• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலம் கடந்தும் காதல் 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anantha Lakshmi

மண்டலாதிபதி
Joined
Jan 15, 2019
Messages
468
Reaction score
1,112
Location
Tirunelveli
ஹாய் அமுலுஸ்??....

காலம் கடந்தும் காதல் முதல் அத்தியாயத்தோட நா வந்துட்டேன்...குறைகள் இருந்தால் கண்டிப்பா என்கிட்ட பதமா கமெண்ட் பாக்ஸ்ல சொல்லுங்க...நிறைய இருந்தா இன்பாக்ஸ்க்கு வந்துடுங்க????..








Please man, pretty please with a cherry on top, ok?
The weather cold
The weather so
Chill, chilly really penguin feather roll
Cause I'm sipping Pro'
Yeah that 'meth is pro'


புகழ்பெற்ற லண்டன் மினிஸ்ட்ரி ஆஃப் சவுண்ட் நைட் கிளப்பில் உள்ள தி ஃபாக்ஸ் எனும் இடத்தில் முரா மாஹாவின் பாடல் ஹைடெசிபலில் ஒலித்து கொண்டிருந்தது.ஆயிரக்கணக்கானவர்கள் தங்களை மறந்து இசைக்கு ஏற்ப கை கால்களை அசைத்து நடனம் ஆடி கொண்டிருந்தார்கள்.


அதில் தானும் ஒருவனாய் ஆடி கொண்டிருந்தான்.அர்ஜூன்.கலையான முகம்…மானிறத்தவன்…லண்டனிலே நான்கு வருடங்களாக இருப்பதால்.. சிறிது வெளுத்திருந்தான்…எவ்வளவு பழக இனிமையானவனோ…அதே அளவு கோவக்காரன்…வேண்டாம் என்று ஒதுக்கி விட்டால்..திரும்பி கூட பார்க்க மாட்டான்.தப்பு என்றால் அடுத்த நிமிடம் சாரி கேட்பான்…அதுவே செய்யாத தப்பிற்க்கு இவனை குற்றம் சாட்டினால்…மற்றவர்கள் என்றால் உண்டுஇல்லை என்று ஆக்கிவிடுவான்…அதுவே குடும்பத்தவர்கள் என்றால் பேசாமல் ஒதுங்கி விடுவான்.


ஆடிக்கொண்டிருப்பவர்கள் இப்பொழுது நிறுத்துவது போல் அல்ல…விடியும் வரை நடக்கும் என்பதால்…


”டேய் மச்சி கதிர்!ரூம்க்கு போகலாம் வரியா”…


“என்னடா சொல்லுற கேட்கல”…


“டேய் ரூம்க்கு போகலாம் வா..இப்பவே மணி இரண்டு ஆகிடுச்சு..காலையில ஆபிஸ் போகனும்”..


"மச்சி நீ கிளம்பு! எனக்கு ஹாசில் கம்பெனி குடுக்குறேன்னு சொல்லிருக்கா..அதுனால அவ கூட ஸ்டே பண்ண போறேன்…மார்னிங் வந்து உன்ன பார்க்குறேன்.."


"உன்னலாம் திருத்தவே முடியாது…என்னமோ பண்ணு..நா கிளம்புறேன்.. சீக்கிரமா ரூம்க்கு வந்துடு டா.."


"அதுலாம் கரைக்ட்டா வந்துடுவேன்..பை…"





முதலில் தமிழ் எனும் உணர்வே அர்ஜூன் மற்றும் கதிரேசன்னை ஒன்றாக இணைத்தது..பின்பு இருவரும் ஒரே ஆபிஸ்.. அர்ஜூன் எவ்வளவு கோபகாரனோ…அதே அளவு கதிர் அனைத்தையும் பொறுமையாக கையாளுபவன்…எதிர் எதிர் துருவம் தான் ஈர்க்கும் என்பது போல…குணத்தில் இரு துருவங்களாக இருப்பவர்கள் தான் “என் பிரண்ட போல யாரு மச்சான்”என்று பாடும் அளவிற்கு குளோஸ் பிரண்ட்ஸ்…




பின்பு இருவரும் இரண்டு படுக்கை அறை இருக்க மாதிரி உள்ள வீடா பார்த்து ஸ்டே பண்ணுறாங்க…அர்ஜூன்னுக்கு பிடித்த விஷயங்கள்ளில் ஒன்று சமையல்..பை ஸ்டார் ஹோட்டல் செஃப் தோத்துடுவாரு…அந்த அளவுக்கு அருமையா சமைப்பான்…அதுனால கதிர் பாத்திரம் கழுவுறது,வீட்ட சுத்தம்மா வச்சிக்கிறது..அந்த வேலை எல்லாம் பார்கிறதால…இவுங்க இருக்குற ரூம் பேச்சுலர்ஸ் இருக்க ரூம் மாதிரியே இருக்காது…அவ்வளவு சுத்தம்..(இன்ரோ போதும் அமுலுஸ் இதுக்கு மேல சொன்னேன்னா..எல்லாரும் அடிக்க வந்துடுவிங்க…போக போக இரண்டு பேர பத்தியும் தெரிஞ்சிக்கலாம்)



செப்லி ரீச்சிட் அட் ரூம்னு கதிருக்கு ஒரு மெசேஜ் போட்டு விட்டு..ஆடிய அலுப்பு தீருவதற்காக ஒரு குளியல்ல போட்டுட்டு வந்து படுத்துட்டான்.




"செல்வி என்னை விட்டு செல்லாதே…"


"இல்லை அரசே! இப்பொழுது நான் செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ளேன்.."


"நான் இவ்வளவு கூறுகிறேன்…மீண்டும் சென்றே ஆவேன் என்றால் என்ன அர்த்தம்.."


"எந்த அர்த்தமும் இல்லை அரசே!நான் இப்பொழுது சென்றே ஆக வேண்டும்.."


"சரி…இனி எப்பொழுது மீண்டும் நாம் சந்திப்பது.."


"இனி என்றுமே சந்திக்க போவது இல்லை.."


"செல்லாதே செல்வி…."






உடல் முழுவதும் வேர்வையில் நனைந்திருக்க….எழுந்திருத்து உட்கார்ந்தான் அர்ஜூன்..
ச்சச…கனவா…என்ன டா இது நிஜம் மாதிரியே வருது…மணி வேற நாலரைனு காமிக்குது…விடிய கால கனவு பலிக்கும்னு வேற அம்மா சொல்லுவாங்களே…இது என்ன கனவுனே தெரியலையேனு தனக்குள்ளே சொல்லி கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான்.








களத்தூர் பசுமை அழகு கொஞ்சும் கிராமம்…இன்னும் நகர வாசனை படியாமல் இருமருங்கிலும் செழித்து வளர்ந்த வயல்வெளிகள்.உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாத…பேச தெரியாத வெள்ளந்தி மனிதர்கள்.ஊரின் பெரும்பான்மையானவர்களுக்கு சொந்த வயல் இருப்பதால் விவசாயமே பிராதன தொழில்..பின்பு ஆடு, கோழி,மாடு இதில் ஏதாவது ஒன்றாவது அனைவரின் வீட்டிலும் இருப்பதால்….அதனை மேய்பதில் நேரத்தை கழிப்பார்கள்…இப்பொழுது தான் தொலைக்காட்சி பெட்டி அரசாங்கமே தருவதால் அனைவரின் வீட்டிலும் இருக்கிறது…ஆனால் அதனை இருந்து பார்பவர்கள் குறைவு.. பெரும்பாலும் ரேடியோ பெட்டி தான் ஓடிக்கொண்டிருக்கும்…




ஏல தமிழு…அங்கன என்ன கோழியோட கபடி விளையாண்டுக்கிட்டு இருக்க..அப்படி கேட்டுக்கொண்டே அந்த இடத்துக்கு வந்தது'சின்னத்தாயி'


"ஏய் கிழவி உமக்கு நேரஞ் சரியில்லைனு நினைக்கிறேன்…என்ன பார்த்தா உமக்கு என்ன கபடி விளையாடுற மாதிரி தெரியுதா.."


“பின்ன இல்லியா கோட்டி சிருக்கி… எம்புட்டு நேரமா அத புடிப்ப…பஞ்சாரத்துல இருந்து வெளிய வரும் போதே புடிக்கனும்…இல்லையா அங்கன பாரு வலை கிடக்கு அத போட்டு புடிக்கனும்…அத விட்டுபுட்டு தம்மாந்துண்டு கோழிய புடிக்க அரமணி நேரமா”என்று சொல்லி தம் முகத்தை தோல் பட்டையில் இடித்து கொண்டார்.


"ஏய் கிழவி இருந்தாலும் என்ன ரொம்ப தான் அசிங்க படுத்துற நீ..காலையில பஞ்சாரத்த துறந்து விட்டது நா இல்ல…நீ பெத்து வளர்த்து வச்சிருக்கியே ஒரு ராங்கிகாரி அவுக தான்."


"அட எடுபட்டவளே! என்ன திமிரு இருந்தா என் மவள ராங்கிகாரிம்ப.."


"நா சொல்லலைனாலும் ஊரே அததான் சொல்லும்.."


"எந்த விளம்மெடுத்தவ டி என் மகள அப்டி சொன்னது…என் எதுக்க வர சொல்லு ஆஞ்சுபுடுறேன்.."


"அது யாருனா…"


ஏட்டி தமிழு இன்னுமா கோழிய புடிக்குற…உன்ற ஐயா சாபிட வந்துடுவாக…என்ன பன்னுறனு கேட்டுகிட்டே அங்க வந்தது 'மலர்' தமிழின் அம்மா..அள்ளி சொருகிய கொண்டை,வேலை செய்து உறமேறிய கருத்த உடல் வாகுடன்,கண்டாங்கி சீலை கட்டி வந்தார்.


"ஆத்தா நா புடிச்சுகிட்டு தான் இருந்தேன்..இந்த கிளவி வந்து தான் துணதுணனு பேசிட்டு இருக்கு.."


"ஏட்டி எத்தனதடவ உனக்கு சொல்லுறது..பெரியவுகள மரியாதையா கூப்பிடுனு.."


"ஆமா இத ஆச்சினு வேற கூப்பிடனும்மா…ஆச்சி மாதிரியா நடந்துக்குது…எப்பபாரு என்ன ஒறண்ட இழுக்குறதே வேலையா வச்சிருக்கு.."


"நா எங்கடி உன்ன ஒறண்ட இழுக்குறேன்…நீ தான் எப்ப பாரு எங்கிட்டேயே மல்லுக்கு நிக்கிற.."


இப்படியே இவுக சண்டை நடந்துக்கிட்டு இருக்க…இவுகளுக்கு பஞ்சாயத்து பண்ண இன்னிக்கு குழம்பு கொதிச்ச மாதிரி தான் என நினைத்துக்கொண்டே மலர் கோழிய பிடிக்க சென்றார்.


மலர் கோழி பிடிப்பதை பார்த்த சின்னதாயி..அடியே அங்கன உன்ற ஆத்தா கோழிய பிடிக்க போயிட்டா…நீ போய் புடிடி..இல்ல குழம்பு கிடைக்காதுனு…நியாபக படுத்துனதால தமிழ் மலர விலக்கிட்டு போய் கோழிய ஒரே அமுக்கா அமுக்கி பிடிச்சிட்டா..


View attachment 13255

View attachment 13256
Akkaaa.. nice starting ? dialogues la keka super ah iruku...all the best..kaaawwww
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top