் பேசவே மாட்டேங்கிறான்.. இவனை தீர்த்துட்டு அப்புறம் பேசலாம் சுமிம்மா..” – வித்யா

“உங்களுக்கு இவ்வளவு கோபம் வருன்னு எனக்கு தெரியாது..” என்றாள் அனிதா பயத்துடன்..

“எனக்கும்..” என்றனர் கார்த்திகாவும், சங்கரியும் நடுக்கத்துடன்..

“வித்யா அந்த அருவாளை கொடுங்க.. இந்தாங்க உங்களுக்கு ஐஸ்கிரீம்..” என்று அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முயற்சி செய்தாள் நித்தி..

யாராலும் அவளின் கையிலிருந்து அருவாளை வாங்க முடியாமல் போக, “டேய் வாய்திறந்து பேசு..” என்றவள் அவனை மிரட்டினாள்..

“என்னிடம் திடீரென வந்து பேசினால் எனக்கு கூச்சமாக இருக்காதா..?” என்றான்..

“என்ன கூச்சம்.. இனிமேல் நீ கூச்சம் அது இதுன்னு பதில் பேசாமல் இருந்த நான் மனிஷியாக இருக்க மாட்டேன்..” என்றாள்..

“அப்படிபோடு..” என்ற மகேஷ் வாய்விட்டுச் சிரிக்க, “உன்னையெல்லாம் இப்படி மிரட்டினால்தான் சரிவரும்..” என்றார் சுமிம்மா..

அவர்கள் எல்லோரும் வாய்விட்டு சிரிக்க வித்யாவும் சேர்ந்து சிரித்தாள்.. அப்பொழுது அவர்களின் அருகில் வந்த ஒருவன், “ஹாய் மேடம்..” என்றான்..

அவர்கள் அவனை விநோதமாகப் பார்க்க, “உலகத்திலேயே கோபம் எனக்கு மட்டும்தான் அதிகமாக வருது என்று வீட்டில் இருந்து ஓடிவந்தேன்.. இங்கே வந்து பார்த்தால் தான் தெரியுது.. என்னைவிட கோபக்காரங்க நிறைய பேர் இருக்கான்னு..” என்றவன் புன்னகையுடன்..

“வித்திக்கா உங்க புகழ் உலகம் முழுவதும் பரவும் போலவே..” என்று சிரித்தாள் அனிதா..

“அப்போ நீங்களும் ஓடிவந்த கேஸா..?” என்று கேட்ட சங்கரி, “நிரஞ்சன் அண்ணா இவரோட பெயரை கேட்டு லிஸ்டில் எழுதுங்க..” என்று ஆர்டர் போட்டாள்..

“என்னோட நேம் கௌசிக்..” என்றவன் புன்னகைக்க, “நீங்க எல்லோரும் இப்பொழுது எங்கே போறீங்க..” என்று கேட்டான்..

“நாங்க எல்லோரும் அடுத்து ஊட்டி போறோம்..” என்றாள் நித்தி புன்னகையுடன்..

“எதுக்கு செல்லம் ஹனிமூன் போவதை எல்லோரிடம் சொல்ற..” என்றவன் மெல்லிய குரலில்..

அவனை நிமிர்ந்து முறைத்த நித்தி, “ஏண்டா நல்லாதானே இருந்த.. ஏன் இப்போ எல்லாம் இப்படி பேசற..” என்றவள் எரிச்சலுடன்..

“உன்னைப் பார்த்ததான் இப்படியெல்லாம் பேச தோணுதுடி.. மற்றவங்க யாரிடமும் நான் இப்படி பேசியதே இல்ல..” என்றவன் குறும்புடன் கண்சிமிட்டினான்..

அதற்குள் வானம் இருட்டிவிட, “வாங்க பஸ் வந்துவிட்டது..” என்ற சசிதரன் முன்னே சென்றான்..

“இவனை இரண்டு வார்த்தை பேச வைப்பதற்குள் என்னை இப்படியொரு அவதாரம் எடுக்க வெச்சிட்டான்..” என்ற வித்யா அவனின் பின்னோடு சென்றாள்..

மற்றவர்கள் எல்லோரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்..

அன்று இரவு எல்லோரும் ரூமைக் காலி செய்துவிட்டு பொள்ளாச்சியிலிருந்து ஊட்டி பஸில் சென்றனர்.. இங்கேயே இந்த கூத்து.. இனி அங்கே என்ன என்ன அக்கப்போர் எல்லாம் நடக்க போகுதோ..???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Author ji kadhai mudiyuthunu solliye பீதிய கிளப்பிரீங்க....?? ஒரு ஃபோட்டோ போடுங்களேன் சுமிம்மா பாவாடை சட்டை போஸ் கொடுத்து ஒரு pic??.. kadhai mudiyum varai new comer vanthukitte iruppanga pola ??? nice ud???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Author ji kadhai mudiyuthunu solliye பீதிய கிளப்பிரீங்க....?? ஒரு ஃபோட்டோ போடுங்களேன் சுமிம்மா பாவாடை சட்டை போஸ் கொடுத்து ஒரு pic??.. kadhai mudiyum varai new comer vanthukitte iruppanga pola ??? nice ud???
பாவாடை சட்டையில் சுமிம்மாவை தேடினேன் கிடைக்கல.. பட் இரட்டை ஜடையில் சுமிம்மா பிக்சர் போடுகிறேன் அக்கா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur

Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Innum oru hero mattum thaan balance avara ooty la pudikaporangala. Ennoda favourite place ah select panniruka sandu kutti. Alaiyar nan adikadi escape agura place. Ooty nan padicathu.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top