• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காலம் கடந்தும் காதல்-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
ஹாய் அமுலுஸ்.நா வந்துட்டேன்.முதல்ல லேட்டா வந்ததுக்கு மன்னிச்சு ??.

ஃபேமிலி ஃபங்சன்.சோ எபி எழுத முடியல.இப்பவும் லேப் எடுத்தாலே முறைக்கிறாங்க.சோ போன்ல தான் டைப் பண்ணிருக்கேன்.சின்ன எபிதான் அட்ஜஸ்ட் கரோ??.

போன எபிக்கு லைக் அண்ட் கமென்ட் பண்ண எல்லாருக்கும் பெரிய சாக்கி ??.

இந்த எபியும் படிச்சிட்டு மறக்காம உங்களுடைய கருத்துக்களை சொல்லுங்க.கருத்துகளை எதிர் நோக்கி நான் ??.





“டேய் கதிர்! இன்னும் எவ்வளவு நேரம் தான் டா உனக்காக வேயிட் பண்ணுறது.மணி எட்டு ஆகிடுச்சுடா”போனில் கத்தி கொண்டிருந்தான் அர்ஜுன்.


"மச்சி டோர்கிட்ட தான் நிக்கிறேன்.வந்து கதவ திற"-கதிர்


"அடேய்!பக்கத்துல வந்துட்டு ஏன்டா போன் அட்டன்ட் பண்ண"-அர்ஜூன்


"டேய் போனதடவ கதவுகிட்ட வந்தா போன் அட்டன்ட் பண்ணமாட்டியானு திட்டுன.இப்ப ஏன் போன் அட்டன்ட் பண்ணேன்னு திட்டுற.உனக்கு என்னதான்டா பிரச்சினை"-கதிர்


ஒன்னும் இல்ல!போய் குளிச்சுட்டு வா கிளம்பளாம்னு சொல்லி சேர்ல உட்கார்ந்திட்டான் அர்ஜூன்.


இவனுக்கு என்ன ஆச்சு!ஒரு மாதிரியாவே இருக்கானு நினச்சுகிட்டே குளிக்க போனான் கதிர்.


கதிர் கிளம்பி வரவரைக்கும் அர்ஜூன் எப்டி உட்கார்ந்து இருந்தானோ அப்டியே தான் இருந்தான்.


மச்சி என்ன இப்டியே உட்கார்ந்துட்ட.வா போகலாம்னு சொல்லி கதவ பூட்டிட்டு சைக்கிள்ள எடுத்தாங்க. ஜிம்க்கு போனா ஓடாத சைக்கிள்ல ஓட்டனும்.அதுக்கு இப்படி சைக்கிள் ஓட்டிட்டு போனா உடம்பும் பிட்டா இருக்கும்.பிகர்ஸ்சும் பார்க்க முடியும்னு சொல்லி வரமாட்டேன்னு சொன்ன கதிரையும் சைக்கிள் ஓட்ட வச்ச பெருமை அர்ஜூன்ன தான் சேரும்.


"டேய் என்ன ஆச்சு..ஏன் ஒருமாதிரியாவே இருக்க"-கதிர்


"ஒரு நாலரை மணி இருக்கும் டா.ஒரு கனவு வந்துச்சு..யாரோ ஒரு பொண்ண போகதனு நா சொல்லுற மாதிரி.ஆனா டிரஸ் எல்லாம் பழைய காலத்து ஸ்டைல்ல இருந்துச்சு டா.ஒருமாதிரி ஷாக் ஆகி எந்திருச்சு உட்கார்ந்துட்டேன்.அதான் ஒரு மாதிரி டிஸ்டர்ப்பா இருக்கு.அந்த கனவு எதுக்கு மச்சி வந்துச்சு."


"டேய் இதுக்கா காலையில இருந்து சிஞ்சர் ஈட் மங்கி மாதிரி இருந்த"-கதிர்


உன்கிட்ட என்னனு கேட்டதுக்கு என்னயவே குரங்குனு சொல்லுற.பரவால நா குரங்காவே இருந்துட்டு போறேன்.ஆனா இந்த குரங்காவது நல்ல குரங்கு.கூட இருக்கு பாரு ஒரு குரங்கு,சரியான பிராடு குரங்கா இருக்குனு சத்தமில்லாம கதிர கலாய்சிட்டு சைக்கிள்ள பாஸ்ட்டா போயிட்டான் அர்ஜூன்.


பின்னாடியே துரத்தி போன கதிர்!”டேய் இப்ப நீ யார குரங்குனு சொல்லுற”


"இன்னிக்கு கூட பஞ்சு மிட்டாய் கலருல சட்ட போட்டுயிருக்கு பார்த்தியா.அத சொன்னேன்."


டேய் இது பஞ்சு மிட்டாய் கலரு இல்ல பிங் கலரு.நம்ம ரோசி இந்த சட்டையில நீ ரொம்ப ஹேண்ட்சம்மா இருக்கேன்னு சொன்னா.நீ என்னடானா மங்கினு சொல்லுற..இப்படி பேசி கொண்டே ஆபிஸ்க்கு வந்துட்டாங்க.






சிறிது நேரம் வேலையில் மூழ்கி இருந்த அர்ஜூன், மீண்டும் அந்த கனவை பற்றியே யோசிக்க ஆரம்பித்து விட்டான்.


அவனது முகத்தை பார்தே அந்த கனவை பற்றி தான் யோசிக்கிறானு நினச்ச கதிர் அர்ஜூன்கிட்ட பேச ஆரம்பிச்சான்.


"மச்சி என்ன அந்த கனவ பத்தி யோசிக்கிறியா"-கதிர்


"ஆமாடா! எதுக்கு இது வந்துச்சுனு யோசிக்கிறேன்"-அர்ஜூன்


"உனக்கு கனவ பத்தி சில ஃபேக்ட் சொல்லுறேன் கேளு"-கதிர்


ஒரு மனுஷன் ஒரு வருஷத்துக்கு 1460 கனவு காணுறான்.அப்புறம் 90 நிமிசத்துக்கு ஒரு தடவ கனவு வருமாம்.அதுலையும் மிஞ்சி போனா முப்பது நிமிசம் தான் ஒரு கனவு இருக்கும்.அப்புறம் கனவுல வர மனுசன நியாபகம் வச்சுக்க முடியாது நம்மனால,ஏன்னா அதுல வர மனுசனே நாம தான்.அதாவது யாரு கனவு காணுறாங்களோ அவுங்க தான்.ஆழ்மனசோட நிறைவேறாத விசயம்மோ இல்ல ஆசையோ கனவு மூலமா நம்ம ஆன்மா நிறைவேத்திக்கும்.எக்ஸாம்புளுக்கு இன்னிக்கு நீ ரொம்ப கோவ பட்டுயிருந்தாலோ அல்லது ரொம்ப மனவேதனையோட இருந்தினாலோ அன்னிக்கு உனக்கு கண்டிப்பா கனவு வரும்.இத நா சொல்லல oneirology கனவ பத்தி படிக்குறவுங்க சொன்னது.அதுக்குப்புறம் கனவுல வர பிளேஸ்,பாக்குற மனுசங்க எல்லாரும் நீ ஏற்கனவே எதார்தமா பார்தவுங்களா இருப்பாங்க..இல்ல புக்குலேயோ டிவிலேயோ பார்த்தவுங்களா இருப்பாங்க.சைன்டிபிக்கா எனக்கு தெரிஞ்சது எல்லாம் சொல்லிட்டேன் மச்சி.சோ பிரியா விடு..வேலைய பார்கலாம் வா.


"மச்சி கைய குடு.உனக்கு எப்டிடா இவ்வளவு விசயம் கனவு பத்தி தெரியும்"-அர்ஜூன்


"எல்லாம் நம்ம கூகுள் ஆண்டவருடைய உபயம் தான்.பொழுது போகலைனு அன்னிக்கு சும்மா கனவு பத்தின ஆர்டிகல் படிச்சேன்.அதுல தெரிஞ்சுகிட்டது தான்."-கதிர்


கதிர் சொன்னதுக்கு பிறகு தான் அர்ஜூன் அந்த கனவின் தாக்கத்தில் இருந்து வெளியே வந்தான்.






“அய்யா ராசா கதிரு எப்டி இருக்க” என்ற கேள்வியை தாங்கி வந்த குரல் கதிரின் அம்மா பாரதியுடையது.


"அம்மா என்ன இந்த நேரதுல கால் பண்ணிருக்கிங்க.அது இருக்கட்டும் வைங்க நா கூப்பிடுறேன்"-கதிர்



"அய்யா உடனே நீ பிளேயின புடிச்சு வா நம்ம ஊருக்கு."-பாரதி


"என்னமா திடிருனு வர சொல்லுறிக,என்ன விசயம்?"-கதிர்


"அதுலாம் நல்ல விசயந்தான்யா.உனக்கு உன்ற மாம மவள பேசிருக்கு.அதேன் பரிசத்த போடலாம்னு பார்குறோம்.நீ விரசா வாயா."-பாரதி


"அம்மா நா என்ன பக்கத்து ஊருலையா இருக்கேன்,உடனே வாரதுக்கு.என்ன அதுக்குள்ளேயும் பரிசம் போடனும்னு சொல்லுறிக.நாலு நாளைக்கு முன்ன பேசுறப்பலாம் எதுவும் சொல்லல."-கதிர்


"அதுவாயா நம்ம சாதககாரரு இருக்காருல!அதேன் நம்ம வூரு கோவில் முக்குல இருப்பாரே அவருகிட்ட தான் சாதகம் பார்தோம் நானும் உன்ற மாமனும்.அந்த ஆளு தான் பதினஞ்சு நாளைக்குள்ள கண்ணாலத்த வைக்கனும்னு சொல்லிபுட்டாரு அதான்."-பாரதி


"பதினஞ்சு நாளைக்குள்ள கல்யாணம்மா.என்னமா விளையாட்டுறியா?"-கதிர்


"நா ஏன் அப்பு உன்கிட்ட விளையாட போறேன்.பேசாம மதிக்கு வேற மாப்பிளைய பார்துடுவோமாயா?என்று நமட்டு சிரிப்புடன் அந்த பக்கத்தில் இருந்து குரல் வந்தது."


"அம்மா இருந்தாலும் ரொம்ப பண்ணுறிங்க.லீவு கேட்டுட்டு வரேன்..வந்து உங்கள பேசிக்கிறேன்."


"ஏன் ராசா பேச மட்டும் தான் செய்வியா.பாடு நா கேக்குறேன்னு அதற்க்கும் சிரித்து கொண்டே பதில் வந்தது பாரதியிடம் இருந்து."


"அம்மா........."


"சரிப்பு கத்தாத.. அர்ஜூன் தம்பிகிட்ட போன குடு நானு பேசனும்."


"இருங்கமா பக்கதுல தான் இருக்கான் தரேன்."


"ஹலோ அம்மா! எப்படி இருக்கிங்க,வீட்டுல எல்லாரும் எப்படி இருக்காங்க.-அர்ஜூன்


"எல்லாரும் சொகம் தான் தம்பி இங்க.ஊருல திருவிழா, அப்புறம் நம்ம கதிருக்கு என்ற தம்பி பொண்ண கட்டலாம்னு பேசிருக்கோம்..அதனால திருவிழா முடிஞ்சோன கண்ணாலம்.நீயம் கதிரு கூட வந்துடோனும்.இது பாசமா கூப்பிடுறேன்னு வச்சுகிட்டாலும் சரி இல்லாட்டி கட்டளையா சொல்லுறேன்னு வச்சிக்கிட்டாலும் சரினு பாரதியின் குரல் அந்த பக்கம் இருந்து கேட்டது."


மறுக்கமுடியாத அழைப்பாக இருந்ததால் தானாகவே உதடுகள் உச்சரித்தது”வரேன் அம்மா” என்று.


மீண்டும் கதிருடன் பேசி தொலைபேசியின் அழைப்பு நின்றது.


"மச்சி இப்பவே மெயில் போடு இருபது நாளைக்கு லீவுனு"-கதிர்


"டேய் கண்டிப்பா நா வந்தே ஆகனும்மா"-அர்ஜூன்


"பின்ன என் கல்யாணத்துக்கு வராம இருப்பியா.ஒழுங்கா லீவ போட்டு வர பாருனு சொன்னது மட்டும் இல்லாம மெயில் டைப் பண்ண ஆரம்பிச்சிட்டான் அர்ஜூன்னோட சிஸ்டம்ல இருந்து."


"டேய் நானே டைப் பண்ணுறேன்.நீ போய் உனக்கு மெயில் டைப் பண்ணு அப்படினு சொல்லி அனுபிச்சிட்டான்.
ஆமா மச்சி உங்க ஊரு பேரு என்ன சொன்ன..நா மறந்துட்டேன்."



"களத்தூர் டா."
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
களத்தூறுக்கு கதை travel pannuthu... Nice?? return Inge varuvaangala deiva ?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,105
Reaction score
49,980
Location
madurai
Yes ka??.

Innum yosikala ka..varanumnu thonuchuna kuditu vanthutuvom??.

???????Ka.
Nallathane pesine?.. திடீர்னு என்ன ஆச்சு உனக்கு? ... போய் தூங்கு தெய்வா காலையில தெளிவா பேசலாம்???...
 




Nachuannam

அமைச்சர்
Joined
Nov 27, 2018
Messages
4,031
Reaction score
8,390
Location
U.A.E
Nallathane pesine?.. திடீர்னு என்ன ஆச்சு உனக்கு? ... போய் தூங்கு தெய்வா காலையில தெளிவா பேசலாம்???...
Return inga varuvangalanu ketingala athuku sonnen ka??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top