• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் நீலாம்பரி பாகம் இரண்டு 45..2'

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
மனநிலை பேதலிச்சு ஒரு தோழியால மருத்துவ மனைல சேர்க்கப் பட்டு..நினைவக அடுக்குகள்ல ஏற்பட்ட கோளாறால..எது நிஜம்,எது கற்பனைங்கற குழப்பமாகி..ஆஸ்பிடல் இருந்து வந்து கொஞ்ச நாள் தோழி வீட்டுல இருந்துட்டு ஜூலைக் கடைசில நான் பெருந்துறை வந்த போது ஏறக்குறைய சக்கையா, காதல் நீவாம்பரிய முழுக்க மறந்தவனா இருந்தேன்..

மொதல்ல அடிப்படைத் தேவைகளச் சமாளிக்கணுமே? அலைஞ்சு திரிஞ்சு சிப்காட்ல ஒரு கம்பெனில செக்யூயிட்டியாச் சேர்ந்தேன்..அப்புறம் மெல்லத் தேர்ந்து பழைய நட்புகளைக் கூப்பிட்டுப் பேசினேன்.. நான் முதலில் கூப்பிட்டது விஜி மேடத்தைத் தான்..அவர்கள் மூலமாய் மீண்டும் *** தங்கங்கள் தொடர்பு எல்லைக்குள் வந்தார்கள்..அத்தனை பேரும் நலம் விசாரிப்புக்குப் பின் கேட்ட ஒரே கேள்வி...

"காதல் நீலாம்பரிய எப்ப ஆரம்பிக்கப் போறீங்க?"

அப்படி ஒண்ண எஸ்எம் சைட்ல ஆரம்பிச்சது ஞாபகத்துல இருக்கு..ஆனா,என்ன எழுதினோம்கறது ஞாபகத்துல இல்ல.கோவைத் தோழி கிட்ட இருந்த போனும்,சிம்மும் செப்டம்பர் முதல் வாரத்துல தான் எங் கைக்கு வந்தது..வேலை நெருக்கடியால் காதல் நீலாம்பரியை எட்டிக் கூட பாக்கல..

அங்கயும் கால் பிரச்னையால கால் கடுதாசிய நீட்டிட்டு கொஞ்ச நாள் (2.10.18 டூ 16.11.18)தோதான வேலை கெடைக்கற வரைக்கும் வெட்டி ஆபீசரா இருந்தேன்.. மறூபடியூம் விஜி மேடம்,*** தங்கங்கள் நச்சரிப்பு..

"சும்மா தான இருக்கீங்க..காதல் நீலாம்பரிய எழுதி முடிக்கலாமே?"

தாங்க முடியாம காதல் நீலாம்பரி பதினொரு அத்தியாயத்தையும் இங்க வந்து பல தடவ படிச்சேன்.. சொந்தக் கதையவே கற்பனைய மிக்ஸ் பண்ணி எழுதி இருக்கறது புரிஞ்சுது..ஆனா,அடுத்த அத்தியாயங்கள்ல கற்பனைய எப்படி கொண்டு போக நெனச்சிருந்தேன்ங்கறது சுத்தமா ஞாபகத்துல இல்ல.. விஜி மேடம் கதை பத்தி நாஞ் சொன்னதெல்லாம் எடுத்துக் குடுக்க சபரி பிறந்த நாளான 11.10.18 அன்னிக்கு காதல் நீலாம்பரிய மறுபடியும் தொடங்கறதா இங்க ஒரு பதிவும் போட்டேன்..

நெருக்கடிகளால் ஆரம்பிக்கப் பட்ட இந்தக் கதை ஒரு கட்டத்துல முழிச்சுக்கிட்டு தன்னைத் தானே கொண்டு போக முடிவு பண்ணிடுச்சு போல இருக்கு..யுடிய ஆரம்பிக்கறது தான் நான்..அப்புறம் அது என்ன எழுத வச்சுது..கதை தாறுமாறுப் போயி எல்லாருமே பக்கம் பக்கமா பேச ஆரம்பிச்சுட்டாங்க..ஒரு கட்டத்துல வெறுத்துப் போன தோழி ஒருத்தி போன் பண்ணி இப்படிக் கத்தறா..

"யோவ் தேவா...என்னய்யா இது?பேரு தான் காதல் நீலாம்பரி..மருந்துக்குக் கூட ரொமான்ஸ் இல்லையே? ஒரே பிலாஸபியா இருக்கே?போய்யா.."

கதைய நான் எழுதல..அது தான் என்ன எழுத வெக்குதுன்னா நம்பவா போறீங்க?நான் நின்னு யோசிக்கைல கதை 25 அத்தியாயம் தாண்டிடுச்சு..

அக்டோபர்ல மீண்டும் நீலாம்பரிய ஆரம்பிக்கைல என் ஐடியா இதான்..முப்பது அத்தியாயத்துக்குள்ள முடிச்சுடணும்..இருபதாவது அத்தியாயத்துல சித்ர மாலா உள்ள வர்றா..இருபத்தி ரெண்டுல டெய்லர்.. இருபத்தி நாலுல டெய்லர் அவ கதைய முடிக்கறான்.. இப்படிக் கொண்டு போயி முப்பதுல சக்தியும் மனுவும் இணைய கதம்..கதம்..இது தான் அப்ப முடிவு பண்ணி வச்சிருந்தது..

ஆனா,கதை என்னைய இழுத்துத்கிட்டுப் போனதால முப்பதாவது அத்தியாயத்திலும் சித்ர மாலாவந்த பாடில்ல..நானே வெறுத்துப் போயி அதோட முதல் பாகம் முற்றும்னு போட்டேன்.அங்க தான் கதை மொத்தமா எங்கைய விட்டு நழுவுச்சு..நீங்களும் கதையோட சேர்ந்து என்ன எழுத வச்சீங்க..யெஸ்! முப்பது அத்தியாயத்துக்கு மேல கதையக் கொண்டு போனது நீங்க தான் !

ரெண்டாவது பாகத்துல அருக்காணி,கந்தசாமிய அடுத்தடுத்து போட்டுத் தள்ளி மனுவும் தாக்கப் பட்டு உயிருக்கு ஆபத்தான கட்டத்துல அனுமதிக்கப் பட்ட பின்னால தான் சக்தி முழிச்செழுந்து ஆட்டத்த ஆரம்பிச்சு டெய்லர போட்டுத் தள்ளி இருபது. அத்தியாயத்துக்குள்ள கதைய முடிக்கறது தான் ரெண்டாம் பாகம் ஆரம்பிக்கறப்ப எம் பிளான்..! ஆனா, நீங்க உள்ள பூந்து என் எல்லா பிளானுக்கும் வேட்டு வச்சீங்க...???? ????
 




Last edited:

Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
நான் ஒரு எழுத்தாளன்..என் பார்வைல,என் அனுபவத்துல ஒரு படைப்பு ஜெயிக்கணும்னா அதுல பக்கா சென்டிமென்ட் இருக்கணும்னு நம்பறவன்.. அதையே அடுத்தவங்களுக்கும் சொல்றவன்..'நோட்டா' படம் பாத்தீங்களா?அது மொதல்ல ",வெட்டாட்டம்"னு நாவலா வந்தது..நான் இப்பத்த நாவலாசிரியர்கள் கதைங்க எதுவும் சமீப காலமா படிச்சதில்ல.. ஆனா, இந்த எழுத்தாளரோட கதையப் படிச்சு அபிப்ராயம் சொல்ல எனக்குக் கடமை இருந்நது..அது பாசம் தந்த கடமை..தூக்கி வளர்த்த கடமை..அவன் உயர்வில் பெருமைப் படும் கடமை..தம்பிக்கு அண்ணன் செய்யும் கடமை..ஜெட் வேகத்துல போன அந்தக் கதைல ஏதோ ஒரு குறை இருக்கறதா எம் மனச உறுத்த பனிரெண்டு தடவ படிச்சேன்.கடைசியாப் படிச்சப்பத் தான் எனக்கு அது புரிஞ்சுது..பெருசா சென்டிமென்ட் இல்ல அதுல !

ஹீரோ பொறுப்பற்றவன்..லஞ்ச ஊழலில் முதல்வரின் மகன் ! எதிர் பாராத விதமா இவன் முதல்வராக நடக்கும் அக்கிரமங்களச் சகிக்க முடியாம இவன் பொறுப்புள்ளவனா மாறி முதல்வரா நாட்டுக்கு என்ன செய்யறான்ங்கறதே கதை..விறுவிறுப்புக்கு பஞ்சமே வெக்காத கதை..ஆனா,அழுத்தமான சென்டிமென்ட் இல்ல..அடுத்த நாளே அவன போன்ல கூப்பிட்டுச் சொன்னேன்..

"நாடு,மதம்,மொழி கடந்து சென்டிமென்ட்களால் சூழப் பட்டவன் மனிதன்..ஜெயிச்ச கதை,சினிமான்னு எதை எடுத்துக்கிட்டாலும் அதுல செனாடிமென்டே பிரதானமா இருக்கும்..பல்லாயிரம் வருசங்களா ராமாயணம், மகா பாரதம் நீடிச்சு நிக்கக் காரணம் அதுல இருக்கற மகத்தான சென்டிமேன்ட் தான் ! உங் கதைல அது இல்ல..பொறுப்பற்ற ஹீரோ தர்மபுரி பஸ் எரிப்புக்காக மனம் மார்றது உதைக்குது..ஆரம்பத்துல இருந்தே ஒட்டாத ஊழல் அப்பனும்,பொறுப்பற்ற மகனும் மோதிக்கறதுலயும் சென்டிமென்ட் வரல..ஹீரோவோட ஒரு தோழி பணத்துக்காக எதையும் செய்யறவளா இருந்ததால அவ கொடூரமா கொல்லப் படறதுலயும் சென்டிமென்ட் கிளிக் ஆகல..பொறுப்பற்ற ஹீரோங்கறதாலயே அவன் கஷ்டப் படும் போது பரிதாபம் வரல..நீ என்ன செஞ்சிருக்கணும் தெரியுமா? அவன் தங்கச்சிய இன்னும் நகாசு பண்ணி கொடூரமா கொன்னிருக்கணும்..அவனுக்கு காட் பாதரா இருந்த அந்த புரபஸர போட்டுத் தள்ளி இருக்கணும்.. எழுதறவனுக்கு படைத்தல்,அழித்தல்,காத்தல்ங்கற எல்லா உரிமையும் உண்டுங்கறத மறந்துடாத..அடுத்த கதைல இந்தக் குறைய நிவர்த்தி பண்ணிக்கோ..அப்பா, அம்மா இருந்து உன் வளரச்சிய பாக்கலைங்கறதுல வருத்தம் தான்..ஆனா,பாத்துக்கிட்டிருப்பாங்கன்னு நம்புவோம்..கவனி தங்கம்..இங்கயும் சென்டிமென்ட்..வாழ்த்துக்கள்.. வச்சிரட்டுமா?"

அத அவனுக்குச் சொல்லல..எனக்கே நான் சொல்லிட்டேன்ங்கறது அப்ப எனக்குப் புரியல..

கதை எனக்கே போரடிக்கறதா தோண அருக்காணி அம்மாவ போட்டுத் தள்ற முடிவோட ரெண்டாம் பாகத்த ஆரம்பிச்சேன்..தம்பிக்கு அட்வைஸ் பண்ணின சென்டிமென்ட் மனசாட்சி அப்ப முழிச்சு கொல்றதுக்கு முன்ன பக்கா சென்டிமென்ட் வேணும்னு அடம் புடிக்க யோசிச்சேன்..அருக்காணி,கந்தசாமி தம்பதிக்கு குழந்தை இல்லையேங்கற கவலை..சக்திக்கு அப்பா, அம்மா இல்லையேங்கற வருத்தம்..பிரிஞ்சு தனித் தனியா கெடக்கற ரெண்டு பக்க ஏக்கத் தண்டவாளத் தண்டையும் நெருங்கி வர வெச்சு சென்டிமென்ட் டிராக்கா மாத்தி அது மேல நம்ம கதை எக்ஸ்பிரஸ்ஸ ஜிக்கு புக்குன்னு ஓட்டினா என்னன்னு தோணவும் மூணு அத்தியாயத்துக்கு சென்டிமென்ட கசக்கிப் பிழிஞ்சு அம்மா மகனாக்கி அன்னிக்கே ஈவு இரக்கமில்லாம அருக்காணி அம்மாவ முடிச்சுக் கட்டி எல்லாருக்கும் ஷாக் குடுத்து சந்தோசப் பட்டேன்.. ஆனா, அப்பவே கதைய உங்க இஷ்டத்துக்கு வளைக்க ஆரம்பிச்சுட்டேன்கறத நான் புரிஞ்சுக்கல..

அருக்காணி அம்மா கொலைக்கு ஏகப்பட்ட கண்டனங்கள்..அடுத்த அத்ததியாயத்துலயே கந்தசாமியப் போட்டுத் தள்ற என் திட்டத்துல மண் விழ தயங்க வச்சது..கூடவே இன்னொரு ஐடியாவும் வர துள்ளிக் குதிச்சேன்..ஒரேடியா கொன்னுட்டா மூணு அத்தியாயத்துல மறந்துடுவாங்க.. கொன்னுடுவான்ங்கற பயத்துல வச்சா என்ன? இந்த யோசனையால அடுத்த அத்தியாயத்துல சித்ர மாலாவக் கொண்டு வந்தேன்..உங்களுக்குக்காக கதைல நான் பண்ணின முதல் காம்பர்மைஸ் கந்தசாமிய தப்பிக்க விட்டது..அதுல ஆரம்பிச்சது ஏகப்பட்ட காம்பர்மைஸால கதையவே மாத்துச்சு..
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
சித்ரமாலா உள்ள வரைல மூக்கன்ங்கற கேரக்டரே எம் ளனசுல இல்ல...டெய்லர் தான் வில்லன்..!பின்னாலயே வந்து சக்தின்னு நெனச்சு சித்ர மாலாவக் கொன்னுட்டு மும்பைக்கு ஓடறான்..அங்க ஒரு கொலை கேஸ்ல மாட்டி அஞ்சு வருசம் உள்ள இருந்துட்டு வந்து சக்தியப் பழி வாங்க அருக்காணி அம்மாவப் போட்டுத் தள்ளி கந்தசாமி, மனுவையும் அட்டாக் பண்றான்..இதான் என் ஆரம்பத் திட்டம்..ஆனா,கந்தசாமியும் மனுவும் குத்துயிரா உளுந்த உடனே ஏறக்குறைய எல்லாருமே 'டெய்லர் தானே?'ன்னு கமெண்ட்ல கேக்க எனக்கு ஏகப் பட்ட எரிச்சல் ! இப்படி கெஸ் பண்ணினா நானெப்படி கதையெழுதி நாசமாப் போறதுன்னு வந்ததே ஒரு ஆத்திரம்...???அப்ப டைப் பண்ணிட்டிருந்த அத்தியாயத்துல கடைசில சி.கே போன்ல டெய்லர் செத்தது உறுதின்னு சொல்றதா முடிச்சு தொடரும் போட்டேன்..

அந்த நிமிசம் வரைக்கும் டெய்லரே வில்லன்னு இருந்த நானே உங்க மேல இருந்த கோவத்துல அவன நானே கொன்னுட்டேன்..அடுத்த அத்தியாயம் குடுக்கணுமே? அப்ப ஒரு ஐடியா..டெய்லருக்கு ஒரு உயிர் நண்பனிருக்தறதாவும்,சாகறதுக்கு முன்ன இவன் அவன் கிட்ட அரை மணி போன்ல எல்லாத்தையும் (ஆனா,என்ன பேசுனான்னு சொல்லக் கூடாது.. சொன்னா அவந் தான்னு வில்லன்னு கண்டு புடிச்சுடுவாங்க..இது என் நெனப்பு!☺☺) சொல்லிட்டுத் தொங்கறதாவும் கடைசில லாஜிக் ஒதைக்காம இருக்க லிங்க் குடுத்தேன்..ஏன்னா,டெய்லர் போனையே கைல எடுக்கலைன்னு சி.கே சொல்றதா போன அத்தியாயத்துல குடுத்திருக்கேன்..

பெரிய புத்திசாலியா என்ன பாவிச்சு பக்காவா திட்டம் போட்டு அடுத்த அத்தியாமத்த எறக்கினா உடனே உங்க கிட்ட இருந்து வருது கமெண்ட் வருது.

.''டெய்லர் போன்ல அரை மணி நேரம் யாரு கிட்டயோ பேசினான்னு சொல்லும் போதே நெனைச்சேன் அப்பவே..அது டெய்லர் பிரண்டு தான..அவந் தான திட்டம் போட்டு எல்லாம் பண்ணினது?''

எனக்கு எப்படி இருந்திருக்கும்?காதல் நீலாம்பரியாச்சு.. ஆனியனாச்சு..இனி நான் எழுதப் போறதில்லேன்னு எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு ஒரு வேலையா உக்கடம் போனேன்..அங்க தான் ரெண்டு தடவ மெண்டலாகம என்னக் காப்பாத்தின தோழியோட ஆபீஸ் இருக்க போன் பண்ணினேன்.. ஒரு பேக்கரில டீ சொல்லி உக்காந்துக்கிட்டு பேசிட்டிருக்கைல கேட்டா..

"சொல்லு தங்கம்..எப்படி இருக்கா உன் காதல் நீலாம்பரி"

"ப்ச்..அதக் கன்டினியூ பண்ண என்னால முடியாது"

"ஏம்பா..என்னாச்சு?"

"பின்ன என்ன?நான் யாரை வில்லனா நெனச்சு வச்சிருக்கனோ அவங்கள முன் கூட்டியே கெஸ் பண்ணிச் சொன்னா என்ன தான் பண்றது? ஏற்கனவே இவங்களால கந்தசாமியக் கொல்லாம விட்டேன்.. டெய்லர கெஸ் பண்ண அவனத் தூக்குல தொங்க விட்டு அவன் பிரண்ட வில்லனாக்கினேன்..இப்ப அவனையும் கெஸ் பண்ணிட்டாங்க.. இப்படியே என்னையும் கதையையும் டைவர்ட் பண்ணினா..இனி சக்தியத் தான் வில்லனாக்கணும்

"ஆக்கேன்..என்ன கெட்டுப் போச்சு?எதுக்கு இப்ப டென்ஷனாகறே..அவங்க உன்ன டைவர்ட் பண்றாங்கன்னா..அவங்க கெஸ் பண்ற அளவுக்கு நீ ஏன் குடுக்கறே?அவங்க கெஸ் பண்றத உடனே நீ இல்லேன்னு ஆக்கு..அவங்கள நீ டைவர்ட் பண்ணு.. இது உன் ஆட்டம்..அவங்க உன் ரசிகர்கள்..நீ ஆடும் போது சொல்லத் தான் செய்வாங்க..அங்க பாரு பின்னால ஒருத்தன் வர்றாம் பாருன்னு கத்தத் தான் செய்வாங்க.. அது உன் மேல இருக்கற அன்பு..உன் ஆட்டத்துல இருக்கற அக்கறை..இதுக்காக பின்னால வர்றவன எனக்குத் தெரியாதா..நான் ஆடல போங்கன்னு அவுட்டாயி வெளிய வந்துடுவியா?உடனே ஆட்டத்த வேற மாதிரி ஆடணும்..அவங்க உன்ன டைவர்ட் பண்ணப் பண்ணா உன்னையும் உன் எழுத்தையும் செதுக்கறாங்கன்னு அர்த்தம்..அதான் உனக்குச் சவால்.. கதைல அவங்க கெஸ் பண்றதையெல்லாம் இல்லேன்னு ஆக்கி நீ புதுசா ஆடு..ஏன்னா,இது உன் ஆட்டம்"

அங்கிருந்து வந்ததும் புதுசா நான் எழுத ஆரம்பிச்சேன்.
யாரையோ கெஸ் பண்ணிக்கட்டும்..நாம புதுசா ஒருத்தன எறக்குவோம்னு நெனைச்சேன்..அப்பத் தான் தம்பியொருத்தர் கேட்டார்..நீலாம்பரி யாரு.. மனுவா, சித்ர மாலாவான்னு..அப்ப கிளிக்கானது தான்.. சக்திக்கு இன்னொரு காதலக் கொண்டு வந்து அதுல பகைய உண்டாக்கினா என்னன்னு..அதும் ஆணுக்கு ஆண் காதல்னு வச்சுக்கிட்டா?அதுக்கப்புறம் தெளிவா உங்களக் குழப்பத்துல வச்சிருக்க என்னால முடிஞ்சுது???
 




Deva

அமைச்சர்
Joined
Mar 8, 2018
Messages
3,467
Reaction score
10,538
Location
Erode
இத்தனை தூரம் மூச்சு கட்டி இழுத்து நான் சொல்ல வர்றது என்னன்னா.. இந்தக் கதைய ஆரம்பிச்சு வச்சது விஜி மேடமும்,*** தங்கங்களும்னா.. ரெண்டாம் பாகம் நாப்பது அத்தியாயம் தாண்டி மூணாம் பாகத்துக்கும் விதை போட்டது நீங்களே !ஒரு நாவலத் தொடர் கதையா எப்படிச் சொல்லணும்னு இங்க நீங்க எனக்குக் கத்துக் குடுத்தீங்கன்னு மனசார ஒத்துக்கறேன்..இதுல ஏதாவது சிறப்பா இருந்தா அது முழுக்க முழுக்க உங்களையே சேரும்..பெருமைக்குரிய உங்க அத்தனை பேருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களோடு மனமார்ந்த நன்றியச் சொல்லிக்கறேன்..

பி.கு..
.........

1)சி.கே,செல்விக்கு அஞ்சு வயசுல ஒரு மகன் !

2)நாயர்,சேச்சி நலம்.. நாயர் இப்பெல்லாம் குடிக்கறதக் குறைச்சுக்கிட்டார்..

3)இதன் மூணாம் பாகம் எங்க,எப்ப ஆரம்பிப்பேன்னு எனக்கே இப்பத் தெரியாது..பணம் ரெடி பண்ணியோ இல்லேன்னா பணம் போடறவங்களப் புடிச்சோ நானே ஒரு சைட் ஓப்பன் பண்ணி ஆரம்பிக்கலாம்னும் ஐடியா !
மொத்தத்துல இன்னும் சில மாசங்களுக்கு காதல் நீலாம்பரிய யோசிக்கறதா இல்ல !

4)தொட்டாச் சிணுங்கி மூலமா அப்பப்ப வந்து உங்க தொடர்புல இருப்பேன்

5)நான் எழுதினேன்..நீங்கள் ஆதரவளித்தீர்கள்... ஆனால்,சுவரை வைத்துத் தானே சித்திரம்? இது வரைக்கும் என் எழுத்துக்குத் தளம் தந்து எழுத்துலகுக்கு தடம் போட்டுத் தந்த SM குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் வணக்கத்தையும் சமர்ப்பித்து..

அளைவர்க்கும்..நன்றி ! வணக்கம் !!
 




KalaiVishwa

இளவரசர்
Joined
Jul 3, 2018
Messages
18,528
Reaction score
43,608
Age
38
Location
Tirunelveli
காதல் நீலாம்பரி ஐ புத்தகமா படிக்க ரொம்ப ஆசையா இருக்கு அண்ணா...
Intha kathaiyoda 1st
Page a padichavanga lala muzhusum padikama book keela vaika thonathu, mudiyathunu sure a sollalam na.
Ungala ezhutha sonna
Antha Akkavukku romba Nandri sollirunga Dev anna???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top