• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்த்திகா மனோகரனின் தேன்மழை அத்தியாயம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கரிகாலனின் மடலை ஏந்தி வாயுவேகத்தில் வந்தது மித்ரன்.அதை கண்டவுடன் மனதில் மகிழ்ச்சி வெள்ளமாய் பொங்க ஓடிவந்தாள் வெண்மதி.....அதில் இருந்த செய்தியை படித்தவுடன் அவள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... அப்போது அங்கு வந்த அல்லிக்கும் அந்த மகிழ்ச்சி பரவ,

"என்ன இது அதிசயம் நேற்று வரை அமாவாசையாய் இருண்டிருந்த தோழியின் முகம் இன்று பௌர்ணமி போல் மிளிர்கிறதே?, தமையனிடம் இருந்து மடல் வந்ததா என்ன?"

"ம்ச்..அல்லி பரிகாசம் செய்யாதே" என்று சிணுங்க...

"கூறு கூறு என்ன சொன்னார் உன்னவர்"

"அவர் என்னை சந்திக்க வருகிறார்"

என்று சிறுபிள்ளைபோல் தன்னை சுற்றியவளை பார்த்து இந்த மகிழ்ச்சி எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் இறைவா!!! என்று வேண்டுதல் வைத்தாள்.....

" பார் நான் வந்த விடயத்தை மறந்தேன்...அரசர் உன்னை அழைத்தார்"

"இது எப்போதும் நடப்பதுதானே...வா செல்லலாம்"..

முகம் முழுதும் புன்னகையுடன் வரும் மகளை வாஞ்சையுடன் பார்த்த அரசர் சில காலமாக வாடியிருந்த மகளின் முகம் இன்று,பொலிவுடன் இருப்பதை கண்டு மகிழ்ந்து போனார்.அவரும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறார்..மகளின் மெலிவு,அவரை வருத்தம் கொள்ள செய்தது.

" இதே போல் என்றும் மகிழ்ச்சியாக இரு மகளே " தலையில் கை வைத்து பரிவுடன் தடவினார்.

"இனி கவலையில்லை தந்தையே எல்லாம் அவர் பார்த்துக் கொள்வார்"

"யாரம்மா அவர் என் மகளின் கவலையை போக்கியவர் "

அப்போதுதான் உளறி வைத்ததை உணர்ந்தவள் , ஒரு சமாளிப்பு சிரிப்பு சிரித்து வைத்தாள்...."

"அது..அது..அதுவா தந்தையே ..ஹான் கடவுள்..கடவுள் பார்த்துக்கொள்வார் என்று கூறினேன்..."

அவளின் பதிலில் புன்னகைத்தவர் "சரியம்மா .... நான்"

"நீங்கள் நகர்வலம் செல்கிறீர்கள், வருவதற்க்கு இரண்டு நாட்கள் ஆகும்..அதுவரை கவனமாக இருக்க வேண்டும் ..அதுதானே தந்தையே"

"ஹா..ஹா..ஹா... சத்தமாக சிரித்தவர் கவனமாக இருக்க வேண்டியது நீயில்லையம்மா, இந்த அரண்மனையில் உள்ளவர்களை கவனமாக பார்த்துக்கொள்...வருங்கால மகாராணி ஆயிற்றே ..நீதான் நம் மக்களை காக்க வேண்டும்"

"ஆகட்டும் தந்தையே நீங்கள் சென்று வாருங்கள் இங்கே நான் பார்த்துக் கொள்கிறேன்..உடன் மாறனும் இருக்கிறான் பிறகென்ன கவலை "

அவள் மனதிற்கு ஏதோ நெருடலாக பட " "சிறிய தந்தையே கவனமாக சென்று வாருங்கள்" என்று கூற

"தமையனை நான் பார்த்துக்கொள்கிறேன் மகளே கவலை வேண்டாம்"

ஆம் அரசர் நெடுமாறர் , தன் ஒன்றுவிட்ட தம்பி பராந்தகனுடன் நகர்வலம் செல்கிறார்..இவ்வாறு மாறுவேடத்தில் நாட்டிற்குள் சென்று மக்களின் நிறை குறைகளை கண்டறிந்து அதை தீர்த்து வைப்பார். அவ்வாறு சென்றால் திரும்பி வருவதற்கு இரண்டு நாட்கள் ஆகும்..

மீண்டும் ஒருமுறை பத்திரம் சொல்லி இருவரும் கிளம்பி சென்றனர். அன்றுதான் அவள் தந்தையை கடைசியாக கண்டது அதன் பிறகு இரண்டாம் நாள் காலை அவர் மரணித்த செய்திதான் வந்தது..அதுவும் அவள் யாருடைய வரவிற்காக காத்திருந்தாளோ அந்த ஆதித்தன் அரசரை கொன்று விட்டான் என்ற தகவலே வந்தது...அதுவும் அவளின் சிறிய தந்தை தான் உடன் இருந்த போதே இது நடந்ததாகவும் கூறினார்.

கரிகாலனும், தந்தையும் வாக்குவாதத்தில் ஈடுபட, வாக்குவாதம் முற்றி எதிர்பாரா சமயத்தில் வாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றான் என்றும் கூறினார்... முதலில் இதை வெண்மதி நம்பவில்லை. உடனே மித்ரனின் மூலம் என்ன நடந்தது என்று அறிய தூது அனுப்பினாள்..ஆனால் பதிலும் வரவில்லை....மித்ரனும் வரவில்லை...

அதன்பிறகும் தான் அமைதியாய் இருப்பதில் பலனில்லை.... நெஞ்சை பிளக்கும் வேதனைதான்...தந்தையை இழந்தது ஒரு புறமென்றால், அதற்கு காரனமானவன் ஆதித்தன் என்பதில் இன்னும் நரகத்தை கண்டாள். கூடவே சிற்றப்பாவின் போதனைகளும் சேர்ந்து சினமூட்ட தந்தைக்கு மகளாய், தன் கடமையை ஆற்ற போர் அறிவிப்பை விடுத்துவிட்டாள்...

ஆனால் இன்னும் கூட ஆதித்தன் வருவானா என எதிர்பார்க்கும் மனதை அடக்குவதே பெரும்பாடாக இருக்க , அதற்கு கோபம் என்னும் முகமூடி போட்டு அடக்கினாள்.

இதை யோசித்தே விடியல் புலர்ந்ததை அறியவில்லை....பறவையின் கூச்சலில் சிந்தை தெளிந்தவள் ஆற்ற வேண்டிய கடமை அறிந்து தனது சிறிய தத்தையுடன் செல்ல தயாராக நிற்கும் போது...அவ்விடம் வந்தான் மாறன்...

"கவனம் தமக்கையே...விழிப்போடு இருங்கள்"

அவனது அக்கறையில் நெகிழ்ந்தவள் "அப்படியென்றால் நீயும் எங்களோடு வா"

"வேண்டாம்"

"இல்லை"

என இரண்டு குரல்கள் ஒலித்தன...

" வேண்டாம் " என கூறியது பராந்தகன் .

வெண்மதி "ஏன்?" என்று ஒரு பார்வை பார்வையை மட்டுமே அவரிடம் செலுத்த அதை அறிந்தவர்

"அது அவன் இங்கு உள்ள பணியை மேற்பார்வை பார்க்க வேண்டும்"

என்று கூற, தந்தையை பார்த்த மாறன் புன்னகையுடன்

"ஆம் தமக்கையே அவசியமான வேலை உள்ளது...தாங்கள் சென்று வாருங்கள்" என்க...

அவனிடம் தலையசைத்து விடைபெற்றாள் வெண்மதி.அவர்கள் சென்றதை உறுதிபடுத்திய மாறன் தன் நண்பனை அழைத்து ஏதோ கூறிவிட்டு, தானும் புரவியில் ஏறி பறந்தான்.
 




Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Yakkaavv intha maaran nallavana kettavana.. summa kavanam kavanam nu solraan... Conform paraanthagan thaan kolaikaaran
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
இந்த பயணம் தனக்கு என்ன வைத்திருக்கிறது என்னு அறியாத வெண்மதி அமைதியாக பயணத்தை மேற்கொண்டாள். பராந்தகனே வழிகூறி அழைத்து சென்றான். ஒரு இடத்தில் பராந்தகன் நிற்க , வெண்மதியும் புரவியை நிறுத்தினாள்...புரவியில் மகாராணியை போல் கம்பீரமாக அமர்ந்து நாற்புறமும் கவனத்தை செலுத்தியவளை கண்ட பராந்தகனின் கண்களில் இகழ்ச்சி சிரிப்பொன்று மலர்ந்தது. அப்போது தடதடவென்று சத்தம் கேட்க விழிகளை கூர்மையாக்கி வாளில் கரத்தை பதித்து தயாராக இருக்க, கண்கள் மட்டும் தெரியுமாறு முகத்தை மறைத்த சிலர் அவளை சூழ்ந்து கொண்டனர்...

இதற்கெல்லாம் அவள் அசைந்துவிடவில்லை தைரியமாகவே இறங்கி நின்றாள்.

"சிற்றப்பா தாங்கள் கவலை கொள்ள வேண்டாம் ...நான் பார்த்துக் கொள்"

அவள் முதுகில் வாளின் முனை அழுந்த யாரென்று திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.

சூழ்நிலையை புரிந்து கொண்டாள்.

"ஏன்?"

என்ற ஒற்றை கேள்வி அவள் கண்களில்... அதில் ஆவேசமடைந்த பராந்தகன்

"இதுதான்...இதேதான் இந்த கம்பீரம் .... அவனிடமிருந்த அதே கம்பீரம்...தந்தைக்கு மகள் தவறாமல் பிறந்திருக்கிறாய்".

அத்தனை ஆக்ரோஷம் அந்த கண்களில்... இனி வருவது வரட்டும் என வெண்மதி அமைதியாக இருந்தாள்.

" சிறு வயதில் இருந்தே ஒன்றாக வளர்ந்தோம், ஆனால் அவன் பட்டத்து இளவரசன் ஆனதில் அரியணையில் அமர்ந்தான்...அத்தனை தகுதிகள் இருந்தும் நான் அவனுக்கு கீழ் சேவகம் செய்ய வேண்டியிருந்தது..."

வெண்மதி "இதில் அவரது தவறென்ன இருக்கிறது? இருப்பினும் தங்களுக்கு உரிய மரியாதையை அளித்தாரே!!!!"

"ஹா !!!!!! மரியாதையா ஒரு பொம்மையை போல் என்னை ஏவல் வேலை வாங்கியதுதான் மரியாதையா!!!! யாருக்கு வேண்டும் அது....."

கண்களில் பேராசை மின்ன கைகளை விரித்து "என் ஆசைகள் பெரியது! என் கனவுகள் பெரியது! எனக்கென ஒரு உலகம்.... அதில் நான் வைத்ததே சட்டம் , இதுவே நான் விரும்பிய வாழ்க்கை... ஆனால் அமைந்ததோ அடிமை வாழ்க்கை. நல்லவனாக காட்டிக் கொள்வது எவ்வளவு சிரமம் தெரியுமா உனக்கு....ஆம் நல்லவனாக நடித்தேன்..

அதிலும் நீ ஒற்றை மகளாய் போனதும் நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை...அவனுக்கு பிறகு நானும், எனக்கு பிறகு எனது மகனும் நாடாளலாம் என எண்ணியிருந்தால், சிறு வயது முதல் போர்கலைகளை பயிற்றுவித்து உன்னை பட்டத்து இளவரசியாக்கி அதிலும் மண்ணள்ளி போட்டுவிட்டான். அதனால் அவனை கொல்வதற்கு தகுந்த சமயம் எதிர்பார்த்து காத்திருந்தேன்.

சந்தர்ப்பமும் அமைந்தது....அது யாரால் என்று தெரியுமா? என்று நிறுத்த...

இதுவரை இறுகியிருந்த வெண்மதியின் முகம் , இப்போது கேள்வியாக பார்க்க .....

"உன்னால்தான்....உன் காதலால்...காதலன் அந்த கரியவனால்" ...வெண்மதிக்கோ திகைப்பு இதை அவள் எதிர்பார்க்கவில்லை..

வியப்பு மேலிட "அவர் வந்தாரா?"

அலட்சியமாய் "வந்தான் ..வந்தான்..அன்று என்ன நடந்தது என்று அறிய விரும்புகிறாயா?" நக்கல் தொணியில் கேட்க...

அதில் வெண்மதி கோபத்தை கட்டுபடுத்தி நிற்க...

"பரவாயில்லை இறக்கும் போதாவது உன் தந்தை எப்படி இறந்தான் என்று அறிந்து கொள்" என்றவன் அன்று நடந்ததை கூற தொடங்கினான்.

மாறுவேடத்தில் சென்று குறைகளை ஒவ்வொன்றாய் கேட்டு அதை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்வதென விவாதித்து கொண்டு அரண்மணை நோக்கி வந்துகொண்டிருந்தோம்....அப்போதுதான் இரு புரவிகள் எங்களை நோக்கி வருவதை கண்டோம்.. வருபவர்கள் இருவரும் ஆண்மை பொருந்திய மாவீரர்களாக இருக்க வேண்டும் என எண்ணிணோம். இருவரும் புரவியில் இருந்து இறங்கி....

"மன்னர் நெடுமாரருக்கு வணக்கங்கள்" கரிகாலன் வணக்கம் சொல்ல...

"வணக்கம்.....தாங்கள் யார்? அதுவும் மாறுவேடத்தில் உள்ள என்னை எவ்வாறு அடையாளம் கண்டீர்?"

"நான் ஆதித்த கரிகால சோழன், இவன் முத்தழகன் என் நண்பன்"

முத்தழகன் "பணிகிறேன் மன்னா" அவனிடம் தலையசைத்தவர்...

"தங்கள் வீரத்தை பற்றி கேள்வி பட்டிருக்கிறேன்... சந்தித்ததில் மகிழ்ச்சி ... ஆனால் சோழருக்கு பாண்டிய மன்னில் வேலை என்னவோ? அதுவும் நகர்வலம் வந்த என்னை மறிக்கும் அளவிற்க்கு!!!! "

"தேவ வெண்மதி"

"வார்த்தைகளில் கவனம் சோழரே!!!! என் மகளை பற்றி தாங்கள் பேசுவதற்க்கு என்ன இருக்கிறது" அவர் கூர்மையுடன் வினவ....

புன்னகையுடன் "இருக்கிறது மன்னா என் மனம் கவர்ந்தவள் என்ற உறவு... " இப்போது திகைப்பு அவரிடத்தில்

"வேட்டையாட வந்த நான் அவளால் வேட்டையாடப்பட்டேன்.. திருமணம் புரிய சம்மதம் கேட்டேன்..முடியாது என்றாள்." அவளுடைய பாசமான தந்தையையும் ,நாட்டையும் விட்டு வரமுடியாது என்றாள்!!! "

இப்போது மகளை பற்றிய பெருமை அவர் முகத்தில் என்ன இல்லை இவரிடத்தில்... கரிகாலனை அளவிட்டார் தான் தேடியிருந்தாலும் இப்படி ஒரு வீரனை கண்டிருப்போமா என்பது சந்தேகமே.... "

என் மகளின் விருப்பம்"

"இருந்தது..இருக்கிறது..இனியும் இருக்கும்" இப்போது கர்வப்படுவது அவனது முறையானது...

அவனே தொடர்ந்தான் "கந்தர்வ மனம் புரிவோம் என்றேன் "

மகள் என்ன கூறியிருப்பாள் என்று அறியும் ஆவல் அவரிடத்தில்

"அதைக்கண்டவன் முகத்தை பாவம் போல் வைத்துக்கொண்டு

"அவளுடைய திருமணம் நாடெங்கும் கொண்டாடபட வேண்டுமாம் ...அதுதான் அவள் தந்தைக்கு விருப்பமாம்..அவரது விருப்பமே அவளது விருப்பமாம்.."

இப்போது உறுதியாக நம்பினார் கரிகாலனுக்கும் , மகளுக்கும் இருக்கும் உறவை...ஏனென்றால் இவ்வாறான விவாதங்களை தந்தை, மகள் இருவர் மட்டுமே அறிவர். இதை மகள்தான் இவரிடம் கூறியிருக்க வேண்டும்...இதிலிருந்தே தெரிகிறது மகள் இவரை நேசிக்கிறாள் என்று......இருந்தாலும் ஒரு தந்தையாக அவரது மனம் மகளை எண்ணி பெருமிதம் கொண்டது...அவரை சிறிது யோசிக்க விட்டவன்

" நான் உறுதி கூறுகிறேன் மன்னா...நான் தங்கள் பேரபிள்ளைகளுக்கு தங்களை போல சிறந்த தந்தையாக இருப்பேன், அதேபோல் தங்கள் மகளை தாமும் பிரிய வேண்டியதில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்"

அவனது இந்த பரிமாணத்தில் முற்றிலும் வீழ்ந்தார் பெரியவர்.

ஹா....ஹா...ஹா... சத்தமாக சிரித்து..."தாங்கள் வென்று விட்டீர்கள் மாப்பிள்ளை " என்று தன் சம்மதத்தை தெரிவித்தவர்...

"சமீபகாலமாக என் மகளின் மெலிவிற்க்கு இதுதான் காரனமா!!!! தங்களை அடைவதற்க்கு வெண்மதி பாக்கியம் செய்திருக்க வேண்டும்.. "

இல்லை மன்னா பக்கியம் செய்தவன் நானாவேன்"

"விரைவில் சுந்தர சோழரின் அனுமதியுடன் பெண்கேட்டு வாருங்கள்..... என் மகள் இன்னும் காத்திருக்கலாகாது."

" நிச்சயமாக மாமா" அவனது அழைப்பில் மகிழ்ந்தவர்

"அதுசரி மாப்பிள்ளை ..நேற்று வெண்மதியின் முகத்தில் காணப்பட்ட புன்னகைக்கு காரனமும் தாங்கள் தானா!!!"

"ஆம் மாமா...நான் வருவதாக கூறியிருந்தேன்"

"எவ்வாறு?"

"மித்ரன்"

ஒரே வார்த்தையில் பதில் சொன்னான். கைகளை கூப்பியவாறு

"நான் விரைவில் என் குடும்பத்தினரோடு பெண் கேட்டு வருகிறேன் மாமா, விடை கொடுங்கள்" அவனை அணைத்து விடுவித்தவர்

"தாங்கள் வெண்மதியே காண செல்லவில்லையா? "

"இல்லை மாமா இன்னொரு பிரிவை அவள் தாங்க மாட்டாள்..அதனால் நான் அவளை சந்திக்கும் நாள் எங்கள் திருமண நிச்சய நாளாக இருக்க வேண்டும்"

"மகிழ்ச்சி சென்று வாருங்கள் மாப்பிள்ளை".... இவர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்க கோரமான முகத்துடன் நின்றிருந்த பராந்தகனை கவனிக்கவில்லை.
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அடுத்து எப்போ.... :love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
கார்த்திகா மனோகரன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top