• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் ஒன்பது

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
தங்க மாளிகையின் வெளிப்புறம் மழையும் ,வெள்ளமும் அதிகரித்து கொண்டு இருக்க ,ஆதித்யன் ,தேவ நாராயணர் ,நித்திலவல்லி ,முத்தழகன் நால்வரும் அந்த மாளிகையின் நிர்மாணிப்பின் பிரம்மாண்டத்தை பற்றி விவாதித்து கொண்டு ,ஒவ்வொரு இடமாய் உலா வந்து கொண்டு இருந்தனர் .

unnamed.png

"அயன்மீர் ...உங்கள் திறமைக்கு அளவே இல்லை ....கண் கோடி வேண்டும் இந்த அரண்மனையை காண ,வர்ணிக்க ஆயிரம் நாவன்ங்கள் (நாக்கு )இருந்தாலும் கூறுவது கடினமே ..."என்றான் ஆதித்யன் .

"இளவரசே !.இந்த எல்லா பெருமையும் நம் முன்னோர்களையே சேரும் ..."என்றார் தேவநாராயணர் .

"அது எங்கனம் ...விவரித்து இயம்பினால் நம் முன்னோர்களின் திறனை ,அறிவூகூர்மையை தெரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ....நமக்கு பின் வரும் சந்ததிகளும் பயன் பெரும் ."என்றான் ஆதித்யன் .

"இளவரசே !நம் முன்னோர்கள் நமக்கு விட்டு சென்ற எண்ணில் அடங்கா கலைகளுக்கு ஈடு ஈரேழு பதினான்கு உலகளிலும் காணமுடியாது .ஒரு மனையாகட்டும் ,ஒரு கந்தகோட்டம் ஆகட்டும் ,ஒரு ஊர் ,நகரம் எப்படி அமைய வேண்டும் என்பதில் மிக தெளிவாக இருந்து இருக்கிறார்கள் .நான்கு புறம் சுவர் இருந்து விட்டால் மட்டும் அது மனை ஆகி விடாது என்கிறது அதர்வ வேதம் .வசிஷ்ட மகரிஷி மூன்று அடுக்கு மனை ,1000 கம்பம் (தூண் /pillar )கொண்ட மனை தன்னை நிர்மாணித்து கொண்டதாகவும் அது" த்ரி தத்து சரணம் "(மூன்று அடுக்கு மாளிகை )என்று அழைக்க பட்டதாய் சொல்வார்கள் .கல்ப சாஸ்திரத்தின் விரிவுரையான சுல்வ சூத்திரம் ஒரு மனையின் அளவூ ,அகலம் ,நீளம் போன்றவற்றை சொல்கிறது .கந்த புராணம் ஒரு ஊர் எப்படி அமைக்க படவேண்டும் என்று அறிவுறுத்துகிறது .அதில் கூறப்பட்டு இருக்கும் தங்க மாளிகை ,மூன்று ரதங்களில் வடிவில் நிர்மாணித்த கல்வினையாளர்கள் பெயரினை உரைக்கிறது .கருட புராணம் மூன்று வகை வடிவமைப்புகளை பற்றி சொல்கிறது .மக்கள் ,அரசர் குலம் வாழும் மனை ,படை தங்கும் படைவீடு ,இறைவன் வாழும் ஆலயம் அமையும் முறை இருக்கிறது .அக்னி புராணத்தில் பதினாறு காண்டங்கள் (CHAPTERS )நகர நிர்மாணிப்பை பற்றி மட்டும் சொல்கிறது .மீதம் உள்ள பதிமூன்று காண்டங்கள் சிற்ப சாஸ்திரத்தை பற்றி கூறுகிறது .நாரத புராணம் குளம் ,கேணி ,ஆறு ,ஆலயம் பற்றியும் ,வாயு புராணம் மலை மேல் ஆலயங்கள் எவ்வாறு நிர்மாணிக்க வேண்டும் என்பதையும் ,மட்சயா புராணம் ,பவிஷய புராணம் ,பிருஹதா ஷமிதா,ஆகாம ,கமிக ஆகமா என்று ஆகமத்தில் மட்டும் பத்துக்கும் மேற்பட்டவை மனை ,கோட்டம் ,கந்தவராம் ,ஆலயம் நிர்மாணிப்பை பற்றி சொல்கிறது .இவை எல்லாம் எட்டுத்திக்கிலும் உள்ள தெய்வ அலைகளை மனையின் உள் செலுத்தும் வண்ணம் வழிமுறைகளை சொல்கிறது .இவை தவிர மேலும் எட்டு வகையான முன்னோர்களின் ஓலைச்சுவடி குறிப்புக்கள் கொண்டே எந்த ஒரு கல்வினையாளரும் எங்கள் நிர்மாணிப்பு தொழிலை செய்கிறோம் ."என்றார் தேவநாராயணர் .

"அவை என்ன தந்தையே ?"என்றாள் நித்திலவல்லி .
1.jpg

"சில்ப சாஸ்திரத்தின் வகையில் வருபவை -"மனசாரா ,மாயாமாதா சில்ப சாஸ்திரம் ,காஸ்யப முனிவரின் அம்சுமத்பேதா,விஸ்வகர்ம சில்ப சாஸ்திரம் ,அகஸ்திய முனிவர் சாஸ்திரம் ,சனத் குமார வாஸ்து சாஸ்திரம் ,மந்தன சாஸ்திரம் ,சம்கிரஹா" ..போன்றவை கற்ற பின்னே ஒரு நிலத்தின் புனிதம் ,அங்கு எவ்வகையான அலைகள் பரவி உள்ளன ,அதில் எவ்வகையான மனை ,கோட்டம் ,ஆலயம் ,எவ்விதமான பொருள் கொண்டு நிர்மாணிக்கலாம் ,எத்தனை மாடம் (balcony )சாளரம் (window ),கம்பம் (pillar /தூண் ),இருக்க வேண்டும் என்ற நியதி உள்ளது .அதனால் தான் இறை சந்நிதானத்திற்கு செல்லும் போது நம்மையும் அறியாமல் இறைவன் பால் ஈர்க்க படுகிறோம் ."என்றார் தேவநாராயணர் .

"'உங்கள் திறமை ,நீங்கள் கற்ற வித்தை இந்த சாதரூப கந்தகோட்டத்தின் நிர்மாணிப்பிலேயே தெரிகிறது குருவே ...உமது மாணாக்கனாய் இருப்பது எனக்கு பெருமையே ...இனி இந்த முன்னோர்களின் அறிவினை,மறைந்து உள்ள நம் அறிவு செல்வத்தை தரணி எங்கும் பரவும் வகை செய்வேன் ,.இவை எல்லாம் போற்றி பாதுகாக்க வேண்டிய கலை பொக்கிஷங்கள் .எங்குமே இல்லாத அறிவின் வெளிப்பாடு .மக்களை பிரித்து வைக்க மட்டுமே வேதங்கள் பயன்படுகின்றன என்று சொல்லும் அறிவிலிகளுக்கு உங்கள் விளக்கம் அறிவு கண்ணை திறக்கட்டும் .கல்லாதவரும் இதை எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் இவற்றை எழுத ஆணை பிறப்பிக்க போகிறேன் ."என்றான் ஆதித்யன் .

"வாழ்க இளவரசே ...வாழ்க உமது எண்ணம் ....வேதங்கள் சில்ப சாஸ்திரத்தையும் ,நிர்மாணிப்பையும் மட்டும் சொல்வது இல்லை .மருத்துவம் ,வானவியல் சாஸ்திரம் ,எண் கணிதம் ,சஸ்திர ,அஸ்திர வித்தைகள் ,ஒரு தரணியின் நிர்வாகம் ,அரசியல் ,ராஜதந்திரம் ,தவம் போன்றவற்றையும் சொல்கிறது .இவை எல்லாம் மீண்டும் மறுமலர்ச்சி பெற வேண்டும் ..காலத்திற்கு ஏற்றார் போல் எது தேவையோ அதை சாதக பட்சியின் அறிவுடன் ,தெளிவுடன் ஏற்று கொள்வதே கூர்மை...."என்றார் தேவநாராயணர் .

Vegavathi_river_at_salur_01.jpg


(தேவநாராயணர் கூறிய நூல்கள் எல்லாம் நம் முன்னோர்கள் விட்டு சென்ற புதையல்கள் ...இவற்றை படிக்கச் நேர்ந்தது மிக பெரும் பெருமையே ...நம் முன்னோர்கள் கட்டிட கலைக்கு என்று 100 மேற்பட்ட ஓலை சுவடிகளை ,குறிப்புகளை விட்டு சென்று இருக்கிறார்கள் .அவற்றின் தகவல்களின் அடிப்படையில் ,சரஸ்வதி மஹால் ,சில்ப சாஸ்திர நூல்களின் உதவியோடு சிலவற்றை கூறி இருக்கிறேன் .அடுத்து சொல்ல பட்டு உள்ள சண்டை முறைகளும் ,வாட்சண்டை முறைகளும் 3000 ஆண்டுகளுக்கு முன் சோழ ,பாண்டிய ,சேர மன்னர்கள் கற்ற வித்தை ஓலை சுவடிகளில் இருந்து எடுக்க பட்டவையே ..)
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அவர்கள் நால்வரும் பேசிய படியே உலா வந்து கொண்டு இருக்க அவர்கள் முன் தீடீர் என்று வந்து குதித்தது அந்த பகைவன் படை .அடுத்த நொடி இளவரசனை பின்னுக்கு அனுப்பி அழகன் ,தேவநாராயணர் ,நித்திலவல்லி அரண் போல் அவனை காக்க,ஆதித்யனை சூழுந்து தங்கள் வாட்களை ஏந்தி நின்றார்கள் .

Fourfold-defense-system-of-ancient-india2.jpg

"யார் நீங்கள் ..உத்தரவூ இன்றி எங்கனம் உள்ளே வந்தீர்கள் ...இந்த கணமே வெளியேற வில்லை என்றால் உமது உயிர் உமக்கு உரிமையானது இல்லை .."என்று உறுமினார் தேவநாராயணர் .

"ஓஹ் தேவநாராயணர் இங்கு தான் இருக்கிறாரா ?வணக்கம் குருவே ...."என்றபடி வந்தான் ரவிதாசன் .

"ரவிதாஸ ...என்ன இது ....இங்கு உமக்கு என்ன பணி ?"என்றார் தேவநாராயணர் .

"இளவரசர் ஆதித்திய கரிகாலரின் உயிர்க்கு காலனாகும் பணி தான் குருவே ...நீர் எனக்கு வித்தை சொல்லி கொடுத்த ஆசான் ..என் தாதைக்கு நிகர் ...அதனால் சிரம் தாழ்த்தி பணிவுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன் ...தாங்களும் தங்கள் புதல்வியும் இங்கு இருந்து அகன்று விடுங்கள் ..."என்றான் ரவி தாசன் கைகள் கூப்பி .

"உமக்கு என்ன துணிச்சல் ...என் முன்னால் நின்று இளவரசரின் உயிரை பறிப்பேன் என்கிறாய் ?தேசதுரோகி ..."என்றார் தேவநாராயணர் கடும் கோபத்துடன் .

"நான் தேச துரோகி எல்லாம் இல்லை தேவநாராயணரே ...ராஜ விசுவாசி ...என் அரசர் சுந்தர சோழன் இல்லை ...அறிஞ்ஜெயர் தான் .என் இளவரசர் ஆதித்திய சோழர் இல்லை ...மதுராந்தக சோழர் மட்டுமே .அவர் குலத்திற்கு சொந்தமானது இந்த சோழ மகுடம் ...அது அலங்கரிக்க வேண்டியது எங்கள் இளவரசர் மதுராந்தகரின் சிரத்தை (தலையை )மட்டுமே ..அதனால் தான் அதற்கு இடையூறாக இருக்கும் ஆதித்ய கரிகாலனின் சிரத்தை கொய்ய வந்து இருக்கிறோம் ..இப்பொழுது சொல்லுங்கள் தேவநாராயணரே இந்த ஆதித்யர் எப்படி இந்த நாட்டின் அரசர் என்ற உரிமை பாராட்டுகிறார் ?இதன் நிஜ வாரிசு எங்கள் மாதுராந்தகர் தானே ...காவலாய் வந்தவன் எல்லாம் கோவலன் (அரசன் )ஆக நினைத்தால் கை கட்டி சேவகம் செய்ய நாங்கள் என்ன பேடிகளா ?"என்றான் ரவிதாசன் கோபத்துடன் .

" மக்கள் உன் இளவரசர் மதுராந்தகனை அரசர் ஆக்க விரும்பவில்லை ,எங்கள் ஆதித்யரை தான் விரும்புகிறார்கள் என்பதை மறந்து விட்டு பேச வேண்டாம் ரவிதாஸ "என்றார் தேவநாராயணர் .

"மக்கள் ...அவர்கள் மாக்கள் ...அவர்கள் யார் வழி வழியாய் வரும் ராஜ குல மகுடத்தின் இடத்தை நிர்ணயிப்பதற்கு ?....அரியணை ஏறப்போவது எங்கள் இளவரசர் மாதுராந்தகர் மட்டுமே ...சுந்தர சோழனும் ,இந்த ஆதித்யனும் ,இவன் இளவல் அருள்மொழி வர்மனும் சிரம் கொய்ய படுவார்கள் ....இது எங்கள் இளவரசரின் உரிமை ..மீட்டு கொடுக்காமல் ஓய மாட்டோம் ...வெல்க நாடு ...வெல்க சோழ இளவரசர் ..."என்றான் ரவிதாசன் கோபத்துடன் .

"குருவே !இவனுடன் தர்க்கம் புரிவது வீண் ...இவன் சிரத்தை கொய்வது தான் ஒரே வழி இவன் வாய் மூட ...நம் காவல் படை அழைத்து வருகிறேன் ...சற்று நேரம் இவனை கவனித்து கொள்ளுங்கள் ."என்றான் முத்தழகன் .

"இல்லை முத்தழகா ..இந்த மழையில் ,படை வீட்டிற்கு நீ சென்று வருவதற்குள் கால தாமதம் ஆகி விடும் .நீ இளவரசரை விலகாதே .அவர் உயிர் தான் இப்பொழுது முக்கியம் ...படை அழைத்து வர நான் வேறு வழி செய்கிறேன் .ஹ்ம்ம் நித்திலவல்லி ...தொடங்கு ."என்றார் தேவநாராயணர்

தந்தையின் கட்டளை வந்ததும் வாயால் வினோத சப்தம் ஒன்றை அங்கு இருந்த கருவி ஒன்றில் நித்திலவல்லி எழுப்ப ,சற்று நேரத்தில் அவர்களின் பின்புறம் இருந்து முப்பதிற்கும் குறையாத பெண்களும் ,காட்டில் பாதுகாப்பிற்கு வந்த தேவநாராயணர் மாணவர்களும் இவர்களை சூழ்ந்து பத்ம வியூகத்தை ஏற்படுத்தினார்கள் .

110750-ztddennnmc-1547654525.jpeg

உள்ளே வந்த பெண்களை கண்டதும் ஒரு கணம் திகைத்த ரவிதாசன் ,பின் அந்த இடமே அதிரும் வகையில் உரத்து சிரிக்க ஆரம்பித்தான் .

"அட ஆதித்யா ...உம்மை பெரிய வீரன் என்று நினைத்து இருந்தால் பேதையின் பின் ஒளிகிறாயே ...வெட்கம் ...."என்றான் ரவிதாசன் .

"ரவிதாஸ பெண்கள் என்றால் உமக்கு என்ன அத்தனை இளக்கமாய் தோன்றுகிறதோ ...உன்னை இங்கனம் பிறக்க வைத்தவளே ஒரு பெண் என்பதை மறவாதே ...உமக்கு என்ன பெண்கள் என்றால் அந்தப்புர ஆரணங்கு ,கனிகைகள் ,அந்தப்புர தாசிகளாய் இருக்க மட்டுமே பயன் படுவோம் என்ற திண்ணமா ?வீரன் என்று மார்தட்டி கொள்ளும் உன்னை போன்ற அர்ப்பன் உருவாகவே தேவை பெண் தானடா ...போக பொருளாய் மட்டும் பெண்களை காணும் உன்னை போன்றோரின் மத்தியில் பெண்களை போர் வீரர்களாகி அவர்களும் நாட்டிற்காக போர் புரிய ஆவண செய்யும் எங்கள் இளவரசர் எங்கே ...நீ எங்கே ..நீசனே ....பெண் சக்தி புரியாத அற்பனே ...இவர்கள் என் தந்தையால் போர் கலை பயிற்றுவிக்க பட்ட யாளிகள் ...உன்னையும் உன் கூட்டத்தையும் வேரோடு சாய்க்க உருவாக்க பட்ட நிசும்பசூதனி ஸைன்யமடா ....வாயால் பேசாதே ..எங்கள் வாட்களோடு ,உருமிகளோடு, அயுதா கத்தியுடன் பேசு ...அவை சொல்லும் கேலிக்கான விடையை ...ஹ்ம்ம் உன் ஆட்களை உருவ சொல்லு ஆயுதத்தை ....பார்த்து விடலாம் ..."என்று பெண் சிங்கமாய் கர்ஜித்த நித்திலவல்லியின் கோபத்தை கண்டு அங்கு இருந்தவர்கள் திகைத்து போனார்கள் .

800px-Padmavyuha.jpg

ஒரு நொடி அவனையும் அறியாமல் ரவிதாசனின் கைகள் காளியின் அவதாரமாய் ,வீரத்தின் வித்தாய் நின்ற அந்த பேதையை கண்டு கூப்பியது .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
பத்ம வியூகம் என்பது பலஅடுக்கு கொண்ட போர் தந்திரம் .ஏழு அடுக்கு வரை மலர்ந்த தாமரை வடிவம் போன்றது .மஹாபாரத யுத்தத்தில் அமைக்க பட்ட வடிவம் .வடிவ தலைவர் சொல்லும் படி குறிப்பிட்ட சில வீரர்கள் இரு பக்கமும் முன்னேறி தாக்குவார்கள் ,இந்த வீரர்களின் இடத்தை அடுத்த அணி நிரப்பும் .அப்படியே இருமருங்கிலும் எதிரிகளை சுற்றி வளைக்கவும் செய்வார்கள் .உள்ளே எதிரிகள் மாட்டி கொண்டு விட வெளி வர முடியாமல் உள்ளே சிக்கி கொள்வார்கள்

பெரிய படைகளை கொண்டு ரத ,கத ,கஜ ,புரத படைகளை கொண்டு செய்ய வேண்டிய பத்மவியூகத்தின் செயலை தேவநாராயணர் நாற்பதும் +நால்வர் கொண்டு ஆதித்யனை காக்க அந்த பொன் மாளிகையில் நிறுத்தினார் .அந்த பத்மவியூகம் எதிரிகளை உள்ளே விட்டு அழிக்க முயலும் ,இந்த பத்மவியூகம் எதிரிகள் உள்ளே இளவரசனிடம் நெருங்காத வகையில் மற்றொரு முறையாக தேவநாராயணர் நியமித்தார் .

நடுவே ஆதித்யன் நிற்க ,அவனை சுற்றி தேவநாராயணர் ,நித்திலவல்லி ,முத்தழகன் கொண்ட முதல் அடுக்கு ,அவர்களை சுற்றி பத்து பேர் இருக்கும் ரெண்டாவது அடுக்கு ,அடுத்த பத்து அடுத்த அடுக்கு என்று நாற்பது பெரும் பெரும் அரணாக நின்று ஆதித்யனை பாதுகாத்தனர் .இவர்களை மீறி தான் யாருமே ஆதித்யனை நெருங்க முடியும் என்ற நிலை .IMG_20161109_101216 copy-800x450.jpg


அவர்கள் நாற்பது பெரும் முழு கவசம் அணிந்து,ஒரு கையில் வாள் ,இன்னொரு கையில் கேடயம் ,இடை கச்சையில் பீச்சாங்கத்தி (dagger ),அயுதா கத்தி ,தோளின் பின் புறம் சென்ற பட்டையில் உருமி எனப்படும் சுருள் வாள் வைத்து இருந்தார்கள் .
320px-19th_century_Indian_tulwar_sword.jpg 320px-Ayudha_Katti.jpg

பார்ப்பவர்களின் கண்களுக்கு அந்த நித்திலவல்லியுடன் சேர்த்து அந்த முப்பது பெண்டீரும் ,சும்பன் ,நிசும்பனை வதம் செய்து நிசும்பசூதனி என்ற பெயர் பெற்ற காளி தேவியின் படை தெய்வங்களாக தான் தெரிந்தார்கள் .நாணம் கொண்டு நிலம் நோக்க வேண்டிய அந்த கண்கள் அரக்கர்களை வதம் செய்யும் கோபாக்கினி பொழிந்து கொண்டு இருந்தது .
maxresdefault (1).jpg

ஆரம்பித்தது சோழ மகுடத்திற்கான யுத்தம் அந்த பொன் மாளிகையில் .அந்த வாட்சண்டை முறை தனுர் வேதத்தில் சொல்ல பட்டு இருப்பது .அதர்வ,ரிக் வேதத்தில் வருவது .சோழ நாட்டில் சிலம்பம் என்று சேர நாட்டில் களரியாப்பட்டு என்றும் அறியப்படுவது .

விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் நாற்பத்தி ரெண்டு பள்ளிகள் அமைத்து ,இருபத்தி ஒன்று குருக்களை இந்த சண்டை பயிற்சி முறை கற்பிக்க என்றே நியமித்தார் என்கிறது புராணம் .அகநானூறு ,புறநானூறு நூல்களில் வரும் யுத்த முறை .போதிதர்மரால் சீன தேசத்தில் சொல்லி கொடுக்க பட்டு shaloin temple களில் kumfu என்று இன்றளவும் கற்பிக்க படுவது .
KalariPayattu-770x543.jpg


விலங்குகளின் அசைவை கொண்டு போரிடும் முறை அது .சிங்கம் ,புலி ,கரடி ,யானை ,பன்றி ,பாம்பு ,முதலை அசைவை கொண்டு "சாட்டம் (குதித்தல் ),ஓட்டம் (ஓடுதல் )மார்ச்சில் (கரணம் போடுதல் /sommersault )போன்றவை வாள் சண்டையோடு இணைத்து போரிடும் முறை .இதில் மேதாரி எனப்படும் முறை உடல் வலிமை மற்றும் திண்மை (stamina )கொண்டு பலமணி நேரம் போராட உதவும் .அடுத்து "கொள்தரி" என்பது கையில் கிடைக்கும் மர பொருள்களை ஆயுதமாய் பயன்படுத்த கற்று தரும் .போர்க்களத்தில் வாள் கையில் இல்லை என்றால் கீழே கிடைக்கும் கம்பு ,மர கிளை கொண்டு போராடும் படி செய்யும் ."அங்கதாரி" என்பதில் வில் ,வாள் ,கேடயம் ,உருமி ,கத்தி ,குறுவாள் கொண்டு போரிடலாம் ."வெறும் கை பிரயோகம்" என்பதில் ஆயுதம் இல்லாத போது சுஸ்ருத சமிதாவில் சொல்லப்பட்டு உள்ள 107நாடிகள் /ஸ்தானங்கள் அடிப்பது போன்ற பல முறைகள் கொண்டு அந்த பெண்கள் போரிட ரவிதாசனின் குழு நிலைகுலைந்தது
636756991908294831.png

இனி பேதை –“எதையும் அறியாத அப்பாவி” என்று பெண்ணை வர்ணிப்பது நின்று விடும் .பெண்களின் கண்களை மான் ,மீன் ,என்றொடு ஒப்பிடுவதற்கு பதில் எரிமலையின் சீற்றம் ,எரிநட்சத்திரத்தின் தகிப்பு என்று வர்ணிக்க தான் தோன்றும் .கோலினை தழுவும் கொடிகள் போன்ற மங்கை தலைவனை தழுவினால் என்பதற்கு பதில் அந்த கொடியே பாசக்கயிறு ஆகும் பகைவனிடம் என்று எழுதட்டும் .ஆடவரை மட்டும் தான் ஆளி ,அரிமா என்று சிங்கத்துடன் ஒப்பிடுவார்களா என்ன ,இந்த பெண்டீரை கண்ட பிறகு பஞ்சநகாயுதம் (சிங்கம் )என்று வர்ணிக்கட்டும் .
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
"அண்ணலே !...தேவநாராயணர் மாணாக்கள் என்றதும் நாம் பின்வாங்கி இருக்க வேண்டுமோ ...பெண்களா இவர்கள் ...பேய் கூட்டம் போல் சதிராடுகிறார்கள் ....நாம் தோற்பது உறுதி அண்ணா .."என்றான் ரவிதாசன் .

"கவலை வேண்டாம் ரவிதாஸ ...அங்கே காண் ..."என்று சோமன் சாம்பவன் கைகாட்ட மேலும் ஐம்பது வீரர்கள் உள்ளே நுழைந்தனர் .

"யார் அண்ணா இவர்கள் ?"என்றான் ரவிதாசன் வியப்புடன் .

"வீர பாண்டியன் ஆட்கள் ....ஆதித்யனை கொல்ல துடித்து கொண்டு இருந்தார்கள் ...நிச்சயம் தேவநாராயணர் இருக்கும் வரை ஆதித்யனை நெருங்குவது இயலாது என்று தெரியும் .நம்மிடம் உள்ளவர்களும் போதாது என்று தெரிந்தே இவர்களுக்கும் தகவல் அனுப்பி இருந்தேன் ...வந்து விட்டார்கள் ...இனி இவர்கள் கவனித்து கொள்வார்கள் ...நமக்கு இனி இங்கு வேலை இல்லை ..கிளம்பு ரவிதாஸ ..."என்ற சோமனுடன் ரவிதாசன் கிளம்பி விட ,வீரபாண்டியனின் பாண்டிய படைக்கும் ஆதித்யனின் பெண்கள் படைக்கும் பெரும் சண்டை மூண்டது .

மரணிக்கும் அந்த கடைசி நொடியிலும் தன்னுடன் ஒரு பகைவனின் உயிரையாவது பறிக்க அந்த பெண்கள் தயங்கவேயில்லை .கீழே கால் இழந்து துடித்த போதும் அருகே வீழ்ந்த பகைவனின் குரல் வளையை கடித்தாவது அவனை கொல்ல அவர்கள் தயங்க வில்லை .ஒரு பெண்ணின் வாயில் இருந்தும் காயம் ஏற்பட்ட வலியின் முனகல் வெளி கேட்கவேயில்லை .ஒருவேளை பிள்ளை பேரு என்ற பெரும் வலியினை தாங்கும் அந்த தியாகசெம்மல்களுக்கு இந்த வாள் வலி பெரிதாக தோன்றவில்லை போல் இருக்கிறது .

maxresdefault.jpg

ரவிதாசன் ஆட்கள் போல் இந்த பாண்டிய வீரர்கள் நேர்மையாக போரிடவில்லை .மறைந்து இருந்து தாக்கி ,பின்னால் தாக்கி ,ஆலகாலம் தடவிய ஊசிகளை குழல் மூலம் ஊதியும் ஆதித்யன் படைகளை நிலை குலைய செய்து கொண்டு இருந்தார்கள் .
Projectiles_Shock_Darts.png

அதில் ஒரு விஷ ஊசி தேவநாராயணரை நோக்கி பறந்து வர அதை தன் மேல் ஏற்றான் முத்தழன் .

"அழகா !...என்ன காரியம் செய்து விட்டாய் நீ ?"என்றார் தேவநாராயணர் அவனை மடி தாங்கி .
"குருநாதரே ....இங்கு இளவரசை காக்க என்னை விட நீங்கள் மிக முக்கியம் ...உங்களுக்காக என் உயிர் பிரிவதை விட வேறு என்ன பேறு கிடைக்க போகிறது ...பிறந்த பலன் கிடைத்து விட்டது ...வாழ்க சோழ தேசம் ...வாழ்க ஆதித்ய கரிகாலர் ..."என்ற அழகனின் உயிர் பிரிந்தது .

சாம்ராஜ்யங்கள் உருவாவது தியாகங்களால் தான் .தன்னை விட குருநாதர் உயிரோடு இருப்பின் ,இளவரசனின் உயிர் காக்க முடியும் என்று முத்தழகன் தன் உயிரை நீத்து இருந்தான் .

தன் உயிரை காக்க உயிர் விட்டவனை கண்ட தேவநாராயணரின் கோபம் அதிகரிக்க ப்ரளயகால ருத்திரன் போல் பகைவர்கள் படையை துவம்சம் செய்ய ஆரம்பித்தார் .

பல போர் முறைகளை மீண்டும் உலகம் அறிய செய்தவர் என்னும் போது பகைவர்களால் தாக்கு பிடிக்க முடியாமல் திணற ஆரம்பித்தனர் .இவர் உயிரோடு இருந்தால் ஆதித்யனை அழிப்பது இயலாது என்று புரிந்து போனது அவர்களுக்கு .

அவர் காது படவே ,"இவரை பிறகு கவனித்து கொள்ளலாம் .இவர் மகள் அவள் தான் ...முதலில் அவளை அழியுங்கள் ."என்றான் பாண்டிய படை தலைவன் ஒருவன் .

'மகள் உயிர்க்கு ஆபத்து' என்றதும் ஒரு கணம் தேவநாராயணரின் கவனம் பிசகியது .மகளை நோக்கி விஷம் தோய்ந்த நான்கு பெரிய ஈட்டிகள் பறந்து வர ,சண்டையில் மிக மும்முரமாய் இருந்த தன் மகளை இழுத்து கீழே தள்ளியவர் ,பாய்ந்து வந்த ஈட்டிகளை தன் மார்பில் ஏற்று நிலத்தில் சரிந்தார் .

"தந்தையே !...."அலறியபடி அவரிடம் வந்த நித்திலவல்லி ,"என்ன காரியம் செய்து விட்டிர்கள் ...இதற்கு என் உயிர் பிரிந்து இருக்கலாமே ....."என்று கதற அவள் தலையை தடவிய அவர் ,

"இளவரசர் பத்திரம் ...உன் உயிர் கொடுத்தாவது அவரை தப்ப வைத்து விடு ..இவர்கள் நேர்மையாக போரிடவில்லை ....மேலும் மேலும் ஆட்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள் ...என்ன காரணமோ படை இங்கு வர நாம் அனுப்பிய செய்தி கேட்டு யாரும் வரவில்லை ....இளவரசரை தப்ப வை நித்திலவல்லி ...."என்றவரின் உயிர் மகளின் மடியில் பிரிந்தது .
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :D :D
நான்தான் First,
அனிதா டியர்
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஒரு கணம் மட்டுமே அழுத நித்திலவல்லி அடுத்த கணம் எரிமலையாய் பொங்கி எழுந்தாள் .அவளின் வேகத்தில் ,ஆக்ரோஷத்தில் சில கணங்களில் பத்துக்கும் மேற்பட்ட பகைவர்களின் உயிர் பிரிந்தது .இரு கைகளிலும் ஆயுதம் ஏந்தி போரிடுவது அனைவராலும் இயலாத ஒன்று .ஆனால் ஒரு கையில் வாள் ,இன்னொரு கையில் உருமி என்று நித்திலவல்லி ருத்ரதாண்டவம் கண்டு அங்கு இருந்தவர்கள் மிரண்டார்கள் .சுழற்காற்றின் வேகம் அவள் ரெண்டு கைகளின் சுழற்சிக்கு முன் ஒன்றுமே இல்லை என்றே தோன்றியது .அவள் வாள் தூக்குவதும் தெரியவில்லை ,எதிரிகளின் மேல் பிரயோகிப்பதும் கண்களுக்கு புலப்படவில்லை .ஆனால் அவள் வாள் ,உருமி சுழன்ற இடம் எல்லாம் பகைவர்களின் உயிர் அற்ற உடல்களே கிடந்தன .

07-1375853363-anushka-action-avatar-3.jpg

தஞ்சையின் காவல் தெய்வமே அவள் உருவில் வந்து போரிடுவதாகவே நினைக்க தோன்றியது .முகத்தில் செங்குருதி படிந்து ,கண்கள் கோபாக்கினியில் சிவந்து அவளே ஒரு காளியின் மறு உருவமாய் நின்று போரிட்டு கொண்டு இருந்தாள் .

a59c93e6fc0f836f9477b24b80a9c12a.jpg


ஆதித்யன் பக்கம் மீதம் அவனையும் ,நித்திலவல்லியையும் சேர்த்து பனிரெண்டு பேர் மட்டுமே மீதம் இருந்தனர் .பகைவர்களின் எண்ணிக்கையோ முப்பதிற்கும் மேல் .உள்ளே ரத்த ஆறு ஓடி கொண்டு இருக்க ,வெளியே காற்றாற்று வெள்ளம் கச்சியம்பதியை ஒருவழியாக்கி கொண்டு இருந்தது .அந்த பொன் மாளிகையின் அடிப்பகுதி வெள்ள பெருக்கால் மண் அரிப்பு ஏற்பட்டு மெல்ல அப்படியே மண்ணுக்குள் புதைய ஆரம்பித்தது .ஆற்றின் வெள்ளம் பொன் மாளிகைக்குள் பெரும் அரக்க சேனையாய் திபுதிபுவென புகுந்து அரண்மனையை நில மகளும் ,ஜல மகளும் சேர்ந்து தங்களுக்குள் ஐக்கிய படுத்த ஆரம்பித்தனர் .

அப்படி ஒரு மாளிகை இருந்ததற்கான சுவடு மெல்ல ,மெல்ல மறைய ஆரம்பித்தது -கண்ணில் இருந்தும் ,மண்ணில் இருந்தும் ,வரலாற்று பக்கத்தில் இருந்தும் .
View attachment 11909

முழங்கால் அளவு இருந்த நீரில் நின்று நடந்து கொண்டு இருந்தது அந்த சண்டை .தேவநாராயணர் கவனத்தை திசை திருப்பியது போலவே இந்த முறை நித்திலவல்லியின் கவனத்தை திசை திருப்ப ,ஆதித்யன் மேல் அனைத்து வாட்களும் ,ஈட்டிகளும் திரும்பியது .அவனை நோக்கி பறந்து வந்த கூறுவாளினை தன் இடையில் தங்கினாள் நித்திலவல்லி .குருதி கொப்பளித்து பெருக அதை கவனத்தில் கொள்ளாமல் ,இடையில் பதிந்து இருந்த குறுவாளினை பிடுங்கி எடுத்தவள் ,அதை அடுத்த நொடி எய்தவனின் கழுத்திலேயே அடித்து அவன் உயிரை பறித்தாள் .

Anushka-Rudrama-Devi-300x252.jpg
அவள் தள்ளாடி தரையில் சரிய ,அவர்களின் அரணாய் மீதம் உள்ள பத்து பேர் நிற்க,"தேவி !..."என்ற அலறலுடன் அவளை நீரில் இருந்து எடுத்து தன் மார்போடு அணைத்து கொண்டான் ஆதித்யன் .

"மன்னிக்க வேண்டும் அன்பரே ..உம்மை காக்க என்னால் இயலவில்லை .....கோழைகள் கவனம் திசை திரும்பிய நேரத்தில் பின்னால் இருந்து தாக்கி விட்டார்கள் ...எப்படியாவது நீர் தப்பித்து விடுங்கள் ....சென்று விடுங்கள் அன்பரே ...."என்றாள் நித்திலவல்லி .

"தேவி !....என்னை விரும்பிய நேரம் என் விதி உன்னையும் இப்படி சாய்த்து விட்டதே ...வீரன் என்று பெயர் எடுத்து என்ன பயன் ...உன்னை காக்க முடியவில்லையே அன்பே ...இந்த ஜீவன் ,இந்த பிறப்பில் சேராமல் போகலாம் ...ஆனால் இந்த ஆதித்யனின் மனம் கவர்ந்தவள் என்றால் அது நீ ஒருத்தி என்று இந்த பிரபஞ்சமே இனி சொல்லட்டும் ....நம் அன்பு உண்மை என்றால் அது காலத்தை தாண்டி வாழட்டும் ....ஆதித்யனின் பெயர் உள்ளவரை இனி உன் பெயரும் நிலைக்கட்டும் . "என்றான் அவள் நெற்றியில் தன் இதழ் பதித்து .

"இதை விட வேறு பேரு என்ன வேண்டும் அன்பே ....இம்மைக்கும் (இந்த பிறவிக்கும் )மறுமைக்கும் (இனி எடுக்க போகும் பிறவிக்கும் )நீரே எம் பதியாக வேண்டும் ....இந்த காஞ்சி தலைவனுக்காக இன்று நான் சிந்திய இந்த குருதி என்னை பொறுத்த வரை தேன் மழையே ....உமது அன்பிற்கு என் சமர்ப்பணம் இந்த உயிர் ,உடல் எல்லாம் ...உமது மனையாட்டியாக வாழ்ந்த அந்த நொடி என் பிறவி பயனை அளித்து விட்டது ..விடை கொடுங்கள் இளவரசே ....."என்று அவனை நோக்கி கை கூப்பிய நித்திலவல்லியின் கண்கள் மீளா உலகத்தை காண மூடி கொள்ள ,அவளை ஓடும் நீருக்கு தாரை வார்த்தவனாய் களம் புக எழுந்து நின்றான் ஆதித்யன் .

1437802583_baahubali.jpg


அதற்குள் இவன் பக்கம் காவலாய் இருந்த அந்த பத்து பெரும் வீர மரணம் அடைந்து இருக்க ,பகைவர்களின் பக்கம் பத்து பேர் மீதம் இருக்க ,தனி ஒரு தானை தலைவனாய் ஒரு கையில் வாளுடன் ,ஒரு கையில் உருமியோடு ,பகைவர்களுக்கு "காருகபத்தியம் "-முத்தி அளிக்க முப்புரம் எரித்த சிவசொரூபமாய் ,பதினோரு ருத்திரர்களின் பிம்பமாய் ,வைதரணி நதியோன் (யமன் )போல் அவர்களின் சீவனை மேல் உலகத்திற்கு அனுப்பி வைத்தான் .

c04ffaca-2cdc-480e-9b91-ac98f460c13e-4c0598f8-4d9d-484a-8390-4632a0f5a592_compressed_40.jpg

சதிகளாலும் ,அரசியல் காழ்புணர்ச்சி காரணமாய் ஒரு குலம் பூண்டோடு அழிக்க முனைந்தது சோழ அரசியல் தந்திரம் .

சிவானந்த போகர் உரைத்தது போல் பகலவன் /ஆதித்யன் சூழ்ச்சி மேகங்களால் கால ஏட்டில் ,சரித்திர பக்கங்களில் மறைந்து போனது .

மகுடமாகட்டும் ,மதமாகட்டும் ,செல்வமாகட்டும் அவற்றை அடைய சொந்த ரத்தத்தினையே அழிக்கவும் மனித இனம் தயங்குவது இல்லை என்பதற்கான சான்று ஆதித்திய கரிகாலனின் இந்த ரத்த சரித்திரம் .


தேன் மழை பிரவாகம் தொடரும் ...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :D :D
மிகவும் அருமையான பதிவு,
அனிதா ராஜ்குமார் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top