• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கார்த்திகா மனோகரனின் தேன்மழை இறுதி அத்தியாயம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
கரிகாலன் தனக்கு மாப்பிள்ளை என்பதில் மகிழ்ந்த நெடுமாறர், "பார்த்தாயா பராந்தகா என் மகள் பாக்கியசாலி ..இப்படி ஒரு வரன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்..மேலும் அவளை பிரியும் துன்பமும் இல்லை...

"இல்லை அண்ணா இந்த திருமணம் நடக்க போவதில்லை"

"பராந்தகா என்ன அபத்தம் உரைக்கிறாய்"

"தங்களை சோழன் கொன்ற பின் எப்படி தங்கள் மகள் அவனை மணப்பாள்" என்றவாறு எதிர்பாறா சமயத்தில் வாளை அவர் நெஞ்சில் இறக்கினான்...பராந்தகன்.. அவனின் இந்த துரோகத்தில் இத்தனை நாளாய் நச்சுப் பாம்புக்கு பால்வார்த்ததை எண்ணி மனம் நொந்தவர் தன் உயிரை விட்டார்.

பராந்தகன் இதை கூறி முடிக்க வெண்மதியின் கண்களில் நீர் வழிந்து கொண்டே இருந்தது... தந்தை ஆதித்தனை ஏற்று கொண்டு , திருமணத்திற்கு சம்மதித்து விட்டார் என்பதில் மகிழ்ந்தாலும் அவரது முடிவு மனம் கனக்க செய்தது.....

" இனி உன்னையும் கொன்று அந்த பழியையும் அந்த கரியவன் மேல் சுமத்துவேன்... பிறகு அரியணையில் நான் .....ஹா...ஹா....ஹா..." என்று,கொக்கரித்தவனை கண்டு கோபம் கிளர்ந்தெழ

"என்னவரான அம்மன்னவர் இருக்கும் வரை என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது அற்பனே!!!!" அதில் அவனது சிரிப்பு மறைய

"என்ன புறாவை தூதுவிட்டோம் என்ற நம்பிக்கையா?"

திகைப்புடன் "அது எப்படி உனக்கு தெரியும்!!"

" ஹா.. நீ இதைத்தான் செய்வாய் என்று அறிவேன் , அதனால் தான் உன்னோடு சேர்த்து உன் புறாவையும் கண்காணித்து மடல் கொண்டு சென்ற புறாவை அம்பிட்டு வீழ்த்தி விட்டேன். "

என்ன மித்ரனை கொன்றாயா?" திகைப்பு அவளிடத்தில்.

"அதுமட்டுமில்லை சோழ நாட்டிலிருந்து வந்த அனைத்து மடல்களும் பாண்டிய எல்லையிலேயே கவரப்பட்டன....அதில் அந்த கரியவனின் மடல்களும் அடக்கம்."

இதை அவள் எதிர்பார்க்கவில்லை எவ்வளவு முட்டாளாய் இருந்திருக்கிறோம் என்று நொந்துகொண்டாள். இருப்பினும் ஆதித்தன் மீதான நம்பிக்கையை கைவிடவில்லை...

" அவர் நிச்சயம் வருவார்"

"வருவான் வந்து உன் உயிரற்ற உடலை காண்பான் , என் தமையனை நலம் விசாரித்ததாக சொல்"

என்றவாறு நொடி நேரத்தில் வாள் வீச எங்கிருந்தோ வந்த அம்பு பராந்தகனின் வாளை தட்டிச் சென்றது. எங்கிருந்து வந்தது இந்த அம்பு என்று திகைத்த பராந்தகன் திரும்பி பார்க்க அங்கு காலபைரவனாய் உச்சபட்ச கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்த கரிகாலனை கண்டதும் அதிர்ந்தான் என்றால் , உடன் இருந்த இளமாறனையும், அமைச்சரவையின் முக்கிய மந்திரிகளையும் கண்டவன் பேரிடியை தலையில் தாங்கியவன் போல ஆனான்.

பராந்தகன் வாள் ஏந்தவும் ஒரு கணம் திகைத்த வெண்மதி தன் வாளை ஏந்த முற்பட்ட போதே அம்பு எய்யப்பட , யாரென்று பார்த்தவள் இன்பமாக அதிர்ந்தாள் என்றால் உடன் மாறனை கண்டவளுக்கு இன்னும் அதிர்ச்சியே...அப்படியே நின்றிருந்தவளை கரிகாலனின் குரல் சுயத்திற்க்கு கொண்டு வந்தது ....

"உன் குள்ள நரி தனத்தை கையும்,களவுமாக பிடிப்பதற்க்கே இத்தனை நாள் பராந்தகா!!! இல்லையென்றால் இன்னேரம் உன்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்கும்."

இனி தான் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை அறிந்த பராந்தகன் அமைதியாகிவிட ...

"என்ன இதெல்லாம் எப்படி நடந்தது என்பதை அறிய வேண்டுமா?"

வெண்மதிக்குமே அறிய வேண்டியிருந்தது ...மாறன் எவ்வாறு ஆதித்தரோடு என்று.

"இங்கிருந்து சென்ற நான்காவது நாள் என் தந்தையுடன் திருமணத்தை பற்றி பேசவேண்டும் என்று எண்ணியிருந்த வேளைதான், போருக்கான ஓலை வந்தது... ஓலை வந்தது அதிர்ச்சி என்றால் அதன் காரனம் பேரதிர்ச்சியாய் இருந்தது.... என்ன நடந்திருக்கும் என்பதை ஓரளவு ஊகித்து விட்டேன்.... அதற்கேற்றார் போல் அடுத்த நாள் மித்ரன் வந்தான்" இப்போது கண்கள் வெண்மதியை பார்த்தது.

,"என்ன மித்ரன் இருக்கிறானா? இங்கு வந்துள்ளானா என்று கண்கள் அலைபாய அவளது தேடலை அறிந்தவன் ஒருவித சத்தம் கொடுக்க மித்ரன் பறந்து வந்து வெண்மதியிடம் தஞ்சமடைந்தது.....

"மித்ரா வந்துவிட்டாயா" அவள் மித்ரனிடம் நலம் விசாரிக்க அதை கண்டவன் மனம் சற்று அமைதியடைந்தது.

மீண்டும் தொடர்ந்தான் "மித்ரன் அங்கு வரும் போதே மிகுந்த அடிபட்டிருந்தான். அவனிடம் வந்த மடல், அவனின் நிலை இதையெல்லாம் வைத்து இங்கு நிலமை சரியில்லை என்று அறிந்து கொண்டேன்.... அதோடு இங்கிருந்து செல்லும் மடல்கள் எல்லையிலேயே பறிக்க படுவதையும் ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.எனக்கு நம்பிக்கையான ஒருவர் தேவைப்பட்டார்...ஒருமுறை வெண்மதி இளமாறனை பற்றி கூற , இதற்கு இளமாறனே உகந்தவன் என்று அவனை தொடர்பு கொண்டேன்....அரசவைக்கு வரும் மடல்கள் மட்டுமே நிறுத்தப்பட்டன....அதனால் இளமாறனின் பெயரால் அனுப்பபட்ட மடல் அவனை அடைந்தது...அதில் கூறியிருந்த படி இந்த வேலைகளை மூன்று நாட்களில் முடித்து ,நான்காம் நாள் கிளம்பி ஐந்தாவது நாள் இங்கு வந்தேன்.

ஆனால் மாறன் எளிதில் நான் கூறியவற்றை நம்பவில்லை... மித்ரனை கண்ட பின்பே நம்ப தொடங்கினான். அவனும் கண்கானிக்க குற்றவாளி நீ இப்போது எங்கள் முன்னால்" நடந்ததை கூறவும் வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதை பராந்தகன் அறிந்து கொண்டான்.

வெண்மதியிடம் வந்த மாறன் "மன்னிக்க வேண்டுகிறேன் தமக்கையே!!! என் பொருட்டே பெரியப்பாவிற்க்கு இந்த நிலை" என்று கலங்கியவனை

"இல்லை மாறா...இது ஒரு தனி மனிதனின் பேராசை..."
 




Last edited:

karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
பராந்தகன் கைது செய்யப்பட கரிகாலன் , வெண்மதியை தவிர மற்ற அனைவரும் அவ்விடம் விட்டு கலைந்தனர். இப்போது வெண்மதிக்கு தன் செயலின் வீரியம் உரைத்தது. அவர்மீது சந்தேகம் கொண்டு அவர் காதலுக்கு துரோகம் இழைத்துவிட்டேனே!!!!என்று வருந்தினாள்...

தந்தை மரணத்தால் இத்தனை நாளாய் அனுபவித்த மனஉளைச்சல், தன் காதல் பொய்க்க வில்லை , ஆதித்தன் குற்றமற்றவன், என்பதை உணர்ந்த ஆனந்தம் என கலவையான உணர்வுகளால் தாக்கப்பட்டவள் அடுத்த நொடி தரையில் முழங்காலிட்டு முகத்தை மூடி அழத்தொடங்கினாள்.

"எதற்காக இந்த அழுகை? என்னை காதலித்ததற்காகவா?"

என்று கரிகாலனின் சொற்கள் கூரிய வாளாய் அவளை பதம் பார்த்தது.

"இல்லை..இல்லை ஆதித்தரே ...இது என் காதல் பொய்க்கவில்லை என்பதால் வந்த ஆனந்த அழுகை.....என் ஆதித்தர் குற்றமற்றவர் என்பதால் வந்த அழுகை....உங்களை நம்பாமல் போனேனே என்ற குற்றவுணர்வில் வந்த அழுகை" என்று கதறி அழ...

"குற்றமிழைத்து விட்டு அழுதால் குற்றம் இல்லையென்று ஆகிவிடாது வெண்மதி" இறுகிய முகத்துடன் அவன் உரைக்க ,

அதோடு அவனது வெண்மதி என்ற அழைப்பும் அவளை வதைக்கதான் செய்தது.

"என்னை வெறுத்து விட்டாரா? இனி என் செய்வேன்!!! அவரின்றி உயிரோடு இருக்க முடியுமா? போரிட அழைப்பு விடுத்தாயே? என்ற மனதின் கேள்விக்கு "ஆனால் நிச்சயமாக அவரை எதிர்த்து போரிட முடிந்திருக்காது...இது திண்ணம்.....அவரின்றி வாழ்வதை விட சாவதே மேல் என்று நினைத்தவள், கண்களை துடைத்தவாறு எழுந்தாள்.

"என் குற்றத்திற்கான தண்டனையை நானே கொடுத்துக்கொள்கிறேன்" என்றவள் தன் வாளை கழுத்திற்க்கு கொண்டு செல்ல ...இடையில் நொடிப் பொழுதில் ஆதித்தனின் வாள் தடுத்தது... அவளது கைகளை அழுந்த பிடித்தவன்

"அதற்குள் இந்த குற்றத்தில் இருந்து விடுபட ஆசையா? உனக்கான தண்டனையை நான் வழங்க வேண்டும்..என்ன ஏற்றுக்கொள்கிறாயா?"

அவன் கண்களை பார்த்தவாறே "ஒப்புக்கொள்கிறேன் தாங்கள் தரும் தண்டனை எதுவாகினும் மனமாற ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூற. அவள் கைகளை விட்டு தள்ளி நின்றவன்...

"அப்படியானால் என் தண்டனையை கேள்.... என்னோடு சரிபாதியாய் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும்... மஞ்சத்தில் என் பாரம் சுமக்க வேண்டும்...என் மாமனாருக்கு அவரை போல சிறந்த தந்தையாய் இருப்பேன் என் வாக்களித்துள்ளேன் அதனால் பத்திற்கும் குறையாமல் குழந்தைகள் பெற்றுதர வேண்டும், எத்தனை குழந்தைகள் வந்தாலும் என்னை முதல் குழந்தையாய் மடிதாங்க வேண்டும்" குறும்பு புன்னகையுடன் கூற, இவன் தண்டனையை கேட்டவளுக்கு உவகை மீற பாய்ந்து வந்து அவனை அணைத்ததவள் "இது எனக்கு வரம் ஆதித்தரே"

" நீயே என்னுடைய வரமாவாய் என் நிலாப்பெண்ணே" என்றவாறு அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.

அடுத்த முகூர்த்தத்தில் ஆதித்த கரிகாலன், தேவ வெண்மதி திருமணம் கொண்டாட்டமாக நடந்தேற...சோழ ராஜ்ஜியத்தில் சில காலம் தங்கியவர்கள்.... கரிகாலன் தனது அனைத்து பொறுப்புகளையும் அவனது இளவலிடம் ஒப்படைத்து விட்டு, பாண்டிய ராஜ்ஜியம் சென்றனர்....வெண்மதி தன் தந்தையின் ஆசையை நிறைவேற்ற சில காலம் ஆட்சி புரிந்தவள் ...அதன் பிறகு இளமாறனிடம் மறுக்க மறுக்க அவனுக்கு முடிசூடிவிட்டு.....கானகத்திற்க்கு வந்தனர் . உடன் மித்ரனும்.

உடன் முத்தழகன்,அல்லியும் . அவர்களுக்கும் திருமணம் நடந்தேறியது.. இன்னும் அல்லி அவனுடன் சண்டையிடுவதை நிறுத்தவில்லை...

அவர்கள் அன்று இருந்த குடிலையே சற்று மாற்றியமைத்து வெளியில் தோட்டம் அமைத்து இருந்தனர் ...அது ஒரு நந்தவனம் போல காட்சியளித்தது...

கரிகாலன் தன் தண்டனைகளை நிறைவேற்றுவதில் கறாராக இருக்க வெண்மதி இப்போது இரண்டு மாத கருவுக்கு தாயாய் இருந்தாள்.... அன்று இரவு உணவு உண்டபின் வெளியில் கயிற்று கட்டிலில் அமர்ந்திருந்த ஆதித்தனின் அருகில் அமர்ந்தாள் வெண்மதி....

"நிலவை ரசிக்கிறீர்களா ஆதித்தரே"

" ம்ஹீம்.. நிலவின் ஒளியில் என் நிலாப் பெண்ணை ரசிக்கவே விருப்பம்.....அனுமதி உண்டா!!!" என்றவன் அவள் மடிசாய்ந்தான் .

அவன் தலையை கோதியவாறு "தங்களுக்கு இந்த வாழ்வில் சிரமம் இல்லையே" என்று மெதுவாக வினவ...

" நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் மதி...இதில் என்ன சந்தேகம்" ஆரவாரம் இல்லாத அமைதியான வாழ்வு, தாயாய் தோழியாய் நீ, இனி நமக்கு பிறக்க போகும் மகவு என நிறைவான வாழக்கை வேறென்ன வேண்டும்.

நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறிய மாட்டோம் .இன்று நடப்பதை ஏற்று வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும்."

அவனது பதிலில் மகிழ்ந்தவள் குனிந்து அவன் நெற்றியில் முத்தமிட...

"தண்டனை கொடுத்து நாளாகிறதே!!! நீ என்ன சொல்கிறாய் !!!!"

"தண்டனை கொடுப்பவர் பெறுபவரிடம் அனுமதி கேட்க தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்"

அப்படியா என்றவன் அவளை கைகளில் ஏந்தி கொண்டு "இன்று இருமடங்கு கடுமையான தண்டனை உனக்கு உண்டு " என்றவன் குடிலுக்குள் செல்ல நிலா நாணம் கொண்டு மேகத்திற்குள் நுழைந்து கொண்டது....

அவன் தண்டனைகளை வழங்க அதை மனமுவந்து பெற்றுக் கொண்டாள் பெண்ணவள்...இவர்களின் காதலை கண்டு காற்றும் அவர்களை தழுவி வாழ்த்தி சென்றது...

??? முற்றும்???
 




Last edited:

Kavyajaya

SM Exclusive
SM Exclusive
Joined
May 4, 2018
Messages
12,492
Reaction score
44,781
Location
Coimbatore
Wow.. karthi kaa.. sooper maaran nalla paiyan thaan.. ????

Dheva venmathi aathitha karikaalan sooperoo sooper.. ???
 




karthika manoharan

அமைச்சர்
SM Exclusive
Joined
May 5, 2018
Messages
2,013
Reaction score
7,730
Location
namakkal
வணக்கம் மக்களே ஒரு வழியா தேன்மழையை முடிச்சுட்டன்.. தேன்மழையா வந்துதான்னு கேட்டா எனக்கே தெரில...முதல் தடவையா கதைங்கற பேர்ல எழுதிருக்கேன்...என்ன தைரியத்தில எழுதினேன்னு எனக்கே தெரில....கடந்த காலம் , நிகழ்காலம்னு மாறிமாறி வரும்..அது சரியா புரிய வச்சேனான்னு தெரில... எதா இருந்தாலும் பக்குவமா சொல்லுங்க கேட்டுக்கறேன்....இதுவரைக்கும் like comment போட்ட நல்ல உள்ளங்களுக்கு கோடான கோடி நன்றி...நன்றி..நன்றி.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top