• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 03

2019-10-08-16-39-03-866.jpg

அத்தியாயம் 04

ஓடிக் கொண்டிருக்கும் ரயிலில் அன்று நடந்த கான்பிரன்ஸில் தான் கலந்துரையாடிய விஷயங்களை தனது அலைபேசியில் அலசிக் கொண்டிருந்தான் ஜிஷான் ரிஸ்வி. சற்று முன் மைசராவோடு மல்லுக்கு நின்றவன். அவனது அலைபேசியில் ரமீஸின் அழைப்பு வர, திரையில் மின்னிய பெயரை கண்டவன் முகம் கனிய அழைப்பை எடுத்தான்.

“அஸ்ஸலாமு அலைக்கும்.(வணக்கம்)”

“வஅலைக்கும் அஸ்ஸலாம் (பதில் வணக்கம்) . ரிஸ்வி பயணமெல்லாம் சவுகரியமா இருக்கா?” என்றான் ரமீஸ்.

“எல்லாம் நல்லாயிருக்கு ரமீ.”

சிறிது நேரம் பொதுவாக பேசிய பின், “ரிஸ்வி! ஒரு சின்ன உதவி….” என இழுத்தான் ரமீஸ்.

“சொல்லு ரமீ” என ஊக்கினான்.

“உனக்கு எதிருல ஒரு பொண்ணு இருக்காயில்லையா” என்றதும் ரிஸ்வி நிமிர்ந்து பார்த்தான். அங்கே ஒரு ஆண் தான் அமர்ந்து இருந்தார். சற்றே குழம்பியவன் இது நமது இருக்கையில்லையே மன்சூர் அமர்ந்திருப்பது தானே தனது இருக்கை என தெளிந்தவனுக்கு ரமீஸ் சொல்வது அந்த திமிரு பிடிச்சவளை போலவே என புரிந்தது.

“ஆமா.”

“அவ பேரு மைசரா மெஹர். நம்ம ரிதாவோட ப்ரெண்ட் தான். நம்ம வீட்டுக்கு தான் வர்றா ரிஸ்வி….. தனியா வர்றா….. கொஞ்சம் பயந்த சுபாவம் வேற. அவளை கொஞ்சம் பார்த்துக்கோ. அதுக்கு தான் கால் பண்ணேன்”

“யாரு? அவ பயந்த சுபாவமா? திமிரு புடிச்சவ. விட்டா ஊரையே வித்துட்டு வந்திடுவா. இவளுக்கு நாம காவலா?” என மனதிற்குள் மைசரா பற்றி சிறு கட்டுரை எழுதியவன் ரமீஸிடம்,” நான் இந்த பக்கம் மன்சூர் ஸீட்ல உட்கார்ந்திருக்கேன் ரமீ. மன்சூர் தான் அந்த பொண்ணு எதிருல உட்கார்ந்திருக்கான். நான் அவன கவனிச்சிக்க சொல்றேன்” என்றான்.

“நோ… நோ ரிஸ்வி. மன்சூரை நம்பியெல்லாம் பொறுப்பை கொடுக்க முடியாது. அவன் சின்ன பையன்…. விளையாட்டு தனமா இருப்பான். முடிந்தால் நீ பார்த்துக்கோ…இல்லைனா பரவாயில்லை விடு.”

தன் தாய் மாமன் மகனின் மனதை புண்படுத்த விரும்பாத ரிஸ்வி,” ok…ok….I will take care of her Rameez. You don’t worry” என்றான் தன்மையாக.

“ ம்… மைசரா கிட்ட போன் கொடுத்தா நான் அவ கிட்டயும் சொல்லிடுவேன். பயப்படாம வருவா பாரு”

“ எப்படி.... எப்படி.... நான் போய் அவ கிட்ட என் போன கொடுக்கணுமா? ஏன் அந்த வாயாடி கிட்ட போன் இல்லையா ? மனசுக்குள் வார்த்தைகள் கனன்றாலும் வாய் விட்டு எதையும் கூறவில்லை அவன். தன்னை விட மூத்தவன் என்றாலும் எப்போதும் நட்பும் பாசமும் இழையோட பேசும் ரமீஸிடம் எப்போதுமே ரிஸ்வியால் தன் கோபத்தை காட்ட முடியாது. தனக்கு பிடிக்கவில்லை என்றால் முகத்திற்கு நேராக சொல்லி விடுபவன் ரமீஸ் சொன்னால் மட்டும் மறுக்காமல் கேட்டு கொள்வான். அது ஏன் என்பது அவனுக்கே புரியாத விந்தை.

சில நொடிகள் அமைதியாய் இருந்தவன்,” அவங்க ரெஸ்ட் ரூம் போயிருக்காங்க போல. அவங்க வந்ததும் நானே சொல்லிடுறேன்” என புளுகி விட்டு அழைப்பை துண்டித்தான்.

“ பேர பாரு மைசராவாம் மைசரா… அடியே முட்ட போண்டா…. எங்க வீட்டுக்கு தான் வரீயா? தூங்கிட்டு இருந்த சிங்கத்த சொறிஞ்சி விட்டுட்டயில்ல...வாடி…. உன்னை கதற விடுறேன்…” என கருவி கருவி மகிழ்ந்தான் ரிஸ்வி.

“ஹூம்….மன்சூரை நம்பாமல் நம்மளையே கவனிக்க சொல்ற அளவுக்கு அந்த பிசாசு அவ்ளோ ஸ்பெஷலா? என்னடா இது ரிஸ்விக்கு வந்த சோதனை? பஜாரிக்கு பாடிக்காட் தேவையா? ” என வித விதமாக பொருமியவன், ஏற்ற பொறுப்பை தட்டி கழிக்காமல் எழுந்து அடுத்த பக்கம் போனான்.

ரிஸ்வி சற்றே முரட்டு சுபாவம் உள்ளவன் ( ரசியாவின் மகனல்லவா?). கோபக்காரன். லேசில் யாரிடமும் ஒட்ட மாட்டான்.ஆனால் நல்லவன். நல்ல பண்புகளை கொண்டவன் (அவனது தந்தை போல). இளம் வயதிலேயே தொழில் துறையில் அசாத்திய திறமை உடையவன். அவனுடைய இந்த முரட்டு சுபாவத்தால் யாரும் அவனிடம் அதிக வம்புகள் வைத்து கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவனது பாசத்தால் மொத்த குடும்பமும் அவனை வெகுவாய் நேசிக்கும்.

ரிஸ்வி இந்த பக்கம் வரவும் டிக்கெட் பரிசோதகரும் அங்கே வர, நடுவிலேயே நின்றுவிட்டான்.

மன்சூர் அப்போது தான் மைசராவிடம் பேச்சு கொடுக்க தொடங்கியிருந்தான்.

“ wow…. Very sweet name…. உங்கள மாதிரியே” என அவள் பெயர் தெரிந்து விட்ட குதூகலத்தில் கூவினான் மன்சூர். தன்னிடம் டிக்கெட் பரிசோதிக்க வந்த T.T.R ரிடம் தான் மைசரா தனது பேரை கூறினாள். அதை கேட்டுவிட்டவன் அவளது பெயரை பாராட்டும் சாக்கில் அவளிடம் பேச துவங்கினான். அவனது இந்த செய்கையை எப்படி எடுத்து கொள்வது என புரியாமல் திரு திரு வென முழித்துக் கொண்டிருந்தாள் மைசரா. அனாவசியமாக யாரிடமும் பேசுவது அவளுக்கு பிடிக்காது. அவன் வழிகிறான் என்பது வெளிபடையாகவே தெரிந்தது அவளுக்கு. அவளை எரிச்சலோடு பார்த்துக் கொண்டிருந்த ரிஸ்விக்கு இப்போது அவளை பார்க்க பாவமாக இருந்தது. மன்சூர் அவளிடம் வெகு சகஜமாக பேசிக் கொண்டிருக்க, அவனோடு பேசவும் பிடிக்காமல்….. முகத்தை திருப்பவும் முடியாமல் திண்டாடினாள் மைசரா.

“ என் பேர் மன்சூர் அலி. உடனே என்னை வில்லனா னு கேட்டுடாதீங்க….. நான் பக்கா ஹீரோ” என வாய் விட்டு சிரித்தான். என்னவோ பல காலம் பழகியது போல பேசும் அவன் பேச்சில் எரிச்சலைடந்தாலும் வேறு வழியில்லாமல் லேசாக முறுவலித்தாள். அதிலேயே உச்சி குளிர்ந்து போனான் அவன்.

“ அப்புறம் என்ன படிக்கிறீங்க மைசரா?” அவனது கேள்விக்கு உண்மையை சொல்லலாமா இல்லை பொய் சொல்லலாமா இல்லை பதிலே சொல்லாமல் இருந்துவிடலாமா என அவள் யோசித்துக் கொண்டிருக்க, “ ஹே…. என்னை உங்க ப்ரெண்ட் மாதிரி நினைச்சிக்குங்க மைசரா… போறவரைக்கும் ஒரு பேச்சு துணை வேண்டாமா?” அவன் மூச்சுக்கு முன்னூறு மைசரா போட அவளுக்கு கோபம் கோபமாக வந்தது.

“ இவன் பேச்சு துணைக்கு தான் இத்தனை குரங்குகள் இருக்கிறதே” என அவள் அவனது நண்பர்களை பார்த்தாள்.

அவள் பார்வையை புரிந்து கொண்டவன்,” நான் சொன்னது உங்களுக்கு….” என்றான். மற்றவர்களிடம் பரிசோதித்து விட்டு இப்போது மன்சூரிடம் டிக்கெட்டை கேட்டார் டி.டி.ஆர். அவரிடம் தனது டிக்கெட்டை அலைபேசியில் காட்டும் போது தான் அவருக்கு பின்னால் நின்றிருந்த ரிஸ்வியை கவனித்தான்.

“ ஆஹா…… இவன் எப்போ இங்க வந்தான்? நான் பேசுனத கேட்டிருப்பானோ?” என யோசிக்க

“ இது உங்க சீட் இல்லையே…” என்றார் டி.டி.ஆர்

அவன் விளக்கம் சொல்லும் முன்,” அது என் சீட் தான் சார். இவனோட சீட் அந்த பக்கம் இருக்கு” எனறவன்,” மன்சூர் நீ உன் சீட்லயே உட்கார்ந்துக்கோ” என்றான் ரிஸ்வி முறைத்தபடி.

அவன் கூறிய விதத்திலேயே தான் பேசியதை கேட்டுவிட்டான் என புரிந்து கொண்ட மன்சூர்,” அதானே…. நான் ஒரு பொண்ணு கிட்ட பேசிட கூடாதே…. உடனே இவனுக்கு மூக்கு வேர்த்திடும்” என உள்ளூர பொருமி கொண்டு எதுவும் பேசாமல் நண்பர்களை முறைத்து விட்டு நகர்ந்தான். அந்த முறைப்பு ரிஸ்வி வந்ததை அவனுக்கு தெரியபடுத்தவில்லை என்பதற்காக…..

அவன் சென்றதும் மைசரா நிம்மதியானாள். ஆனால் அவன் இடத்தில் ரிஸ்வி வந்தமர, அவளுக்கு சற்று படபடப்பு தான்.

“ குரங்கு போய் காண்டாமிருகம் வந்துடுச்சா?” என எண்ணியவள், “ அய்யய்யோ மைசரா உன் திருவாயை கொஞ்சம் முடி வைடி. இப்போ தான் எரும மாடுக்கு ஒரு அக்கப்போர் முடிஞ்சது. அடுத்து காண்டாமிருகத்திற்கு ஒரு பஞ்சாயத்த கூட்டிறாத” என தன்னை தானே அடக்கினாள். அவள் கண்களை மூடி சீட்டில் சாய, ரிஸ்வி மீண்டும் தன் அலைபேசியில் கான்பிரன்ஸ் குறித்த விஷயங்களை அலச துவங்கினான்.

மைசராவிடம் சண்டை போட்ட பின்பு அவளிடம் பேச ரிஸ்விக்கு பிடிக்கவில்லை. அது மட்டுமல்லாமல் மைசரா தங்கள் வீட்டிற்கு தான் வருகிறாள் என தெரிந்தால் மன்சூர் இன்னும் அவளிடம் உரிமை எடுத்து பேசுவான் என எண்ணியதால் ரமீஸ் போன் செய்ததை பற்றி ரிஸ்வி மைசராவிடம் எதுவும் கூறவில்லை.


தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை
 




Last edited:

Guhapriya

அமைச்சர்
Joined
Apr 5, 2019
Messages
4,175
Reaction score
12,257
Location
Trichy
குரங்கு காண்டாமிருகம் எருமை மாடு இதுகூடலெல்லாம் மைசராவை ஏன்பா உட்கார வைச்சீங்க??!!
 




பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
குரங்கு காண்டாமிருகம் எருமை மாடு இதுகூடலெல்லாம் மைசராவை ஏன்பா உட்கார வைச்சீங்க??!!
வேற என்ன செய்றது.... கால கொடுமை பைரவா..???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top