• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 38

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மொதல்ல சக்தி திட்டத்தப் பாப்போம்.. கார நிறுத்திட்டு மூணு பேரும் உள்ள வந்த போது சக்தி ஸ்கேனிங் பார்வையால ஒவ்வொரு எடத்தின் சாதக,பாதகங்கள கணக்குப் போட்டுக்கிட்டே வந்தான்..கிட்டத்தட்ட கொளத்தோட மையத்துக்கு வந்த போது கண்ணுல பட்ட அந்தப் பெரிய பள்ளத்தப் பாத்ததும் ஹைட்ராலிக் பிரேக்கடிச்சு அவன் நிக்க..ஏதோ யோசனைல அவம் பின்னால வந்த சி.கே,ஒயிட் அவன் மேல மோதித் தான் நின்னாங்க..விலகிப் பாத்த அவங்க கண்ணுலயும் அந்தப் பள்ளம் விஸ்வரூபமெடுத்து விரிஞ்சுது...

ஒரு ஏக்கராவுக்கும் மேல வீஸ்தீரணம் உள்ள பள்ளமது.. ஐயாயிரம் அடிப் பரப்பளவு !அந்த எடத்துல விவசாயத்துக்கு மண் எடுத்தது போக வீடு கட்ட, கிணறு மூடன்னு பல தலை முறைகளா மண்ணெடுத்து எடுத்து முப்படி ஆழத்துக்கு பள்ளமான குளத்தின் துண்டுப் பகுதி..மேல இருந்து கீழ போகவும்,வரவும் சரிவா ஒரு மண் பாதை பள்ளத்தின் கடைசி வரைக்கும் இருக்க பள்ளத்தச் சுத்தியும்,உள்ளயும் முள் புதர்,மரங்களா அத ஏறக்குறைய மூடி இருக்க இருபதடிக்கு அந்தப் பக்கமிருந்து பாத்தா பள்ளமே யாரு கண்ணுக்கும் தெரியாது..

அதப் பல வருசமா சி.கே,ஒயிட் பாத்தது தான்..ஆனா, தங்களோட சீட்டாட்டக் கிளப்ப அங்க நடத்தாததுக்குக் காரணம் உள்ள போகவும்,வரவும் அதிக்கிருந்த அந்த ஒரே வழி தான் !அத விட்டா வேற வழியே கிடையாது.. போலீஸ் சுத்தி வளைச்சா தப்பிக்கச் சான்ஸே இல்லைங்கறதால அதுக்குள்ள சி.கேவும் அவன் ஆளுங்களும் எட்டிக் கூட பாக்க மாட்டாங்க.. சரிஞ்சு எறங்கின அந்த மண் வண்டித் தடத்துல சக்தி வேகமா எறங்க ரெண்டு பேரும் அவன் காலடில கால் வெச்சுப் போனாங்க..

சரியா முப்பதடி ஆழத்துல அந்தத் தடம் முடிஞ்ச எடத்துல அந்த வேப்ப மரம் இருக்க சக்தி அங்க நின்னான்.. சுத்தியும் கிளை பரப்பி ஒரு ஆள் கட்டிப் பிடிச்சாலும் கைக்குள்ள அடங்காத தடிமனான அடிப் பகுதி கொண்ட எழுவது வயசு மரமது !அதச் சுத்தி பத்தடி அகலத்துக்கு யாரோ அப்பத் தான் சுத்தம் பண்ணி இருந்ததக் கவனிச்சு சக்தி முகம் சுண்டினான்..பனிரெண்டு ஊருக்குச் சொந்தமான அந்தக் கொளத்துக்குள்ள யாரு வேண்ணாலும் பூந்து மரம் வெட்டுவாங்க..யாரு வந்து தடுக்கறது?எல்லாரும் உனக்கென்ன, எனக்கென்னன்னு இருந்ததால திருடித் திங்கற சில பேருக்கு அது புகலிடமாப் போச்சு !

,அந்த வேப்ப மரத்துக்கும் ஏதோ ஒரு குரூப் கண்ணு வச்சு அடுத்த நாள் ரம்பம் போட்டு அதோட அடி மரத்த அறுத்துச் சாய்க்க வசதியா சுத்தியும் கிளீன் பண்ணி வச்சிருக்காங்க..பத்தடி அகலத்துக்கு படுத்துப் புரள்ற அளவுக்கு ஒரு முள்ளு,கல்லு இல்லாம சுத்தம் பண்ணி இருக்க..பக்கத்துலயே அதுக்குச் சாட்சியா பத்தடிக்கு அந்தப் பக்கம் கள்ளி முள் புதருக்குள்ள ஒரு பெரிய கடப்பாரையும்,மண் வெட்டியும் மறைச்சு வச்சிருக்கறது துல்லியமான சக்தி கண்ணுக்குத் தெரியவே செஞ்சு..
பாவிங்க மரம்,மட்டையக் கூட வெட்டி அழிக்கணுமாங்கற வேதனைய உள்ள அடக்கிட்டு நிதானமா தன் திட்டத்தச் சொன்னான்..

"அதோ..மேல இருந்து தடம் ஆரம்பிக்கற அந்த எடத்துல ஒரு டார்ச் லைட்ட ஆன் பண்ணி அங்க இருக்கற வேப்பங் கொம்புல எட்டடி ஒசரத்துல கட்டணும்.. அங்க நின்னு பாத்தா உடனே கண்ணுல படற மாதிரி இந்த மரத்துல பத்தடி ஒசரத்துல இன்னொரு எரியற டார்ச் லைட்டக் கட்டணும்.. மரத்துக்குக் கீழ அவனுக்காக நான் காத்திருப்பேன்.. பத்து மணிக்குள்ள அவன் வரலேன்னா இந்த வலைல அவன் சிக்கலேன்னு அர்த்தம்..நைட் முழுக்க தோட்டத்துக்கு வர்றானான்னு பாத்துட்டு காலைல ஸ்டேசனுக்குப் போயிடவாம்..எதாவது கேக்க வேண்டியதிருக்கா?"

சி.கே வழக்கம் போல பேசாம இருக்க ஒயிட் தான் பேசினான்..அதே வழக்கம் போல !

"ஏன் இந்த முப்பதடிப் பள்ளம்..குறிப்பா இந்த வேப்ப மரம்?"

"நல்லாக் கவனிச்சுப் பாரு ஒயிட்..வேற எந்த எடம்னாலும் சுத்தியும் சுள்ளிப் பொதரும்,அடர்த்தியா வேலிக் காத்தான் முள் செடிகளும்..இந்த எடம்னா வரவும் போகவும் ஒரே வழி..அவன மேட்டுல எறங்கத் தொடங்கற போதே வேப்பங் கொம்புல கட்டித் தொங்க விட்டிருக்கற டார்ச் வெளிச்சத்துல பாத்துடலாம்.. அப்புறம் இருட்டுல மறைஞ்சாலும்.. இதோ! இந்த வேப்ப மரத்தச் சுத்தியும் பார்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
பத்தடிச் சுத்தளவுக்கு நீட்டா இருக்கு..எந்தப் பக்கமிருந்து வந்தாலும் நான் கவனிச்சு உஷாராக இந்தக் கொளத்துக்குள்ள இந்த எடம் ஒண்ணு தான் வசதியா இருக்கு..உங்களுக்கு வேற இடமோ, திட்டமோ இருந்தாலும் தாராளமாச் சொல்லலாம்"

ஒயிட் இப்ப டக்னு தன் ஓட்ட வாய மூடிக்கிட்டு சி.கேவப் பாக்க அவன் ஏற்கனவே ஒரு திட்டத்தோட இருந்ததால உடனே பதிலக் கேள்வியாக் கேட்டான்...

"ஓ.கே நண்பா ! இத விட்டா வேற வழியில்ல.. இதுல எங்களோட வேலை என்ன?அதையும் சொல்லிடு"

"குறுக்க மறிக்காம ரெண்டு பேரும் என் வழிக்கு வந்ததுக்கு மொதல்ல தேங்க்ஸ்..நல்லா நான் கவனிச்சதுல வெளிய இருந்து இந்தப் பள்ளத்தோட அந்தத் தடத்துக்கு வர்றதுக்கு ரெண்ட வழிங்க தான்.. ஒண்ணு வட திசைல மின் மயானத்த ஒட்டி பெயிண்ட் பட்டறை வழியா வர்றது..பெயிண்ட் பட்டறைக்குப் பின்னால மறைவா நீ நிக்கணும்..ரெண்டாவது வழி தெக்க இருந்து நாம இப்ப வந்த வழி ..அதோட ஆரம்பத்துல ஒரு ரெட்டைப் பன மரம் இருக்கில்லையா?
அங்க ஒயிட் மறைஞ்சு நிக்கட்டும்..அலனப் பத்தி பெருமாள் சொன்ன அடையாளங்கள் உங்களுக்கு ஞாபகமிருக்கில்லையா?ஒரு வேள அவன் உள்ள வர்றதக் கவனிச்சா ஒண்ணும் பண்ணாம விட்ருங்க..
ஆனா,ஒரு மிஸ்டு குடுங்க..மிச்சத்த நான் பாத்துக்கறேன்..வேற ஆளுங்க வந்தாலும் விடுங்க.. அதுக்கு ஒரு எம்டி எஸ்எம்எஸ் அனுப்புங்க.. போதும்..புரிஞ்சுக்குவேன்"

சி.கே கண் சாடைல 'பேசாம இருடா'ன்னு கண்டிப்பக் காட்டியும் ஒயிட்டோட ஓட்டை வாயை அடக்க முடியல..

"இதுக்கெதுக்கு ஆனானப் பட்ட சி,கேவும்,அவரோட வலது கை ஒயிட்டும்?ரெண்டு சுள்ளான்ஙகள வச்சு சுளுவா முடிச்சுக்கலாமே பெரிய தலைவரே?"

சக்தி அவன் தோள்ல தட்டிச் சொன்னான்..

"ஒரு முக்கியமான வேலை இருக்கு..அத சி.கேவும் அவனோட வலது கையான ஒயிட்டும் தான் முடிச்சு வெக்க முடியும்?"

"எதுங்க பெரிய தலைவரே..கையக் கட்டி வேடிக்கை பாக்கறதுங்களா?"

"இல்ல ஒயிட்..ஒரு வேள அவன் வந்தா கைகலப்பும், மோதலும் எங்களுக்குள்ள நிச்சயம் நடக்கும்..கை கலப்புக்கு முன்ன ஒரு ஒத்த விசில் குடுத்துட்டுத் தான் ஆரம்பிப்பேன்..அதான் உங்களுக்குச் சிக்னல்..நீங்க உடனே உள்ள வர்றதுக்க்கான சிக்னல்..ஒரு வேள அவன் ஜெயிச்சு நான் விழுந்துட்டா அந்த சைக்கோவ கொளத்த விட்டு உயிரோட போகாம பாத்துக்க வேண்டியது உங்க பொறுப்பு..உங்க ரெண்டு பேரத் தவிர இது வேற யாராலயும் முடியாது ஒயிட்..என்ன நம்பு.. நான் ஒத்தைக்கு ஒத்தை போர்ல எறங்கறேன்.. கண்டிப்பா தற்கொலை பண்ணிக்கற மாதிரி எந்த திட்டமும் போடல..இதுல இருக்கற சாதகமும்,பாதகமும் ஒண்ணே ஒண்ணு தான் ! அது பிப்டி பிப்டி சான்ஸ்..ரெண்டு பக்கமும் !கடைசி நேரத்துல அதிர்ஷ்டமோ,தெய்வமோ தன் பார்வைய யார் பக்கம் திருப்புதோ அவன் கொளத்த விட்டு வெளிய போவான்"

"அப்ப..." ஒயிட் தயங்கி இழுக்க சக்தி உறுதியாச் சொன்னான்..

"இந்த வேப்ப மரத்தடி தான் நம்ம எல்லாரோட தலை விதியையும் தீர்மானிக்கற குருஷேத்ரம்"

+++++++++++++++++++++++++

சக்தி அவங்களத் தோட்டத்துல விட்டுட்டு ஆஸ்பிடல் போன பின்னால ரெண்டு பேரும் மொட்டை மாடில நின்னு சுத்தியும் பாத்துக்கிட்டே தங்களோட திட்டத்த அலசினாங்க..

"சொல்லுங்க தலைவரே..இதுல உங்களோட தனித் திட்டம் என்ன?"

"ரொம்ப சிம்பிள் ஒயிட்.. நம்ம ரெண்டு பேரையும் தாண்டித் தான் மூக்கனோ,நாக்கனோ உள்ள போயி வெளிய வர முடியும்"

சொல்லி நிறுத்தி சி.கே அர்தத்தோட ஒயிட் முகத்தப் பாக்க கண் ஜாடைலயே தன் தலைவன் மனசப் புரிசுஞ்க்கற ஒயிட் அவன் வாயால உறுதிப் படுத்திக்க ஆசைப் பட்டு கண் சிமிட்டி ஒரு குறும்புப் புன்னகையோட கேட்டான்..

"அதனால..."இந்த முறை ஒயிட் முடிக்காம நிறுத்த சி.கே ஒளி மின்னும் கண்களோட அவன் தோளப் புடிச்சு அழுத்தமாச் சொன்னான்...

"அதனால...இந்த ஒரு தடவ மட்டும் என் உயிர் நண்பனோட கட்டளைய மீர்றதா முடிவு பண்ணிட்டேன்.. சக்தி தன்னச் சாய்ச்சுட்டு மூக்கன் வெளிய வர்ற போது அவன சாய்க்கச் சொன்னான்.. ஆனா,அவன நாம உள்ளயே அனுப்பப் போறதில்ல..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நம்ம ரெண்டு பேரையும் கொன்னுட்டுத் தான் அவன் சக்திய நெருங்கணும்..என் உயிர் நண்பனோட உயிரக் காப்பாத்த அவங் கட்டளைய முதல் தடவையா மீறப் போறேன்..நீ என்ன செய்யப் போறே?"

துளியும் தயங்காம வந்தது ஒயிட்டின் பதில்...

"இதென்ன கேள்வி தலைவரே?,உங்களுக்குத் தான் அவர் உயிர் நண்பர்..எனக்கு அவர் யாரு,என்னன்னே தெரியாது..அதனால,அவர் கட்டளை என்னத் துளியும் கட்டுப் படுத்தாது..இந்த ஒரு ராத்திரி மட்டும் ! அதனால... இதுக்காக உங்க உயிர் நண்பர் பின்னால என்னக் கண்ட துண்டமா வெட்டிப் போட்டாலும் சரி.. தெக்க இருக்கற தடத்துல மட்டும் அவன் வந்தா இந்த ஒயிட் செத்து விழுந்த பின்னால தான் மூக்கன் கொளத்துக்குள்ளயே அடியெடுத்து வெக்க முடியும்"

+++++++++++++++++++++++++++

அவங்க மூணு பேரும் போன பின்னால மூக்கன் தான் மறைஞ்சிருந்த எடத்த விட்டு வெளிய வந்தான்.. அவங்க பின்னாலயே போயி என்ன பேசறாங்கன்னு துல்லியமா கேக்க முடியல..பள்ளத்துக்குள்ள எறங்க ஒரே பாதை இருக்கறது தான் அதன் காரணம்.. அதனால மேலயே ஒரு கத்தாழைக்குப் பின்னால பேன்டக் கழட்டி வெளிக்குப் போறவன் மாதிரி உக்காந்துக்கிட்டு கத்தாழைச் சந்து வழியா உன்னிப்பா ஒரு சிகரெட்டப் பத்திக்கிட்டு கிண்டல் புன்னகையோட கவனிச்சான்...

மூணு பேரும் அவனுக்குத் தெளிவாத் தெரிஞ்சாலும் மத்த ரெண்டு பேரையும் அலட்சியப் படுத்திட்டு சக்தி மேல இருந்த பார்வையத் துளியும் விலக்காம கவனிச்சான்..சக்தியோட கையும்,பார்வையும் போன பக்கங்கள கவனிச்சு யோசிக்க புத்திசாலியான அவனுக்கு சக்தியோட திட்டம் என்னன்னு யூகிக்கறதுல சிரமம் எதுவுமில்ல..இந்த கஞ்சா நெருக்கடியும்,நைட் கொளத்துக்குள்ள அது கிடைக்கும்ங்கற தகவலும் சக்தியோட வேலை...ராத்திரி கஞ்சாவுக்காக தான் போனா மரணம் தான் பரிசா கிடைக்கும்னு உடனே புரிஞ்சாலும் அவன் மனசுல வேற ஒரு திட்டம் முடிவாகி 'உன் திட்டத்தக் கொண்டே உனக்கு மட்டுமில்ல.. உன்னோட இருக்கற அந்த ரெண்டு பேருக்குமே செத்தாலும் மறக்க முடியாத சாவத் தரப் போறேன்'னு குரூரமா புன்னகைச்சான்..

ஆனா,அவங்க பேசுனது காதுல விழாததால சக்தியோட இருந்த ரெண்டு பேரும் எங்க இருக்கப் போறாங்கன்னு மொதல்ல புரியாததால பின் வாங்கிடலாமான்னு கூட அந்த நொடி யோசிச்சான்..ஆனா,அதிர்ஷ்டம் அவன் பக்கம் நின்னது..மூணு பேரும் பேசி முடிச்சு ஆளாளுக்கு வெவ்வேற திட்டத்தோட அந்த மண் தடத்துல மேலேறி மூக்கன் மறைஞ்சிருந்த கத்தாழையைத் தாண்டும் போது சக்தி சொன்னான்..

"வரும் போது ஒண்ணா வர வேண்டாம்..நான் என் பைக்ல மொதல்ல கெளம்பறேன்..நீங்க ரெண்டு பேரும் ஆட்டோவுல வந்து ஒருத்தன் வடக்க இருந்து நுழையற தடத்துலயும் இன்னொருத்தன் தெக்க இருந்து நுழையற தடத்துலயும் நின்னுக்கங்க......"

பேசிக்கிட்டே தூரப் போயிட்டதால அதுக்கு மேல மூக்கன் காதுல விழல..அவன் அவங்களப் பின் தொடரவுமில்ல.. அவனப் பொறுத்த வரைக்கும் சக்தியோட திட்டம் இப்பப் துல்லியமா அவங் கைல..இனிமே அத நடத்தற சூத்ரதாரி அவன் தான்..ஒட்டுக் கேக்கவோ,பின் தொடரவோ துளியும் அவசியமில்ல அவனுக்கு.. இன்னும் கொஞ்சம் யோசிச்சு திட்டம் முழுமையானதும் எந்திரிச்சு பேன்டப் போட்டுக்கிட்டு அந்த வேப்ப மரத்தச் சுத்தியும் கவனிச்சு வாய் விட்டே திருப்தியாச் சொல்லிக்கிட்டான்..

"வர்றேன்டா சக்தி..என் சாவத் தேடி இல்ல..உன்னச் சாவடிக்க..அந்த வேப்ப மரத்தடி தான் உன் சமாதி.. ஆனா,அதுக்கு முன்ன.......''

அவன் புன்னகை குரூரமா முகம் முழுக்க விரிஞ்சுது..

××××××××××××××××××××××××××××××××

சக்தி ஆஸ்பிடலுக்குள்ள போன போது எதிர்ப் பட்ட டியூட்டி டாக்டர் உடனே சொன்னார்..

"போன் பண்ணலாம்னு நெனைச்சேன்..நல்ல வேளையா நீங்களே வந்துட்டீங்க.. மிஸ்டர் சக்தி ! உங்க அப்பா நிலைமையப் பொறுத்த வரைக்கும் முன்னேற்றம் இல்லேன்னாலும் பின்னடைவுமில்ல.. ஆனா,அந்தப் பொண்ணு மான்யா நிலைமை தான்..."

சக்தி அவர் கைய இறுகப் பிடிச்சு 'டாக்டர்'ன்னான்..
ஒடம்போட மொத்த சக்தியும் வற்றிப் போனவனா மேல பேச முடியாம தடுமாற டாக்டர் கடமையாத் தொடர்ந்தார்..

"ஸாரி மிஸ்டர் சக்தி..மிஸ் மான்யா மனசளவுல தளர்ந்து இருக்காங்க..இதே நிலைமை நீடிச்சா விடியறதுக்குள்ள நிச்சயமா கோமா ஸ்டேஜ்க்குப் போயிடுவாங்க"

(தொடரும்...
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
தேவா தம்பி
ரைட்டர்-லாம் ரீடர்ஸ்கிட்ட
போட்டிக்கு வரக்கூடாது
சோஓஓஓஓ நான்தானுங்கோ
படிக்க மொதோ வந்தது,
மை டியரூ பிரதரு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top