• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காமாட்சி அம்மன்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
1563516307381.png



1563516335950.png

அகிலங்கள் அனைத்திலும் அருளாட்சி செய்யும் நாயகியாகத் திகழ்ந்து, தன் அருட்கருணை பொங்கும் திருவிழிப் பார்வையினால், தன்னை நாடி வந்து துதித்துத் தொழுகின்ற அடியார்களின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றி அருள்பவள், அன்னை காமாட்சி. காம என்றால் அன்பு, கருணை. அட்ச என்றால் கண்.

எனவே, காமாட்சி என்றால் கருணையும், அன்பும் நிறைந்த கண்களையுடையவள் என்று பொருள். அன்னை காமாட்சி எழுந்தருளி, நமக்கெல்லாம் அருள்புரியும் திருத்தலமான காஞ்சிபுரம் பெரும் சிறப்புகளைத் தன்னகத்தே கொண்டது.

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி திருக்கோயில்களே அவை. அவற்றில் காஞ்சி காமாட்சி அன்னை ஆலயம் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகின்றது. புண்ணிய பூமியான பாரத தேசத்தில் (இந்தியாவில்) உள்ள ஐம்பத்தொரு சக்தி பீடங்களுள், காமகோடி பீடம் என்று அழைக்கப்படும் காஞ்சிபுரம் முக்கிய இடம் வகிக்கிறது. ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரியின் பூரண பிம்ப சொரூபிணியாகத் திகழ்வது, அருள்மிகு அன்னை காஞ்சி காமாட்சியின் மூல விக்கிரகம் ஒன்றுதான்.


சக்தி பீடங்களில் ஒன்றான பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி காமாட்சி கையில் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது. அந்த சூட்சுமம் என்னவென்று அறிந்து கொள்ளலாம்.

அன்பின் கடவுளான மன்மதனிடம் தான் கரும்பு வில்லும் ஐவகை மலர் அம்புகளும் இருக்கும். ஆனால், காஞ்சி காமாட்சியும் கரும்பு வில்லை வைத்திருக்கிறாள். காரணம், அதில் ஒரு சூட்சுமம் உள்ளது.

அன்பும் பாசமும் எப்போதும் ஒரு கட்டுக்குள் இருக்க வேண்டும் என்று எச்சரிக்கவே மன்மதனிடம் இருந்து அன்னை கரும்பு வில்லை வாங்கி வைத்திருக்கிறாள் என்று காஞ்சி மகாபெரியவர் ஒரு முறை சொல்லி இருக்கிறார். அது மட்டுமல்ல மன்மதனை சிவனார் எரித்த பிறகு, சக்தியின் வேண்டுதலுக்காக மன்மதனுக்கு உயிர் கொடுத்து, ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியும் விதமாக மாற்றினார்.

ஆனாலும் மன்மதன் எல்லை மீறாமல் இருக்கவும், தர்மநெறி தவறாமல் வாழும் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றவும் தன் திருக்கரத்தில் கரும்பை ஏந்தியபடி காட்சி தருக்கிறார். மன்மதனின் கரும்பு வில் மோகத்தைத் தூண்டக்கூடியது. ஆனால் காமாட்சியின் கையில் இருக்கும் கரும்பு வில்லோ, காமத்தை அடக்கி ஆன்மீகத்தில் நம்மை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்தின் முதல் பிரகாரத்தின் மத்தியில் இருக்கும் காயத்ரி மண்டபத்தின் மையப் பகுதியில் காமாட்சி அன்னை எழுந்தருளி உள்ளாள்.

1563516366335.png

காமாட்சி இவ்விடத் தில் பத்மாசனக் கோலம் கொண்டவளாக இருக் கிறாள். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன், ஈஸ்வரன், சதாசி வன் ஆகிய ஐந்துவித பிரம் மாக்களையும் தனக்கு ஆசனமாய்க் கொண்டவள்.

காமாட்சி தனது நான்கு திருக்கரங்களில் பாசம், அங்குசம், புஷ்பபாணம், கரும்பு வில் ஆகிய நான்கு ஆயுதங்களை ஏந்தி இருக்கிறாள். காமாட்சிக்கு ராஜராஜேஸ்வரி, திரிபுரசுந்தரி, ஸ்ரீசக்கர நாயகி, காமேஸ்வரி என பல பெயர்கள்உண்டு.
பெரும்பாலான கோயில்களில் இவற்றில் ஒன்றிரண்டு வடிவில்தான் அன்னை காட்சியளிப்பாள்.) அந்த மூவகை வடிவங்களாவன:

காமகோடி காமாட்சி (ஸ்தூல வடிவம்) (மூல விக்கிரக உருவில்) அஞ்சன காமாட்சி (அரூப லட்சுமி) (சூட்சும வடிவம்) காமகோடி பீடம் எனப்படும் ஸ்ரீ சக்கரம் (காரண வடிவம்)காமாட்சி அன்னைக்கு மகாதேவி, திரிபுரசுந்தரி, ராஜராஜேஸ்வரி, காமேஸ்வரி, லலிதா, ஸ்ரீ சக்கர நாயகி என்னும் திருப்பெயர்களும் உண்டு.

காஞ்சிபுரம் திருத்தலத்திலுள்ள எல்லா சிவாலயங்களுக்கும் காமாட்சி அம்பாளே மூலவர் அம்பாளாக விளங்குகிறாள். இதனால் காஞ்சீபுரத்தில் உள்ள சிவாலயங்களில், அம்பாளுக்குத் தனி சந்நிதிகள் இருப்பதில்லை.

அம்பாளின் உற்சவ மூர்த்திகள் மட்டுமே எல்லா சிவாலயங்களிலும் காட்சியளிக்கின்றனர். மூல மூர்த்தியான காமகோடி காமாட்சியின் இடது பக்கத்தில் வட திசை நோக்கியவாறு அரூப லட்சுமியாகிய அஞ்சன காமாட்சி காட்சியளிக்கின்றாள். இது அன்னையின் சூட்சும வடிவமாகும். இந்த அன்னைக்கு வடிவம் கிடையாது.

ஆனால், இவளது மேனியில் தடவப்படும் அர்ச்சனை குங்குமத்தின் மகிமையால் இவள் ஒரு அழகிய வடிவத்தைப் பெறுகின்றாள். இந்த அஞ்சன காமாட்சி தவம் புரியும் கோலத்தில் காட்சியளிக்கின்றாள்.

நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது முதுமொழி. ஏராளமான புண்ணியம் தரும் கோவில்களை தன்னகத்தே கொண்ட இந்த நகருக்கு தினந்தோறும் பல்லாயிரம் கணக்கான பக்தர்கள் சாமிகும்பிட்டு செல்வர். இங்கு தனிகோயிலில் பராசக்தியாய் எழுந்தருளி இருக்கும் உமைக்கு காமாட்சி என பெயர். இத் திருக்கோவில் உலகபிரசித்திபெற்றதாகும்.


1563516437266.png
காஞ்சிபுரத்தில் எண்ணற்ற சிவாலயங்கள் இருந்தாலும் எந்த கோவிலிலுமே அம்மாள் மூலஸ்தான சன்னதி கிடையாது. காஞ்சியில் காமாட்சியம்மாள் தவக்கோலத்தில் இருப்பதால் தான் இங்கிருக்கும் சிவன் கோவில்களில் அம்மாளுக்கு தனி சன்னதி கிடையாது என கூறுவர்.

இத்திருக்கோவிலில் 1841, 1944, 1976, 1995 ஆகிய வருடங்களில் கும்பாபிஷேம் நடத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது திருக்கோவில் முழுவரும் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளன. 70 கிலோ தங்கம் கொண்டு காமாட்சி மூலஸ்தான கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் சிரமமின்றி சாமி கும்பிட கோவிலை சுற்றி பிரகார மண்டபங்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கோவிலில் உள்ள ஆதிசங்கரர் மண்டபம் முழுவதும் கருங்கற்கலை கொண்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமின்றி பிறமாநிலங்களில் உள்ள மடாதிபதிகளும் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

கும்பகோணம் தினகர சர்மா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வேதவிற்பனர்கள் யாகசாலையில் சிறப்பு பூஜைகளை வைதீக முறைப்படி செய்து வருகின்றனர்.108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக உள்ள இத்திருக்கோவிலில் கள்வர் பெருமாள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அன்னை காமாட்சி கலைமகளையும் (சரஸ்வதி), திருமகளையும் (லட்சுமி) தன் இரு கண்களாகக் கொண்டவள். இத்தகு பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட காஞ்சிமாநகரத்தில் அன்னை காமாட்சி தேவி எழுந்தருளிய சம்பவம் ஒரு ஆற்றல்மிக்க வரலாறாக விரிகின்றது.


பந்தகாசுரன் மற்றும் பண்டாசுரன் ஆகியோரின் கொடுஞ்செயல்களையும் அவர்களையும் அழித்திட வேண்டி ஸ்தல விருட்சமான செண்பக மரத்தினில் கிளி வடிவுடன் காமாட்சி வாசம் செய்தாள். அதனால் காமாட்சி அன்னையை இத்தலத்தில் எவரும் பிரதிஷ்டை செய்யவில்லை. இத்தலத்தில் காமாட்சி அம்மன் சுயம்புவாக வளைப்புற்றான பிலாகாசத்தில் இருந்து தானே தோன்றினாள்.

காமாட்சிக்கு மூன்று வடிவங்கள் உள்ளன. அவை ஸ்தூல வடிவம், சூட்சும வடிவம், காரண வடிவம் எனப்படும். ஸ்தூல வடிவில் அன்னை தன் பக்தர்களுக்கு தனது தரிசனத்தாலேயே சர்வ காமங்களையும் தனது கடாட்சத்தால் கோடி கோடியாக அருள்வதால் காமகோடி காமாட்சி என்னும் பெயரைப் பெற்று அருள்பாலித்து வருகின்றாள்.

காமாட்சி ஆலயத்தில் காயத்ரி மண்டபத்தில் உள்ள அம்பாளின் சந்நிதிக்கு எதிரில் காமகோடி பீடமான ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் தான் மந்திர ரூபம் கொண்டு விளங்குகிறாள்.

அன்னையின் பீடத்தின் கீழாகத்தான் ஸ்ரீ சக்கரம் அனைத்து ஆலயங்களிலும் அமைத்திடுவது வழக்கம் ஆகும். ஆனால் காஞ்சிபுரத்தில் அன்னை காமாட்சியின் உக்கிரம் தணித்திட வேண்டிய ஆதிசங்கரர் தேவியின் முன்பாக ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார் எனக் கூறப்படுகின்றது. காஞ்சிபுரத்தில் உள்ள எந்த சிவாலயத்திலும் அம்பாளுக்கென தனி சந்நிதி கிடையாது.

காமாட்சி அம்மன் ஆலயமே அனைத்து சிவாலயங்களுக்கும் பொதுவான அம்பாள் சந்நிதியாக விளங்குகிறது. பீடத்தின் மையத்தில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. ஸ்ரீ சக்கரத்தினைச் சுற்றி அஷ்ட சக்திகளும் உள்ளனர். அன்னை என்று வளைப் புற்றில் இருந்து சுயம்பு வடிவாய் எழுந்தருளினாளோ அன்று தொட்டு ஸ்ரீ சக்கரமானது இருந்து வருவதாக கூறப்படுகின்றது.

நீண்ட காலமாக பற்பல மகான்களால் இப்பீடம் பூஜித்து வரப்பட்டுள் ளது. இன்றுவரை ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டும் விளங்கி வருகின்றது. சர்வேஸ்வரனே தேவியின் அருள் பெறவேண்டி நான்கு யுகங்களிலும் இந்த பீடத்தில் துர்வாச முனிவராகவும், பரசுராமராகவும், தவும்யராகவும் கலியுகத்தில் முகாசாரியராகவும், ஆதிசங்கரராகவும் அவதாரம் செய்ததோடு அந்தந்த யுகங்களில் ஸ்ரீ காமகோடி பீடத்தினை சீரமைப்பு செய்ததோடு பூஜை செய்தும் அம்பிகையின் அருளப் பெற்றனர் எனக் கூறப்படுகிறது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top