• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode காதல் ஆத்திச்சூடி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
காப்பு

ஆத்திச் சூடி அருளும் இறையது
காட்சிக் கடங்கா கரிமுக மைந்தனை
நாற்றி சையும் சூழத் தொழுக
ஏத்திக் காப்பான் நமை!


நூல்

ன்புக் காதலே
ழ்மனத் துறவே
ல்லா இடையே
ர்த்திடும் விழியே!

ன்முகம் கண்டிடின்
ருலகம் மறப்பேன்
ன்னவள் உன்னை
த்துவேன் நெஞ்சில்!

யம் வேண்டாம்
ன்றே என்தொழில்
ர்காதல் நீயே
வினேன் நின்னையே (ஔவுதல் - பற்றுதல்)
இஃதே என்நிலை!

ண்களே என்நிலம்
காதலே என்தொழில்
கிழமை உன்னோடே (கிழமை – உரிமை)
கீழ்மை எனக்கில்லை!

குறுக்கம் குறையேன் (குறுக்கம் – அருகிலிருத்தல்)
கூர்விழி அகலேன்
கெண்டை விழிகாணின்
கேட்டிலும் குலையேன்!

கைகளில் படையின்றி
கொடும்போர் புரிந்திடும்
கோடாரி கண்களால்
கௌவ்விடும் வலியுமினிதே!

னம் எனக்குன் நெஞ்சே! (ஙனம் - இடம்)

ச்சிரவின்றி என்னோடு
சாதல்வரை வாழ்ந்திடு
சின்னசின்ன சண்டையால்
சீண்டிவிளை யாடியிரு!

சுருங்காது என்காதல்
சூளுரைப் பேனதை
செந்நீரில் உயிராய்
சேர்ந்து விட்டாயேநீதான்!

சைத்தன்யம் இழக்கினும் (சைத்தன்யம் - உயிர்நிலை)
சொன்னசொல் மாறேன்
சோர்வது வரினும்நின்
சௌக்கியம் குறைக்கேன்!

மலி நின் எழில் (ஞமலி - மயில்)
ஞாயிறு நின் நுதல்!
ஞிமிர் நீயென் பாக்கு (ஞிமிர் - ஓசை)
ஞெகிழும் அதன் பொருள்! (ஞெகிழும் - நெகிழும்)
ஞேயம் உனதின்றி (ஞேயம் - நேயம் - அன்பு)
ஞொள்குவேன் ஞானே! (ஞொள்குதல் - இளைத்தல்/வலுவிழத்தல்)

ம்பிடிக்கும் என்மனம்
வி டாது உனைக்கான!
டிமேல் இதமாய்
டுத்துறங்க இறைஞ்சுமே!

டெனென கிடக்குமே
டைவிழியின் காட்சியில்,
விட் டொரு நொடியும்
கொ டோர் காதலை
டௌவாது என்விழிகளே! (அடௌவாது - விலகாது)


மிழெனும் வானின்
தாரகை சொற்களால் (தாரகை - விண்மீன்)
திகழ்கவி யாத்து
தீருவேன் தவிப்பை!

துன்பம் எனக்கேதடி
தூக்கு நல்லழகே
தெள்ளிய நின்முகத்தை
தேயாது கண்டிருந்தால்!

தையலே உன்னை (தையல் - பெண்)
தொடுத்திட்டேன் உயிரோடு
தோல்வி எனக்கில்லை
தௌவ்விடும் காதலில்! (தௌவ்வுதல் - செழித்தல்)

ன்றாய் இருக்குதடி
நான்செய்யும் காதல்
நித்தம் எனக்கிங்கே
நீதரும் புதுமையினால்!

நுதல்காணின் நற்றமிழ் (நுதல் – நெற்றி)
நூல்கற்றது போலே
நெகிழுதடி என்நெஞ்சம்
நேர்மை யிதுநம்பு!

நைந்தும் போகாதே
நொடித்தும் வீழாதே
நோக்கம் நன்றாமே
நௌனாதே என்றும்! (நௌனுதல் - குறையுதல்)

ங்கஜத்தின் காதலெனும் (பங்கஜம் - தாமரை)
பாலதை வேண்டி
பிள்ளையென என்மனம்
பீறிட்டு அழுகுதடி!

புள்ளென்றால் அன்றில்நீ (புள் - பறவை)
பூவென்றால் கமலம்நீ (கமலம் - தாமரை)
பெண்ணென்றால் தமிழவள்நீ
பேரின்பப் புதையல்நீ!

பையவென் உள்ளத்தில்
பொருந்திவிட்ட மெல்லழகே
போழ்தெல்லாம் எனக்கினி
பௌர்ணமியே என்வானில்!

னதிற் கினியவளே
மாங்கனியே தேன்பலாவே
மிஞ்சுதடி என்னாசை
மீண்டும் மீண்டும் உனைநாட!

முக்கண் சிவன்போலே
மூக்கின் மேல்கோவம்
மெல்லினமே உனக்கெதற்கு
மேகம்போல் குளிர்ந்தேயிரு!

மைவிழியின் காட்சிக கள்ளை
மொந்து மனம்பருகும் - அது
மோகத்தில், மோனத்தில், உன்
மௌனத்தில் தாகம் தீர்க்கும்!

த்தனை பெண்கண்டேன்
யாரிடமும் வீழ்ந்ததில்லை
யின்று உனைக்கண்டே
யீராயிரம் முறைவீழ்ந்தேன்!

யுந்தன் நெஞ்சமதை
யூகிக்க இயலாமல்
யெந்தன் மனம்தானே
யேங்கிப் போனதே!

யைந்து விடுவேனே
யொன்றாய் உன்னோடு
யோகம் அதுவேயென்
யௌவனத்தின் யோகமடி!

வியொன்று சட்டென்று
ராத்திரியில் உதித்ததுபோல் பு
ரிந்திட்ட புன்னகையில்
ரீங்காரம் கண்டுகொண்டேன்!

ருசிதானே எந்தன் கண்ணுக்குன்
ரூபமும் கருத்திற்குன் நினைவும்!
ரெண்டு கண்களும் கலங்கரை சுட
ரேபோன் றவயேயென் கப்பல்மனதிற்கு!

ங்கிடச் செய்கிறாயே
லாபமயிலே என்நெஞ்சை!
மெ லிந்துபோ கும்மனம்
லீர்சிரிப் பைகேளாது!

ந்துவிடு என்வாழ்வை
வாழ்விக்க வந்துவிடு!
விட்டுவிலகி நீசென்றால்
வீணாகும் என்னுயிரே!

வெண்ணிலவும் எனக்கிங்கு
வேகுதடி உன்பிரிவால்!
வையமே நிலையாத
வோர்கனவாய் தோன்றுதடி!

அகர முதல எழுத்தெல்லாம் காதலி
முகம் மலர வைத்தேன் பாட்டில்!

-வி :cool::cool:

(இதை இயற்றி சுமார் பத்தாண்டுகள் ஆகிவிட்டன!)
 




Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India

Aparna

அமைச்சர்
Joined
Jan 18, 2018
Messages
2,605
Reaction score
9,892
Location
Queen city
அழகான காதல் வரிகள்
ஆச்சரியத்தில் கண் விரித்திருப்பாள் அப்பாவை
இயல்பாய் இலக்கணம் கூறி
ஈன்றாய் அறிவுக்கவிதை
உயர்புடனே உன் தமிழ் காதல் வாழ
ஊக்கமளித்த நல் நங்கை யாரோ?
எள்ளளவும் குறையா காதல்
ஏக்கம் போக்க வந்தது மலர்மங்கை தானோ?
ஐம்பொறியில் கலந்த காதல்
ஒப்பிலா வரி வடிவில்
ஓங்குக கவியே நின் தமிழ் காதல்
ஔடதமே காதல் நம்முள் மெய் வாழ

வாழ்த்துகள் தோழா அறிவான கவிதை பகிர்ந்தமைக்கு...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top