• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய் - 1 - அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

இக்கட்டுரை எப்படி இருக்கிறது?

  • பயனுள்ளதாக

  • சுவையாக

  • பயனுள்ளதாகவும் சுவையாகவும்

  • நேர விரயம்!

  • இன்னும் எளிதாய் இருக்கலாம்...

Results are only viewable after voting.

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமை & எளிமையான விளக்கம் சகோ,
(எழுத்தாளர்கள் அல்லாதவர்களும் வாசிக்கிறோம்):)
வாசிக்கும் அனைவரும் எழுத்தாளரும்தான்! தனியாக எழுதினால்தான் எழுத்தாளர் என்று இல்லை!

இது வெறும் புகழ்ச்சி அல்ல, எழுத்தாளர்கள் கதையை எழுதுகையில் எவ்வாறெல்லாம் புதுமையாக எழுதலாம் என்று சிந்தித்து எழுதுவர், அவர் அப்படி முயல்வதன் ஆணிவேரே அவர்கள் எழுதுவதை வாசிப்பவர் சரியாகப் புரிந்துகொள்வர் என்ற நம்பிக்கையில்தான்.

‘அவள் உரத்துக் கூறிவிட்டு விறுவிறுவெனத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்’ என்று எழுதினால் ‘அவள் கோவமாக இருக்கிறாள்’ என்று நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களே? அங்குக் கதையின் சொல்லப்படாத (சில வேளைகளில், சொல்ல இயலாத) பகுதிகளை நீங்கள் எழுதுகிறீர்கள்தானே?

எப்படி ஒரு நல்ல மாணவனே நல்ல ஆசிரியனாக இயலுமோ, அப்படித்தான் ஒரு நல்ல வாசகனே ஒரு நல்ல எழுத்தாளன் ஆக இயலும்...

கற்பனை பீடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு நான் எழுதி எழுதி கீழே போடுகிறேன் நீங்கள் படித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகவே இயலாது...
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
ஹிஹி.. அடுத்துச் சரியாக கூறியிருப்பேன்.. ??.. இது ஒரு பழக்கம் எனக்கு.. முதலில் எழுதி விட்டுப் பின் தேவைப்படும் இடத்தில் வல்லினம் மிக வைப்பேன். ??? அதில் சில வார்த்தைகளில் விடுப்பட்டு போய்விடும் தான். பார்ப்போம் ணா
தவறில்லை... சரசுவதியே வந்து எழுதினாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு பிழைகள் அடம்பிடித்து அமரத்தான் செய்யும்... :)

பிழை செய்வது பிழையல்ல, சரியானதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே பிழை!

(I think I am in philosophical mode today... Thanks to the ink on my index fingers... It's the thing that triggered that mode! Ha ha... Please bear with me!)
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
அருமையாக உள்ளது. பள்ளிப் பருவத்துக்கே போயிட்டேன். இன்னும் நிறைய இலக்கணங்கள் போடுங்கோ.
View attachment 11166View attachment 11167
நன்றியோ நன்றி... மிக்க ஊக்கம் அளித்துள்ளீர்கள்... (y)(y):love::love:
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சரிதான் தங்காய்... நம் நாவின் இயல்பு அப்படி!

வல்லின ஒலிகளை மொழியியலில் ‘வெடிப்பொலிகள்’ (plosives) என்போம். இவற்றை ‘தடுப்பொலிகள்’ (stops) என்ற பெயராலும் அழைப்போம்.

இவற்றை உச்சரிக்கையில் நமது குரல் நாண் (vocal cord) முற்றாக மூடிக்கொள்ளும், எனவே அடுத்த ஒலியை உச்சரிக்கத் தேவையான காற்று சற்று இடைவெளிவிட்டுத்தான் வரும்... அதனால்தான் இவற்றை ‘மிகாமல்’ (மெய்யெழுத்தாக வருகையில் அங்கு வரும் அழுத்தம் (stress [syllable stress]) காரணமாக இந்த அடைப்பு ஈடு செய்யப்படுகிறது!) உச்சரிக்கவே இயலாது - குறிப்பிட்ட அமைப்புகளில் (அவற்றைத்தான் அடுத்தடுத்துக் காண இருக்கிறோம்!)

இன்று எக்சு-ரே கருவிகளை எல்லாம் கொண்டு நாம் அளந்தறிந்த இந்த நுட்பங்களை 2000 / 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் தனது நுண்ணறிவால் உணர்ந்து சொல்லிச் சென்றுள்ளார் என்பதே வியப்பு!
அடுத்து அடுத்து எடுத்துக்காட்டுடன் விளங்குங்கள்.. அருமையாக இருக்கிறது..
 
Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
தவறில்லை... சரசுவதியே வந்து எழுதினாலும் ஆங்காங்கே ஒன்றிரண்டு பிழைகள் அடம்பிடித்து அமரத்தான் செய்யும்... :)

பிழை செய்வது பிழையல்ல, சரியானதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பதே பிழை!

(I think I am in philosophical mode today... Thanks to the ink on my index fingers... It's the thing that triggered that mode! Ha ha... Please bear with me!)
??? பரவால்ல ணா நன்றாகத் தான் இருக்கிறது அதுவும்.
 
shiyamala sothy

இணை அமைச்சர்
Joined
May 4, 2018
Messages
990
Reaction score
2,953
Age
51
Location
canada
நன்றியோ நன்றி... மிக்க ஊக்கம் அளித்துள்ளீர்கள்... (y)(y):love::love:
என்ன ஒன்று தமிழில் இமோஜி ஒன்றும் வரவில்லை. தமிழ் வகுப்புக்கு தமிழில் போடுவது தான் அழகு. கூகிள் ஆண்டவர் கைவிட்டு விட்டார்.
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
??? பரவால்ல ணா நன்றாகத் தான் இருக்கிறது அதுவும்.
நன்றி... கண்டிப்பாக நிறைய எடுத்துக்காட்டுகள் தருகிறேன்...

நிறைய பயிற்சியும் தரலாம் என்று இருக்கிறேன்... :LOL::LOL:
 
Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
என்ன ஒன்று தமிழில் இமோஜி ஒன்றும் வரவில்லை. தமிழ் வகுப்புக்கு தமிழில் போடுவது தான் அழகு. கூகிள் ஆண்டவர் கைவிட்டு விட்டார்.
உரைக்கின்ற சொற்களுக்கே மொழிகள் தேவை
.....உணர்வுக்கு மொழியில்லை, உள்ளன் போடு
வரைகின்ற வார்த்தைகளின் வழியே மனத்தை
.....வந்துதொடும், அதுபோதும், நன்றி... நன்றி! :giggle::giggle:
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
வாசிக்கும் அனைவரும் எழுத்தாளரும்தான்! தனியாக எழுதினால்தான் எழுத்தாளர் என்று இல்லை!

இது வெறும் புகழ்ச்சி அல்ல, எழுத்தாளர்கள் கதையை எழுதுகையில் எவ்வாறெல்லாம் புதுமையாக எழுதலாம் என்று சிந்தித்து எழுதுவர், அவர் அப்படி முயல்வதன் ஆணிவேரே அவர்கள் எழுதுவதை வாசிப்பவர் சரியாகப் புரிந்துகொள்வர் என்ற நம்பிக்கையில்தான்.

‘அவள் உரத்துக் கூறிவிட்டு விறுவிறுவெனத் திரும்பிப் பார்க்காமல் சென்றாள்’ என்று எழுதினால் ‘அவள் கோவமாக இருக்கிறாள்’ என்று நீங்கள் புரிந்துகொள்கின்றீர்களே? அங்குக் கதையின் சொல்லப்படாத (சில வேளைகளில், சொல்ல இயலாத) பகுதிகளை நீங்கள் எழுதுகிறீர்கள்தானே?

எப்படி ஒரு நல்ல மாணவனே நல்ல ஆசிரியனாக இயலுமோ, அப்படித்தான் ஒரு நல்ல வாசகனே ஒரு நல்ல எழுத்தாளன் ஆக இயலும்...

கற்பனை பீடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு நான் எழுதி எழுதி கீழே போடுகிறேன் நீங்கள் படித்துக் கொள்ளுங்கள் என்பவர்கள் சிறந்த எழுத்தாளர்கள் ஆகவே இயலாது...
????????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top