குடை

#1
"வெயிலும் உனை
வேண்டுகிறேன்
மழையிலும் உன்
துணை நாடுகிறேன்"


"இதமான காலநிலையில்
ஏனோ உன்னை
மறக்கிறேன்"


"மழை வேளையில்
உன் துணையோடு
மன்னனுடன் செல்கையில்
மயங்கினாள்
மன்னனின் மங்கையிவள்"


"சுட்டெரிக்கும் வெயிலிலே
சுகம் வேண்டித்தான்
உன்னை சொந்தமாக்கினேன்"


"நிழல் தேடும்
வேளையில் மட்டும்
உன் மீது
நேசம் கொள்கிறேனே"


"நிஜம் தெரிந்தும்
நீ என்னை
புறக்கணிக்கவில்லையே
புரிதல் கொண்டாயோ
பூலோக வாசிகள்
சந்தர்ப்பவாதிகள் என்று"


"உன் ஒருகுடையின்
கீழ் தான் உலகமே உள்ளதோ
இருந்தும்
நீ கர்வம் கொள்ளாமல்
இருப்பது
கவனிக்க வேண்டிய விஷயமே"


"எது எப்படியோ
வெயிலும்
மழையிலும்
உன்னை வேண்டி நிற்பேன்
எக்கணமும்"
 
Last edited:

Sponsored

Advertisements

Top