• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கற்கக் கற்கண்டாய் - 4 - வல்லினம் மிகல் - பிற வேற்றுமைகள் | விரி & தொகை

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
வணக்கம் எழுத்தாளர்களே...

கொஞ்சம் இடைவெளி நீண்டுவிட்டது! (அடிக்கடி இப்படி ஆகும்! இடைவெளி நீள்வதால் நீங்கள் கற்றதை மறந்துவிடமாட்டீர்கள் என்று நம்புகிறேன்!)

இதுவரை நாம் கற்றதெல்லாம் இரண்டே இரண்டுதான்:
2ம் 4ம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகும்.

(இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால், 2ம் வேற்றுமை உருபான ‘’யையும், 4ம் வேற்றுமை உருபான ‘கு’வையும் அடுத்து வல்லினம் கட்டாயம் மிகும்! மிகும்... கும்... ம்!)

மற்ற வேற்றுமைகளைப் பற்றி இப்பதிவில் காண்போம்.

மற்ற வேற்றுமைகளைப் பற்றிச் சொல்வதற்கு முன் வேற்றுமை விரி, தொகை, உடன் தொக்க தொகை ஆகியவற்றைக் கொஞ்சம் தெளிவாகக் கற்றுக்கொள்வோம்.

வேற்றுமை விரி: வேற்றுமை உருபு வெளிப்படையாக இருப்பது.

எடுத்துக்காட்டுகள்:

Vetrumai-1-viri.png

இது எளிது. வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக இருப்பதால் எளிதில் எந்த வேற்றுமை என்பதை அறிகிறோம்.
வேற்றுமையில் 2ம் 4ம் வேற்றுமைகளில் வலி மிகும் என்பதை முன்பே பார்த்தோம்.
மீதமிருக்கும் வேற்றுமைகளில் (1ம், 3ம், 5ம், 6ம், 7ம்) வலி மிகாது.

மேலுள்ள அட்டவணையில் 7 வேற்றுமைகளும் ஒரே பெயர்ச்சொல்லில் எவ்வாறு அமைகின்றன என்பது காட்டப்பட்டுள்ளது.

வேற்றுமைகளின் பொருளை ஒருமுறை விரைவாகக் கூறிவிடுகிறேன்:

முதல் வேற்றுமை - எழுவாய் வேற்றுமை
இரண்டாம் வேற்றுமை - செயப்படுபொருள்
(இதனை நாம் விரிவாகப் பேசிவிட்டோம்!)
மூன்றாம் வேற்றுமை - கருவி / உடனிகழ்வு (அதனால் அல்லது அதனோடு வினை நிகழும்)
நான்காம் வேற்றுமை - அடைதல் (இதனையும் நாம் விரிவாகப் பேசிவிட்டோம்!)
ஐந்தாம் வேற்றுமை - நீங்கல் (ஒன்றிலிருந்து விடுபட்டுச் செல்லல்)
ஆறாம் வேற்றுமை - உடமை (ஒன்றுக்கு ஒன்று உரிமையாதல்)
ஏழாம் வேற்றுமை - இடம் (ஒன்றின் மேல் / உள் நிகழ்தல்)

[இங்குள்ள எடுத்துக்காட்டுகளில் வேற்றுமைகளின் அமைப்பையும் பொருளையும் உணரலாம். மேலும் ஐயமிருப்பின் தயங்காது வினவுக!]

பல வேளைகளில் வேற்றுமைப் பொருள் உருபு இல்லாமலே விளங்கும். அவ்வாறான நிலையில் நாம் வேற்றுமை உருபுகளை வெளிப்படையாக எழுதாமல் விட்டுவிடுவோம். இப்படி வேற்றுமை உருபு இல்லாது (மறைந்து) வருவது வேற்றுமைத் தொகை எனப்படும்.

வேற்றுமைத் தொகை: உருபு மறைந்து வருவது.

எடுத்துக்காட்டுகள்:

Vetrumai-2-thogai.png

முதலாம் வேற்றுமையில் தொகை அமையாது (முதலாம் வேற்றுமைக்கு உருபு இல்லை. பெயர்ச்சொல் அப்படியே எழுவாயாக இருப்பதுதான் முதல் வேற்றுமை. எனவே இதில் உருபு மறைவதற்கான வாய்ப்பே இல்லை!)

பிற வேற்றுமைத் தொகைகளை எடுத்துக்காட்டில் காண்க.

6ம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகும். அதிலும் நிலைமொழி அஃறிணையாக இருந்தால் மட்டுமே.

நிலைமொழி உயர்திணையாக இருந்தால் வல்லினம் மிகாது.

எடுத்துக்காட்டு:
அஃறிணை நிலைமொழி:
புலித்தோல் (புலியினது தோல்)
உயர்திணை நிலைமொழி: சான்றோர் கூட்டம் (விரி: சான்றோரது கூட்டம்)

உடன் தொக்க தொகை:

இதனை ‘உருபும் பயனும் உடன்தொக்க தொகை’ என்றும் சொல்வோம்.

வேற்றுமை உருபோடு சேர்ந்து பயனிலையும் (தொடரின் வினைச்சொல்லும்) மறைந்து வருவது ‘உடன் தொக்க தொகை’.

சோற்றுப்பானை’ என்பது ‘சோற்றை வைக்கும் பானை’ என்று விரிகிறது.

இதில் ‘சோற்றை’ என்ற 2ம் வேற்றுமைக்கான பயனிலை (வினைச்சொல்) ‘வைக்கும்’ என்பது.

2ம் வேற்றுமையின் உருபான ‘ஐ’யும், அதன் பயனிலையான ‘வைக்கும்’ என்பதும் சேர்ந்து மறைந்து ‘சோற்றுப்பானை’ என்று தொகையாய் அமைந்துள்ளது.

இதுவே ‘உருபும் பயனும் உடன் தொக்க தொகை’ எனப்படும். இவ்வாறே பிறவும்.

எடுத்துக்காட்டுகள்:

Vetrumai-3-udan-thokka-thogai.png

உடன் தொக்க தொகையில் வல்லினம் மிகும்.

(1ம் 6ம் வேற்றுமைகளில் உடன் தொக்க தொகை அமையாது! 1ம் வேற்றுமைக்கு உருபே இல்லை, 6ம் வேற்றுமையில் பயனிலை இல்லை!)

இத்தோடு வேற்றுமையில் வல்லினம் மிகுதலை ஓரளவு நாம் முழுமையாகப் பார்த்துவிட்டோம்.

ஆங்காங்கே சில விதிமீறல்கள் இருக்கும்.

(எடுத்துக்காட்டாய், ’மண்கலம்’ / ‘மட்கலம்’ என்பது 3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை. இதன் விரி ‘மண்ணால் செய்த கலம்’ - ஆனால் இங்கே வல்லினம் மிகவில்லை! காரணம் ‘மண்’ என்பதன் இறுதியில் உள்ள ‘ண்’ ‘ட்’ஆக மாறிப் புணர்கிறது. இதற்கு மேலும் இங்கு வலி மிகத் தேவையில்லாது ஆகிறது!)

அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டா!

நான் முதன்மையாகக் குறிப்பிட விழைவது 2ம் (’ஐ’) 4ம் (’கு’) வேற்றுமை விரிகளிலும், அனைத்து* உடன் தொக்க தொகைகளிலும் வல்லினம் மிகும் என்பதை மட்டுமே. இதனை நினைவில் வைத்துக்கொண்டாலே பெரும்பான்மை பிழைகளைத் தவிர்த்துவிடலாம்!

(*1ம் 6ம் வேற்றுமைகளில் உ.தொ.தொ. அமையாது என்பதை மீண்டும் நினைவுறுத்துகிறேன்!)

இவை கீழே அட்டவணையாகத் தரப்படுகின்றன:

Vetrumai-0-vallinam-migal.png

இவ்வட்டவணையைக் குறித்துவைத்துக்கொள்ளுங்கள்!

பயிற்சி:

ஏழு வேற்றுமைகளிலும் விரி, தொகை, உ.தொ.தொ. ஆகியவற்றில் எடுத்துக்காட்டுச் சொற்றொடர்களை அமைத்துப் பாருங்கள்.

நீங்கள் எழுதும் / படிக்கும் கதைகளில் அவை எவ்வாறு அமைந்துள்ளன என்று கண்டறியுங்கள். வல்லினம் மிகல் / மிகாமை சரியாக அமைந்துள்ளதா என்று பாருங்கள்.

---

மேலே காட்டிய ஏழு வேற்றுமைகளோடு எட்டாவதாக ‘விளி வேற்றுமை’ என்பதையும் சேர்ப்பர்.

விளித்தல் = அழைத்தல்.

ஒருவரை அழைப்பதைப் போல தொடர்களில் அமைவது ‘விளி வேற்றுமை’ / 8ம் வேற்றுமை.

இதற்கும் உருபு எதுவும் இல்லை. எழுவாய் அப்படியேவோ கடை நீண்டோ குறுகியோ வரும்.

”கந்தா, இங்கு வா!” (கந்தன் -> ’கந்தா’ - கடை நீண்டது!)

“கந்த, இதைப் பெற்றுக்கொள்!” (கந்தன் -> ‘கந்த’ - கடை குறைந்தது!)

எட்டாம் வேற்றுமையில் வல்லினம் மிகாது!

(கடை குறைவது ‘அண்மை விளி’ எனவும், கடை நீள்வது ‘சேண்மை விளி’ எனவும்படும்.
அண்மை = அருகில்,
சேண்மை = தொலைவில்.
அண்மை விளி = அருகில் இருப்பவரை அழைத்தல்
)
---

அடுத்து நாம் வினையெச்சங்களைப் பற்றிப் பார்ப்போம்...

நன்றி,

--வி :cool::cool:
 




Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
நிலைமொழி, கடை-- விளக்கம் வேண்டும்...
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
சூப்பர்... இதில் ஐ கு உடன் தொக்கத் தொகையில் வல்லினம் மிகும் மற்றதில் மிகா .. ??????.. நன்றி ஆசிரியரே. ???
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
ஆசிரியரே... அருமையான பதிவு...நன்றாகப் புரிகிறது....
 




Kavichithra

அமைச்சர்
Joined
Apr 11, 2019
Messages
1,331
Reaction score
4,129
Location
Chennai
நிலைமொழி, கடை-- விளக்கம் வேண்டும்...
சிறை + சாலை
இதில் முதலில் நிலையாக இருக்கும் சொல் நிலைமொழி...அதனுடன் சேர(புணர) வரும் சொல் வருமொழி...
சிறை- நிலைமொழி
சாலை - வருமொழி
பொதுவில் கடை என்றால் இறுதி எழுத்து
இது எனக்குத் தெரிந்த அளவில் அக்கா ‌...ஆசிரியர் வந்து தெளிவு படுத்துவார்
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
நிலைமொழி, கடை-- விளக்கம் வேண்டும்...
நிலைமொழி:

புணர்ச்சி என்பது இருசொற்கள் அடுத்தடுத்து வருகையில் அவை எப்படிச் சேர்கின்றன என்பது.

இதில் முதலில் இருக்கும் சொல் ‘நிலைமொழி’ எனப்படும்.
இரண்டாவதாய் வரும் சொல் ‘வருமொழி’ எனப்படும்.

‘முருகன் வந்தான்’

என்பதில் ‘முருகன்’ நிலைமொழி, ‘வந்தான்’ வருமொழி.

சொற்றொடரில் நிறைய சொற்கள் இருந்தாலும் அவற்றை இரண்டிரண்டாகக் கொண்டு அவற்றிடையே புணர்ச்சி ஆராயப்படும். அவ்வகையில் முதலில் நிற்பவை நிலைமொழி, அடுத்து நிற்பவை வருமொழி.

கடை:

இறுதி, ஈறு.

சொல்லின் கடைசியில் உள்ள எழுத்து.

’கந்தன்’ என்பதில் ’ன்’ என்பது கடை / ஈறு.

இந்த ‘ன்’ குறைந்து / மறைந்து சொல் ‘கந்த’ என்று ஆவது கடைக்குறை.

இதிலும் ஈறாக உள்ள ‘த’ நீண்டு ‘கந்தா’ என்றாவது ‘கடைநீளல்’.

சரியா?
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top