கண்ணீரில் கரைகிறேன்

#1
"கவலைகள்
கோடி கண்டேன்
கொஞ்சமாய் தான்
நொந்தேன்"

"ஆறுதலாய்
அருகே வந்த
உறவுகளின்
அறிவுரையில்
அழிந்திடத்தான் துடித்தேன்"

"சிறு சிறு ஏக்கங்கள்
சிந்திட்டப்போது
சிறைக்கதியாய்
சிக்கித்தவித்தேன்"

"நஞ்சாய் கசந்தது
நயவஞ்சக உறவுகள்
நாராய் ஆனது
நெஞ்சம்
கூரான சொல்தான்
குறி பார்த்து
நெஞ்சில் குத்தியதில்"

"ஆதரவு இன்றி
அழுகையில் கரைந்தேன்
சோகங்கள் அனைத்தையும்
சொத்தாய் சேர்த்தேன்"

"சுருண்டு விழுந்தேன்
சுய நினைவு இழந்தேன்"

"காய்ச்சல் கானும்போது
கை வைத்து சோதிக்கும்
சொந்தங்கள் ஏதும் இன்றி
சோர்ந்துவிட்டேன்"

"காயம் அனைத்தும்
வெயில் பட்டது போல்
காய்கிறது
எரியும் மனம் அது
இம்சை மறக்க
கண்ணீர் வடிக்கிறது"

"வற்றாமல் சுரக்கிறது
விழிநீர்
வழிந்தோடும்
விழி நீரில்
என் வலிகளும்
வடுக்களும்
மறைந்திட்டால்
மங்கை இவள்
மரணம் அதையும்
மகிழ்வுடன் ஏற்பாளே"
 
#3
💧💧💧💧💧💧💧💧💧💧💧💧💧
👌👌👌👌👌👌👌 கனி View attachment 15347
எப்படிபா போட்டா கண்டுபிடிச்சு கரெக்டா போடுறீங்க இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிபா
 
#4
எப்படிபா போட்டா கண்டுபிடிச்சு கரெக்டா போடுறீங்க இருந்தாலும் உங்க அன்புக்கு ரொம்ப நன்றிபா
🌹 🌹 இந்த கவிதை எனக்கு ரொம்பபப பிடிச்சிருக்கு கனி
 

Advertisements

Latest updates

Top