• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 44

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
,மனு முகம் முழுக்கப் புன்னகையாச் கேட்டா...

"மணி என்ன செல்வி?"

"ஒம்பதரையாகப் போவுது?"

"உனக்கு ஞாபகமிருக்கா?ஆறு வருசத்துக்கு முன்ன இதே தேதி இதே நேரத்துல தான் உங்கண்ணன் ஆஸ்பிடல்ல எம் முன்னால மயங்கிச் சரிஞ்சார்"

"மறக்க முடியுமா?உயிருக்கே ஆபத்துன்னு சொன்ன நீங்களும்,தாத்தாவும் அடுத்த நாளே எந்திரிச்சுட அண்ணன் தான் பத்து நாளு அங்க படுத்திருந்தார்"

"அவரக் காப்பாத்தினது யாரு தெரியுமா?"

"நீங்க தான்..பத்து நாளும் அண்ணன விட்டு நகரலியே?"

"இல்ல செல்வி..கொளத்துக்குள்ளயும் சரி.. அங்கிருந்து வந்த போதும் சரி..உங்கண்ணனக் காப்பாத்தினது நானில்ல..சித்ர மாலா !"

அந்த நேரத்துல கேட் கிட்ட ஹாரன் சத்தம் கேட்க பேச்ச நிறுத்தி ரெண்டு பேரும் திரும்பிப் பாக்க கேட் திறக்கப் பட்டு ஒரு கார் உள்ள நுழைஞ்சு செட்ல போயி நிக்க அதுல இருந்து மூணு பேரு இறங்கினாங்க..சக்தி,சி.கே, ஒயிட் ! அவங்க கிட்டயும் இந்த ஆறு வருசத்துல பெருசா மாறுதல் இல்லேன்னாலும் ஒயிட் மட்டும் கொஞ்சம் சதை போட்டு பூசின மாதிரி இருந்தான்.சி.கே கூட தாமாசா அதப் பத்தி ''பெருத்துக்கிட்டே போறடா..நாலு நாள்ல கண்டிப்பா பலூன் மாதிரி வெடிக்கப் போறே பாரு''ன்னு சொன்னா...அதுக்கெல்லாம் அசர்ற ஆளா நம்ம ஒயிட்டு?கண்ணடிச்சு குறும்பாச் சொல்வான்..

"என்ன தலைவரே பண்ணச் சொல்றீங்க?எனக்கு ரெண்டு தங்கச்சிங்க..பாச மலர் சாவித்திரியெல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்..அம்புட்டுப் பாசம்.. மொதல்ல செல்வி தங்கச்சிக்காக இங்க சாப்பிடுவேன்.. கொஞ்ச நேரத்துல பெரிய தலைவரப் பாக்கப் போவேன்..சரியா நாம் போற நேரம் சாப்பாட்டு நேரமா இருக்கும்..ரெண்டு பேரும் சாப்பிடச் சொல்லுவாங்க.. நான் இங்க சாப்பிட்டுட்டேன்னு சொன்னா பெரிய தலைவர் விட்டாலும்'எனக்காக கொஞ்சமாவது சாப்பபிடுங்கண்ணா'ன்னு மனு தங்கச்சி சொல்லும்.. அது சொல்ல மீர்ற ஆளு இந்தத் தோட்டத்துல உண்டா? ஆனானப் பட்ட பெரிய தலைவரே அவங்களுக்கு அடிமையாயிட்ட போது இந்த ஒயிட் பக்கியெல்லாம் எம் மாத்திரம்?தங்கச்சி மனசு புண் பட்டுடக் கூடாதுன்னு உக்காருவேன்.. சொன்னதென்னவோ கொஞ்சம்னு தான்! எந் தட்டுன்னா ரெண்டு தங்கச்சிங்களும் கரண்டில அள்ளறதில்ல..பாத்திரத்தையே சாய்ச்சுடுவாங்க.. நானும் அவங்க மனசு கோணக் கூடாதுன்னு சாப்பிடுவேன்..இத்தனைக்கும் காரணம் பெரிய தலைவர் தான்"

சி.கே ஆச்சரியமா பாத்துக் கேப்பான்..

"அவனென்னடா பண்ணினான்?"

"ஆறு வருசத்துக்கு முன்னால.. இதே நாள்..மூக்கன் மண்டைல ஆப்பு வெக்கறதுக்கு முன்னால சொன்னாரே?தனக்காக வாழறத விட மத்தவங்களுக்காக வாழறதே வாழ்க்கைன்னு.. நா ஒருத்தன் மட்டுமே அத இங்க பாலோ பண்றேனாக்கும்.."

",நீ திங்கறது அடுத்தவங்களுக்காகவா?"

"இல்லீங்களா பின்ன?இந்த தங்கச்சிய சந்தோசப் படுத்த இங்க திங்கறேன்..அந்தத் தங்கச்சியச் சந்தோசப் படுத்த அங்க திங்கறேன்..அப்படியே நம்மாளுங்க குடியிருப்புப் பக்கம் போனா அங்க ஒரு தங்கச்சிய சந்தோசப் படுத்தறேன்..மத்தவங்களச் சந்தோசப் படுத்தவே உழைச்சு ஊதிட்டேன்"

"என்னடா உழைச்சே நீ?°

"என்ன தலைவரே..இப்படிக் கேட்டுட்டீங்க?திங்கறதும் ஒரு உழைப்புத் தானே?"

எல்லோரும் பல தடவ சொல்லியும் ஒயிட் கல்யாணம் செஞ்சுக்க மாட்டேன்னுட்டான்..அவனுக்குன்னு கணிசமான தொகை மாசமானா மனு கைல வாங்கினான்னா தோட்டத்துல இருக்கற அத்தன கொழந்தைங்களுக்கும் அன்னிக்கே செலவு பண்ணிடுவான்..

"உனக்குன்னு எதாச்சும் சேர்த்து வைடா"

சி.கே ஒரு தடவ அலுப்பாச் சொல்ல உடனே பதில் சொன்னான்..

"வச்சிருக்கேன் தலைவரே..சி.கே,சக்தி,மனு, செல்வின்னு மதிப்பிட முடியாத சொத்து எனக்கிருக்கு.. மத்த எதுவும் எனக்கு வேணாம்"

அதோட சி.கே அந்தப் பேச்சையே விட்டுட்டான்.. தோட்டத்துக்குள்ள எந்த வீட்டுலயும் சாப்பிடுவான்.. இன்ன வேலைன்னும் அவனுக்குக் கிடையாது..ஆனா, எல்லா வேலையும் செய்வான்..பேப்பர் படிக்கறதோ, டிவி பாக்கறதோ,சினிமாவுக்குப் போறதோ கிடையாது.. எட்டு மணிக்கே சாப்பிட்டுட்டு மொட்ட மாடிக்குப் போயிடுவான்..அவங் கைல தவறாம பைனாகுலர் இருக்கும்..செட்ல படுத்திருக்கும் போது ஒரு பாட்ட அப்பப்பப் பாடுவான்..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
"உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல..
உன்னனை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல..
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல..
நீ இல்லாமல் நானும் நானல்ல.."

மனுவும்,சக்தியும் சில தடவ இதக் கேட்டு 'லவ் பெய்லரோ?'ன்னு சந்தேகப் பட்டிருக்காங்க.. செட்ல படுத்திருக்கறவன் திடீர்னு எந்திரிப்பான்.. பைனாகுலர எடுத்துக்திட்டு செட்ட விட்டு வெளிய வந்து கண்ணுக்குக் குடுத்து சுத்தியும் வெகு நேரம் பாத்துட்டு பெருமூச்சோட போய் படுப்பான்..ஒயிட் எதத் தேடறான் அல்லது எத எதிர் பாக்கறான்?

××××××××××××××××××××××××××××××××××××××××

சக்தி வீட்டுக்குள்ள நுழையவும் எதுக்க வந்த செல்வியப் பாத்ததும் நின்னு புன்னகையோட சொன்னான்..

"இங்க என்ன பண்றே எரும?அங்க உன்ற மாமன் உன்னக் காணம்னு தவியா தவிச்சுக்கிட்டிரூக்கான்"

செல்வி அவன் தோள்ல அடிச்சு கிண்டலாச் சொன்னா..

"அடடா..அண்ணனுக்கு அக்கறையப் பாரு.. நானிருந்தா அண்ணியக் கொஞ்ச முடியாதுன்னு தொரத்தறது எனக்குத் தெரியாதா?போங்க..ஏற்கனவே அண்ணி விட்ட ஏக்கப் பெருமூச்சுல எதுக்க இருந்த ரெண்டு தென்ன மரம் வாடிப் போச்சு"

சக்தி அவ தலைல செல்லமா கொட்டிட்டு மொட்டை மாடிக்கு படில தாவி ஏர்றத அன்போட பாத்துக்கிட்டிருந்தா செல்வி ! சக்தி இல்லேன்னா சி.கே கூட கல்யாணமே நடந்திருக்காதே?ஆஸ்பத்திரில இருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் தன் வீட்டுக்குக் கூடப் போகாம செல்வி வீட்டுக்கு தான் வந்தான்..அவன வருகைக்குப் பதறி வெலவெலத்து நின்ன அவ அப்பா கைய இழுத்துத் திண்ணைல தன் பக்கத்துல உக்கார வச்சு கைய விடாம சொன்னான்..


"பத்து நாளைக்கு முன்ன செல்விய எந் தங்கச்சியா தத்தெடுத்துக்கிட்டேன்..அதனால,எந் தங்கச்சியவும் உங்களையும் தோட்டத்துக்குக் கூட்டிட்டுப் போக வந்திருக்கேன்.. அப்புறம்..இது சி.கே ! என் தோட்டத்து மேனேஜர்..அவனுக்குச் செல்விய பொண்ணுக் கேட்டும் வந்திருக்கேன்"

பெரியவருக்கு பேச்சே வராம தடுமாறிச் சொன்னார்..

"அண்ணன்னு சொன்ன பின்னால இதுல நாஞ் சொல்ல என்ன இருக்கு தம்பி?"

அடுத்த வாரத்திலேயே சக்தி,மான்யா திருமணத்தோடு சி.கே,செல்வி கல்யாணமும் நடந்தது..தோட்டத்துல ஒரு ஏக்கராவ செல்வி பேருக்கு எழுதின பத்திரத்த கல்யாணச் சீரா சக்தி குடுத்த போது சலனமில்லாம சுக்கு நூறா கிழிச்சு மண்டியிட்டு அவன் பாதத்துல அத மலர்களாப் போட்டு பாதத்துல கைய வெச்சு கை மேல முகம் பொதைச்சு உறுதியாச் சொன்னா..

"காலம் பூரா நீங்க எனக்கு அண்ணன்ங்கற மாபெரும் சொத்துத் தான் வேணும்..அதுக்கு முன்னால இதெல்வாம் வெறும் தூசு சக்தியண்ணா"

கலங்காதவங்க கண்களும் கலங்க சக்நி குனிஞ்சு அவளத் தூக்கி சி.கேவையும் இழுத்து மார்போட அணைச்சுக்க ஒயிட் சொன்னான்..

"ஆரம்பிச்சுட்டாங்கப்பா..!பெரிய தலைவரே..பசி உசுரு போகுதுங்க..உங்க பாச மலர் சென்டிமென்ட் எல்லாம் பந்திக்குப் பின்னால வச்சுக்கக் கூடாதா?

செல்வியப் பொறுத்த வரைக்கும் கூப்பிடறது அண்ணான்னாலும் சக்தியே தெய்வம் !

×××××××××××××××××××××××××××××××

வேகமா மாடி ஏறின சக்தி செட்டுக்குள்ள இருந்த டேபிள்ள ஒயிலா சாய்ஞ்சு அழகா கையக் கட்டி நின்னுக்கிட்டிருந்த அவ போஸப் பாத்ததும் அவனையுமறியாம ஸ்தம்பிச்சு நின்னான்..மான்யா மஞ்சள் காட்டன் புடவை..அதே கலர் ஜாக்கெட்ல இருந்தா..அவள் சருமும் மஞ்சள்.. தலைமுடி விரல் நகங்களத் தவிர்த்து எல்லாமே மஞ்சள்..காதுல இருந்த கம்மலத் தவிர வேற எந்த நகையும் அவ உடம்புல இல்லேன்னாலும் மொத்த உருவமுமே தங்கமா மின்ன அவளோட அலாதிப் புன்னகை மகுடத்து வைரமா ஜொலிச்சுது !அசந்து நின்ன அவனப் பாத்து கண் சிமிட்டி கை ரெண்டையும் விரிச்சு 'வா'ன்னு ஜாடை காட்ட அடுத்த நொடி தாவிப் பாய்ந்து இறுக்கி சக்தி தந்த இதழிணைப்பில் கரைந்து மறைந்தாள் அவள் !

எவ்வளவு நேரமது..ஒரு நொடியா..ஒரு யுகமா? எங்கிருக்கிறோம் நாம்..இங்கா..இந்திர லோகத்திவா?
இங்கு நானும்,நீயும் வெவ்வேறா?இதழ்கள்..மிக மெல்லிய இதழ்கள்..சரீரத்தின் ஒரு சிறு பகுதி..அதன் ஒரு தீண்டலில் உயிரைக் கரைக்க முடியுமா?நான்,எனது என எல்லாம் மறக்கடித்துக் கிறங்க வைக்கும் இந்த தீண்டல் சொல்ல . அதன் தித்திப்பை விவரிக்க..உலகில் மொழி உண்டா? முத்தம்..இதைப் பாட கவியால் முடியுமா?கதையாய்ச் சொல்ல முடியுமா?பாடமாய் படமிட்டு விவரிக்க முடியுமா? முத்தம் என்பதை முத்தத்தால்..முத்தமிட்டே உணர முடியும்.. வார்த்தைகளுக்கு அப்பாற்ப் பட்டதால்.. அதை உணர முடியுமே தவிர புரியவோ,இன்னொருவருக்குப் புரிய வைக்கவோ முடியாது..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
முதலில் சுதாரித்தவள் மனுவே..ஆனால்,மனமின்றி விலகி மறுபடியும் இழுத்தவன் நெஞ்சில் கை வைத்து தடுத்துச் சொன்னாள்..

"போதுன்டா முரடா..மிச்சத்த அப்புறம் வச்சுக்கலாம்.. யாராச்சும் வந்துடுவாங்க"

"வரட்டுமே?எனக்கென்ன பயம்?இந்தத் தோட்டத்துல என்னத் தடுக்கக் கூட ஆளிருக்கா?

சொல்லிக்கிட்டே நெஞ்சுல இருந்த மனுவின் பொன் மஞ்சள் கை தள்ளி மறுபடியும் அணைக்க முயன்ற போது பின்னாலிருந்து அந்தக் குரல் வந்தது..

"நானிருக்கேன் மிஸ்டர் சக்தி வேல்"

பதறி விலகித் திரும்பினாங்க ரெண்டு பேரும் ! இடுப்புல ரெண்டு கையவும் ஊணி அழுத்தமா கால்கள அகட்டி வச்சு பாவாடை சட்டைல ஒரு அஞ்சு வயசுப் பெண் குழந்தை !
கையசைச்சு அழுத்தமாய்க் கூப்பிட்டது !!

'இங்க வாங்க ரெண்டு பேரும்''

மறு பேச்சின்றி வந்தவங்களுக்கு கைய அசைச்சு கட்டளையாய் வந்தது குழந்தையிடமிருந்து..

"தோட்டத்துல தப்பு செய்யற யாரா இருந்தாலும் தண்டனை உண்டுன்னு ரெண்டு பேருக்குமே தெரியுமில்லையா?முந்தா நாளு சென்னை போன
நீங்க மொதல்ல என்னப் பாத்து ரெண்டு நாள் கோட்டாவ குடுக்காம...வந்ததும் அம்மாவப் பாக்க வந்ததுக்காக.. அம்மா !இந்த நேரத்துல எனக்கு யோகாவும்,தியானமும் சொல்லிக் குடுக்க வேண்டிய நீங்க அப்பாவத் தனியாப் பாக்கணும்னே கடமைய மறந்து இங்க வந்து நின்னதுக்காக..ரெண்டு பேரும் முட்டி போட்டு நில்லுங்க"

சொன்னதை அப்படியே செஞ்சாங்க ரெண்டு பேரும் !
தோரணை மாறாமல் கேட்டது அக் குழந்தை..

"செஞ்சது தப்புன்னு இப்பத் தெரியுதா உங்களுக்கு..
இனிமே இப்படிப் பண்ண மாட்டீங்களே?"

ரெண்டு பேரும் ஆமாம்,இல்லைன்னு புரியாத அளவுக்கு பொத்தாம் பொதுவுல தலையாட்ட குழந்தை தாவி இருவரையும் அணைக்க அவர்களும் அணைத்து ஆளுக்கொரு கன்னத்தில் முத்தமாய்ப் பொழிய குழந்தை ஆனநதமாய்ச் சிரிக்க பின்னால் இன்னொரு குரல் கேட்டது..

"அருக்கு டார்லூ..நெனைச்சேன் இங்க தான் இருப்பேன்னு"

கந்தசாமி ! அவரிடம் மாற்றம் இருந்தது..இந்த ஆறு வருடத்தில் ரொம்பவே தளர்ந்து இளைத்துமிருந்தார்..
மாடியேறியதற்கே மூச்சு வாங்கியது..மூக்கனடிக்குத் தப்பிச்சாலும் அருக்காணி அம்மாவோட சாவு அவர் மனசுக்கு மரண அடியாப் போச்சு.சக்தி,மனு கல்யாணத்தால கொஞ்சம் தேர்ந்தவர் பேத்தி பிறந்த பின் சகஜமா பேசிச் சிரிச்சார்..ஆளாளுக்கு ஒரு பேரு வச்சுக் கூப்பிட்டாங்க அந்தக் குழந்தைய..மனுவுக்கு CM..
அவளப் பொறுத்த வரைக்கும் சக்தியையும் இந்த வாழ்க்கையயும் தந்தது சித்ர மாலா தான்னு உறுதியா நம்பினதால அவளுக்கு CM..ரெண்டு வயசுலயே அது கிட்ட சகாதியோட தோரணை,ஆளுமை,தன்னோட நிறம்னு பாத்தாலும் ஒளி வீசும் சிறு கண்கள் மட்டும் அவளுக்கு சித்ர மாலாவையே ஞாபகப் படுத்துச்சு.. கந்தசாமி குடுத்த சித்ர மாலா போட்டோ,வீடியோ அவ கிட்டத் தான இருக்கு?

சக்திக்குக் 'குட்டிம்மா'..சி.கேவுக்கு 'ஜூனியர் சக்தி'.. செல்விக்கு 'ரவுடி ராணி' ஒயிட்டுக்கோ 'தானைத் தலைவி'...யாரு எப்படிக் கூப்பிட்டாலும் கந்தசாமிக்கு "அருக்கு டார்லூ !"அவ தான் அவர் உலகமே.. அம்மா கிட்ட பால் குடிய மறந்ததுல இருந்தே அவர் தான் தூக்கி வளர்த்தார்..இன்னிய வரைக்கும் குழந்தை அவர் கூடத் தான் படுக்கையே..சுருக்கமாச் சொன்னா சக்தி,மான்யா கூட இருந்தத விட கநாதசாமி கிட்டத் தான் அந்தக் குழந்தை அதிக நேரம் இருந்தது..

தாத்தாவக் கண்டதும் குழந்தை மனு காதுக்கிட்ட நெருங்கிச் சொல்லுச்சு..

"டிஸ்டர்ப் பண்ணினதுக்கு ஸாரிம்மா.. இனி கன்டினியூ பண்ணலாம் பேபி"

சொல்லிட்டு அவ கன்னத்துல செல்லமா கிள்ளிட்டு ஓடித் தாத்தா காலக் கட்டுக்கிட்டுச் சொல்லுச்சு..

"தாத்தா டார்லிங்..உங்கள படியேறக் கூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல?வாங்க,போலாம்"

படியிறங்கும் போது திரும்பி தன்னைப் பார்த்து குறும்பாய் கண் சிமிட்டிய தன் பெண்ணைப் பார்த்து ஆச்சரியத்தில் மயக்கமே வரும் போலிருந்தது..

"குட்டிம்மா உங் காதுவ என்னமோ சொன்னாளே?"

சக்தி கேட்டுகிட்டே எந்திரிச்சு அவளையும் தூக்கி அணைச்சான் !

"உங்க பொண்ணு தான..வேறென்ன சொல்லும்? டிஸ்டர்ப் பண்ணினதுக்கு ஸாரியாம்..இனிக் கன்டினியூ பண்ணலாம் பேபின்னு கன்னத்தக் கிள்ளிட்டுப் போவுது?ஓவராச் செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சுருக்கீங்க..வயசுக்கு மீறின பேச்சு..உங்கள மாதிரியே"

''அட லூசுப் பொண்டாட்டி..அவளுக்குச் செல்லம் குடுக்காதவங்க இந்தத் தோட்டத்துல யாரிக்கா.. சொல்லு?"

கேட்டுச் சிரித்த சிரிப்பு அவளைக் கிறங்கடிக்க அவனிதழ் நோக்கி தானாய் நகரந்நாள் மனு !

(நாளைக்கு இன்னொரு குட்டி பகுதியும்,முடிவுரையுடன் ...முற்றும்....!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top