• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 42

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நியாயமா இந்த சமயத்துல அவங்க ரெண்டு பேரும் என்ன பண்றாங்கன்னு பாக்கலாம்..சக்தியும்,மூக்கனும் தனியா இருந்தாலும் யாருக்கும் இப்போதைக்கு ஆபத்தில்லை..சிகே வடக்க இருந்தும் ஒயிட் தெக்க இருந்தும் அந்த மாபெரும் பள்ளத்த நோக்கி வந்துக்கிட்டிருந்தாங்க..ஆனா,மெதுவாத் தான்! அதுக்குக் காரணங்களும் இருக்கத் தான் செஞ்சுது..
முதல் காரணம்..அந்தக் குளம் முள்ளால் சூழப் பட்ட குட்டி வனப் பகுதி ! பத்தடிக்கு மேலயும்,இருபது அடி அகலப் பரப்புலயும் சிறு சிறு கிளைகளாப் பரப்பி சுண்டு விரல் நீளத்துக்கு ஒரு அங்குல அளவு ஆணி மாதிரி முள்ளா நிறைஞ்சிருக்கும்..அதனால,கவனமாப் பாத்துப் போகலைன்னா பின்னி முள்ளால் பிணைஞ்சிருக்கற கிளைகள்ல ஒண்ண நேக்காத் தள்ளினா இன்னும் ரெண்டு மின்னலா பின்னலிலிருந்து கண்ண நோக்கி வரும்..ரெண்டுல ஒரு கண்ணா முழிய நம்ம பர்மிசனுக்காக காத்திருக்காம புடுங்கிட்டுப் போயிடும்..

அதனாலென்ன.. மேல கவனமா பாத்துப் போனா கண்ண முள்ளு களவாடாம காப்பாத்திக்கலாமேங்கற உங்க மைண்ட் வாய்ஸ சரியா காட்ச் பண்ணிட்டேன்.. எண் சாண் ஒடம்புக்குச் சிரசே பிரதானம்னா..அந்த மண்டப் புரடைக்கு கண்ணா முழி தான் பிரதானம்.. இதுல மாத்துக் கருத்தே இல்ல..ஆனா பாருங்க.. அந்தக் குளமிருக்கே?அது முள் மரங்களும் சுள்ளிப் புதரும் கத்தாழை மடலுமா ஓங்கி வளந்திருக்க,.. அதை சுத்திப் படர்ந்திருக்கும் பிரண்டைகளும்,கோவைப் பழக் கொடிகளும்,கூடவே காட்டுக் கொடிகளும்..பந்தலா அது மேல!இப்பக் கீழ வந்தீங்கன்னா..அருகம் புல்லும், கோரைகளும்,காட்டுக் கொடி பிரண்டையின் அடித் தண்டுகளும் கணுக்கால மறைக்கற அளவுக்கு வளந்திருக்கும்..

தரைன்னா இதெல்லாம் வளரத் தானே செய்யும்ங்கற இந்த மைண்ட் வாய்ஸையும் காட்ச் பண்ணிட்டேன்.. உங்க கேள்வி ஓரளவுக்கு நியாயம் தான்..ஆனா, நீங்க ஒண்ண மறந்துட்டீங்க..தரைன்னா முளைப்பன மட்டுமில்ல..ஊர்வனவும் இருக்கும்..சிறு வண்டுல ஆரம்பிச்சு பொன் வண்டு வரைக்கும்..சிறு சிலந்தில இருந்து ஓணாண் வரைக்கும்..தெள்ளுப் பூச்சில ஆரம்பிச்சு பூரான்,தேளு வரைக்கும்.. சிறு பல்லில ஆரம்பிச்சு சாரை,நாக பாம்பு வரைக்கும்..விரியன்லயே ரெண்டு வகையுண்டு..கட்டு விரியன்,கண்ணாடி விரியன்..மத்த பாம்புகளை விட கடுமையான விஷங் கொண்டது..நாகனெல்லாம் தேர்ட் பிரைஸ் தான் !

மூணாவது எடத்துல இருக்கற நாகனுக்கு ஏன் அவ்வளவு பயம்னா..அந்தப் பய புள்ள ஆபத்து வந்ததும் தலைக்குக் கீழ சிறு குடையா விரிஞ்சு ரெண்டடி ஒசரத்துக்கு எழும்பி படமெடுத்து தன் இரு நாக்க நீட்டி உஷ்ஷ்.னு சீறி பில்டப்புக் குடுத்தே மொத பிரைஸ் வாங்கிருச்சு..இதும் கடுமையான விசம்னாலும் விரியன்கள விஞ்ச முடியாது..இதுலயும் கண்ணாடி விரியனிருக்கே?இதுக்குச் செல்ல(?!!!)ப் பேரே செவுட்டு விரியன் தான்..பாம்புக்குக் காது கிடையாது..(ஆனா நம்ம நாட்டுல தான் காதுப் புலன் கூர்மையா இருக்கறங்கள 'பாம்புபச் செவி'ன்னு பாராட்டற முரண் நகை நிறைய உண்டு...கணக்குல முதன்மையானவன 'கணக்குல புலி மாதிரி'ன்னு சொல்றதில்லையா?அந்த மாதிரி தான் !புலிக்கு ஏ பிளஸ் பி ஈக்வல்ட் சி.ங்கறதோ அல்ஜீப்ராவோ தெரியுமா? )மற்ற உயிரினங்களின் நகர்வினால் ஏற்படும் நில அதிர்வினைக் கொண்டும்,கண்களின் துணை கொண்டுமே பாம்புகள் தாக்குவதும்,தாக்குதல்களிலிருந்து தப்பிக்கவும் செய்கின்றன..

மற்ற அரவங்கள் மனிதனைக் கண்டவால் பெரும்பாலும் பயந்து விலகவே செய்கின்றன..(எல்லா மிருகங்களுக்குமே மனுசன்னா பயம் தான்..அவ்வளவு மோசமான மிருகமவன் ! )கண்ணாடி விரியன்கள் மனிதனைக் கண்டால் நகர்வை நிறுத்தி அப்படியே படுத்து விடும்..தெரியாம கிட்டப் போயிட்டாலோ, மிதிச்சுட்டாலோ எட்டி வீசுச்சுன்னா பாடை தான் ! அதனால தான் எங்க கொங்குப் பக்கம் விதி முத்துனாத் தான் விரியன் கடிக்கும்பாங்க..

சுத்தி வளைச்சுச் சொல்ல வர்றது என்னன்னா.. கொளத்துல சுண்டெலில இருந்து பெருச்சாளி வரைக்கும் உண்டு..இதுங்க இருந்தாலே அந்தப் பகுதில எல்லா வகையான பாம்புகளுக்கும் பஞ்சமிருக்காது.. எந்தப் பொதருக்குள்ள எது இருக்கும்னு சொல்ல முடியாது..பகல்லயே இப்படின்னா ராத்திரில சொல்லவே வேண்டியதில்ல..உள்ள போறவன் உயிரோட திரும்பி வராறதுக்கு உத்தரவாதமில்ல.. அதனால நான் சி.கே,ஒயிட் நகர்வு மிக மெதுவாய்...
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இன்னொரு காரணமும் உண்டு.. அவங்க ரெண்டு பேருக்குமே மூக்கன் எதுக்க வந்தா அவனத் தன் கையாலயே கொல்லணும்ங்கற வெறி இருக்க அவன் தப்பிச்சுடக் கூடாதுன்னே சுத்தியும் கவனமா பாத்துக்கிட்டே வந்தாங்க..அதுலயும் ஒயிட்டப் பத்தித் தான் நம்ம எல்லோருக்குமே தேரியுமே?அவன் மனசுல கறுவிக்கிட்டே வந்தது இதான்.. ''அந்த மூக்கு நாயி மட்டும் எங் கைல சிக்கட்டும்..மொதல்ல முடிச்சோட மூணையும் அறுத்துடறேன'

'(கொஞ்சம் எழுத்து நடை மாறுனதா பீல் பண்றீங்களா?☺☺இது நம்ம முக நூல் ஸ்டைல் ! காதல் பண்றவங்க காம்பர்மைஸ் பண்ணனுமாமே? நான் காதல் நீலாம்பரிக்காக பண்ணின மொதல் காம்பர்மைஸே முக நூல் பக்கத்துக்கு மூடு விழா நடத்துனது தான்..??
கொஞ்ச நாளா காதல் நீலாம்பரிக்குன்னு ஒரு ஸ்டைல்ல செட்டானது எனக்கே போரடிக்கற மாதிரி பீல் பண்ண ??,கொஞ்சம் நம்ம ஸ்டைல்ல வெள்ளாண்டது தான் இந்த அத்தியாயத்துல இது வரைக்கும் படிச்ச வரிகள்.. இனி காதல் நீலாம்பரிக்கான ஸ்டைலுக்குப் போயிடலாமா?கொஞ்சம் கிட்ட வாங்க..ஒரு ரகசியம் சொல்றேன்..அடிச்சுக் கூடக் கேப்பாங்க..அப்பக் கூட ஆரு கிட்டயும் வாயத் தொறக்கப் படாது..??..ஆமா..
அதாவதுங்க..இந்த அத்தியாயத்துல கடைசீல ஓரு ட்விஸ்ட் வெக்க வேணும்னே கொஞ்சம் இழுத்ததா என்னப் புடிக்காதவங்க சொல்லிட்டுத் திரியறதா எனக்கு நம்பத் தகுந்த வட்டாரத் தகவல் வந்திருக்கு.. அதனால,வீண் 'வசந்தி'களை நம்பாதீங்க..எவ்வளவு சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன்..இப்படிச் சிரிச்சா எப்படி???...இனி..)

சி.கேவும்,ஒயிட்டும் சன்னக் குரல்ல போன்ல பேசிக்கிட்டே ஏறக்குறைய அந்தப் பள்ளத்த நெருங்குன போது தான் மயான அமைதில மூழ்கிக் கெடந்த கொளத்துக்குள்ள சக்தி வாய் விட்டுச் சிரிச்சுது ரெண்டு பேரு காதையும் அண்டவே செஞ்சுது..ஒயிட் சக்தியோட கம்பீரமான ஆளுமைக் குரலக் கேட்டிருந்தாலும் இந்த ரெண்டு நாள்ல வாய் விட்டு சிரிச்சுக் கேட்டதில்ல.. ஆனா, அந்தச் சிரிப்புல சக்தியோட குரல் சாயை தெரிய ஒயிட் படபடப்பா கேட்டான்...

"தலைவரே..நீங்க கேட்டீங்களா?"

"நல்லாவே..கொஞ்சம் வேகமாவே வா.."

"அது......."

"சந்தேகமே இல்ல..நம்மாளோட சிரிப்புச் சத்தம் தான்"

"அப்ப மூக்கு நாய் வந்திருக்குமா?"

"நிச்சயமா..தனியாச் சிரிக்க சக்தி லூசாடா?''

அதட்டின சி.கே குரல்ல கோவம் துளி கூட இல்ல.. அதுக்குப் பதிலா சந்தோசமும்,நிம்மதியும் பொங்கி வழிய அது ஓயிட்டையும் தொத்திக்க உற்சாகமா கேட்டான்...

"அப்ப நிலைமை...''

"இதுலயும் சந்தேகம் வேண்டாம்..டோட்டலா சூழ்நிலை சக்தி கைல இருக்கறத அந்தச் சிரிப்பே சொல்லுது"

"கிட்ட வந்துட்டேன் தலைவரே.."

"நானும் தான்..எனக்கு முன்னால முள்ளுப் புதரா இருக்கறதால ஒண்ணும் தெரியல..உங் கண்ணுக்கு எதாச்சும் தெரியுதா?"

"லேசாத் தெரியுதுங்க தலைவரே !பெரிய தலைவர் முள்ளுப் பொதருக் கிட்ட ஏறக்குறைய படுத்த மாதிரி உக்காந்திருக்க,ஒருத்தன் ஒரு கைல பெரிய தடியோட அவர் முன்னால நிக்கறான்..இன்னொரு கைல ஆயுதமிருக்கான்னு தெரியல"

"அப்ப ஆபத்து இன்னும் முழுசா நீங்கல..நீ சொல்றத வெச்சுப் பாத்தா நிக்கறவன் நமக்கு முதுகு காட்டி நிக்கணும்..நம்மளப் பாக்கறதா இருந்தா சக்தி தான் பாக்கணும்..ஒண்ணு பண்ணுவோம்..நானும் கிட்ட வந்துட்டேன்..நான் ரெடின்னு சொன்னதும் போனக் கட் பண்ணிடாடு கல்லு,முள்ளப் பாக்காம வேகமெடுக்கணும்..பள்ளத்துக்குள்ள எறங்கற தடத்து நுனிக்கு வந்ததும் நிக்காம எகிறி டைவ் அடிச்சுடலாம்.. உளுந்த வேகத்துல எந்திரிக்காம உருண்டு கிடடே போய் மூக்கன் முதுகுக்குப் பின்னால சடனா எந்திரிக்கணும்.. எந்திரிக்கற வேகத்துல கைக்கு ஆயுதம் வந்து காலத் திடமா ஊணும் போதே மூக்கன் தலை தனியாப் பறக்கணும்..சவால்டா ஒயிட்டு..மூக்கன் தலை உனக்கா, எனக்கான்னு பாத்துடலாம்..ஓ.கே ஒயிட்...ரெடி..."

அடுத்த ரெண்டு நிமிசம் நடந்தது தான் வாண வேடிக்கை..அதுக்கப்புறம் பல வருசம் சி.கேவும், ஒயிட்டும் அப்பப்ப அத நெனைச்சுப் பேசி உணர்ச்சி வசப் பட்டிருக்காங்க..சி.கே ரெடின்னதும் ஒயிட் தாறுமாறா வேகமெடுத்தான்..போன பேன்ட் பாக்கெட்ல போட்டு ஆயுதமிருக்கான்னு தடவிப் பாத்துக்கிட்டான்.. இப்ப உருவ முடியாது..ஏன்னா,டைவ் அடிச்சுப் புரளும் போது நம்ம கை ஆயுதம் நம்ம சங்கையே அறுத்துடும்.. அதனால தான் தலைவர் எந்திரிக்கும் போது ஆயுதம் கைல எடுக்கச் சொல்லி இருக்கார்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
....இடுப்புல கெட்டித் தோல் உறைக்குள்ள ஆயுதம் இருக்கறதால எப்படிப் பொரண்டாலும் ஆபத்தில்ல..டக்னு ஒரு சின்னக் கத்தாழையக் கடந்ததும் செங்குத்தா எறங்கின சரிவுத் தடமும்,பள்ளமும் நல்லாத் தெரிஞ்ச அடுத்த நொடியே ஒயிட் எகிறி அடிச்சான் ஒரு டைவ்..அதே நேரத்துல தன்னோட இன்னொரு உருவமும் வானத்துல எகிறுனதக் கவனிச்சதும்
'வந்துட்டாருய்யா தலைவரு எனக்குப் போட்டியா'ன்னு சந்தோசமா நெனைச்சுக்கிட்டே தொப்புனு உளுநதவன் பள்ளத்துல வேகமா உருண்டான்..கூடவே சி.கேவும்

அதென்ன மாரியம்மன் கோவில் சுத்தமான நடை பாதைல நேம்பா அங்கப் பிரதட்சணம் பண்ற வேலையா?சுத்தியும் கல்லும் முள்ளுமா இருந்த குட்டி வனப் பகுதி ! அந்தப் பள்ளத்தின் தடத்தோட ஆரம்ப முனைல டைவ் அடிக்க எகிறினதனென்னவோ ரெண்டடி ஒசரம் தான்.. ஆனா,தல கீழ் சரிவுல பத்தடி தொலைவுல மண் தடத்துல மல்லாக்க அஞ்சடி ஒசரத்துல இருந்து தொம்னு உளுந்த போது நெஞ்சடைச்சு வலிச்சது மட்டுமில்ல...கல்லும் முள்ளும் அவங்க டிரஸ்ஸக் கிழிச்சு ஒடம்புலயும் தாராளமா காயங்கள உண்டாக்கியது.. அவங்க மூக்கனுக்குப் பின்னால கைல ஆயுதத்தோட எந்திரிக்கும் போது சரியா கடப்பாரை அடியால மூணடிக்கு மேல எகிறி மல்லாக்க 'ஹம்மா',ன்னு கத்திக்கிட்டே அவன் உளுந்தான்..

சக்தி கையிலிருந்த கடப்பாரைய நெலத்துல வேகமா ரெண்டடிக்கு மண்ணுக்குள் எறக்கி அத இறுக்கி எந்திரிக்க இன்னொரு டொம் டொம் இடி தெக்க ஏறங்க காத்திருந்த மாதிரி வானம் பொத்துக்கிட்டு ஊத்துச்சு.. மூக்கனச் சுத்தி ரத்த விளாறா கிழிஞ்சு தொங்கின துணிகளோட கால ருத்ரன்களா மூணு பேரும் நின்னுக்கிட்டிருந்தத ரசிக்க வானம் தொடர்ந்து மின்னல் தேவதைகள கொளத்தச் சுத்தி மாத்தி மாத்தி எறக்குச்சு.
மூணு பேரோட ரத்தத்தையும் புனித மழை கழுவ மழையைத் தழுவும் ஆசையில் குருதி விடாது பொங்கியது..அவங்க ரெண்டு பேரும் ஆராய்ச்சிக் கண்களோட மூக்கனப் பாத்திட்டிருக்க சக்தி ரத்த சேதாரத்தால தலை சுத்தி மயக்கம் வர்ற மாதி இருக்க மழை நீரை இரு கை குவித்தேந்திக் குடிச்சுச் சொன்னான்..

"ஒயிட்டண்ணா.. சி.கே துண்ட வாங்கி ரெண்டக் கிழிச்சுக் கொண்டாந்து எங் காயத்துல கட்டு.. ரத்தம் நிக்காம போகுது''

ரெண்டு பேரும் சுய நினைவுக்கு வந்து சி.கே ரெண்டு கைலயும் துண்ட விரிச்சு கெட்டியாப் பிடிக்க கத்தியால ஒயிட் அத ரெண்டாக் கிழிச்சான்..ரெண்டு துண்டையும் சி.கே ஒயிட் கைல குடுத்துட்டு மூக்கன் மரத்துல சிக்னலா கட்டியிருந்த டார்ச் லைட்ட உருவிக் கீழ போட்டிருக்க அத எடுத்து ஆன் பண்ணிக்கிட்டே சக்திய நெருங்கியவனுக்கு ஒடம்பு ஒரு நொடி அதிர்ந்து அடங்குச்சு..சக்தி மண்டைல மூக்கனோட தடி உண்டாக்கின காயம் பெருசாவே இருந்த விட அவன் வயித்துல இன்னொரு காயம் அத விடப் பெருசா இருந்தது தான் சி.கே அதிர்வுக்குக் காரணம்..

சக்தி சிரிப்பால உஷாரான மூக்கன் முதுகுப் பக்கமிருந்த கத்திய உருவின கணத்துல இருந்தே எதுக்கும் தயாரா இருந்தான்..சக்தி மின்னலா அந்தக் கடப்பாரைய உருவும் போதே சக்தி நெஞ்சுக்குக் குறி வச்சுட்டான்..உருவின வேகத்துல சக்தி கடப்பாரைல மூக்கன் முழங் காலுக்குக் கீழ அடிக்க ரெண்டு காலுலயும் அங்க எலும்பு சுக்கலா நொறுங்கி எகிறின நிலையிலும் அவன் கத்தியச் சுழற்றி வீச சக்தியோட வயித்த அது பக்க வாட்டுல கிழிச்சுக்கிட்டுப் போச்சு..டார்ச் லைட் வெளிச்சத்துல பாத்த போது தான் காயம் அரையடி நீளததுல அரை அங்குல ஆழத்துக்கு வயித்தக் கிழிச்சுருந்தது.. ஒயிட் மொதல்ல வயித்தச் சுத்தி காயத்த மூடி கிழிச்ச துண்டோட ஒரு பகுதியால இறுக்கிக் கட்டினான்..

தலைக் காயமும் அவ்பமா இல்ல..நெத்தில ஒரு அங்குலத்துக்கு சதை கிழிஞ்சு தொங்க மழையால உடனுக்குடன் ரத்தம் கழுவப் பட மண்டையோட்டின் வெண்மை தெரிந்தது..ஒயிட் அங்கயும் இறுகக் கட்டிக்கிட்டே அவசரமாச் சொன்னான்...

"பெரிய தலைவரே..நீங்க உடனடியா ஆஸ்பிடல் போங்க.. மிச்சத்த நாங்க பாத்துக்கறோம்"

சக்தி அதைக் காதுலயே வாங்கிக்காம மண்ணுக்குள்ள இருந்த கடப்பாரைய பிடுங்கி எடுத்துக்கிட்டு மல்லாந்து கை விரிச்சுக் கிடந்த மூக்கனுக்கு வலது பக்கத்துல போயி நின்னு சொன்னான்..

"முதல் கால்ல அடிச்சது சித்ர மாலாவுக்காக.. இது கந்தசாமி அப்பாவுக்காக..."ன்னு சொல்லிக்கிட்டே கடப்பாரைய ஒசத்தி இறக்க அது மூக்கனின் வலது உள்ளங் கையப் பொத்துக்கிட்டு மண்ணுக்குள் இறங்க அவன் கத்தலை அதற்க்காகவே இறங்கியது போல இடியும்,மின்னலும் ஸ்வீகரித்துக் கொண்டன...

(தொடரும்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top