• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

கொல்லும்

  • Thread starter திருப்பம்
  • Start date

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

திருப்பம்

Guest
திசை எங்கும் இருள், ஜீப்பின் விளக்கு நீளும் தொலைவு வரையே அவன் பாதை. எங்கே செல்கிறோம் என்று தெரியாமல் நீண்டது பயணம். இந்நேரத்துக்கு நம் போட்டோ எல்லா ஸ்டேஷன்க்கும் போயிருக்கும், வழியில் இரண்டு செக் போஸ்ட்டை லாவகமாக கடந்து விட்டனர். குடிப்பதற்கு தண்ணி வாங்க குட காசு இல்லை ஆனால் வண்டிக்கு பெட்ரோல் கிடைத்து விடும். உலகமே மாறி போனது ஒரே இரவில். நிச்சயம் மாட்டி விடுவோம், எல்லாம் முடிந்தது, வண்டி எல்லையை தாண்டும் போது வாடகை காரின் ஓனருக்கு ஜிபிஎஸ் காட்டி கொடுத்து விடும் அதை பிடுங்கினாலும் அவன் கம்ப்ளைன்ட் கொடுத்து விடுவான். எல்லா வழியும் ப்ளாக், ரவியின் யுக நீள புலம்பல்களில் ஜெர்ரியின் காதுக்கு எட்டியவை இவை. பத்தை மாற்றும் ஏஜென்ட் இருப்பார்கள் சமாளித்து விடலாம் என்று சொன்ன பிறகே அமைதியானான். இப்போது தூங்கியும் போனான். ஜெர்ரிக்கு பொய் சொல்வதொன்றும் புதிதில்லை, ஆனால் இந்த பொய்யில் இருந்த வலி புதிது, ஏஜெண்டுகளின் வாசலில் நிற்கும் செல்வந்தர்களின் க்யு, பேங்க் வாசலை விட நீண்டது, போலீஸ் ஆன இவர்களை எப்படி அவன் நம்புவான். ரவியை போலவே தன்னாலும் அந்த பொய்யை நம்ப முடிந்தால் நன்றாக இருக்குமே என எண்ணினான். வாழ்கையில் முட்டாளுக்கு இருக்கும் நிம்மதி புத்திசாலிக்கு ஏனோ இருப்பதில்லை, தன் ஆதங்கத்தை ஆக்சிலேட்டரில் காட்ட வண்டி இருட்டில் விரைந்தது. அவனுக்கு இருப்பது ஒரே வழி தான், தன்னை தேடுபவர்கள் யாரும் பிடிக்க போவதில்லை , கொல்ல தான் போகிறார்கள் என்பது அவனுக்கு தெரியும், நுரை தவிர, அவள் காலில் சென்று விழலாம், பழைய காதலை கண்களில் காட்டி கெஞ்சலாம், அவளை ஜெர்ரிக்கு நன்று தெரியும். எப்படியும் இவனை என்கவுண்டரில் இருந்து காப்பாற்றி விடுவாள். ஆனால் சிறை செல்ல வேண்டும் கொசுக் கடியில் படுத்து, அச்சடித்த சோறுக்கு, புல்லை புடுங்க வேண்டும். அதற்காகவா இவ்வளவு கஷ்டமும், அவள் காலில் விழுந்து ஒரு வாழ்க்கையா அப்படி பட்ட வாழ்க்கை எதற்கு.. யார்ருக்காக.. நிச்சயம் தனக்கு அப்படி ஒரு வாழ்வு தேவை இல்லை, சட்டென முன்னால் சென்ற காரை ஓவர் டேக் அடிக்க முயன்றவன் முன்னே, மணல் லாரி எமனாய் வந்தது. பக்கத்தில் திருப்பினால் பிழைக்க முடியும், திருப்ப முயன்றான், கைகள் ஏனோ தாமதித்தன, ஆனால் எமன் தாமதிக்க வில்லை. டமார் என சத்தம், உடலெங்கும் உடையும் அவன் காரின் வலி ஊடுருவ, அடுத்த நொடி இருள் ஆனது, நிசப்தம் இருளை அலங்கரித்து. கண் விளித்து பார்த்தான். எல்லாம் தலை கீழாய் மாறி இருந்தது. இல்லை இவன் தலை கீழாய் தொங்கி கொண்டிருந்தான். கவ்விய சீட் பெல்ட் அவனை கை விட வில்லை , அதன் பிடியில் நகர முடியவில்லை, கஷ்டப் பட்டு தலையை திருப்பி பார்த்தான், ரவி இருந்த வண்டியின் பகுதியை லாரி கரம்பி விட்டு சென்றிருந்தது. தூக்கத்திலேயே போய் விட்டான், நல்ல சாவு. இவன் உயிர் இன்னும் ஒட்டியே இருந்தது, சில சிறுவர்கள் இவனை வட்டமிட்டனர். தங்களுக்குள் பேசிக் கொண்டு இவனை காப்பாற்ற முன்வர, பின்னாடியிருந்து ஒரு சத்தம், இங்க நெறைய பணம் இருக்குடா இந்தியில் கூவினான் ஒருவன், அடுத்த நொடி காப்பாற்ற முனைந்த சிறுவர் கூட்டம் பணத்தை மொய்க்க தொடங்கினர், ஒருவன் மட்டும் சில நொடி இவனை ஆழமாக பார்த்து விட்டு பின் கடைசி ஆளாய் பண மூட்டை பக்கம் சென்றான். அவர்கள் கிளறியதில் ஒரு பண கட்டு விலகி இவன் கண் முன் விழுந்தது. அதனை ஆழமாக பார்த்தான். ஏன் நாம் இதன் பின்னே ஓடினோம்.. எதற்காக இத்தனையும் செய்தோம் என அவனுக்கு தோன்றியது. இந்த பணம், இதே பணம் தான், நம் குடும்பத்துடன் ஒட்டி உரசி விட்டு, தேடிய தருணத்தில் கை விட்டு ஓடிப் போனது. இதே பணம் தான், தாயை தந்தைக்கு துரோகம் செய்ய வைத்தது, தகப்பனை தூக்கு கயிற்றில் ஊசலாட வைத்தது, நாம் விரும்பியவர்களையே நம்மை வெறுக்க வைத்தது, பணத்தை வெறுக்க வேண்டிய தன்னையே, விரும்ப வைத்தது. தான் செய்த இத்தனையும் இதற்காக தான். இப்போது தன் முன்னே கேட்பாரற்று கிடக்கிறது, தான் எட்டும் தொலைவில் , எட்டா நிலையில், இன்னும் வசீகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. பழசாயினும், அழுக்காயினும் செல்ல காசாயினும் கவர்ச்சி ஏனோ குறைவதில்லை இதற்கு.

ஒரே இரவில் பணம் பொய்த்து போனதை போல, இதற்காக தான் செய்த அனைத்தும் , கனவாய் மறைந்து போனால் எப்படி இருக்கும் என நினைத்து பார்த்தான். ஒரு சராசரி மனிதனாய், நல்ல கணவனாய், நேர்மையான போலீசாய், வாங்கிய சம்பலத்துக்குள் வட்டம் போட்டு உக்கார்ந்து கொண்டு பொழப்பை ஒட்டுபவனாய்.. அவனுக்கு சிரிப்பு தான் பீறிட்டு வந்தது, அதை கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை, இருந்தும் மனதின் ஒரு மூலை, அதுவும் நன்றாக இருக்குமோ என முனகியது.. ச்சே ச்சே.. அதெல்லாம் ஒரு வாழ்க்கையா.. அது ஒரு பொழப்பு.. பொழைக்க கூடாது.. வாழ்க்கைனா வாழனும், இன்னும் எடுக்க போற மொத்த ஜென்மத்துக்கும் சேர்த்து வாழனும். அதுக்கு தேவை பணம்னா அதுக்காக என்ன செஞ்சாலும் தப்பில்ல.. துவண்ட தன் மனதிற்கு தான் செய்தது தவறில்லை என ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். சட்டென தன்னை யாரோ பார்ப்பது போன்ற உணர்வு,அங்கே இவனையும் பணத்தையும் தவிர ஆளில்லை உற்று பார்த்தான், ரூபாய் நோட்டில் காந்தி தாத்தா இவனை பார்த்து ஏளனமாக சிரிப்பது போல இருந்தது. ஒரு வேளை நம் புலம்பல் கேட்டிருக்குமோ.. கேட்டால் என்ன.. இது ஒன்றும் பணமில்லையே நேற்று இரவிலிருந்து வெறும் காகிதம் தானே.. காந்தி படம் ஒட்டிய காகிதம், புத்தகத்தின் அட்டையை போல.. எடைக்கு போட்டால் கூட பிய்த்து எரிந்து விடுவான். அவனுக்கு சிரிப்பு வந்தது, சிரிக்க முயன்றான். அவன் இதழ்கள் அரை சிரிப்பை அடையும் முன் உயிர் உடலை விட்டிருந்தது. அவன் மூக்கில் புறப்பட்ட ரத்தம், நெற்றியை கடக்கையில் துளியாய் மாறி , காற்றில் மிதந்து, பணக் கட்டின் மேல் விழ, அதை அப்படியே உட்க்ரகித்துக் கொண்டு அடுத்த துளி ரத்தத்திற்காக, அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தது... பணம்.


மூன்று மாதங்களுக்கு பிறகு....


காயத்ரி மடியில் கிடக்கும் டாமியை தடவிக் கொடுத்த வாறே.. மொபைளின் சின்ன திரையில், தான் அர்ஜுனா விருது வாங்கும் வீடியோவை, ரசித்து பார்த்துக் கொண்டிருந்தாள், ச்சே.. மூக்கை இப்படி எடுத்து வச்ருக்கானே.. கேமரா மேன்.. வேஸ்ட் .. அவள் புலம்பல் காதில் விழுந்தாலும், விழாதது போல மாரியும் நிஷாவும் மொபைலில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

காயத்ரி, தான் பேசும் தருணம் வந்ததும் , உற்சாகமானாள். அவள் குரலை நூறாவது முறையாக கேட்டாலும் ஏனோ ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஒரு உற்சாகம்.. சரியாக அவள் பேச போகும் தருணத்தில், ஒரு கால் வந்து தொலைந்தது.. மனதுக்குள் உறுமி விட்டு அட்டேன்ட் செய்தாள்.

" மேடம்.. நீங்களா.. சொல்லுங்கோ.. நான் வேற யாரோன்னு நினச்சுட்டேன்.."


"எல்லாரும் நல்லா இருக்கிங்களா.."

" எங்களுக்கென்ன மேடம்.. நன்னா இருக்கோம்.. நீங்க தான் வர்றதே இல்லை.."

" வர்றதுக்கான நேரம் வந்தாச்சு.. அடுத்த மிஷனுக்கு ரெடியா.." அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலே கால் கட் ஆனது..


" ச்சே.. என்ன டப்பா நெட்வொர்க் இது.. கால் கட் ஆயிட்டே இருக்கு.. திருப்பி ட்ரை பண்ணா போகவும் மாட்டேங்குது.."

" மாமி ஓசில டேட்டா கொடுகுறாங்கனு.. வாங்கிட்டு.. புலம்பல் வேறயா.." மேரி கேமிலிருந்து தன் விழியை விலக்காமல் சொன்னாள்.

" அதுக்கில்லடி.. நூர் பேசுனாங்க.."

" என்ன சொன்னாங்க.." என்றாள் நிஷா..

" மிஷின் ரெடியா னு கேட்டாங்க.. எங்க வீட்ல வாஷிங் மிஷின் ரிப்பேர் ஆனது அவங்களுக்கு எப்படி தெரியும்.."

" மாமி அவங்கல்லாம் சி பி ஐ நீங்க பேசறதிலேயே கண்டு புடிச்ருவாங்க.. "

ஓஒஓஒஓ....... என மேரியும் காயத்ரியும் ரீங்காரமிட.. நிஷா மேலும் தொடர்ந்தாள்,

" இப்படி தான் ஒரு இங்கிலீஷ் படத்துல..." அவள் அவிழ்த்து விடும் கதையின் சொற்கள், காற்றில் மிதந்து கேட்டில் தூங்கிக் கொண்டிருந்த வாட்ச் மேன் காதை குடைய.. அவன் துண்டினால் காதை பொத்திக் கொண்டு மீண்டும் தன் கனவுக்குள் நுழைந்தான்.


சுபம்....




P.S: Hi all , what a relief..! completed the story.. i thank you all so much.. people who have voted and commented and supported me all along this story.. i owe you so much. I am very lazy.. you dragged me by your support to get me this far. thank you so much this story is dedicated for you guys..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Last edited:

Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,488
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
ஏன் கெஸ்ட் என்று வருகிறது. நல்ல நகைச்சுவையுடன் வந்த துப்பறியும் கதை. நிறைவு செய்தமைக்காக வாழ்த்துகள் ஜாலன்.
 




Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
ஏன் கெஸ்ட் என்று வருகிறது. நல்ல நகைச்சுவையுடன் வந்த துப்பறியும் கதை. நிறைவு செய்தமைக்காக வாழ்த்துகள் ஜாலன்.
மிக்க நன்றி . Login pana maranthuten athan guestnu varuthu pola.. ??.. porumaiyaa read panathuku romba romba nanri.. ??
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Super Ending... வாழ்த்துகள் ஜாலன்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top