காலம் கடந்தும் காதல் 4

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
நான் வந்துட்டேன் அமுலுஸ்🏃🏃..

போன எபிக்கு லைக் அண்ட் கமெண்ட் பண்ணதுக்கு பெரிய சாக்கி🍫🍫.

இந்த எபிய படிச்சிட்டு மறக்காம உங்க கருத்துக்களை சொல்லுங்க🙏🙏.

கருத்துக்களை எதிர் நோக்கி நான்😉😉


ஏய்யா ராசா வாங்க வாங்க!”என்ற ஓங்கி ஒலித்த குரலுடன் உள்ளிருந்து ஆரத்தி தட்டுடன் வந்தார் பாரதி.

"அது தான் வந்துட்டோமே அம்மா.. எப்பவும் இதே டையலாக் சொல்லிட்டு...வேற ஏதாவது சொல்லுங்க-"கதிர்

"அடேய் கோட்டிபயலே இத்தன மாசம் சென்டு ஊருக்கு வந்தியனு வாயார வாங்கனு சொன்னேன்.. அதுக்கு என்னமோ வேற டையலாக் சொல்ல சொல்லுற..முதல ஆடாம இருடா!ஆரத்தி எடுக்குறதுக்கு.

தம்பி அர்ஜுன் நீங்களும் கூட நில்லுங்க.. பயணம் எல்லாம் சவுகரியமா இருந்துச்சா"-பாரதி.

"அதுலாம் நல்லா இருந்துச்சு அம்மா.. நீங்க எப்படி இருக்கீங்க"-அர்ஜூன்

"அதுலாம் அந்த கருவியாண்டி புண்ணியத்துல சுகம் தான் தம்பி".

"அம்மா இன்னும் எவ்வளவு நேரத்துக்கு வெளில நின்னே சுகம் விசாரிப்பிக-"கதிர்

"அந்த தம்பிக்கிட்ட பேச விட மாட்டியே..நில்லுடா..நீங்களும் நில்லுங்க தம்பி.. என்று சொல்லி ஆரத்தி எடுத்து முடித்தார்."“அழகா!இத புறத்தால கொட்டிட்டு அந்த பொட்டிய எடுத்துக்கிட்டு உள்ள வாயா”என்று சொல்லி அனைவரையும் உள்ளே அழைத்துச்சென்றார்.


"அக்கா நா கிளம்புறேன்.. தோட்டத்துல கொஞ்சம் வேல கிடக்கு"-கருப்பையா


"அட இருப்பு! சாப்பிட்டு போவலாம்"-பாரதி


"இல்லக்கா!உரம் வந்துருக்கும் இன்னேரம்..நா போயி அத பார்க்கனும்..மதி சோறு கொண்டு வரும்..நா கிளம்புறேன்."


"என்ன சொன்னாலும் நீ கேக்க போறது இல்ல..சரிப்பு போயிட்டு வா.அப்புறம் ராத்திரி சாப்பாடு நம்ம வீட்டுல தான் மதிய கூட்டிக்கிட்டு வந்துடு".

“சரிக்கா..நா போறப்புடுறேன்.வரேன் மாப்பிள்ளை.. வரேன் தம்பி”.

“வாங்க மாமா”என்று ஒருசேர குரல் வந்தது இருவரிடம்மிருந்தும்.


சரிப்பு இரண்டு பேருக்கும் மாடில ரூம் ரெடி பண்ணிருக்கேன்.போய் கை,கால் கழுவிப்புட்டு வாங்க..சாப்பாடு எடுத்து வைக்கிறேன்.


"அம்மா தனி தனி ரூம்மா ரெடி பண்ணிருக்கிங்க"-கதிர்


"ஆமாப்பு"


"வேண்டாம் மா..நாங்க ரெண்டு பேரும் ஒரே ரூம்லே இருந்துக்குறோம்".


"சரி ராசா உங்க விருப்பம்.போயிட்டு சாப்பிட வந்துவிடுங்க."
வாடா அர்சூனு..இது தான் எம்புட்டு ரூம்மு..உன்ற வலது கால தூக்கி வச்சு உள்ள வாடா.


"ஏன்டா உங்க மாமா தான் அர்சூனு அப்படி கூப்பிடுறாங்கனு பார்த்தா.. நீயும் ஏன்டா அப்டி கூப்பிடுற..ஒழுங்கா மச்சினு சொல்லு இல்ல அர்ஜுன் சொல்லு."


"அது இல்ல டா எங்க மாமாக்கு 'ஜு' எழுத்து வராதுங்கிறதே எனக்கு இப்போ தான் டா தெரியும்.அதான் அவுக அப்படி கூப்பிட்டவுடன சிரிப்பு வந்துடுச்சு."


"ஏன் சிரிச்சிருக்க வேண்டியது தானே"-அர்ஜுன்


"என் கல்யாணத்த நிப்பாட்டுறதுக்கு நீ பிளான் போடுறியா"-கதிர்


ஏன்டா நீ தான் இப்டி சொல்லிகிட்டே இருக்க.மதிய ஒழுங்கா பார்த்திருக்கியா.. எப்படி இருப்பா தங்கச்சி?


“ஏன்டா லூசு மாதிரி கேள்வி கேட்குற!சரியா பார்க்காமயா கல்யாணத்துக்கு ஓகே சொல்லுவேன்.அவ முழு பேரு மதியழகி டா..நிஜமாவே அவளுக்கு மட்டும் தான் அந்த பேரு பொருந்தும்.. அந்த முழுநிலவு மாதிரி அப்படி ஒரு அழகு..தொட்டா ஓட்டுற வெள்ள நிறம்..அதிர்ந்து பேச தெரியாத குரல்.. அறியாத வயசுலே அவளுக்கு நான் தான்! எனக்கு அவ தான் பேசி வச்சிட்டாங்க..முக்கியமா எங்க அம்மாவ அத்தையா இல்லாம அம்மாவா பார்த்துக்குவா”என்று சொல்லி அர்ஜுன் புறம் திரும்பினான்."ஏன்டா இவ்வளவு வர்ணிக்கிற..பின்ன எப்படி டா ஹாசில் கம்பெனி குடுத்தானு போன"-அர்ஜுன்


"மெதுவா பேசுடா எருமமாடே..ஹாசில் கம்பெனி குடுக்குறானு சொன்னேன்..என்ன ஆச்சுனு அப்புறம் கேட்டியாடா"-கதிர்


"இதலாம் எப்டி டா நா கேட்குறது."


“அடேய் நீ நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னுமே நடக்கல டா.. அன்னிக்கு அவ ஃபுல்லா குடிச்சு மட்டையாகிட்டா.. அதுனால அவள அவ ரூம்ல கொண்டு போய் விட்டுட்டு.. நானும் ஒரு ஓரம்மா தூங்கி எந்திருச்சிட்டு வந்தேன்”என்று சோக குரலில் கதிர் சொல்லி முடித்த நிமிடம் கடகடவென சிரிக்க ஆரம்பித்தான் அர்ஜுன்.


"இப்போ ஏன் டா சிரிக்கிற?"


"இல்ல மச்சி நீ பெரிய காதல் மன்னன்..பிளர்ட்டிங்ல கிங்னு நினச்சேன்..ஆனா நீ கைப்புள்ளைனு இப்ப தான் டா எனக்கு தெரியுது."


"பார்த்து டா பல்லு சுழிக்கிக்க போகுது."


"அதுலாம் நாங்க பார்த்துக்கிறோம் டா."


இப்படி இவர்களின் கலாய்பு கச்சேரிக்கு நடுவில் பாரதியின் குரல் ஒலித்தது.”ராசாக்களா சாப்பிட்டுபிட்டு வேலைய பாருங்க”.


“இதோ வந்துட்டோம்மா”என்று கூறி வேகமாக கை, கால் கழுவி இருவரும் கீழே சென்றனர்.


“உட்காருங்கப்பு..என்னயா மேலுகழுவலியா?”


ரூம்ல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடி தான் குளிச்சோம் மா.. நாங்க என்ன மண்ணுலயா புரண்டு வாரோம்!..அதுலாம் குளிக்க வேண்டாம் மா..இப்ப சோத்த கண்ணுல காமிங்க..இல்ல இங்கனயே மயக்கி விழுந்துருவேனாக்கும்..


‘பசி’ என்ற சொல்லை கேட்டவுடன் பரிமாற ஆரம்பித்து விட்டார் பாரதி.அங்கே பறப்பது, மிதப்பது,தாவுவது, ஓடுவது என்று எல்லா வகையான பிராணிகளும் ஒவ்வொரு உணவாய் மாறி டேபிலில் இருந்தது.


என்ன மா இன்னிக்கே இவ்வளவு ஐட்டம் செஞ்சு வச்சிருக்கிங்க.. இன்னும் கொஞ்ச நாள் இங்கன தான்மா இரண்டு பேரும் இருப்போம்.


அது தெரியும் டா.. நாளைக்கு நம்ம ஊருல காப்பு கட்டுறோம்ல..அதான் காப்பு கட்டியாச்சுனா கவுச்சி புழங்க கூடாது..அதான் இன்னிக்கு செஞ்சுபுட்டேன்.


ஓ…..அத மறந்துட்டேன்மா..அதுக்கு ஏன் இம்புட்டு நேரம் பேசுறிக என்று சொல்லி பாரதி கையில் ஒரு அடியை வாங்கி கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.


பாரதி பரிமாறிய பின், அர்ஜுன் தம்பி இதுவும் உங்க வீடு மாதிரி தான் அதுனால கூச்சப்படாம கேட்டு வாங்கி சாப்பிடுங்க.


சரிம்மா

பின்பு உணவு உண்டு,கதை பேசி, கொண்டு வந்த பொருட்களை பிரித்து,இரவு உணவு உண்டு அன்றைய பொழுது மிக வேகமாகவே நகர்ந்து சென்றது."சரிமா நாங்க உறங்கப் போறோம்.. காலையில பார்க்கலாம்"-கதிர்

"ஆமா மா!குட் நைட்"-அர்ஜுன்.


"சரி அப்பு .. காலையில பார்க்கலாம்."
"குட் நைட் மச்சி"

"உனக்கும் டா..குட் நைட்"

"எங்கே சென்று கொண்டிருக்கோம் அரசே"


"சிறிது நேரம் அமைதியாக வா நவி.. அருகில் வந்துவிட்டோம்..நீயே பார்ப்பாய்."


"இப்படி கூறியே எல்லையை கடந்து பலகாத தூரம் வந்துவிட்டோம்."


"ஆமாம்! இன்னும் ஒரு மைல் தான்.. சிறிது வேகமாக வா நவி."


"நான் வேகமாக வர நினைத்தாலும் புரவி வேகமாக வர வேண்டும் அல்லவா.."


"அது எல்லாம் வேகமாகத்தான் வரும்.. அதில் பயணம் செய்யும் தாங்கள் தான் சோர்வு அடைந்துவிட்டிர்கள்."


"இப்படி பேசி கொண்டே அந்த சுந்தரவனக்காட்டை இருவரும் அடைந்தார்கள்."


"என்ன அரசே இப்படி ஒரு வனத்திற்க்கு அழைத்து வந்திருக்கிறீர்கள்."


"ஆமாம் நவி!இக்காடே காதல் செய்வதற்க்கும் கூடல் கொள்வதற்க்கும் உகந்த இடம்..ஆதலாலே தங்களை இங்கு அழைத்து வந்தேன்."


"தங்கள் கண்களுக்கு மட்டும் எப்படி தான் இப்படி ஆன இடங்கள் கண்ணுக்கு தெரியுமோ"


இவ்வாறு பேசி கொண்டே இருவரும் காட்டிற்குள் நுழைந்தனர்.
வேர்த்து வடிய போர்வைக்குள் இருந்து எழுந்து உட்கார்ந்தான் அர்ஜுன்.
 
#6
🌹 கிராமத்தில் இருக்கும் பேச்சுவழக்கு உங்கள் எழுத்தில் அப்படியே இருக்கு...
🌹 காலம் பின்னோக்கி சென்று அன்று நடந்ததை வாசிக்கும் போது மனமே சிலிர்க்குதும்மா..
🌹 கொஞ்சமே என்றாலும் 👌👌👌 c6eb8a5c132a385c0a0437f37ce482f4.jpg
 
Last edited:

srinavee

Author
Author
SM Exclusive Author
#10
Nice epi 👌👍 authorji... கல்யாண மாப்பிள்ளை நீ கைப்புள்ள rangela தான் இருக்கே😂😛... தம்பி அர்சூன் அடிக்கடி உம்மொட கானாவுல யாருய்யா வராய்ஙக😉🤔... நவி யாரு பொண்ணா? பையனா?🤔🙃 என்னை கேட்காமல் என் பெயரை வைத்து விட்டீர்கள் அமைச்சரே! இதற்கு தக்க தண்டனை உடனடியாக இன்னொரு பதிவு தர வேண்டும்... இதுவே என் கட்டளை😜😂 குட்டி ud குடுத்து ஏமாத்திட்டே தெய்வா...🙄😉
 

Sponsored

Advertisements

Top