General Audience கதை படிப்பது நல்லதா? கெட்டதா?

Vijayanarasimhan

Author
Author
SM Team
#72
எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாய் நான் ஒரு புத்தகப்புழு!

என் வீட்டின் முந்தைய தலைமுறையினர் யாரும் எஸ்.எஸ்.எல்.சி. தாண்டியவர்கள் இல்லை, ஆனால், என் பாட்டி, பெரியப்பா, அம்மா, அத்தைகள் என்று எல்லோருமே தீவிர வாசகர்கள்! வீட்டில் அவரவருக்கான நூல் அலமாரி இருக்கும். நான் அவை எல்லாவற்றையும் படிப்பேன்!

என் அப்பா நூல்கள் வாசிக்கமாட்டார், ஆனால் பல தினசரிகள், வார மாத இதழ்களுக்கான சந்தா செலுத்தியிருப்பார். (இப்போது தி ஹிந்து, குமுதம் இவற்றோடு நிறுத்திக்கொண்டார்!)

ஒரு புறம் கல்கி, சாண்டில்யன், சுஜாதா நூல்கள், மறுபுறம் சிறுவர்மலர், யங் வோர்ல்ட், சந்தமாமா, டிவிங்கிள் என்று எனக்கு வாசிக்க நிறைய கொடுத்தனர் என் வீட்டில் (ஆனால், ஏனோ எனது சகோதர சகோதரிகள் என் அளவிற்கு வாசிப்பிற்குள் இழுக்கப்படவில்லை!)

சின்ன வயதில் நான் எப்போதும் கையில் ஒரு நூலோடே இருப்பேன்... பீச்சில் பஜ்ஜி வாங்கித் தந்தால் கூட பஜ்ஜியைச் சப்பிட்டுவிட்டு, அது வைத்த தாளில் இருப்பதைப் படித்துவிட்டே கசக்கிப் போடுவேன் ஒரு கட்டத்தில்! :LOL::LOL:

நான் இளங்கலை படிப்பில் சேர்ந்தபோது, என் அடுத்த வீட்டு நண்பன் ‘கன்னிமாரா நூலகத்தில்’ சேரலாம் என்றான், இருவரும் சென்று உறுப்பினர்களானோம்... அங்குதான் என் வாசிப்பு கதைகள் தாண்டி அல்புனைவுகளுக்கு (non-fiction) விரிந்தது!

ஆனால், கதைகளில் இருக்கும் சுவையை, ஆர்வத்தை நான் அல்புனைவு நூல்களில் காணவில்லை!

இருவகையையுமே படிக்கிறேன் என்றாலும், கதை அல்லாதவற்றை ஒருவித கட்டாயத்தோடே படிக்க வேண்டியிருக்கிறது! கதையைப் போல இயல்பாக அதில் ஆழ முடிவதில்லை என்னால்!

சிலர் ‘நான் கதைகள் படிப்பதில்லை, அல்புனைவுகள்தான் படிப்பேன்’ என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வர், ஆனால், அதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை!

படிப்பது ஒரு நல்ல பழக்கம், அவ்வளவுதான்!

நான் என் மாணவர்களிடம் படிப்பதைப் பற்றிப் பேசுகையில், பாட நூல்களை முதலில் ஒரு முறை ஒரு நாவல் படிப்பதைப் போலப் படித்துவிடுங்கள் என்பேன்.

ஒரு நல்ல நாவலின் அடிப்படை இலக்கணமாக நான் கருதுவது அது வாசகரின் கவனத்தை இயல்பாக ஈர்க்கும், வாசகர் எதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டுமோ (கதைமாந்தர் பெயர், இயல்பு, இடப்பெயர், காலம், இப்படி...) அதை அக்கதை மீண்டும் மீண்டும் கூறி நினைவுறுத்தும்... ஒரு முறை கூறிவிட்டு ‘நீ நினைவில் வைத்துக்கொள்’ என்று அடம்பிடிக்காது!

அதாவது, ஒட்டுமொத்தத்தில் ஒரு நல்ல கதையைப் படிக்கும்போது வாசகர் சோர்வடைய கூடாது... தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூட அமர்ந்து படிக்கக் கூடியதாய் இருக்க வேண்டும்!

மாறாய், ஒரு நல்ல பாட நூலின் இலக்கணம் கூறியது கூறாமை, சுருங்கச் சொல்லல் ஆகியவை (இது போல இன்னும் பத்து குணங்களை நன்னூல் பட்டியலிடுகிறது!)

எனவே, பாடநூல் ஒரு முறை சொன்னதை மீண்டும் சொல்லாது, ஒரு வரி புரியாமல் அடுத்த வரிக்குச் செல்ல இயலாது... எனவேதான் பாட நூலைத் தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் எல்லோராலும் படிக்க இயலாது! (குறிப்பாய் கணிதம், இயற்பியல் போன்ற நூல்களை!)

ஆனால், ஒரு பாட நூலை நாவல் போல வாசிக்கையில், எதைப் பற்றியும் கவலைப்படாமல், புரிகிறதோ புரியவில்லையோ அடுதடுத்து என வாசித்துச் செல்கையில் அப்பாடம் பற்றிய ஒரு புரிதலை (a feel for the subject) ஏற்படுத்தும்...

பொதுவாகப் பாட நூல்களை யாரும் ‘கவர் டு கவர்’ படிக்கமாட்டார்கள், வினாக்களின் விடைகளை மட்டும் படிப்பர், இதனால் ஆசிரியர் கூறியுள்ள சில அரிய தகவல்களை விட்டுவிடுகிறோம்...

ஆனால், ஒரு நாவல் போலப் படிக்கையில் அதையெல்லாம் விடாமல் படிப்போம்... பின் வகுப்பு நடக்க நடக்கத் தேவையான பகுதியை முழுமையாக (சமன்பாடுகளுடன்) படித்துக்கொள்ளலாம்...

(நான் பள்ளியில் படிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையின் முடிவில் அவ்வாண்டிற்கான பாடநூல்களைத் தந்துவிடுவார்கள், அவற்றை பள்ளி தொடங்கும் முன்பே முழுமையாக ஒரு வாசிப்பு வாசித்துவிடுவேன்... மேலே சொன்ன நாவல் பாணியில்! பின் வகுப்பில் ஹெர்மாய்னி கிரிஞ்ஜரைப் போல குறுக்கக் குறுக்கப் பேசித் தொல்லைபடுத்துவேன்! :LOL::LOL::LOL:)

எனவே, வாசிப்பு என்பது ஒரு வரம்... அது எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை... எதை வாசிக்கிறோம் என்பது இரண்டாம்பட்சம்தான்...

ஆனால், மதங்களைப் போல ‘எனது உசத்தி, உனது மட்டம்’ என்கையில்தான் சிக்கலே!

அவரவருக்குப் பிடித்தபடி அவரவர் வாசிக்கின்றனர்... இதில் உயர்வு தாழ்வு, பெருமை சிறுமை இல்லை... அப்படிச் சொல்பவர்தான் சிறியவர், மட்டமானவர்...

:):):)(y)(y)(y)
 
jeyalakshmigomathi

Major
SM Exclusive Author
#73

தெளிவான விளக்கம் நன்றி ண்ணா...
 
#74
நான் சிறுவயதில் இருந்து கோகுலம்,அம்புலி மாமா, சிறுவர் மலர், தங்க மலர், கண்மணி, பெண்மணி மாத இதழ்கள், ராஜேஷ் குமார் நாவல்கள், இந்திரா சௌந்தராஜன், சிவ சங்க ரி, அனுராதா ரமணன்... நாவல்கள் லாம் விரும்பி படிப்பேன். எங்க வீட்ல காதல் கதைகளுக்கு தடா . எனக்கு படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தியது எங்க அக்கா. அவங்க படிச்சிட்டு நல்லா இருக்கிற கதைகள் மட்டும்என்கிட்ட வரும்.

திருமணத்திற்கு பிறகு நாவல் படிப்பது சற்று குறைந்து போனது. என்னைப் போல அங்கு நாவல் படிப்பவர்கள் இல்லாததால் நான் வித்தியாசமாக பார்க்கப்பட்டேன்.

பிறகு கடந்த மூன்று நான்கு வருடங்களாகதான் இணைய தளத்தில் நாவல்கள் படிக்க்ஆரம்பித்தேன்.
ராஜேஷ் குமார்நாவல்களைத் தேடும் போது தான் நான் காதல் நாவல்களைப் படிக்க ஆரம்பித்தேன். நான் முதலில் இணையத்தில் படித்த நாவல் தமிழ் மதுரா வின் ' வார்த்தை தவறி விட்டாய்' தான்.
என்னை வெகுவாக கவர்ந்த இந்த நாவலுக்குப் பிறகு முழு நேர இணைய தள வாசகியாகி விட்டேன்.

நாவல்படிப்பதால் எனக்கு மன அழுத்தங்கள் இருப்பதில்லை. ஏதேனும் கவலைகள் இருப்பினும் படிக்கும் போது மனம் லேசாகி விடுகிறது.

யதார்த்த வாழ்க்கை வேறு, கற்பனை உலகம் வேறு என்று தெரியாத அளவு யாரும் இருப்பதில்லை.
ஆனால் கற்பனைகள் நிஜமானால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு வேண்டுமானால்சிலரிடம் இருக்கலாம்.

நல்ல தரமான புத்தகங்களைப்படிப்பதில் தவறில்லை என்பது என் கருத்து.
Selva sema ponga👌👌👍🌹
 
#75
சின்னவயதில் அம்புலி மாமா புக்கை படித்து விட்டு என் பாட்டி கதை சொல்லுவார்கள். அதை கேட்டு கேட்டு கதை புக்கை தேடி தேடி படிப்பேன். ஒரு கால கட்டத்திற்கு மேல் கதையை படிப்பதை நிறுத்திவிட்டேன். எனது திருமண வாழ்க்கையில் ஏகப்பட்ட குழப்பம். எனது வீட்டிற்கே வந்துவிட்டேன். ரொம்பவே மனநெடுக்கடி எனது ரிலாக்ஸ்காக என்னுடைய சகோதரி திருமதி ரமணி சந்திரனின் அனைத்தும் நாவல்களையும் வாங்கி படிக்கும்மாறு வற்புறுத்தினார் படிக்க படிக்க எனக்கே ரொம்ப ஆர்வம் வந்துவிட்டது. எனது பிரச்சனையே ஞாபகத்திற்கு வராது. இணையத்தளத்தில் கதையை படித்தேன். என்னைய பொறுத்தவரைக்கும் கதை படிப்பு நல்லது.
 
Selva sankari

Major
SM Exclusive Author
#76

உண்மைதான் பா கதை படிப்பது நமது கவலைகளை மறக்கச் செய்யும்.
உங்களுடைய பிரச்சினைகள் தீர கடவுள் உங்கள் பக்கம் நிற்கட்டும் பா.

விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை. உங்களால் விட்டுக்கொடுத்து அனு சரி த் து போக முடியும் பட்சத்தில் உங்கள் கனவருடன் பேசி பிரச்சினையை சரி செய்ய பாருங்கள் பா.

உங்கள் வாழ்வில் இனிமை மலர இறைவனை வேண்டுகிறேன்.
 
Advertisements

Latest updates

Top