• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Reviews கண்ணாடி மாளிகை -- எனது பார்வையில்.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Selva sankari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
5,729
Reaction score
14,964
Age
42
Location
Neyveli
முதலில் கண்ணாடி மாளிகை என்ற அருமையான யதார்த்தமான நாவலை எழுதிய அகிலாவிற்கு வாழ்த்துகள்.

அகிலாவின் பல நாவல்கள் என்னை வெகுவாக ரசிக்க வைத்திருக்கின்றன.

அவற்றுள் மிகவும் ரசித்தவை சில: தாகம், இரண்டல்ல ஒன்று, 50:50, லவ்லி லவி... அதன் வரிசையில் இப்பொழுது கண்ணாடி மாளிகை.

மிகவும் எளிமையான யதார்த்தமான கதைக்களம். விஜயேந்திரன் கீர்த்தனா, முகுந்தன் நிரஞ்சனா இரண்டு ஜோடிகளைச் சுற்றி நிகழும் கதை.

பெரியவர்களால் நிச்சயிக்கப் பட்ட திருமணமானாலும் சரி காதல் திருமணமானாலும் சரி அன்பு ஒன்றே பிரதானம் என்று அழகாக புரிய வைத்திருக்கிறார் அகிலா.

கீர்த்தனாவின் கேள்விகள் ஒவ்வொன்னும் சாட்டையடிகள். தைரியமும் நிமிர்வும் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் அவளது பலம்.

நிரஞ்சனாவின் நேசம், குழந்தைத் தனமான செய்கை, முகுந்தனின் மேல் கொண்ட அளப்பரிய காதல் அவளது பலம்.

இரு பெண்களும் தங்களது வாழ்வை எவ்வளவு அழகாக சீரமைத்துக் கொள்கிறார்கள்.... என்பதை யதார்த்தத்தை மீறாமல் அழகாகக் கூறியிருக்கிறார்.

பல இடங்களில் இழையோடிய நகைச்சுவை புன்னகையுடன் படிக்க வைக்கிறது நாவலை. அதற்கு பெரும் பங்கு வகிப்பவர் பூமா.

அகிலாவின் கை வண்ணத்தில் நான் ரசித்த வரிகள் பல... அவற்றை அனைத்தையும் இங்கே தரமுடியவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல
Screenshot_2019_0821_115609.png

அருமையான நாவலைத் தவற விடாமல் அனைவரும் படியுங்கள். நன்றி வணக்கம்.
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
கண்ணாடி மாளிகையை வாசிக்கத் தூண்டும் கண்ணாடி போல அருமையான விமர்சனம், செல்வா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top