• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே-17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"கொடைக்கானல் சென்று வந்து ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில் இருவரும் அவர்களின் வாழ்க்கையை தொடர்ந்தனர்."

"செல்ல சண்டைகளோடும் சிறு சிறு கோபங்களோடும்"

"வார இறுதியில் லெட்சுமி கல்லூரிக்கும்,இருவரும் சேர்ந்து வேணியையும்,உதயாவையும் பார்த்து வருவது வழக்கமாகியது"

"இவள் கவிதை எழுதுவதும் தொடர்ந்து கொண்டே இருந்தது."

"இதற்கு இடையில் ஒரு நாள் எல்லோரையும் ஒரு விழா என்று மட்டும் சொல்லி அழைத்து கொண்டு சென்றான் உதயா"

"அங்கே சென்ற போது இவள் எழுதிய கவிதைகளின் தொகுப்பு அடங்கிய புத்தகத்தின் வெளீயிட்டு விழா"

"பேச வாய் வரவில்லை நன்றாக ப்ற்ச தெரிந்தவளுக்கே ஏதோ சும்மா சொல்கிறான் என் லெட்சுமி சொல்லி கொண்டிருக்க அவன் உண்மையாகவே நிறைவேற்றி விட்டான்."

"தன் மனைவியிடம் சொன்னதை"

"அங்கே "உதயலெட்சுமியின் கவிதைகள்" எனும் பெயரில் இவள் கவிதைகள்"

"நூல் வெளீயிட்டை அங்கு ஒரு பிரபல எழுத்தாளரை வைத்து உதயா செய்திருந்தான்"

"இவள் கண்களில் காரணம் இல்லாமல் கண்ணீர் தன் கணவனின் செய்கையில்"

"நூல் வெளீயிட்டு விழா முடிந்து அனைவரும் இரவு உணவை முடித்துகொண்டு வீடு திரும்பினர்"

"எல்லோருக்கும் மனம் நிறைந்திருந்தது"

"பெற்ற தாயாய் பத்ராவிற்கும்,பெறாத பெற்றோர்களாய் வேணிக்கும்,மகேஸ்வரனுக்கும் லெட்சுமியை நினைத்தும் உதயாவை நினைத்தும் பெருமை"

"இருவரையும் இங்கேயே தங்கி செல்ல பெரியவர்கள் சொல்ல"

"உதயா மறுத்துவிட்டான் திருமங்கலத்திற்க்கே செல்கிறோம் என்று"

"யார் சொல்லியும் கேட்காமல் வண்டியில் கிளம்பி விட்டான் தன் கருவா டார்லிங்கோடு"

"காரில் அவன் அருகில் நெருங்கி அமர்ந்தவள்"

"ஐ லவ் யூ சோ மச் மாமா" என கூற

"சந்தோசமா இருக்கியாடி கருவா டார்லிங்"என உதயா கேட்க

"என் மாமா இருக்கும் போது என் சந்தோசத்துக்கு என்ன குறைச்சல்"

"அப்படியா அப்போ என் பொண்டாட்டி ஹாப்பினா நானும் ஹாப்பி,அப்படியே இன்னைக்கு நைட் என்ன கொஞ்சம் ஸ்பெஷலா கவனிச்சா டபுள் சந்தோசமா இருக்கும்"

"காக்கிசட்டை கோரிக்கை கொஞ்சம் தீவிரமா இருக்கே,யோசிச்சு தான் மாமா சொல்லனும்"

"மாமா மேல கருணை காட்டுடி பாவம்டி மாமா"

"காக்கிசட்டை கருணையெல்லாம் கேட்ட நான் என்ன பண்ண"

"ஹம் மாமாவ நல்லா கவனி அதே போதும்"

இருவரும் ஏதேதோ பேசியபடியே வீடு வந்து சேர்ந்தனர்.

"இருவரும் ஃப்ரஷாகி கட்டிலில் வந்து அமர"

"மாமா உங்ககிட்ட ஒன்னு சொல்லனும் மாமா"

"என்னடி பர்மிசனெல்லாம் கேட்குற" என அவளை அருகே இழுத்து தன் மடியில் இருத்தியபடி கேட்க

"மாமா நான் உங்களுக்கு ஒரு கிப்ட் தர போறேன்"

"நீங்க எனக்காக என்னவெல்லாம் செஞ்சிருக்கீங்க அதுக்காக என்னோட சின்ன கிப்ட் "

"என்னடி சீக்கிரம் சொல்லு ,அதுக்கப்பறம் நிறைய வேலை இருக்குடி "என கண்ணடித்து கூற

"மாமா நாம அம்மா,அப்பா ஆக போறோம் மாமா"

"என்னடி சொல்லுற நிஜமாவா"

"ஹம் ஆமா மாமா"

"செக்கப் பண்ணியா"

"ஹம் ஆமா.நானும் அத்தையும் இன்னைக்கு நீங்க அங்க வர்றதுக்கு முன்னாடி ஹாஸ்பிடல் போய் செக்கப் பண்ணோம்"

"நான் தான் உங்ககிட்ட சொல்லுவேன்னு அத்தையை சொல்லகூடாதுன்னு சொன்னேன்"

"ஐயோ ஐ லவ் யூ டி கருவா டார்லிங்" என கூறி அவளை தூக்கி சுற்றினான்.

"மாமா இறக்கிவிடுங்க பிளிஸ்"

"நான் எவ்ளோ சந்தோசமா இருக்கேன் தெரியுமாடி"

"அவன் கழுத்தை கட்டி கொண்டு"

"நானும் தான் மாமா"என்றாள்

"உங்களால தான் எல்லாமே இன்னைக்கு இந்த புக் வெளியிட்டது,இப்ப நான் சந்தோசமா இரிக்கிறாது எல்லாத்துக்கும் நீங்க மட்டும் தான் மாமா காரணம்"

"அழுது கொண்டே அவன் நெஞ்ச்சில் சாய"

"உன்னை நான் அழ கூடாதுனு சொல்லிருக்கேன்ல"

"என் பொண்டாட்டி நீ உனக்காக நான் என்னவேணாலும் பண்ணனும்டி அது தான் நான் உன்ன நல்லா பார்த்துக்கிறதுக்கு அடையாளம்"

"நீ தாண்டி என் முதல் குழந்தை என் பிள்ளை விளையாட்டுக்கு கூட அழ கூடாதுடி" என நெற்றி முட்டி சொல்ல

"மாமா நான் உங்களுக்கு என்ன மாமா பண்ணேன் ,ஏன் என் மேல இவ்ளோ பாசமா இருக்கீங்க"

"நான் உங்க மேல இவ்ளோ பாசம் வைச்சிருக்கேனானு சத்தியமா எனக்கு தெரியலை மாமா"

"போடி லூசு"

"இங்க பாசத்தை தராசு வைச்சு அளந்து யாரோடது பெரிசுனு காட்ட முடியாதுசரியா,அது மட்டும் இல்ல நம்ம வைக்கிற பாசம் எதிர் திசைல இருந்து அப்படியே வரனும்னு அவசியம் இல்லடி,
எனக்கு உன்ன பார்த்தப்ப வந்த பாசம் என் கடைசி காலம் வரைக்கும் மாறாது,நான் இப்படி தான் இருப்பேன்.சரியா"


"பாசம் எதுனால வருதுனு இங்க யாரலையும் கண்டுபிடிக்க முடியாது ,அதுக்கு காரணமும் தேவை கிடையாது,புரியுதா" எனக் கூறி அவள் கண்ணத்தில் அழுத்தமாக இதழ் பதிக்க

ஒரு அழகான புன்னகை அவளிடத்தில்

"கட்டிலில் படுக்க வைத்தவன் அவள் சேலையை விலக்கி அவள் வயிற்றில் முத்தமிட்டு"

"என் செல்லகுட்டி அம்மாவ பத்திரமா நீங்க தான் பார்த்துக்கனும் சரியா "என கூற

"இவளோ இங்கு சிரித்து கொண்டிருந்தாள்"

"மாமா நமக்கு குழந்தையா எங்க அப்பா வந்து பிறப்பாங்களா மாமா" என கேட்க

"அவள் இதழில் அழுத்தமாய் முத்திரை பதித்தவன்"

"கண்டிப்பா என் கன்னுக்குட்டி ஆசைப்பட்டது எதுவும் நடக்காமா போயிடுமா"

"உண்மையாவா மாமா"

"கண்டிப்பாடா நீ இப்போ தூங்கு,நாளாக்கு காலைல நாம டாக்டரிடம் போகலாம்"

அவளும் சரியென தலையாட்டிவிட்டு

அவன் மார்பிலேயே தலை வைத்து தூங்கிவிட்டாள்.

"தூங்கும் தன் மனைவியையே ரசித்து கொண்டிருந்தவன் தன் குழந்தையை சுமக்கும் அவள் வயிற்றை வருடி விட்டு அவனும் அவளை அணைத்த வண்ணம் தூங்கினான் நெஞ்சம் நிறைந்த நிம்மதியோடு"


"லெட்சுமிக்கு மசக்கை போட்டு வாட்டி எடுக்க அவள் துவண்டு போனாள்."

"வீட்டில் சமையலுக்கு ஆள் இருப்பதால் சாப்பாட்டிற்க்கு பிரச்சனை இருக்கவில்லை."

"ஆனால் இவளுக்கு எதுவுமே சாப்பிட முடியவில்லை."

"உதயா இந்த நேரத்தில் டாக்டர் டிராவல் செய்யக்கூடாது என்று சொன்னதால் அவர்களின் வீட்டிற்கும் கூட்டி செல்லவில்லை."

"ஆனால் அவளிற்கு தேவையானது அனைத்தையும் உடன் இருந்து கவனித்து கொண்டான்."

"அவள் விரும்பி உண்பவற்றை எல்லாம் அவள் சாப்பிட முடியாமல் தவிக்கும் போது வாங்கி தந்து சாப்பிட வைத்துவிடுவான்."

"அவன் ஸ்டேசனில் முக்கியமான வேலையில் இருந்தாலும் இவளுக்கு நேரத்துக்கு ஜூஸ் எல்லாம் கடையில் இருந்து போகும் படியே பார்த்து கொள்வான்."

"உடல் சோர்ந்திருக்கும் போது உடன் இருந்து தாயாய்,தந்தையாய் தாங்கும் கணவன் கிடைப்பது அனைத்து பெண்களின் கனவு."

"அந்த வகையில் தன் கணவனை எண்ணி லெட்சுமிக்கு பெருமையே."

"லெட்சுமியின் அம்மா அவள் தங்கள் வீட்டில் வந்து இருக்கட்டும் என கேட்டும் உதயா"

"என் பொண்டாட்டியை நான் பார்த்துப்பேன் " எனக் கூறி மறுத்துவிட்டான்

"வேணியும்,மகேஸ்வரனும் வாரவாரம் இங்கு வந்து இவர்களை பார்த்து கொண்டனர்."

"அன்று உதயா வீட்டிற்குள் நுழையும் போதே வீட்டில் சிரிப்பும் பேச்சு சத்தமும் நன்றாகவே கேட்டது."

"இதை கேட்டவனுக்கு தான் கடுப்பாகியது."

"பின்னே வேணியும்,மகேஸ்வரனும் வந்தால் தான் வீட்டில் இப்படி சத்தம் கேட்கும்,அதுமட்டுமல்ல அவர்கள் வந்துவிட்டால் லெட்சுமியும் அவர்களின் பின்னோடே அலைவாள்"

"இவன் ஒருவன் அங்கு இருப்பதே கண்டு கொள்ளாமல் இவர்கள் மூவரும் பாசப்பயிர் வளர்ப்பர்."

"உதயாவுக்கு பெற்றோர்கள் ஆன போதிலும் தன்னவளின் மேல் அவர்கள் வைத்திருக்கும் அதீத அன்பு கொஞ்சம் கோபத்தையே வரவழைக்கும்,"

"இது எல்லையற்ற அன்பினால் விழைவது."

"நாம் உயிரையே வைத்திருக்கும் ஒருவர் மேல் வேறொருவர் பாசம் காட்டக்கூடாது என நினைப்பது."

"இதில் உதயாவும் அடக்கம்."

"அவன் உள்ளே வரும் போது கண்ட காட்சி வேணி லெட்சுமிக்கு சாப்பாடு ஊட்டி கொண்டிருந்தார்."

"மகேஸ்வரன் அவர்களின் அருகில் அமர்ந்து கதை பேசிக்கொண்டிருந்தார்."

"இவன் உள்ளே வந்து சோபாவில் அமர்ந்தவன் ,"

"வாங்க அம்மா,வாங்க அப்பா" என கேட்க வேணியோ

"என்னடா இது தான் நீ வீட்டுக்கு வர நேரமா,புள்ள மாசமா இருக்கிற நேரத்துல இப்படித்தான் நேரங் கெட்ட நேரத்துல வீட்டுக்கு வருவீயா"

"அப்பொழுதுதான் மணியை பார்த்தான் "

"மணி இரவு பதினொன்று"

"ஒரு முக்கியமான கேஸ்மா லேட்டாகிடுச்சு."

"ஹம் நீ இப்படி சொல்லு அவ நீ வர்ற வரைக்கும் சாப்பிட மாட்டேன் அப்படினு உட்கார்ந்திருக்கா"

"ஒரு பிள்ளைக்கு அப்பா ஆக போற,இன்னும் கொஞ்சமாச்சும் குடும்ப நினைப்பு இருக்காடா உனக்கு," என அவர் வசை பாட துவங்க

"இவன் முறைத்து கொண்டு இருந்தான்"

"இறுதியாக நாங்க லெட்சுமியை அங்க நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு போக போறோம்,நீ அங்க வந்து பார்த்துக்க"

"இன்னைக்கு அவள நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனப்ப அவளுக்கு ரத்தமே இல்ல ,சத்தும் கம்மியா இருக்குனு சொல்றாங்க,அதுனால நாங்க நாளைக்கு லெட்சுமியை கூட்டிட்டு போறோம் ." என கூற

"இப்பொழுது உக்கிரமாக உதயா லெட்சுமியை முறைத்து கொண்டிருந்தான்"
 




Last edited:

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
"இவனும் எத்தனை தடவை தான் அவளிடம் சொல்லுவான் நன்றாக சாப்பிட சொல்லி ,அவளை தினமும் சாப்பிட வைக்க இவன் படும் பாடு இவனுக்கு மட்டும் தானே தெரியும்,ஆனால் இன்று அவன் அம்மா இப்படி கூறவும் எழுந்து அறைக்குள் சென்றுவிட்டான் கோபமாக"

"இவள் பரிதாமாக வேணியை பார்க்க அவரோ'"

"நீ நாளைக்கு கண்டிப்பா எங்க கூட வர்ற " எனக் கூற

"பிளிஸ் அத்தம்மா நான் இனிமே நல்லா சாப்பிறேன்,நான் இங்கேயே இருக்கேன் பிளீஸ் அத்தம்மா எனக் கெஞ்ச"

"மகேஸ்வரன் தான் "அது தான் புள்ள இவ்ளோ தூரம் கெஞ்சிக்கிட்டு இருக்கில்ல விடு வேணி"

"மாசமா இருக்கிற பொண்ணு அவ ஆசை படுற மாதிரி உதயா கூடவே இருக்கட்டும் " என கூற

"வேணியும் அவளின் சந்தோஷம் தான் முக்கியம் என விட்டு விட்டார்."

"போ நீ போய் அவனையும் சாப்பிட சொல்லு ,சாப்பிட்டு இரண்டு பேரும் சீக்கிரம் தூங்குங்க" என வேணி கூற சரியென தலையாட்டிவிட்டு சென்றாள்.

"இவர்கள் இருவருக்கும் தனிமை கொடுக்க விரும்பி வேணியும்,மகேஸ்வரனும் உறங்க சென்று விட்டனர்."

"இவள் ரூமிற்க்குள் செல்லும் போது உதயா கட்டிலில் படுத்து கண்ணை மூடி இருந்தான்."

"இவள் அருகில் சென்று "

"மாமா" என்று அழைக்க பதிலில்லை உதயாவிடம்

"மாமா சாப்பிட்டு படுங்க"

..................................................

"இப்போ நீங்க சாப்பிட வரலைனா நான் இப்போ தான் அத்தம்மாகிட்ட அவங்க கூட வரலைனு சொன்னேன் அத போய் வாபஸ் வாங்கிட்டு வந்துருவேன் காக்கிசட்டைக்கு எப்படி வசதி"

"அவள் கூறியதில் கண்விழித்தவன்"

"ஏய் நிஜமா வரலைனு சொல்லிட்டியாடி கேடி"

"ஹம் ஆமா மாமா ,என் மாமாக்கு கஷ்டம் கொடுக்கிற விஷயத்தை செய்வேனா மாமா"

"ஐ லவ் யூடி என் செல்லக்குட்டி " என கூறி கன்னத்தில் முத்தமிட்டவனின் கழுத்தை கட்டிக்கொண்டவள்

"மாமா இந்த மாதிரி பாசமான குடும்பம் உங்களால தான் மாமா கிடைச்சது "ஐ லவ் யூ சோ மச் " மாமா"

"சரி வாங்க சாப்பிட போகலாம்"

"ஹம் சாப்பிடுறேன் இங்கயே"

"சரி இருங்க நான் போய் சாப்பாடு எடுத்துட்டு வரேன்"

"அதெல்லாம் வேணாம் நானே எடுத்துக்கிறேன்"

"காக்கிசட்டை ஏதோ கலவரம் பண்ணப் போற மாதிரி இருக்கே "

"கலவரம் இல்லைடி கேடி காதல் பண்ண போறேன்" என கூறி அவளை கைகளில் அள்ளி கொண்டு பால்கனி ஊஞ்சலில் அமர்ந்து அவளையும் தன் மடியில் இருத்திக்கொண்டான்"

"மெதுவாக அவள் வயிற்றில் கை வைத்துக்கொண்டு தன் இரு பிள்ளைகளிடமும் பேச தொடங்கினான்."

"சிறிது நேரத்தில் எல்லாம் தன் முதல் குழந்தை தன் மார்பிலே உறங்கிவிட அவளை மெல்ல தூக்கி வந்து படுக்கையில் படுக்க வைத்துவிட்டு சாப்பிட சென்றான்."


"இப்படியே அழகாக இவர்கள் வாழ்க்கை செல்ல நிவிக்கு குழந்தை பிறக்க "நிகில்" என்று பெயர் சூட்டினர்"

"இப்பொழுது கீர்த்தியும் கர்ப்பமாக இருக்கிறாள் பிரசவத்திற்க்கு அர்ஜூனும்-கீர்த்தியும் இந்தியா வந்து விடுவதாக இருந்தது"

"இதற்கிடையில் லெட்சுமியின் வளைகாப்பும் வந்தது"

"திருமணப்பட்டில் அழகாய் தன் குழந்தையை சுமக்கும் மகிழ்ச்சில் பூரித்திருக்கும் தன்னவளின் அழகில் மெல்ல தன் வசம் இழந்து கொண்டிருந்தான் உதயா"

"வளைகாப்பில் அனைவரும் உதயாவை வளையல் போட அழைக்க புன்னகையோடு வந்து தன்னவளின் கரம் பற்றியவன் அவள் கைகளுக்கு நோகுமோ என அஞ்சி வளையல் அணிவித்தான்."

"மெல்ல தன் சட்டை பாக்கெட்டில் இருந்து எதையோ வெளியே எடுத்தவனை எல்லோரும் என்ன அது என்று ஆர்வமாக பார்க்க அது ஒரு அழகிய கைசெயின் "

"அழகிய வேலைபாடுகளோடு பார்க்கவே அவ்வளவு அழகாக இருந்தது இரு இதயங்கள் இணையும் இடத்தில் சிறிய இதயம் நடுவில் இருப்பது போன்ற அமைப்பில் இருந்தது"

"எல்லோரும் அதை கண்டு "

"ஏன் உதயா உன் பொண்டாட்டிக்கு தங்கத்துல வளையல் போடாமா இப்படி கைசெயின் போடுற"என கேட்க

"ஹம் வளையல் போட்டா அதை பிரசவத்தப்ப கழட்டனும் ,ஆனா இதை கழட்ட தேவையில்லை எப்பவும் என் பொண்டாட்டி கையிலே இருக்கும்ல அதுக்கு தான்"என கூற

"கேட்டவர்கள் ஆ வென வாயைபிளக்க"

"லெட்சுமியோ தன்னவனின் அன்பில் பாகாய் உருகி இருந்தாள்."

"வேணி,மகேஸ்வரன் ,பத்ரா மூவருக்கும் நிறைவாக இருந்தது தங்கள் பிள்ளைகளை கண்டு"

"வளைகாப்பு முடிந்து லெட்சுமியை பத்ரா தன் வீட்டிற்கு அழைத்து செல்ல மறுநாளே வந்து தங்களோடு அழைத்து கொள்வதாக கூறிவிட்டனர் வேணி-மகேஸ்வரன் தம்பதியினர்."

"இப்பொழுது தங்களுடன் தான் லெட்சுமி இருக்க வேண்டும் என உதயாவின் பெற்றோர் கூறி விட்டதனால் உதயாவும் லெட்சுமியின் உடல் நிலை கருதி சரி என்று விட்டான்"

"அதனால் இங்கு மாமியாரின் வீட்டில் லெட்சுமி அவளின் கவிதை எழுதும் பணியை சிறப்பாக தொடர்ந்து கொண்டிருந்தாள்"

"இப்பொழுது அவளின் கவிதைகளுக்கும் நல்ல வரவேறௌ இருந்ததால் அவளும் உற்சாகத்தோடே கவிதை எழுதுவதை தொடர்ந்தாள்"
"உதயாவும் தன்னவளை காண வாரவாரம் கண்டிப்பாக வந்துவிடுவான்."


"மற்ற நாட்களில் வீடியோகாலில் கடலை போட்டனர்"

" ஒரு நாள் காலை லெட்சுமி இடுப்பு வலி வந்து விட அது வார இறுதி என்பதால் உதயாவும் அப்பொழுது தான் தன் வீட்டிற்கு வந்திருந்தான்"

"அவள் அதிக வலியோடு யாரையாவது அழைக்கலாம் என வாய் திறக்கும் வேளையில்
தன் இரு குழந்தையையும் தன் கைகளில் ஏந்தியிருந்தான் உதயா"


"அம்மா இங்க வாங்க" என தன் தாயை அழைத்தவன்

"அப்பா கார் சாவி எடுங்க" என தன் தந்தையையும் அழைத்து கொண்டிருந்தவன்.

"வலியில் கண்களில் நீர் பெருக தன்னை பார்த்து கொண்டிருப்பவளை கண்டு தன் கண்களாலே ஆறுதல் சொன்னவன்

"அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் தன் குடும்பத்தோடு காரில் ஏறியிருந்தான்"

"மருத்துவமனையில் எல்லோரையும் கொஞ்சம் பயமுறுத்திவிட்டு உதயா-லெட்சுமியிம் மகன்
இந்த பூமியை வந்தடைந்தான்"


"தன் குழந்தையை கைகளில் ஏந்திய நொடி பல ரவுடிகளை சாதாரணாமாக சூட்டுதள்ளியவனின் கைகள் நடுங்கியது."

"யானை பலம் கொண்டவனும்
யாரிடமும் அடிபணியாதவனும்
அடங்கிடுவான் ஓரிடத்தில்
அது தன் ரத்ததில் வந்த உயிரிடத்தில்"


"இன்று அந்த நிலையில் உதயா தன் குழந்தையை கையில் ஏந்தி தன்னவளை தேடிப்போனவன் அவள் மயக்கத்தில் இருப்பதை கண்டு மெதுவாக அவள் நெற்றியில் முத்தமிட்டான்."

"மண்டியிடுகிறேனடி உன் மன்னவன் நானே
உன் முன்னே
மரண வலி கொண்டு ,மறு பிறவி எடுத்து
என் மறுபதிப்பை தந்தவளே
உன் காதலால் இந்த காவலனையும் களவாடியவளே
காத்து நிற்பேனடி
என் காதலால்
காலனும் உன் அருகில் வரமால் காலம் முழுதும்"


உதயாவுக்கும் கவிதை வந்தது தன்னவளின் உயிர் துடித்ததை கண்டு

"சித்திரம் சிந்தும்"
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தாழைக் கனி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top