• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் ஏழு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தன்னை காக்க அவள் செய்த செயல் ,எந்த பெண்ணும் செய்ய துணியாத ஒன்று ஆயிற்றே ...நினைவே அவன் கண்களை பொங்க செய்தது என்றால் மிகையல்ல .

மாலை வரை மீண்டும் அவள் அவன் கண்களுக்கு படவேயில்லை ...வீரர்களை பார்வை இடுவது ,போரிட்ட இடத்தில் இறந்து போனவர்களை புதைப்பது ,ஒற்றர்களுடன் ஆலோசிப்பது ,அவள் தந்தைக்கு தகவல் அனுப்புவது ,அந்த குடில்களிடம் அந்த இடத்தை பற்றி தெரிந்து கொள்வது ,அருகில் உள்ள மற்ற மலைக்குடிகளுக்கு தகவல் அனுப்பி அங்கு விரோதிகள் யாராவது ஒளிந்து இருக்கிறார்களா என்று தகவல் அறிவது என்று பம்பரமாய் சுழன்று கொண்டு இருந்தாள் அவன் பைங்கிளி .

அதுவரை அழகன் ஆதித்யனுக்கு தேவையானவற்றை பார்த்து கொள்ள ,அங்கு இரவூ பூஜை முடிந்த பிறகு ,களைத்து திரும்பி வந்தாள் நித்திலவல்லி .அவள் வந்தது மெல்ல தலையசைப்புடன் விலகினான் அழகன் அவர்களுக்கு தேவையான தனிமை கொடுத்து .

"என்ன தேவி ...நாட்டின் அரசி ஆகும் முன்னரே உங்களை பார்க்க காத்து இருக்க வேண்டியதாய் இருக்கிறது ...இன்னும் அரசி ஆகி விட்டால் ஒட்டுமொத்த பாரதத்தையும் வெல்லும் வரை ஓய மாட்டாய் போல் இருக்கிறதே ...."என்றான் ஆதித்யன் அவளை நோக்கி தன் கைகளை நீட்டி .

அவன் கரங்களுக்குள் தன் கரம் பாந்தமாய் பொருந்துவதை கண்டு புன்னகைத்து அவன் அருகே அவனை ஒட்டி அந்த மேடையில் அமர்ந்தவள் ,"இந்த அரசனுக்கு ஏற்ற அரசியாய் இல்லை என்றால் எப்படி ...அரசன் எவ்வழியோ இந்த அரசியும் அவ்வழி ..."என்றாள் .

சற்று நேரம் எதையும் பேசாமல் இருவரும் ,ஒருவரின் அருகே இருப்பதை ஆழ்ந்து அனுபவித்தவாறு எதிரே தெரிந்த பால் நிலாவை ரசித்து கொண்டு இருந்தனர் .
அங்கு புள்ளி மான் ஒன்றின் குட்டி தாவி குதித்து வர ,அதை கண்ட நித்திலவல்லி அதன் அருகே சென்று அதை அணைத்து அதன் முகத்துடன் தன் முகத்தை வைத்து இழைக்க ஆரம்பித்தாள் .

அதை கண்டவாறு சிரித்து கொண்டு அவள் அருகே வந்த ஆதித்யன் ,"இந்த புள்ளி மானாய் நான் பிறந்து இருக்க கூடாதா என்று ஏக்கமாய் இருக்கிறது தேவி ."என்றான் அவள் இடையில் கை கொடுத்து எழுப்பி தன்னுடன் சேர்த்து அணைத்தவாறு .

"நீங்கள் இந்த புள்ளிமானாய் பிறந்து இருந்தால் உங்களை தோட்டத்தில் தான் வளர்த்து இருக்க முடியும் ...என்னுடனே எவ்வாறு தக்க வைத்து கொள்வது ...மானுக்கு கிடைத்தவற்றை விட உங்களுக்கு உங்களுக்கு தானே நான் முழு உரிமை ."என்றாள் நித்திலா அவன் மார்பினில் தலை சாய்த்து .

அந்த அமைதி ,சுகம் அணைப்பு காலம் முழுதும் கிடைக்க கூடாதா என்று இருவரின் மனமும் எண்ணாமல் இல்லை .

கண் விழித்த நொடி முதலாய் அவன் மனதை போட்டு அரித்து எடுத்து கொண்டு இருந்த கேள்வியை அந்த கணம் கேட்டான் ஆதித்யன் .

"என்ன காரியம் செய்து விட்டாய் தேவி ....புவனம் அறிய உன் கரம் பற்ற பற்றி ,இவள் என்னுடையவள் என்று அனைவரும் அறிய உன்னை இந்த தரணிக்கே ராணி ஆக்கிய பின் முழுதாய் உன்னுடன் கலக்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன் ...ஆனால் என்னை காக்க இன்று நீ உன்னையே எனக்கு கொடுத்தது ......."என்று கலங்கிய ஆதித்யனின் இதழை கைகளால் மூடினாள் நித்திலா .

"அன்பரே!என்னை அடைந்தது என் துணைவர் தான் ....என் பதி என்னில் கலந்தது எப்படி தவறாகும்?என் தலைவருக்கு தான் என்னை கொடுத்தேன் ..."என்றவள் தன் இடை கச்சையில் மறைத்து இருந்த குறுவாள் ஒன்றை எடுத்து அவன் முன் நீட்ட அதை உற்று பார்த்தவன் கண்கள் வியப்பில் விரிந்தன .

"இது என் குறுவாள் ....ஆயிற்றே ....இது எப்படி தேவி உன்னிடம் ?"என்றான் திகைப்புடன் .

"அன்பரே இன்னும் என்னை உங்களுக்கு நினைவிற்கு வரவில்லையா ....இந்த குறுவாள் கொண்டு தானே தாங்கள் என் உயிரை சில வருடங்கள் முன் காத்தது ?"என்றாள் நித்திலா .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"நான் உன்னை காப்பாற்றினேனா........."என்றான் ஆதித்யன் குழப்பத்துடன் .

"ஹ்ம்ம் நீங்கள் தான் என்னை காத்தது ...நான் அப்பொழுது குருமாக்கள் (சிறு பெண் ).நீங்கள் என் தந்தையிடம் தனுர் விதை (வில் வித்தை )பயில வந்தீர்கள் .அப்பொழுது தான் ஒருநாள் நீங்கள் காட்டில் வேட்டை ஆட வந்து இருந்தீர்கள் ..உங்களை தொடர்ந்து ,நீங்களே அறியாமல் பின்னே வந்த நான் குள்ளநரி கூட்டத்திடம் மாட்டி கொண்டேன் ...பனிரெண்டு நரிகள் ...அப்பா இப்போ நினைத்தாலும் அவற்றின் கோரை பற்கள் நடுங்க வைக்கின்றன ...நீங்கள் தான் அவற்றை அம்பால் அடித்து கொன்றீர் ...இனி இந்த காட்டிற்குள் வந்தால் என்னை காத்து கொள்ள என்று உங்கள் குறுவாள்ளினையும் கொடுத்து என் மனை (வீடு )வரை என் கை பிடித்து அழைத்து வந்தீர்கள் ...எப்படி பிற்காலத்தில் மக்களுக்கு உதவ போகிறேன் என்று எல்லாம் பேசி கொண்டே வந்தீர்கள் ...உங்களின் ஒவ்வொரு வார்த்தையும் (தன் இதயத்தையும் ,மூளையும் சுட்டி காட்டி )இங்கே பதித்து வைத்து இருக்கிறேன் அன்பே ...அதன் பிறகு இந்த குறுவாளை நான் என்றுமே பிரிந்தது இல்லை ...காலங்கள் பல சென்றன ...நீங்கள் என்னை மறந்து விட்டிர்கள் ....ஆனால் என் தந்தையுடன் உங்களை அடிக்கடி யாரும் அறியாமல் கண்டு ரசிப்பேன் ...கடந்த நான்கு வருடமாய் என் தந்தை உங்கள் விருப்பப்படி கச்சியில் பொன் மாளிகை நிர்மாணிக்க ஆரம்பித்த பிறகு உங்களை தினமும் மிக அருகில் கண்டு ,ரசித்து ,உங்களுக்கு என் மனதை காணிக்கையாக்கி கொண்டு இருந்தேன் ...இந்த வாள் நீங்களாக கருதி என்றோ சத்ரிய முறைப்படி மாலையிட்டு உங்கள் மனையாட்டியாக (மனைவி )தான் வாழ்ந்து வருகிறேன் ...உங்கள் சரி பாதி நான் ..என் பதி தாங்கள் ...என்னை நீங்கள் ஏற்றது குறித்து இந்த வருத்தம் ஏன் அன்பே ...."என்றவள் அவன் மார்பினில் சாய அவளை சுற்றி வளைத்தது ஆதித்யன் கரங்கள் .

""தேவி !...."அவள் பேச்சை கேட்டு நெக்குருகி நின்றான் அந்த காவலன் .

"சொல்லுங்கள் அன்பரே ..."என்றாள் அவள் அவன் மார்புடன் உரையாடியவாறு .

"என் என் சரிபாதியாய் இருந்து கொண்டே தான் என்னை தவிக்க விட்டாயா இத்தனை நாள் ?"என்றான் ஆதித்யன் .

"என் துணைவருக்கு அவர் துணையை கூட இனம் காண முடியவில்லை என்றால் அதற்கு நான் என்ன செய்வது ..."என்றாள் அவள் .

"இனம் கண்டு கொண்டேன் தேவி ...உனக்கு அதை புரிய வைக்கட்டுமா ..."என்ற இளவரசனின் பேச்சைக்கேட்டு செங்க்கொழுந்தாகி போனாள் அவன் மனைவி .

அவள் கரம் பிடித்து அழைத்து சென்றவன் ஆற்றங்கரை அருகே இருந்த அந்த மலை குடிகளின் குலதெய்வமான காளி தேவியின் கழுத்து மாலை எடுத்து அவள் கழுத்தினில் அணிவித்து ,அந்த குடிகளின் திருமண முறைப்படி அங்கு இருந்த கருமை பாசி மணி ஒன்றை நித்திலாவின் கழுத்தில் சூட்டினான் . தன் கையில் இருந்த ராஜஇலச்சசினை மோதிரத்தையும் அவள் விரலில் அணிவித்து ,முப்பது முக்கோடி தேவர்கள் , சப்த ரிஷிகள் , பஞ்ச பூதங்கள் ,இயற்கை அன்னை ,அந்த மலை குடிகளின் காவல் தெய்வம் சாட்சியாய் நித்திலவல்லியை தன் சரிபாதியாய் ,சகதர்மினியாய் ,மணவாட்டியாய் ஏற்று கொண்டான் தஞ்சையின் வருங்கால அரசன் .

அவன் மார்பில் தஞ்சம் புகுந்தாள் நித்திலா .கண்கள் கண்ணீரை சொரிய அவள் முகத்தை நிமிர்த்திய ஆதித்யன் அவள் கண்களின் மேல் முத்தமிட்டு ,"இந்த நித்திலம் இந்த சோழனுக்கு தான் இனி எப்பவுமே சொந்தம் ..இந்த கண்கள் காதலை மட்டுமே இனி சிந்த வேண்டும் ...கண்ணீரை அல்ல ..."என்றவன் அவள் இதழோடு இணைய முயல அவனை தள்ளி விட்டு ,கலகல வென சிரித்து கொண்டே பூஞ்சோலைக்குள் மறைந்தாள் நித்திலா .

"தேவி !..."என்று அவளை அழைத்து கொண்டு அந்த சோலைக்குள் புகுந்தான் ஆதித்யன் .

வானத்தை ஆளும் இந்திரனின் தோட்டத்திற்கு கற்பக சோலை என்று பெயராம் ..இந்த மலைக்குடிகளின் தோட்டம் அந்த இரவில் ,நில ஒளியில் அந்த கற்பக சோலைக்கே சவால் விடும் வண்ணம் தேவலோகமாய் ஜொலித்து கொண்டு இருந்தது .

பூக்கள் காற்றினில் தங்கள் மகரந்தத்தை பரப்ப அதன் மனம் ஆயிரம் வாசனை திரவியங்கள் வந்தாலும் இயற்கையின் முன் ஒன்றுமே இல்லை என்பதை உணர்த்தி கொண்டு இருந்தது .பூமி என்பதே தெரியாத வண்ணம் உதிர்ந்த பூக்கள் மலர்படுக்கையினை உருவாக்கி இருந்தது .இதன் மென்மைக்கு ஈடாகுமா அரண்மனை மஞ்சம் .

இந்த மாயலோகத்தில் மதனன் (மன்மதன் )அம்பு பட்டு இரு காதல் கொண்டு விட்ட உள்ளங்கள் ,சத்ரிய முறைப்படி மணந்து விட்ட சரி பாதிகள் அடுத்த அடியை எடுத்து வைக்க ஒன்றை ஒன்று துரத்தி கொண்டு இருந்தன .காதலில் துரத்துவதும் ,துரத்தப்பட்டுவதும் சுகம் தானே .அவள் அகப்படவேண்டும் என்றே ஓடி கொண்டு இருந்தாள்...அவன் அவளை ஓட விட்டு துரத்தி கொண்டு இருந்தான் .

அவளை மீண்டும் தன் கைசிறைக்கு கொண்டு வந்தான் ஆதித்யன் .அந்த இன்ப சிறையில் விரும்பியே மாட்டி கொண்டாள் அவள் .அவன் தந்த தண்டனைகள் என்ற முத்தத்தை வாங்கி கொண்டு ,திரும்பி அவனுக்கே கொடுத்தும் கொண்டு இருந்த அந்த புது வகை சிறை அது .

காதல் கொண்ட தலைவனும் ,தலைவியும் போரிடும் மோக களம் .தலைவி தன்னை தோற்று தலைவனை வெல்வதும் ,தலைவன் அவளை வென்று தன்னை தோற்கும் புதுவித யுத்தம் .

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.

விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு. காமத்தில் காதலும் கலக்கும் பொது மட்டுமே கிடைக்கும் நிறைவூ அது .முழு சரணாகதி .அங்கு காதலும் இருந்தது ,இன்பத்து பாலும் ஊற்றெடுத்து கொண்டு இருந்தது .

ஐயன் திருவள்ளுவரின் இன்பத்து பாலின் விளக்கத்தினை இளவரசன் உணர்ந்து கொண்டு இருந்தான் .அது புது விதமான தீ ,எரிக்காமல் எரித்து குளிர்விக்காமல் குளிர வைத்து இரு உயிர்களை இணைக்கும் மாயம் .

நாடி நரம்பு எங்கும் ஆயிரம் மின்னல்கள் பயணிக்க ,அறிவூ செயல் படும் திறனையே மறந்து அண்ட சராசரங்களை,பால் வெளிகளை நோக்கி பயணிக்க வைக்கும் விந்தை .

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

முறிந்து விடும் அளவிற்கு இளகுவான உடல், மென்மையான முத்தம், சிறு சப்தமுடன் சினுங்கல், என்மிது கொள்ளும் ஆர்வம், அவளது வாசனை, வேல் போன்ற கண், மூங்கில் போன்ற தோள் என குரல் கூறும் காதலியின் சிறப்பை அங்கு உணர்ந்து கொண்டு இருந்தான் ஆதித்யன் .

'விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த இந்த பூஞ்சோலையின் அங்கங்கள் ஒவ்வொன்றும் இன்பம் வழங்குகின்றன.இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்.'என்ற நினைவில் அந்த அமிழ்த்தினை அள்ளி அள்ளி பருகி பருகி கொண்டு இருந்தான் அந்த காதலன் .திகட்டாத அமிழ்தம் .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன் அங்கு பூரணத்தை ஏற்படுத்தி கொண்டு இருந்தது .மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் போல் இருக்கும் என்று கவிஞ்சர்கள் கூறியது எத்தனை உண்மை .


காதலில் திளைத்து ,மூழ்கி முத்து எடுத்து கொண்டு இருந்தன இளம் நெஞ்சங்கள் .வாரங்கள் நொடிகளாய் கரைய இரவூ ,பகல் எல்லாம் அந்த மாயசுழலில் இருந்து இருவரும் நீங்கவே இல்லை .

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது.

கள்ளத்தனமான அந்தக் கடைக்கண் பார்வை, காம இன்பத்தின் பாதியளவைக் காட்டிலும் பெரிது!அவள் ஒரு பார்வை ,சிறு புன்னகை ,நாணம் போதுமானதாய் இருந்தது அந்த ஜோடி புறாக்கள் தங்கள் இணையை தேட .

ஒரு வாரம் கடந்து இருந்தது .அந்த கானகத்தில் ,சொர்க்கத்தை உருவாக்கி ,அதில் மூழ்கி முத்தெடுத்து அப்பொழுது தான் கண் விழித்து இருந்தான் ஆதித்யன் .அவன் கை வளைவில் அவன் மார்பினை பஞ்சணையாக்கி களைத்து உறங்கி கொண்டு இருந்தாள் அவன் சகி .

ஒரு விரல் கொண்டு அந்த செம்பவள இதழ்களை பிடித்து சுவைக்க அவன் விரல்கள் முயல ,வாயில் கதவூ பெருத்த சப்தத்துடன் தட்ட பட்டது .

"இளவரசே !....இளவரசே ....."என்ற அழகன் குரல் வெகு பதட்டத்துடன் கேட்க ,ஆதித்யன் துள்ளி எழுந்தான் .அந்த குரல் கேட்டு நித்திலவல்லியும் பதறி எழுந்து ஆடைகளை புனைந்து கொண்டாள் .

"என்ன அழகா !...எதற்கு இந்த அளவூ பதட்டம் உன் குரலில் ?"என்றான் ஆதித்யன் குடிலின் வாயில் கதவை திறந்து .

"இளவரசே !....மன்னிக்கவும் .....தலைநகரில் இருந்து அரசர் தகவல் அனுப்பி உள்ளார் ..சூழ்நிலை ஆபத்து .வரும் எந்த தகவலும் நல்லதாய் இல்லை இளவரசே ."என்றான் அழகன் .

"என்ன நடந்தது சொல் ..."ஆதித்யனின் குரல் கம்பீரத்துடன் ஒலித்தது அந்த காலை வேளையில் .

"இளவரசே !...அனுராதபுரம் சாம்ராஜ்யத்துடன் (ஸ்ரீலங்கா )போரிட சென்று இருந்த இளவரசர்,உங்கள் இளவல் அருள்மொழி வர்மரின் மீது தாக்குதல் நடந்து உள்ளது ....அவர் தங்கி இருந்த அரண்மனையும் தீக்கு இரையாக்க பட்டு உள்ளது ....இளவரசரும் அவர் நண்பருமான வந்தியத்தேவர் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தப்பி இருக்கிறார்கள் .நமது குலதெய்வம் நிசும்பசூதனி தேவியின் விக்ரஹம் அரண்மனையில் இருந்து காணாமல் போய் இருக்கிறது .அரசரின் மீதும் தாக்குதல் நடத்த பட்டு இருக்கிறது .மும்முனை தாக்குதல் இளவரசே ...எல்லாம் மறைவில் இருந்து செய்ய பட்டு இருக்கும் சூழ்ச்சி வேலை .....தாங்கள் உடனே கச்சியம்பதிக்கு செல்லும் படி அரச ஆணை ....."என்றான் அழகன் .

அதிர்ந்து நின்றான் ஆதித்யன் .தன் நாட்டில் இப்படி செய்ய துணிந்தவர் யார் .ஒரு புறம் அரசர் மீது தாக்குதல் ,இன்னொரு புறம் இளவல் கொல்ல முயற்சி .இன்னொரு புறம் குல தெய்வம் களவாட பட்டு இருக்கிறது ...இது இத்துடன் முடிய போவதில்லை என்று மட்டும் ஆதித்யனுக்கு விளங்கியது .

"ஹ்ம்ம் ....பயணத்திற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் ...."என்றவன் யாரிடமும் அதன் பிறகு பேசவில்லை .அடுத்த சில மணி துளிகளில் சோழ படையின் அந்த சிறு பிரிவூ முன் செல்ல ,நடுவே ஆதித்யன் ,நித்திலவல்லி ,அழகன் செல்ல ,பின்னால் ஒரு காவல் படை பாதுகாப்பாய் வந்தது .

(கல்கி அய்யா எழுதிய பொன்னியின் செல்வன் படி நந்தினி ,மணிமேகலை ,பழுவேட்டயர் போன்றோர் இருந்ததற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை .ஆதித்யன் எங்கு ,எதற்காக கொல்லபட்டான் என்பதும் 1000 ஆண்டுகளுக்கு மேலாய் விடுவிக்க முடியாத புதிரே ..அடுத்த சோழ சாம்ராஜ்ய அரசன் யார் என்ற வாரிசு அரசியல் கொலை என்றும் ,பாண்டிய மன்னன் வீரபாண்டியனை கொன்றதற்க்கான பழிவாங்கல் என்றும் சொல்ல படுகிறது . அந்த கதையில் வருவது பொல் ஆதித்யன் கடம்பூர் அரண்மனையில் தான் கொல்ல பட்டான் என்பதற்கான சரித்திர சான்றுகள் கிடைக்கவில்லை .அதனால் எல்லாமே கச்சியம்பதியில் சில நிகழ்வுகள் நடப்பதாக எழுதி இருக்கிறேன் . )

அடுத்த சில ஜாம பயணங்களில் கச்சியம்பதியை அடைந்து இருந்தான் ஆதித்யன் .இளவரசனின் விஜயத்தின் காரணமாய் விழாக்கோலம் பூண்டது மக்களின் வரவேற்பை ஏற்று கொண்டவன் அரண்மனைக்கு செல்லாமல் தேவநாராயனாரின் அறிவுரை கேட்க விரைந்தான் .சில பல காரணங்களுக்காக அவர் அரசியலை துறந்து இருந்தார் .ஆனால் நாடு இருக்கும் நிலையில் அவர் அறிவுரை அவனுக்கு தேவை பட்டது .

வேகவதி அற்றன்கரையோரம் அந்த புரவிகள் பறந்து செல்ல சற்று தொலைவில் விண்ணை தொடும் உயரத்தில் நிமிர்ந்து நின்றது ஆதித்யனின் கனவுகளில் ஒன்றான தங்க அரண்மனை .அங்கு ஆயிரக்கண உழைப்பாளிகள் அந்த தங்க அரண்மனையை நிர்மாணித்து கொண்டு இருந்தனர் .எங்கும் உளிகளின் சப்தம் .

சிறு குன்றின் மேல் இருந்து அவற்றை கண்காணித்து கொண்டு இருந்தார் தேவநாராயணர் .வயது நிச்சயம் ஐம்பது இருக்கலாம் .ஆனால் கம்பீரம் மிஞ்சி இருந்தது .கை கட்டி பணிவுடன் தன் முன்னால் நின்று கொண்டு இருந்த நபரை பவ்யத்துடன் பார்த்து கொண்டு இருந்தார் .

அவரின் முன் காவி உடையில் இருந்தார் ஒருவர் .முக அமைப்பு நிச்சயம் 2019 ஆம் ஆண்டு கச்சியம்பதி கோயிலில் ,நள்ளிரவில் ,பூட்டிய கோயிலுக்குள் பூஜை செய்து கொண்டு இருந்தவரை போன்றே இருந்தது .


(இருவரும் ஒரே நபரா ?)

தேன் மழை பொழியும் ...
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
natpoos---உங்க ரெவியூ தெரியாம ,ரியாக்ஷன் புரியாம மீ இன் குழப்பம் ...சோ இது தொடரலாமா இல்லை,இல்லை மூட்டை கட்டி பரண் மேல் போடலாமா என்று சொல்லிடுங்க பா ....பிரியாணி போடறேன் என்று ஏதோ கிண்டி இருக்கேன் ....அது தயிர் சாதம் என்று கூட சொல்ல முடியாது ....சோ கட்டை எடுத்து அடிக்கமா விட்ருங்க ..
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
குழப்பம் வேண்டாம் honey டியர் continue பண்ணுங்க.... பரண் மேல தூக்கி போட்ரதை இங்கே போட்ருங்க டியர்..:p:D பிரியாணிய விட தயிர்சாதம் தான் semma taste & நிறைய சாப்பிட முடியும்:LOL::LOL: ... dailyum நீங்க தயிர்சாதம் குடுக்கலாம் ஹிஹிஹி..... nice epi (y)(y):love::love: தமிழ் நடை நல்லா இருக்கு .... கதையோட சென்டர் பாயிண்ட்ல கொண்டு வந்து நிறுத்திட்டு கேக்குற கேள்விய பாரு:rolleyes::rolleyes::rolleyes: இதுக்கே கட்டைய தூக்கலாம் (just fun no kobam)
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
apo it
குழப்பம் வேண்டாம் honey டியர் continue பண்ணுங்க.... பரண் மேல தூக்கி போட்ரதை இங்கே போட்ருங்க டியர்..:p:D பிரியாணிய விட தயிர்சாதம் தான் semma taste & நிறைய சாப்பிட முடியும்:LOL::LOL: ... dailyum நீங்க தயிர்சாதம் குடுக்கலாம் ஹிஹிஹி..... nice epi (y)(y):love::love: தமிழ் நடை நல்லா இருக்கு .... கதையோட சென்டர் பாயிண்ட்ல கொண்டு வந்து நிறுத்திட்டு கேக்குற கேள்விய பாரு:rolleyes::rolleyes::rolleyes: இதுக்கே கட்டைய தூக்கலாம் (just fun no kobam)
apo koduthathu briyani pakkam kooda illaiyaa.....curd rice nu confirm
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top