• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதலில் சொதப்புவது எப்படி...? Epi - 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் பிரெண்ட்ஸ்...

எல்லாரும் எப்படி இருக்கீங்க? குறுநாவல் போட்டிக்கான கதை தான் காதலில் சொதப்புவது எப்படி..? பாதி பேர் முடிச்சுட்டாங்க, பாதி பேர் முடிக்க போறாங்க... ;);) நான் இப்போ தான் ஆரம்பிக்கவே செய்யுறேன்... ஒரு சாதாரண கதை தான். படிச்சு உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க....

FB_IMG_1562418129843.jpg

@@@@@@@@@@@@@@@@@@@@@@

அத்தியாயம் – 1

தந்தையின் மறைவுக்குப் பின் தான் எத்தனை மாற்றங்கள்...

எத்தனை சரிவுகள்... எத்தனை கஷ்டங்கள்...

பொருளாதாரத்தில்... குடும்ப சூழ்நிலையில்... அம்மாவின் மருத்துவ செலவில்...

விபரம் அறியாத தங்கச்சி...

விளையாட்டு தம்பி...

அப்பாவின் சொற்ப பென்சனைத் தவிர எந்தவித வருமானமும் இல்லாத, எதிர்காலம் என்ன என்று அறியாத வாழ்க்கை தான் மிதுனாவின் வாழ்க்கை.

வாழ்கையின் போக்கை அறிய முடியாமல், கணிக்க முடியாமல் வேறு வழியில்லாமல் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி தந்தை செய்த வேலையை செய்தாள்.

கூட்ட நெரிசலில் பஸ்ஸில் நசுங்கி, டிபன் பாக்ஸ் அடைத்த ஹேண்ட் பாகுடன் வியர்க்க விறுவிறுக்க அலுவலகத்திற்கு ஓட கற்றுக் கொண்டாள்.

நிறுத்தி, நிதானமாக நடக்க பழகியவள், வாழ்கையின் போராட்டத்தில் ஓட கற்றுக் கொண்டாள்.

கிடைக்கும் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளத்திற்காக இரவு ஏழு மணி வரை உழைக்க கற்றுக் கொண்டாள்.

வீடு வந்ததும் அக்கடா என்று இருந்து விட முடியாதபடி வரிசையாய் வேலைகள் தொடரும். தாயாரின் மருந்துகளை வேளா வேளைக்கு வரிசையாக பிரித்து கொடுப்பதில் இருந்து, சமையல் வேலைகள் தொடர்ந்து தம்பி, தங்கையை படிக்க வைப்பது வரை எல்லா வேலையையும் முகம் சுழிக்காமல், உற்சாகமாய் செய்வாள்.

தாய், சாதனா தான் ‘மகிழ்ச்சியாய் துள்ளி திரிய வேண்டிய வயதில் தன் செல்ல மகள் மாடாய் உழைத்து கஷ்டபடுகிறாளே’ என்று கண்ணீருடன் நொந்துக் கொள்வாள்.

சில சமயம் மனம் கேளாமல், “ரொம்பவும் உன்னை தொந்தரவு பண்ணுறேன்ல கண்ணு” என பிதற்றுவாள்.

அப்பொழுது மனதில் தோன்றும் சந்தோஷ வார்த்தைகளை தாய்க்கு ஆறுதலாய் கூறி, சந்தோசமாய் தாயுடன் பேசிக் கொண்டே வேலைகளை தொடர்வாள்.

சட்டென்று ஏற்பட்ட வீழ்ச்சியில், சுற்றம் எல்லாம் விலகிட, ஒரே ஒரு சொந்தமாய் அப்பாவின் தங்கை தன் கணவனுடன் தங்கிக் கொண்டார்.

குழந்தைகள் இல்லாத அவருக்கு, அண்ணன் குழந்தைகளே தன் குழந்தைகள் என எண்ணி வாழ்கிறார்.

எங்கெல்லாமோ சுற்றி திரிந்து எப்படி எல்லாமோ பிழைப்பை தேடி, அது கைகூடாமல் போக கடைசியில் இவர்களுக்கு பாதுகாப்பாய் வந்து தங்கிக் கொண்டனர். இவர்கள் வந்தது மிதுக்கு கொஞ்சம் ஆறுதலாய், பாதுகாப்பாய் அமைந்தது.

கந்தசாமி மாமாவால், எந்த வருமானமும் கிடையாது தான், அதே போல அவரால் எந்த உபாதையும் கிடையாது.

அவ்வ போது பீடிக்கும், வெற்றிலைக்கும் மட்டுமே அவளை தாங்கி நிற்பார். அதுவும் சில நேரம் மனைவி துணி தைப்பதில் வாங்கிக் கொள்வார்.

அவளிடம் வந்து நிற்கும் பொழுதெல்லாம் மிது கண்ணு ஒரு பத்து ரூபா தாம்மா என்றபடி கொஞ்சி வாங்கிக் கொள்வார்.

மிதுவும் அவரின் கொஞ்சலை ரசித்தபடி, அவரிடம் கொஞ்சம் போக்கு காட்டுவாள். சில நேரம் சாமி மாமா அவள் கண்களுக்கு தன் தந்தையாக தெரிவார்.

அதற்காகவே அவரை நிறைய கொஞ்ச வைப்பாள் மிது. மிகவும் பாசமான மனிதர்.

நேரம் ஆகவே தன் நினைவுகளில் இருந்து கலைந்தவள் அவசரமாக கிளம்பி, டிபன்பாக்ஸ் எடுத்துக் கொண்டு தன் தாயிடமும், அத்தயிடமும் கூறிக் கொண்டு வேகமாய் பஸ் ஸ்டாண்ட் நோக்கி ஓடினாள். அந்த பஸ் விட்டால் இனி எப்பொழுதோ?

கூட்ட நெரிசலில் நசுங்கி ஆபிஸ் வந்து வாசலில் நிற்கவும் மேனஜர் ரகுநாதன் அவளை அழைப்பதற்கும் சரியாக இருந்தது.

அவளிடம் சில பைல் டீட்டையில் கேட்க, அவரிடம் கூறியவள் தன் இருக்கையில் வந்து அமர்ந்துக் கொண்டாள்.

மனம் தன் தாயையே சுற்றி வந்தது. தன் தாயின் உடல் நிலை அவளை எந்த வேலையையும் செய்ய விடாமல் தடுத்தது.

அவள் முன் வந்து நின்றார் ரகுநாதன். ஆனால் அவள் அவரை கண்டுக் கொள்ளவே இல்லை.

கைகளை கட்டியபடியே அவளையே பார்த்து நின்றார் ரகுநாதன்...

“என்னம்மா விசயம்? என்னாச்சு?”

“......”

அவள் முன் சேரை இழுத்துப் போட்டவர், அதில் அமர்ந்துக் கொண்டு அவளையே பார்த்திருந்தார்.

“மிதுனா”

“.............”

அங்கிருந்த பென்னை எடுத்து மெதுவாக அவளை தட்ட, அதிர்ந்து விழித்தாள் அவள்.

“சாரி ஸார்”

“என்னாச்சு என்ன விஷயம்?”

பெரும்பாலும் அவளின் விஷயத்தை யாரிடமும் கூறமாட்டாள். அவளுக்கு அது பிடிக்கவும் செய்யாது. ரகுநாதன் மிகவும் நல்லவர் தான் அவளின் தந்தையின் வயதை ஓட்டியவர்.

அவர் மீண்டும் மீண்டும் கேட்கவே இனியும் அவரிடம் விஷயத்தை மறைப்பது நல்லதல்ல என்பது போல் அத்தனை கொட்டிட எண்ணினாள். அப்படி கொட்டினால் மன பாரமும் குறையும் என்று எண்ணினாளோ என்னவோ?

“அவளின் அம்மாவுக்கு உடல் நிலை மிகவும் மோசமாகி விட்டதாம், வயிறு, கை, கால்கள் எல்லாம் பெரிதாக வீங்க ஆரம்பித்து விட்டது.

உப்பும், சர்க்கரையும் அதன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டது. உடலில் பல உறுப்புக்கள் பாதிப்படைந்து விட்டன.

இனி மருத்துவ மனையில் வைத்து தான் பார்க்க வேண்டும் என்றும், அடிக்கடி டயாலிசிஸ் செய்ய வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

மருத்துவமனையில் முதல் கட்ட செலவே இரண்டு லட்சம் வேண்டுமாம் எங்கு செல்வாள் அவள். கிடைக்கும் ஐந்தாயிரம் சம்பளமும், அத்தையின் துணி தைக்கும் பணமும் வீட்டு செலவும், அம்மாவின் மருந்து செலவுக்குமே சரியாக இருக்கும் பட்சத்தில் இந்த மொத்த பணத்துக்கு என்ன செய்வாள்?

டாக்டர் முதலில் சொல்லவும் இடி விழுந்ததை போல் உணர்ந்தாள் மிது. முழுதாய் இரண்டு லட்சம். அவளின் ஐந்து வருட உழைப்பு முழுதாய் ஒரே நாளில் எப்படி அவளால் புரட்ட முடியும்...

எங்கே கிடைக்கும்...? எப்படி கிடைக்கும்...?

விஷயத்தை கேள்வி பட்டதிலிருந்து மனம் பதைபதைத்தது பிரமை பிடித்தார் போல் அமர்ந்துவிட்டாள்.

கடவுளே! தாயாரின் உயிரை காப்பாற்றாமல் போய் விடுவோமோ என்ற பயம் அவளை ஆட்ட ஆரம்பித்தது.

துடிக்க துடிக்க அவள் தாய் அவள் கண் முன்னால் மரணத்தை ஏற்க போகிறாரா? என்ன கொடுமை இது, அவளால் தாங்கமுடியவில்லை.

என்ன செய்ய போகிறாள்? கிடைக்கும் ஐந்தாயிரத்தை வைத்து என்ன செய்வது. மிகவும் பெரிய தொகை.

“நடக்குற படி நடக்கட்டும். நான் போகவேண்டியதாக இருந்தால், போக தான் வேண்டும், நீ வீணாக கஷ்ட படாதே செல்லம்?” தாய் பல முறை கூறி விட்டார்.

ஆனால் அவர் கூறும் பொழுது அவளுக்கு தான் உயிர் போவது போல் இருந்தது. எப்படி கண் முன்னால் தன் தாயை சாகவிடுவது. “நீ பேசாமல் இரும்மா... எல்லாம் நான் பாத்துக்கிறேன்?” எப்படியோ சமாதனபடுத்தி வைத்திருந்தாள்.

தாய் படும் கஷ்டத்தை கண்டு தங்கையும், தம்பியும் அழ, ஒரு வழியாய் சமாதானபடுத்தி, ஆறுதல் செய்து வேலைக்கும் கிளம்பி வந்து அவரிடமும் கூறிவிட்டாள். இப்பொழுது ஆர்வமாய் அவர் முகத்தை பார்த்திருந்தாள்.

“இரண்டு லட்ச ரூபாய் மிகவும் பெரிய தொகை தான்” மெதுவாக உச்சரித்த ரகுநாதனுக்கே மலைப்பாக இருந்தது. அவரும் இப்பொழுது தான் மகளுக்கு திருமணத்தை முடித்து கொஞ்சம் கடனில் இருக்கிறார். இல்லை என்றால் கண்டிப்பாக இவளுக்கு உதவி இருப்பார்.

இப்பொழுது அவரால் மட்டும் அல்ல... யாராலும் உதவமுடியாது மிகவும் பெரிய தொகை. எதை நம்பி அவளுக்கு பணம் கொடுப்பர்.

விட்டேற்றியாய் உதடுகளை பிதுக்கியவர் சோகம் பொங்க மிதுவைப் பார்த்தார்.

“கஷ்டமான சூழ்நிலை! என்னாலும் உதவ முடியாது. நம் முதலாளியிடமும் கேட்க முடியாது. வெளிநாடு போயிருக்கிறார்”

‘இங்கு இருந்தால் மட்டும் முதலாளி கொடுத்து விடவா போகிறார்? யோசிக்க தான் செய்வார்?’
 




Last edited:

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
மிது அன்று அதன் பிறகு வேலையில் மூழ்கிப் போனாள். மாலை வேலை முடிந்து வீட்டுக்கு மிகவும் சோர்வுடன் தான் கிளம்பினாள்.

அத்தை அப்பொழுது தான் தம்பி, தங்கையை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றாளாம் அம்மா கூறினார்.

அடுத்த கொஞ்ச நேரத்தில் அவளை தேடி வந்தார் ரகுநாதன்.

“யம்மா மிது, ரெண்டு லட்ச ரூபாய் ரெடி” என்ற சந்தோஷ செய்தியுடன்.

ரகுநாதன் சொன்னதை ஒரு கணம் அவளால் நம்ப முடியவில்லை. “எப்படி” என்றாள் பரபரப்புடன்.

“ஆனால் நீ சம்மதிக்க வேண்டுமே?” பீடிகை போட்டார் ரகுநாதன்.

“நானா?”

“ஆமாம் நீ தான் பாட்னா செல்ல வேண்டும். ஆறு மாதங்கள்”

“என்ன? நான் பாட்னா செல்ல வேண்டுமா?” உள் அறையை எட்டிப் பார்த்து மெதுவாக வினவினாள் அவள்.

“ஆமா, மிது நீ அங்கு போகவேண்டும், அப்பொழுது தான் உனக்கு நீ கேட்ட பணம் கிடைக்கும்?”

அதற்குள் தாயின் குரல் வரவே “சார்... மீதியை ஆபிஸ் வந்து கேட்டுக் கொள்கிறேன்... அம்மாவுக்கு தெரியவேண்டாம்” மிகவும் ரகசியமாக கூறியவள் அவரை வழியனுப்பி விட்டு தாயை கவனிக்க சென்றாள்.

கட்டிலில் அவள் வருகையை எதிர் பார்த்தது போல் மிகவும் சிரமத்துடன் எழும்ப முயற்சி செய்துக் கொண்டிருந்தார் சாதனா.

தாயை கண்டதும், முகத்தில் தோன்றிய குழப்பத்தை அவளுக்கு காட்டாதபடி அனைத்து பற்களையும் காட்டி அழகாய் தாயை பார்த்து புன்னகைத்தாள்.

தாயாருக்கு வேண்டிய உணவை எடுத்து வந்தவள் அவர் கையில் கொடுக்க “எதுக்கு செல்லம் இத்தனை அவசரம்” என்றபடி கையில் வாங்கிக் கொண்டார்.

மிதுவும் அப்படியே தாயின் அருகில் அமர்ந்துக் கொண்டாள்.

நடுங்கும் கரங்களால் மகள் தலையை மெதுவாக கோதி விட்டாள் தாய் “எனக்காக ரொம்ப வருத்த படாத கண்ணு”

ஒரு நிமிடம் தாயை நிமிர்ந்துப் பார்த்தாள் சாதனா. பளபளப்புடன் எப்பொழுதும் புன்னகையை சுமந்திருக்கும் தாயின் முகம் இப்பொழுது சுருக்கம் விழுந்து வயதை அதிகமாக காட்டியது.

தாயின் வலுவான உடல் நோய் வாய்பட்டு மெலிந்து, உருக்குலைந்து காணப்பட்டது. ‘தாயின் முன் அழ கூடாது’ என மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டாள்.

சாதனாவின் நிலையும் அப்படி தான். தனக்காக ஓடாய் தேயும் செல்ல மகளின் நிலைக் கண்டு துடித்து அடக்க முடியாமல் கண்ணீரை சொரிந்தன அவள் கண்கள்.

அவளுக்கும் புரிந்தது, தாயாருக்கு உடம்பு வேதனை மட்டும் இல்லாமல் தன்னால் எதுவும் செய்ய முடியாமல் அவளுக்கு பாரமாய் போய் விட்டோமோ என தாய் வேதனைப்படுகிறாள் என அவள் அறியாமல் இல்லை.

அப்படியே தாயை அணைத்துக் கொண்டு ஆறுதல்படுத்தினாள். டாக்டர் சொன்ன ஒரு வார கெடு மனதில் வந்து பூதாகரமாய் மிரட்டியது.

ஒரு வாரத்திற்குள் பணத்தை ரெடி பண்ணவில்லை என்றால் தாயை காப்பாற்ற முடியாதாம். முழுதாக இரண்டு லட்சம். ‘நாளை சார் என்ன சொல்கிறார்’ என பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.

காலையில் மிகவும் வேகமாக கிளம்பி ஆபிஸ் நோக்கி சென்றவள் நேராக ரகுநாதன் அறையில் தான் போய் நின்றாள்.

“முதலாளியின் தாய் உடம்புக்கு முடியாமல் இருகிறாராம். அவரை கவனிக்க ஒரு பெண் தேவையாம். சொல்ல போனால், அவருக்கு துணைக்கு ஒரு ஆள் தேவையாம்.

ஏற்கனவே ஒரு நர்ஸ் இருக்கிறார் தான். ஆனால் அவருக்கு புக் படிக்க, அவர் கூட பேச ஒரு ஆள் வேண்டுமாம். அவரின் சொந்த ஊர் பாட்னா என்று முன்னாடியே கேள்வி பட்டிருக்கிறாள் தான்.

அவர், தன் சொந்த ஊர், சொந்த மண்ணை விட்டு வரமாட்டாராம். அது தான் ஒரு பொறுப்பான பொண்ணை தேடினாராம். அப்பொழுது தான் நீ அவர் கண்ணில் பட்டியாம்” மெதுவாக கூறினார்.

“இரண்டு லட்சம் மட்டும் இல்ல, உன் அம்மாவோட எல்லா செலவையும் ஏற்றுக் கொள்வதாய் கூறிவிட்டார்.

பணத்தை ஹாஸ்பிட்டலில் செலுத்தி விடுவார்களாம். நீ உடனே ஓகே சொன்னால் இன்றே பணத்தை செலுத்தி விடுவார்களாம்.

உடனே உன் அம்மாவுக்கும் மருத்துவ சிகிச்சையும் ஆரம்பித்து விடலாம் என்ன சொல்கிறாய்?”

“நிஜமாகவா சார்..?” நம்ப முடியாமல் கேட்டாள்.

“உண்மை தான் மிது. இப்போ உன் அம்மாவை காப்பது உன் கையில் தான் இருக்கு?”

தன் தாயின் முகத்தை மனதில் கொண்டு வந்தவள் உடனே “சரி” என கூற, அடுத்த நாளே அவள் தாய் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டு சிகிச்சையும் ஆரம்பிக்கப்பட்டது.

சிகிட்சை பணம் இரண்டு லட்சமும் முழுதாக கம்பெனி அவள் பெயரில் கட்டியது. அப்பொழுது அவள் தாயின் முகத்தில் தோன்றிய சிரிப்பை வாழ் நாளில் அவளால் மறக்க முடியாது.

சாதனாவின் உடல் கொஞ்சம் கொஞ்சமாய் சிகிட்சையில் முன்னேற்றம் அடைய தான் கூறியபடியே பாட்னா செல்ல அதற்கான வேலையை ஆரம்பித்தாள் மிது.

அந்த மாத இறுதியில் கிளம்பினாள். இங்கு தனக்களித்த வேலையை பொறுப்பாக முடித்து விட்டு தான் கிளம்பினாள். இதில் அவளின் முதலாளிக்கு அவள் மேல் கொஞ்சமாய் நம்பிக்கை பிறந்தது போலும்,

பாட்னா செல்ல அவளுக்கு டிக்கெட் அவள் கையில் வந்து சேர்ந்தது. கூடவே கம்பெனி முதலாளியும் வருகிறாராம்.

தாய், அத்தை, தங்கை, தம்பி, ரகுநாதன், என எல்லாரிடமும் பிரியா விடை பெற்று, ஸ்டேஷன் வரை மாமாவை அழைத்து வந்து சங்கமித்ரா ரயிலில் ஏறிக் கொண்டாள்.

தனது கூபேயில் ஏறி அமர்ந்தவளை “வா மிதுனா?” என்ற குரல் கலைப்பதாய்.

அங்கு முதலாளியின் மகன் நெடுநெடுவென உயரத்தில் முறுக்கிய மீசையும், திடமான உடற்கட்டுடன், வேஷ்டி சட்டையில் அலட்சியமாய், கூலிங் கிளாஸ் அணிந்து இவளையே கூர்மையாக பார்த்தபடி ்பஅமர்திருப்பதை கண்டு அதிர்ந்துப் போனாள்.
 




Thoshi

அமைச்சர்
Author
Joined
May 23, 2018
Messages
2,422
Reaction score
4,974
Age
25
Location
Chennai
மிதுனா தான் கதாநாயகியா ???அது யாருக்கா கடைசியா நம்ப கதாநாயகியை அதிர்வெக்குறது ?? வில்லனா??? ஆனா வர்ணனையை பார்த்தா ஹீரோ மாதிரில இருக்கு???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,040
Reaction score
49,883
Location
madurai
சாதாரண கதைனா ஹீரோயின் எப்படி இருக்காங்கனு சொல்ல கூடாதா? author ji:unsure::unsure: ஹீரோ என்ட்ரி யா? next epi எப்போ .... எனக்கு 80 's கதை படிச்ச பீல் வருது ji:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top