• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் ஐந்து

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
காதல் ,காமம் என்ற பிரளயம் மதனன் (மன்மதன் )இருவருக்குள்ளும் ஏற்படுத்தி சல்லியக்காரணி (மருந்து )ஒருவருக்கு ஒருவர் மட்டுமே .புரவிகள் எழும்பி குதிக்க ,ஆதித்யனின் கரம் இடையில் உரச ,அதன் வீரியம் தாங்க முடியாதவளாய் புரவியில் இருந்து சரிந்த நித்திலாவல்லியை ,"தேவி !"என்று பதறி அழைத்து ஒற்றை கையால் புரவியில் இருந்து அவளை தூக்கி தன் புரவியில் தனக்கு முன்னே இருத்தி கொண்டான்

அவள் கரங்கள் அவன் தோளினில் பூஞ்ச்சரம் கொழுகொம்பை பற்றுவது போல் பிடித்து கொள்ள ,அவன் கரங்கள் அவள் வெற்றிடையில் பதிந்தது .

'இருந்தாலும் நாயகருக்கு கள்ளத்தனம் அதிகம் தான் ......மற்றவர்களுக்கு புரவி பயிற்சி அளிக்கும் நான் தான் புரவியில் இருந்து கீழே சரிய போகிறேனாம் ...கள்ளர் ..... இது தான் சமயம் என்று இவ்வளவூ நெருங்கி விட்டாரே ...கள்ளர் ...அதை தானே நானும் எதிர் பார்த்தேன் ....ஆயுகம் முழுதும் இப்படியே தலைவனின் கைவளைவில் இப்படியே சென்று கொண்டு இருந்தால் அதை விட வேறு பேரு என்ன வேண்டும் ?'என்றது நித்திலாவல்லியின் மனம் .-

'ஆஹா ...என்னவொரு மென்மை ...நறவம் (அனிச்சம் மலர் )தோற்று விடும் போல் இருக்கிறதே ...

கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமம் செப்பாது, கண்டது மொழிமோ,
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்,
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?

பூக்களிலே இருக்கின்ற பூந்தாதினை ஆராய்ந்து உண்ணும் வாழ்க்கையைப் பெற்ற அழகிய சிறகினையுடைய வண்டே! நான் விரும்பியதைக் கூறாமல், நீ உண்மையாகவே அறிந்து கண்டதைக் கூறுவாயாக. என்னோடு பழகிய நட்பினைக் கொண்டவள் என் தலைவி. மயில் போன்ற மென்மையும் நெருக்கமான பற்களையும் கொண்ட அவளுடைய கூந்தலிலே வீசுகின்ற நறுமணத்தைப் போல, நீ அறிந்த மலர்களிலே நறுமணமுடைய மலர்களும் உள்ளனவா?

என்று நித்திலவல்லியின் கூந்தல் மனம் நாசியை துளைக்க ,மனம் மீண்டும் ஆராய்ச்சியில் இறங்கியது அவள் பால் சாய்ந்து விட்ட காதல் கொண்ட அவன் மனம் ...

"இளவரசரே !....தாங்கள் என்ன செய்து கொண்டு இருப்பது என்ன ?'என்றாள் நித்திலவல்லி .

"புரவியை செலுத்தி கொண்டு இருக்கிறேன் ...."என்றான் ஆதித்யன் அவள் கண்களோடு தன் கண்களை உறவாட விட்டு .

"அதை பற்றி நான் இயம்பவில்லை ...உங்கள் கரம் செய்யும் செயலை சொல்கிறேன் ..."என்றாள் அவள் நகைப்புடன் .

"தேவி ...புரவியில் இருந்து நீ கீழே சரிந்து விட கூடாதே என்ற உயர்ந்த எண்ணத்தில் உன்னை பிடித்து இருக்கிறேன் ...."என்றான் அந்த கள்ளன்

நாணம் மேலோங்க அவன் கை வளைவூ தந்த ஏமம் (இன்பம் )அவளை நாண வைத்தது .

"தேவி !நான் கேட்ட வினாவிற்கு நீ இன்னும் விடை அளிக்கவில்லையே ....பாண்டிய நாட்டினையும் இந்த சோழன் வென்று விட்டான் ...கொற்கை முத்துக்களும் இந்த சோழனுக்கே உரிமை பட்டவை எனும் போது இந்த முத்து ,இந்த நித்திலம் எனக்கு உரிமை பட்டவை தானே .."என்றான் இளவரசன் குணிந்து அவளை நெருங்கி

"இது நீங்கள் வெல்ல பாண்டிய நாட்டு முத்து இல்லை என்று முன்னரே பகர்ந்து விட்டேன் ....."என்றாள் தன் மனம் உடையவனின் பேச்சில் தடுமாறுவதை தடுக்கும் பொருட்டு .

நினைக்க மட்டுமே அவளால் முடிந்தது ...நில் என்றால் மனம் நின்றா விடும் ...அதுவும் அவனை மட்டுமே தலைவனாய் கொண்டு விட்ட மனது .

"இந்த நித்திலத்தை வெல்ல நினைக்கவில்லை தேவி ....என் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைக்க உரிமை கோருகிறேன் ....இது சோழ முத்து என்பதால் இன்னும் மதர்ப்பில் (களிப்பில் )தான் இருக்கிறேன் ..இரண்டரை நாழிகை (ஒரு மணி நேரம் )தான் நீயும் நானும் சந்தித்து ஆகிறது என்றால் வியக்காமல் இருக்க முடியவில்லை ....பல உம்மை (முன் ஜென்மம் )நெருங்கி பழகியது போல் ,அதன் தொடர்பாய் தான் தோன்றுகிறது உன் மேல் நான் கொண்டு இருக்கும் இந்த ஆவல் (காதல் )....உன்னை கண்ட அந்த நொடியே நான் உன்னவன் ஆகி விட்டேன் தேவி "என்றான் இளவரசன் மிகவும் நெருங்கி அவளை தன் மேல் சாய்ந்தவாறு .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
முழுவதும் கொழுகொம்பை நாடிய கொடியாய் அவன் மேல் சாய்ந்து அமர்ந்த நித்திலவல்லி நீண்ட பெருமூச்சினை வெளியிட்டாள் .எத்தனை நாள் கனவு இது ...அவன் கை வளைவில் அவனுக்கு உடையவளாய் உரிமையுடன் சாயும் உரிமை எதிர் பார்த்து ...நினைவூ தெரிந்த நாளாய் அவனை கண்ணில் ,மனதில் ,உடலின் ஒவ்வொரு அணுவிலும் நிரப்பி கொண்டு தானே "அவனுடையவளாய் "வாழ்ந்து வருகிறாள் .இன்று அவனே அவள் இது நாள் வரை எதிர்பார்த்த உரிமை தர முன் வந்து விட்டான் .

அவன் மனதில் தான் ...அந்த வீரனின் மனதில் இந்த பெண்மை ...நினைவே தித்தித்தது .அதை உண்மையாக்க அவன் விழைவது .

"சோழ சக்ரவர்த்தியின் அந்தபுர ஆரணங்குகளில் (பெண்களில் )நானும் ஒருத்தியாய் இருக்க நான் விரும்பவில்லை இளவரசே ..."என்றாள் நித்திலவல்லி .

புரவி சேனத்தை (லகான் )இழுத்து நிறுத்திய ஆதித்யன் அவள் கன்னத்தை தன் கையால் பிடித்து முழுதும் தன் புறம் திருப்பி ,"தேவி !...உன்னை அந்தப்புர ஆபரணமாய் பத்தோடு பதினொன்றாக வைக்க முயல்வதாகவா என் அளி (அன்பை )நினைக்கிறாய் ?....ஒற்றை பார்வையில் என் உயிர் வரை உன்னிடம் சரண்புகல் அடைந்து விட்டேன் அன்பே ....நாளை இந்த தரணியை ஆளும் சக்ரவர்த்தியாக முடி சூட்ட பட்ட பின் ,என்னை ஆளும் பட்டத்துமகிஷி நீ என்று இந்த புவனம் (உலகம் )அறிய உன்னை கரம் பிடிக்க தான் போகிறேன் ...உன்னை அன்றி இன்னொரு பெண்ணை இனி மனதாலும் தீண்டேன் ...இது இந்த கச்சியம்பதி ஆளும் அந்த ஈசன் மீது ஆணை ...இனி வரும் மறுமைக்கும் (இனி வரும் பிறவிகள் தோறும் )நீயே என் சரிபாதி ...இனி இந்த நித்திலவல்லி இல்லை என்றால் இந்த ஆதித்ய கரிகால சோழன் இல்லை என்று இனிமேல் புவனமே சொல்லட்டும் ...நம் காதல் யுகங்கள் தாண்டியும் வாழட்டும் ...."என்ற இளவரசனின் காதலை கேட்டு ,கண்கள் கண்ணீரை பொழிய ,அவன் மார்பில் சரண் புகுந்தாள் அங்கு குடி இருக்கும் அவன் தலைவி /வல்லவீ /அவன் சரிபாதி .

"துணைவரே !"என்ற அவள் குரல் அழுகையுடன் ஒலிக்க ,

"ஹ்ம்ம் இன்ப கண்ணீர் மட்டுமே பொழிய வேண்டிய தருணம் இது அன்பே ...இந்த சோழனின் காதல் பெற்றவள் இப்படியா அழுகையில் கரைவாய் ?"என்றவன் மென்மையாய் அவள் விலோசனம் (கண்கள் )மீது முத்தமிட்டான் .

அவள் வதனத்தை(முகத்தை ) இரு கையால் பிடித்து ,கண்களால் மனதிற்குள் நிறைத்து கொண்டான்.பார்க்க பார்க்க தெவிட்டவில்லை அந்த பூ முகம் .அடுத்து அவன் உதடுகள் கொடிரை (கன்ன கதுப்புகளை )ரசம் சுவைத்தன .அடுத்து அடுத்து அவன் முத்தத்தில் (உதடுகளில் )முத்தம் சேர்க்க இருவருக்குமே இந்த புவனம் மறந்து போனது .

தேன் சுவைக்கும் பிரசமாய் (வண்டாய் )அவன் .அவன் பருகும் மகரந்தமாய் (மலர் தேனாய் )அவள் .இருவரும் தீ கங்குகளாய் மாறி பற்றி எரிந்து ,அடுத்தவரின் அணைப்பில் குளிர்ந்து கொண்டு இருந்தனர் .காதல் என்னும் தீன்சுவை பனுவலின் அடுத்த கட்டம் நோக்கி அங்கு இரு மனம் பயணித்து கொண்டு இருந்தன .

அங்கு நடக்கும்காதலர்களின் தேடலை கண்டு வெட்கிய நிலா மேகம் என்னும் போர்வைக்குள் தன்னை ஒளித்து கொள்ள ,கொஞ்சமாய் தெரிந்த நிலஒளியும் காணாமல் போய் அந்த காதலர்களை சுற்றி காரிருள் சூழ்ந்தது .உதடுகள் ,கைகள் எல்லை மீறி கொண்டு இருந்தன .

முதலில் தன்னை மீட்டு கொண்டது ஆதித்யன் தான் .தன் மார்பின் மேல் கண்கள் காதல் என்னும் மயக்கத்தில் மூடி ,இதழ் வெளுத்து ,கண்கள் சிவந்து ,ஆடை நெகிழ்ந்து இருந்த பெண்ணவளை கண்டு அவன் உடலும் ,உள்ளமும் அவளை அங்கேயே ,அப்பொழுதே தனதாக்கி கொள்ள பேராவல் கொள்ள பேயாட்டம் ஆடி கொண்டு இருந்தது .

"தேவி ...."

"தேவி "

"ஹ்ம்ம் ..."என்ற மெல்லிய முனகல் மட்டுமே வெளிவந்தது .

"தேவி!....நீ என்னுடையவள் தான் ....அதில் எந்தவித மாற்றமும் இல்லை ...ஆனால் எல்லை மீறுவது உனக்கு நான் தரும் கவுரவம் கிடையாது ....உன்னை புவனம் அறிய கை பிடித்த பிறகு ,உன்னை மகாராணியை பிரகடனப்படுத்திய பிறகு உன்னை அடைவதே உனக்கும் ,எனக்கும் ,நம் அன்பிற்கும் பெருமை ....கடமை வேறு இருக்கிறது ..."என்றவனின் வார்த்தைகளில் மீண்டும் கண் கலங்க நின்றாள் அவன் சரி பாதி .

இதை விட அவள் பெண்மையை பெருமை படுத்தும் செயல் என்ன இருக்க முடியும் ?அவன் இளவரசன் தான் ...கந்தர்வமனம் என்பது பஞ்ச பூதங்களான நிலம் ,நீர் ,நெருப்பு ,காற்று ,ஆகாயம் ,இயற்கை ,கோடானகோடி தேவர்கள் ,நிலா ,நட்சத்திரம் சாட்சியாய் வைத்து அவளை ஏற்பதை யாரும் தடுக்க போவதில்லை .ஆனால் உலகத்தின் முன் அவளை கை பிடிக்க நினைக்கும் அவன் எண்ணம் முழுதாய் புரட்டி போட்டது .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
புரவியை விட்டு கீழ் இறங்கியவள் ,தன் ஆடைகளை சரி செய்து கொள்ள ,ஆதித்யனின் கண்கள் மீண்டும் கள்வெறி பூண்டது .

"அன்பே !..."அவன் குரல் மாறுபாட்டை கவனித்த அவள் ,"இந்த நித்திலம் இளவரசரின் ஏகபோக உரிமை தான் ....இப்பொழுது வீரபாண்டியனை வெல்லும் கடமை இருக்கிறது ....நமக்கு காலம் இருக்கிறது அன்பரே ...."என்றவள் தன் புரவியில் ஏறி அதை தட்டி விட அது பறந்தது .

புன்னகையுடன் ,மனநிறைவுடன் அவளை தொடர்ந்து சென்றான் இளவரசன் .இருவருமே அறியவில்லை அவர்களுக்கான காலம் வெகு குறைவூ என்று ....

நித்திலவல்லி வழி காட்ட ,மூவரும் வீரபாண்டியன் தங்கி இருந்த காட்டின் பகுதியை அடையும் பொழுது புலர்ந்தும் ,புலராத காலை பொழுது .பனி மூட்டம் வெகு அதிகமாய் இருக்க ,அது இவர்களின் மறைந்து வர உதவியாய் இருந்தது .புரவிகளை சற்று தொலைவில் நிறுத்தி விட்டு நடந்தே அங்கு வந்து இருந்தனர் .

முத்தழகன் உலா காவல் உலா செய்து கொண்டு இருந்த மூவரை தன் வாளுக்கு இரை ஆக்கினான் .வீரபாண்டியன் தங்கி இருந்த குடிலை சுற்றி ஒரு முறை வலம் வந்தவன் மீண்டும் ஆதித்யனும் ,நித்திலவல்லியும் இருந்த இடத்திற்கே வந்து சேர்ந்தான் .

"ஒரு முறை பார்த்து விட்டேன் ...வீரர்களின் எண்ணிக்கை பத்து இருக்கலாம் ...."என்றான் அவன் .

"இல்லை அண்ணலே ..உங்கள் எண்ணிக்கை தவறானது ...குறைந்தது முப்பதிற்கும் குறையாத வீரர்கள் அவனை காத்து கொண்டு இருக்கிறார்கள் ....மூன்று நாட்கள் தொடர்ந்து இங்கே தான் தங்கி இருந்தேன் ...வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகம் ..."என்றாள் நித்திலவல்லி .

"இளவரசே !....கச்சியம்பதிக்கு சென்று நம் வீரர்களை அழைத்து வருவோம் ...இது ஆபத்து ...முப்பதிற்கும் மேற்பட்டோரை ஒரே நேரத்தில் நம் இருவராலும் சமாளிக்க முடியும் என்று தோன்றவில்லை ..."என்றான் அழகன் .

"உன் கூற்று என்ன ஆயிற்று அழகா ?...தேவியிடம் ஒரே வீச்சில் பத்து தலைகள் உருளும் என்றாய் ..இப்பொழுது நீ பின்வாங்குவது இல்லாமல் என் வீரத்தையும் குறைத்து மதிப்பிட்டு பின் வாங்க சொல்கிறாய் ...?'என்றான் ஆதித்யன் புன்னகையுடன் .

"இளவரசே !...உங்கள் இந்த செயல்பாடு ஆரம்பம் முதலே எனக்கு பிடித்தம் இல்லாத ஒன்று ....காவல் படை இல்லாமல் இப்படி தாங்கள் வருவது உசிதம் இல்லை ....ஏற்கனவே நான் கேள்வி பட்ட சில விஷயங்கள் ,ஒற்றர் பகிர்ந்த விவரங்கள் மனதிற்கு ஏற்றதாய் இல்லை ....இந்த சமயத்தில் தாங்கள் இப்படி செய்வது ...."என்றான் அழகன் .

"என்ன கேள்வி பட்டாய் அழகா ?"என்றான் ஆதித்யன் .

"உங்களை கொல்ல பலர் முயல்வதாய் ..."என்றான் அழகன் வேதனையுடன் .

"என்னை கொல்ல போகிறார்களா ...எதற்கு ?"என்றான் ஆதித்யன் புன்னகையுடன் .

"நீங்கள் அரசராய் முடி ஏற்பது பலருக்கு விருப்பம் இல்லை ...இதில் பல குழுக்கள் ஈடு பட்டு இருக்கலாம் என்று தகவல் ..."என்றான் அழகன் .

"இதை ஏன் முன்னரே நீ சொல்லவில்லை ?"என்றான் ஆதித்யன் தன்னை கொல்ல பலர் சதி செய்வது தெரிந்த பின்னும்,அதிகமாய் புன்னகைத்து .

"இது உறுதி செய்ய படாத தகவல் தான் இளவரசே ..அதன் உண்மை நிலவரம் தெரிந்து ,அதன் படி ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் போது தான் என்னை தாங்கள் இந்த கானகத்திற்கு அழைத்து வந்தது ..."என்றான் அழகன் மன வேதனையுடன் .

"என்னை கொல்ல பலர் முயல போகிறார்கள் ...ஒற்றர்கள் அந்த தகவலை மேற்போக்காக உரைத்து இருக்கிறார்கள் ...யார் ,என்ன ,எப்பொழுது என்பது எல்லாம் தெரியாது ...இதற்காக இன்று நம் கண் முன்னே இருக்கும் இந்த அற்பபதரை கொல்லாமல் விட்டு விட்டு ,கச்சியில் இருந்து படை வரும் வரை காத்து இருக்க வேண்டும் ....அப்படி வந்ததும் அவர்கள் எல்லா வீரர்களையும் கொன்று ,அதில் சில வீரர்கள் உயிர் இழப்பார்கள் ...அவர்கள் தியாகத்தில் மேல் நின்று நான் தான் வைரியை (எதிரியை )கொன்றேன் என்று இந்த புவிக்கு உரைக்க வேண்டும் அது தானே ....நல்ல திட்டம் அழகா ....பலே பலே ..."என்றான் ஆதித்யன் வெகு நக்கலாக .

எதிரியான வீரபாண்டியனின் சிரத்தை (தலையை )கொய்ய வந்த வீரனான அவனிடத்தில் படை வரட்டும் என்பது நகைப்பிற்குரிய விஷயம் அல்லவா ?
"இளவரசே !....உங்கள் நலன் கருதி தான் இதை இயம்புகிறேன் ...உங்கள் வீரத்தை சேவூர் போர்க்களத்திலேயே இந்த தரணியே பார்த்து விட்டது ...உங்கள் ஆற்றல் ,வீரம் குறித்து தான் இனி பாடலாசியர்கள் கவிதை வடிக்க போகிறார்கள் ....வீரம் என்றால் அதற்கு இலக்கணம் எங்கள் இளவரசரான நீர் இல்லையென்றால் வேறு யார் ...ஆனால் இது தேவையற்ற செயல் ..."என்றான் அழகன் .

"இருவரும் உங்கள் தர்க்கத்தை சற்று நிறுத்துங்கள் ...அண்ணலே உங்களுக்கு இவர் நலன் முக்கியம் ...இவருக்கு இவர் கையால் வீரபாண்டியனின் தலை கொய்ய வேண்டும் அது தானே ...இருவரின் எண்ணமும் நிறைவேறும் ..."என்றாள் நித்திலவல்லி

"எப்படி தேவி!...ஏதாவது மாயமந்திரம் செய்ய போகிறாயா என்ன ?"என்றான் ஆதித்யன் ஒரு கண்ணை சிமிட்டி .
'இவருக்கு வேறு வேலையே இல்லை ...பகைவனுடன் போரிட போகும் போது தான் இவருக்கு என் மேல் அன்பு பெருகும் .'என்று மனதிற்குள் சொல்லி கொண்டவள் ,அவனை நோக்கி தன் கண்கள் என்னும் அம்பால் தாக்கி விட்டு ,உதட்டை குவித்து வினோத ஒலி எழுப்ப அந்த இருளில் இருளாக பத்து பேர் அவர்களை நோக்கி வந்து மண்டியிட்டு ஆதித்யனுக்கு தங்கள் வணக்கத்தை தெரிவித்தனர் .

"தேவி !யார் இவர்கள் ?"என்றான் ஆதித்யன் -வந்தவர்களின் திடகாத்திர சாரீரம் ,அவர்கள் சத்தம் எழுப்பாமல் வந்த முறை ,அவர்களிடம் இருந்த ஆயுதங்களை கண்டு .

'இவர்கள் என்ன பேய்க்கூட்டமா ...இல்லை நிழல் மனிதர்களா ....இப்படி கூட சப்தம் துளியும் எழுப்பாமல் நடக்க முடியுமா என்ன ?'என்ற நினைவை களைய முடியவில்லை ஆதித்யனால் .

"இவர்கள் என் தாதையின் மாணாக்கள் ...உங்களை அரசராய் முடி சூட்டுவது பற்றி சில ஆண்டுகளுக்கு முன்னரே அரசர் என் தாதையிடம் கலந்தாலோசித்து இருக்கிறார் ...நீங்கள் முடிஅரசாய் வருவது பலருக்கு பிடிக்கவில்லை என்பது புவி அறிந்த தகவல் தானே ...அதான் இத்தனை வருடமாய் இந்த காவல் படை உங்களின் பாதுகாப்பிற்காக என் தந்தையார் தயார் செய்து வந்தார் ...நீங்கள் வீரபாண்டியன் தலை கொய்ய எப்படியும் படை இல்லாமல் தான் செல்வீர்கள் என்று அவர் கணித்தே இருந்தார் ...வழிகாட்ட என்னையும் ,உங்களை காக்க இவர்களையும் என் தந்தை அனுப்பி வைத்தார் ...காலம் விரயமாகிறது ...தாக்குதலை தொடங்குங்கள் ..."என்றாள் நித்திலவல்லி .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அடுத்த சில நொடிகளில் அந்த இடம் ரணகளமானது .ஆதித்யன் பக்கம் எதிர்பாராமல் தாக்குதலின் பலன் இருந்தது .வீரபாண்டியன் காவல் படையில் பலர் அப்பொழுது தான் கூச்சல் கேட்டு விழித்து இருக்க ,அவர்கள் ஒரு நிலைக்கு வருவதற்குள் தாக்க பட்டனர் .ஆதித்யன் வீரர்களுக்கு அவர்களை வெல்வது மிக சுலபமாய் இருந்தது என்றால் மிகையல்ல .

தேவநாராயணரின் கற்பிப்பு என்றால் சாதாரணமானதா என்ன .ஒரே வீச்சில் பத்து தலை பறப்பது ,எகிறி குதித்தவாறே வாள் சுழற்றுவது ,மணிக்கட்டு சக்கரம் போல் சுழன்று கொண்டே இருப்பது போன்ற பல வித்தைகளை உருவாக்கி கற்பித்தவர் ஆயிற்றே ...

ஆதித்யன் ஒரு புறம் ருத்ர தாண்டவம் ஆடினான் என்றால் ,இன்னொரு புறம் நித்திலவல்லி தேவநாராயணரின் மகள் என்பதை நிரூபித்து கொண்டு இருந்தாள் .புலிக்கு பிறந்தது தானும் பெண் புலி தான் என்பதை நிரூபித்து கொண்டு இருந்தது .

ஒரு கணம் ஆதித்யன் கூட அவள் லாவகத்தை கண்டு மலைத்து நின்று விட்டான் என்றால் மிகையல்ல .போர் சாஸ்திரம் நாட்டிய சாஸ்திரத்துடன் இணைந்தது போல் இருந்தது நித்திலவல்லியின் போர் முறை .நாணலாக வளைந்து ,சூறாவளியாக சுழன்று ,எரிமலையாக சீறி அவள் போரிட்ட முறை அவளை தவிர வேறு யார் ராணியாய் வரவும் தகுதி இல்லை என்றே உணர்த்தியது ஆதித்யனுக்கு .

ஆதித்யன் முன் வந்தவர்கள் எல்லாம் அவரவர் பாவ ,கர்ம வினை படி சொர்க்கத்திற்கோ ,நரகத்திற்கோ அவன் வாள் முனையால் சென்றனர் .எதிரிகளின் குருதியால் தன் மன புழுக்கத்தை ,கோபத்தை ஆற்றி கொண்டு இருந்தான் தஞ்சையின் தலைமகன் .

அவன் சென்ற வழி எங்கும் ஆழிப்பேரலை தாக்கிய இடம் போல் கொத்து கொத்தாய் எதிரிகள் வீழ்ந்து இருந்தனர் .அவன் முன் வந்து நின்றான் வீரபாண்டியன் .

"வா ஆதித்யா ...வா ..உன்னை கொல்ல தான் காத்து இருக்கிறேன் ..."என்றது அந்த நரி .

"என்னை கொல்ல இனி ஒருவன் பிறந்து தான் வர வேண்டும் வீர பாண்டியா ..."என்றான் ஆதித்யயன் .

"வந்து விட்டார்கள் ஆதித்யா ....உன்னை சுற்றியே இருக்கிறார்கள் ....பல வருடமாய் உன்னை பலி வாங்க பலர் காத்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதை நீ அறிவாயா ...இந்த முடி உனக்கா சேர வேண்டியது ..யோசித்து சொல் ....சேவூர் செருக்களத்திலேயே உன்னை கொல்ல தான் முயன்றார்கள் பல முறை ...தப்பி விட்டாய் ஆதித்யா .....எதற்காக உன் நாட்டின் எல்லைகளை சூறையாடினோம் என்று நினைக்கிறாய் ?எதற்காக உங்கள் குலதெய்வத்தை கடத்த முயன்றோம் என்று நினைக்கிறாய் ...இது எல்லாம் யார் போட்டு கொடுத்த திட்டம் என்று அறிவாயா நீ ?....உன்னை சுற்றி சூழ்ச்சி வலை விரித்து விட்டோம் ஆதித்யா ...இந்த தரணி ஆள போவது நீ இல்லை ....இந்த பரந்து விரிந்த சோழ சாம்ராஜ்யம் உனது இல்லை ..."என்றான் வீரபாண்டியன் .

தேன் மழை பொழியும் ....
 




Attachments

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,979
Location
madurai
அருமை honey dear ???? நித்திலாவல்லி!????? lovely girl ❤???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top