• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காஞ்சி தலைவனின் தேன் மழை -அத்தியாயம் -நான்கு

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இளரவசன் அவளின் நாட்டு பற்று கண்டு ,பெருமை மேலிட்டவனாக இதழில் முழு புன்னைகையுடன் அவளை பின் தொடர்ந்து சென்று படித்துறைகளில் ஏறினான் .

அந்த கார் இருளில் அவளை நிலா ஒளியில் தேடினான் ஆதித்யன் .சற்று தொலைவில் தீப்பந்தத்தின் ஒளியில் அவளை கண்டவனின் இதயம் ஒரு கணம் நின்றே விட்டது .அதற்குள் வேறு ஆடைக்குள் மாறி இருந்த அவள் கார்குழலை விரிய விட்டு அதன் அடியில் சிறு முடிச்சிட்டு ,அங்கே வளர்ந்து இருந்த காட்டு பூக்களை காதின் அருகே அணிந்து அவளே ஒரு மலர்வனமாய் ,ஆற்று நீரில் தாழ்ந்து இருந்த மரக்கிளை ஒன்றின் மேல் ஒயிலாக அமர்ந்து ஒரு இரு கால்களையும் நீரில் விட்டு ,நீரினை அளைந்து கொண்டு இருந்தாள் .

அவளின் மேனியழகினை மறைக்க முடியாமல் தோல்வியை தழுவி கொண்டு இருந்தன அவள் மேல் ஆடைகள் .

"அந்த ஆடையாக தான் இருக்க கூடாதா ?'என்ற எண்ணம் எழாமல் இல்லை ஆதித்யனுக்கு .

அவளின் சங்கம் (கணைகால் ,)நுசுப்பு (இடை ),துத்தம் (வயிறு )கூற்பரம் (முழங்கை ),அங்குலி (விரல் ),வதனம் (முகம் )பாலிகை (உதடு ),விலோசனம் (கண்கள் )ஒவ்வொன்றிலும் விவரிக்க முடியாத தேவ அழகு ஒளிந்திருக்க , அதனை விவரித்து சொல்ல எத்தனை ஆயுகம் (வாழ்நாள் )எடுத்தாலும் போதாது என்று தோன்றியது ஆதித்யனுக்கு .

அவன் மிக அருகில் வருவதை கண்டும் அவன் புறம் முகம் திருப்பவில்லை அந்த மதிமுகத்தாள் .

"இந்த சீற்றம் ஏற்பட தேவையே இல்லையே ....போரில் வென்று பாண்டிய நாட்டினையும் நம் நாடாக மாற்றிய பிறகு ,அந்த தென்னம்பாடி முத்துக்கள் சோழருக்கு தானே உரிமை .....சோழ நாட்டிற்கு சொந்தமான முத்தினை பற்றி பேசினால் சோழ நாட்டின் காரிககைக்கு ஏன் இந்த சீற்றம் ....இந்த முத்துக்கள் சோழனுக்கு உரிமையானது தானே ...."என்ற அவன் பேச்சில் ,பேச்சிழந்து நின்றது அந்த பெண்மை .

‘நீ எனக்கு உடையவள் தானே?’ என்று கேட்டால் ,பெண்மையால் என்ன செய்ய முடியும் ?வேகமாய் சுழித்தோடும் வேகவதி ஆற்றின் மேல் திரும்பியது அவள் பார்வை .அந்த ஆற்றினை போல் அவனை சேர்ந்து விட துடிக்கும் மனதை அணையிட்டு தடுக்க முடியாதவளாய் ,அவன் கேள்விக்கு பதில் அளிக்க முடியாதவளாய் வதங்கி நின்றாள் அவனை மட்டுமே தன்னுடையவனாக நினைத்து வாழ்ந்து வரும் அவனுடையவள் .

வாய் விட்டு தான் இதை உரைக்க முடியுமா ...அவன் யார் ..நாளை தரணியை ஆள போகும் சக்கரவர்த்தி ...அவளோ சாதாரண குடிமகள்களில் ஒருத்தி . இது அறநிலை இன்பவியல் கிடையாதே ....அவன் அரசகுலம் உயர்ந்த குடி...உயர்ந்த குடியால் தானே அநுலோமர் -நாளை நாட்டை ஆளும் சக்கரவர்த்தி பிறக்க முடியும் ..இவன் உரியோனாக கேட்கும் கேள்விக்கு உரிமையாட்டியாக பதில் சொல்ல உள்ளம் துடித்தாலும் ,அவள் மூகையாக(ஊமையாக )இருந்து விட முயன்றாள்.

அவன் விடும் மன்மத பானங்களை எப்படி திசை திருப்புவது என்று புரியாமல் தவித்தவளின் கண்களில் பட்டன் இளரவசனின் மெய் காவலன் முத்தழகன் .

இதழில் இளநகை பூக்க ,"இளவரசே !...தங்கள் சிதிலன் (தோழர் )என்னை நோக்கி வீச தயாராய் இருக்கும் குறுவாளை இறக்கினால் நன்றாய் இருக்கும் ....குத்துவதாய் இருந்தால் நெஞ்சில் குத்த சொல்லுங்கள் ...சோழவள தேசத்து பெண் நான் ....காயம் நெஞ்சில் பட்டு உயிர் பிரிந்தால் தான் நிம்மதியாய் இருக்கும். அதே சமயம் உங்கள் தோழரின் சிரம் உடலை விட்டு பிரிந்தால் என்னை குற்றம் சாட்டி பயனில்லை ."என்றாள் அவள் .

அவள் பேச்சை கேட்ட உடன் ஆதித்யன் மீண்டும் வியந்து பின் புன்னகையுடன் அவளை விழுங்குவதை போல் பார்த்து வைக்க ,அழகன் தன் மறைவிடத்தில் இருந்து வெளியே வந்தான் .

"யார் நீ ?'என்றான் சந்தேகத்துடன்

"ஹ்ம்ம் பார்த்தால் தெரியவில்லையோ உமக்கு- நான் காரிகை என்பது ?"என்றாள் அவள் .

"நீ காரிகையா இல்லையா ....பகை வீட்டு காளகூடமா(ஆலகாலம் விஷம் ) யாருக்கு தெரியும் ?.....கூர்வாட்களை தாங்கி குமரிகளும் வருவதுண்டு ..."என்றான் அழகன் .

"காளகூடத்திற்கும் (ஆலகால விஷத்திற்கு ),அமரிக்கும் (அமுதம் )வேற்றுமை தெரியவில்லை எனில் அதற்கு நான் என்ன பிணையா ?"என்றாள் அவள் .

இரு ஆடவரின் முன் நிற்கும் அச்சம் ,மடம் ,நாணம் ,பயிர்ப்பு என்று எதுவும் அவளிடம் தென்படவில்லை .பேச்சில் ஒரு எள்ளல் இருப்பதை கண்டான் இளவரசன் .ஏதோ குடிமைகளை கேள்வி கேட்கும் அரசியின் தோரணை அவளிடம் .

'இவளா ஆலகாலம் ?இவள் ஒரு கன்மேய்வூ (மாடப்புறா ),நடையில் ஒரு அளகு (மயில் ),குரல் ஆஹா காலகண்டம் (குயில் ),உடலோ திண்மையான சாசம் (முயல் ),கழுத்து கொக்கரை (வலம்புரி சங்கு ),நிறம் பிஷணம் (செஞ்சசந்தனம் ),இதழ் கழையில் (கரும்பு ரசத்தில் )ஊற வைத்த மாதுளங்கம் (மாதுளை ) ...இவளை எப்படி இந்த அழகன் ஆலகாலம் என்று சொல்கின்றான் ....இவனுக்கு கண்ணில் தான் ஏதோ பழுது ...அரண்மனைக்கு திரும்பிய உடன் மாமத்திரர் (ஆயுள்வேதியர் /மருத்துவர் )இடம் தான் காண்பிக்க வேண்டும் .'என்று அவள் பால் சாய்ந்து விட்ட மனம் தலைவனாய் பிதற்றி (உளறி )கொண்டு இருந்தது .

"பகடி பேச்சு தேவையில்லை பெண்ணே ...என் வாள் வீச்சில் ஒரே கணம் பத்து சிரங்கள் உருளும் ....எங்களிடம் உன் சாகச பேச்சு வேண்டாம் ."என்றான் அழகன் .

"ஒஹ்ஹ என் தலையை கொய்து விட்டு அயனம் (வழி .)தெரியாமல் இந்த கானகத்தில் அலைந்து கொண்டு இருப்பது உங்கள் அவா என்றால் நான் என் பேடு (சிற்றூர் )செல்கிறேன் ....ஒன்று உறுதி அண்ணலே (அண்ணா )என் சிரம் விழுவதற்கு முன் உங்கள் சிரம் வானில் பறந்து இருக்கும் ...அப்படி என்னையும் மீறி உங்கள் வாள் என் சிரம் கொய்தால் ,என் தாதை (தந்தை )உங்கள் குலத்தையே வேரறுக்கமால் இருக்க மாட்டார் ."என்றாள் அவள் .

"உன் தாதை என்ன பௌரவரோ (குருகுலத்து ஆசிரியர் )...எங்கள் வாள் வீச்சுக்கு எதிர் நிற்க ?'என்றான் அழகன் .

"உண்மை தான் அண்ணலே ....என் தாதை பௌரவரே ...அதுவும் உங்களுக்கும் ,இளவரசருக்குமே.."என்றவள் தன் ஆடை மறைவில் இருந்து "தேவநாராயணர் "இலச்சினை எடுத்து விளக்கொளியில் காண்பிக்க ,ஆதித்யனும் ,அழகனும் அதிர்ந்து நின்றனர் .

அப்பொழுது தான் அவர்களுக்கு புரிந்தது ,தேவநாராயணர் சொன்ன வழிகாட்டி அவள் தான் என்றும் ,அவள் தான் அவரின் குமாரத்தி என்பதும் .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
அதுவரை இருந்த சந்தேகம் விலகி விட ,"வணக்கம் பின்னையே (தங்கை )...இந்த நேரத்தில் தாங்கள் இங்கே ...."என்று இழுத்தான் அழகன் .

"அண்ணலே !....கச்சியம்பதி இங்கிருந்து சில காத (கிலோமீட்டர் ) தூரம் தான் .தாதை அவர்கள் இளவரசரின் கட்டளை நிறைவேற்றும் பொருட்டு ,கச்சியம்பதியில் குடி இருந்து சாதரூபம்(தங்கம் ) கொண்டுகந்தவராம் (அரண்மனை )எழுப்பும் கல்வினையாளர் பணியில் உள்ளார் ...அங்கு மலைகுடி பெண்கள் கனி ,தேன் ,போன்றவற்றை பண்டமாற்றம் செய்ய வருவார்கள் ...இந்த கானகம் அவர்களின் மனை (வீடு ).அவர்களுடன் உலவ சென்ற போது தான் செருக்களத்தில் புறமுதுகிட்டு ஓடி வந்த கோழையான வீரபாண்டியனை இங்கு கண்டேன் ...தாதைக்கு வேயர் (ஒற்றர் )மூலம் தகவல் அனுப்பினேன் ...அவர் உங்களுக்கு ஓலை விடுத்தார் .உங்களுக்கு அயனம் காட்ட என்னையும் அனுப்பி வைத்தார் ....உங்கள் வரவுக்காகவே காத்து இருக்கிறேன் ...."என்றாள் அவள் .

"அண்ணலே !....கச்சியம்பதி இங்கிருந் கானகம் அவர்களின் மனை (வீடு ).அவர்களுடன் உலவ சென்ற போது தான் செருக்களத்தில் புறமுதுகிட்டு ஓடி வந்த கோழையான வீரபாண்டியனை இங்கு கண்டேன் ...தாதைக்கு வேயர் (ஒற்றர் )மூலம் தகவல் அனுப்பினேன் ...அவர் உங்களுக்கு ஓலை விடுத்தார் .உங்களுக்கு அயனம் காட்ட என்னையும் அனுப்பி வைத்தார் ....உங்கள் வரவுக்காகவே காத்து இருக்கிறேன் ...."என்றாள் அவள் .

"பின்னை வழி சொல் ...அது போதும் ...ஆபத்தான இடத்திற்கு எல்லாம் தாங்கள் வர வேண்டாம் ...."என்றான் அழகன் .

"உங்கள் உத்தரவு நான் கேட்கவில்லையே அண்ணலே ...."என்றவள் வாயில் வினோத ஒலி எழுப்ப அங்கு ஓடி வந்து நின்றது அவள் வெள்ளை நிற பரி (குதிரை )அதில் நளினத்தோடு அவள் ஆரோகணித்து ஏறி அமர்ந்த உடன் புரவி ஒரு முறை தன் முன்னங்கால்களை தூக்கி கனைதது .

"கூதிர் (குளிர் காற்று )அதிகமாய் உள்ளது ....விடிவதற்குள் அவர்கள் இடத்திற்கு சென்றால் தான் இவர்களை தாக்கி அழிக்க முடியும் ....காலம் ..."என்றவள் கடக்கும் முன் நெடுந்தொலைவூ பயணிக்க வேண்டும் ...வாருங்கள் ." என்றவள் புரவியை முடுக்க முயல அதை தன் கைகளால் தடுத்து நிறுத்தினான் அழகன் .
"பின்னையே !தங்கள் பெயர் ..."என்றான் அழகன் .


"நித்திலவல்லி "என்றாள் அவள் .அவள் கண்கள் இளவரசனின் கண்களோடு ஒரு நொடி கலக்க ,அவன் கண்கள் மின்னியது .அவள் பெயர் இறுதியில் "முத்து ".

'இந்த முத்து தனக்கு உரிமை உள்ளதா ?'என்று ஆதித்யன் கேட்டானோ அதே பெயர் தான் அவளுடையது என்பது தான் விதி என்பதா ?

(இதே பெயர் தான் பிற்காலத்தில் ஒருத்திக்கு இருப்பதா -"ச-முத்து -ரா ")

இதழில் குறுநகை அரும்பி இருக்க ,மையிட்ட கண்கள் கருவண்டாய் அவன் மனதை கொய்ய ,அவன் கண்கள் காதலை பறையறிவிக்க அதற்கு மேல் அங்கு நிற்க தயங்கியவளாய் தன் புரவியை முடுக்கி விட ,அது காற்றை கிழித்த அம்பாய் அடர்ந்த கானகத்தில் இருளில் பாய்ந்து சென்று மறைந்தது .

"இளவரசே !"என்று அழகன் தயங்க ,"தொடர்ந்து செல்வோம் அழகா ....குருவின் மகள் ....முக அமைப்பு சொல்கிறதே ....இன்னுமா உனக்கு தயக்கம் ?"என்றான் ஆதித்யன் தன் கரிய நிற புரவியான கோரத்தை (சேர ,சோழ ,பாண்டிய மன்னர்களின் புரவிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு பெயரில் அழைப்பார்கள் .சோழ அரச குல புரவிகள் -கோரம் என்று அழைக்க படும் ) முடுக்கி விட ,நித்திலாவல்லி சென்ற காட்டு பாதையில் அவன் புரவி சீறி பாய்ந்தது .

அவன் பின் வந்த அழகன் ,"தயக்கம் தேவியை நம்பாததால் வந்தது இல்லை ...நாம் செல்வது வீரபாண்டியனை கொல்வதற்கு ...இதில் ஒரு மங்கையை ஈடுபடுத்துவதை தான் ஏற்க முடியவில்லை ...அவர்களுக்கு ஏதாவது ஒரு ஆபத்து நேரிட்டால் ...நாளை அயன்மீர்க்கு யார் பதில் உரைப்பது ?"என்றான் அழகன் .

"முன்னமே உன்னிடம் கூறி இருக்கிறேன் அழகா ....நான் சக்கரவர்த்தி ஆன பிறகு பெண்கள் படை குழு ஒன்று ஏற்படுத்த போகிறேன் ....செருக்களத்தில் ஆண்களுக்கு நிகராய் இந்த பெண்களும் வில் ,வாள் ஏந்தி போரிட தான் போகிறார்கள் ....இந்த புதுமையை உலகிற்கு கூற போகும் அறுவகை தானை (army )நம்முடையது தான் ....காரிகை (பெண்கள் )என்று அற்பமாய் நினைத்து விடாதே அழகா ...அவர்களின் உரண் (அறிவூ ),தெருள் (தெளிவு ),ஆள்வினை (முயற்சி ),கூர்மை (பேரறிவூ )ஆண்களுக்கு கூட கிடையாது ... இதோ என் கனவிற்கு உருவமாய் முன் செல்லும் நம் குருவின் குலத்தை பார் ..."என்றான் ஆதித்யன் .
 




Attachments

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நித்திலவல்லி புரவி மேல் செல்லும் அழகை வர்ணிக்க இனி எல்லா மொழியில்லும் வார்த்தைகளை உருவாக்கினால் கூட போதாது என்றே தோன்றியது ஆதித்யனுக்கு ...மரக்கிளைகள் ,படர்ந்து இருக்கும் கொடிகள் என்று அனைத்தையும் வளைந்து ,நெளிந்து ,குனிந்து அவள் கடந்த விதம் புரவி மேல் ஆடப்படும் புது வித நர்த்தனமாய் (நடனமாய் )தோன்றியது காதலில் முழு சரண் அடைந்து இருந்த ஆதித்யனுக்கு .

அழகு...பேரழகு ,தேசத்தின் மீது உண்மையான பற்று ,அதற்காக இளவரசன் என்று தெரிந்த பிறகும் எதிர்த்து பேசிய துணிவூ ,நாட்டிற்காக சுக ,போகங்களை விட்டு கானகத்தில் அயனம் சொல்ல வந்தது என்று எல்லா உயர்ந்த குணங்களின் கலவையாக பெண்ணவள் இருந்தால் ,மனம் விரும்பாமல் என்ன செய்யும் ?

எண்ணரும் நலத்தினாள் இனையள் நின்றுழிக்
கண்ணொடு கண்ணினை கவ்வி ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

கற்பனை செய்யவும் முடியாத அழகையுடைய சீதை,கன்னி மாடத்தில் அழகுடன் நின்ற போது,இராமன் மற்றும் சீதையுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவர்ந்து,அவர்களுடைய மனங்கள் அலை பாய்ந்து,பின்னர் இரண்டும் ஒன்று சேர,இராமனும் சீதையைசீதையைப் பார்த்தான்,சீதையும் இராமனைப் பார்த்தாள்.--என்று எழுதிய வரிகள் ஆற்றின் நடுவே இவர்களுக்கு மெய் ஆனது.

ஒற்றை பார்வையில் மறைபுகல்(சரண்புகல் )நடக்குமா ?நடந்து விட்டது ...ஆதித்யன் தன் மனதை பெண்ணவளிடம் கொடுத்து விட்டு வெறும் கூடாய் பின் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறான் .

முன் செல்லும் பேதையவளோ ,ஆதித்யனை முன்னரே பார்த்து ,மனதை பறிகொடுத்து ,குலம் என்ற அரண் தடுக்க ,மனதிற்குள் மருகி கொண்டு இருக்கிறாள் ...
அழகன் முன் சென்று விட ,இளவரசனுக்கு இணையாய் புரவியை செலுத்தி கொண்டு இருந்தாள் நித்திலவல்லி .

குறுகலான வழித்தடம் ஆகையால் ,புரவிகள் நெருக்கமாய் செல்ல ,அதில் இருந்த இவர்கள் மிக நெருங்கினார்கள் .கைகள் ,கால்கள்,தோள்கள் உரச ,அந்த கானகமே இவர்கள் விடும் வெப்ப மூச்சினில் பற்றி ஏரியாதது அதிசயமே .

காதல் ,காமம் என்ற பிரளயம் மதனன் (மன்மதன் )இருவருக்குள்ளும் ஏற்படுத்தி சல்லியக்காரணி (மருந்து )ஒருவருக்கு ஒருவர் மட்டுமே .புரவிகள் எழும்பி குதிக்க ,ஆதித்யனின் கரம் இடையில் உரச ,அதன் வீரியம் தாங்க முடியாதவளாய் புரவியில் இருந்து சரிந்த நித்திலாவல்லியை ,"தேவி !"என்று பதறி அழைத்து ஒற்றை கையால் புரவியில் இருந்து அவளை தூக்கி தன் புரவியில் தனக்கு முன்னே இருத்தி கொண்டான் .

அவள் கரங்கள் அவன் தோளினில் பூஞ்ச்சரம் கொழுகொம்பை பற்றுவது போல் பிடித்து கொள்ள ,அவன் கரங்கள் அவள் வெற்றிடையில் பதிந்தது .

'இருந்தாலும் நாயகருக்கு கள்ளத்தனம் அதிகம் தான் ......மற்றவர்களுக்கு புரவி பயிற்சி அளிக்கும் நான் தான் புரவியில் இருந்து கீழே சரிய போகிறேனாம் ...கள்ளர் ..... இது தான் சமயம் என்று இவ்வளவூ நெருங்கி விட்டாரே ...கள்ளர் ...அதை தானே நானும் எதிர் பார்த்தேன் ....ஆயுகம் முழுதும் இப்படியே தலைவனின் கைவளைவில் இப்படியே சென்று கொண்டு இருந்தால் அதை விட வேறு பேரு என்ன வேண்டும் ?'என்றது நித்திலவல்லியின் மனம் .-

தேன் மழை பொழியும் ...
 




Attachments

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
brackets la irukkura Tamil words ellam entha kalthila use pannirukkanga honey dear sanga Kala Tamil, செந்தமிழ், இந்த மாதிரி ஒரு வகையான தமிழா? Midnight la poojai pannravangala pakka porangala dear ivanga????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top