• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சித்திரையில் பிறந்த சித்திரமே - 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
சித்திரையில் பிறந்த சித்திரமே 6

நிவேதாவின் நிச்சயதார்த்த நாளும் அழகாய் விடிந்தது

காலையில் வீட்டையே இரண்டாக்கி கொண்டிருந்தால் லெட்சுமி

“ காலைலே உன் வேலைய ஆரம்பிச்சுட்டியா எருமை இப்படி வீட்டெல்லாம் பரப்பி போட்டு இருக்கியே அறிவு இருக்கா உனக்கு என கமல் “கத்திக் கொண்டிருக்க

“ சோ சிம்பிள் தம்பி உனக்கு அறிவு இருந்தான டா எனக்கு அறிவு இருக்கும் “ என லெட்சுமி கூற
அம்மா என கத்திக் கொண்டு அம்மாவிடம் சென்ற கமல்


“ அம்மா இந்த பிள்ளையை சீக்கிரமா கட்டி கொடுத்துருங்க மா பிளிஸ் என்னால முடியல “
அதுவும் மதுரைல வேணாம் சென்னைல கொடுத்துருங்க அப்ப தான் எப்பபார்த்தாலும் வீட்டுக்கு வராம இருக்கும் “


“ அப்படி எல்லாம் உன்ன பார்க்காம என்னால இருக்க முடியாது தம்பி
அதுனால எனக்கு பிளைட்ல டிக்கெட் போட்டுறு 45 நிமிஷம் தான் நான்


"ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே.. அப்பிடினு பாடிக்கிட்டே உன்ன வந்து பார்த்துட்டு போய்டுவேன் என்ன நீ தான் கொஞ்சம் பணம் செலவு பண்ணனும் சாய்ஸ் இஸ் யுவர்ஸ் என்ன உடன்பிறப்பே “ என லெட்சுமி கேட்க


“ உங்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானன்னு “ கமல் போய் விட்டான்.

ஒரு வழியாக கிளம்பி நிவேதாவின் நிச்சயதார்த்ததிற்க்கு சென்றனர்.

லெட்சுமி கேராளா சேலை கட்டி இருந்தால் அவளுடைய நிறத்திற்க்கு அது இன்னும் அழகாய் இருந்தது.மேலும் தலையையும் அதற்கு தகுந்தார் போல் பிண்ணி மல்லிகை பூ சூடி இருந்தால்.அவ்வளவு அழகாய் இருந்தால்.
பத்ராவிற்க்கு தான் கண் கலங்கி விட்டது “ .பதினெட்டு வயதில் தன் பெண் பருவ பெண்ணுக்குரிய அழகில் இருப்பதை காண தன் கணவருக்கு கொடுத்துவைக்கவில்லையே “ என


“ எல்லோரும் கிளம்பிட ரெஸ்ட் ரூம் சென்ற லெட்சுமி தன் தந்தையை எண்ணி மௌனமாய் கண்ணீர் வடித்து விட்டு இயல்பாய் இருப்பது போல் திரும்பி வந்தால் “

“ எல்லாரும் நிவேதாவின் நிச்சயதார்த்தத்தில் கூடி இருக்க எல்லாருக்கும்
நிவேதா,கீர்த்தி,லெட்சுமியை விட்டு கண்களை எடுக்க முடியவில்லை.
மூவரும் சின்ன பெண்களாய் எல்லாரையும் வம்பு செய்து கொண்டிருந்தவர்கள் இன்று வளர்ந்த பெண்களாய் தங்கள் முன் நிற்பது கண்டு எல்லோருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி ”


“ நிரஞ்சனின் வீட்டில் இருந்து எல்லோரும் மண்டபத்திற்க்கு வந்து விட்டார்கள் “
நிரஞ்சனின் உடன் பிறந்த தம்பியான அர்ஜுன் இன்று தான் அமெரிக்காவிலிருந்து வந்து இருக்கிறான் அவன் அண்ணனின் திருமணத்திற்க்காக “


“ அமெரிக்காவில் உள்ள புகழ் பெற்ற நிருவனத்தில் மென்பொருள் நிருவனத்தில் சீப் இன்சினியராக பணிபுரிகிரான் “
அவனுக்கும் சேர்த்து பெண் பார்த்து விட வேண்டும் என்பது அவர்களின் அம்மாவின் விருப்பம்.
இப்படியாக எல்லாரும் மண்டபம் வந்து இறங்க மாப்பிள்ளைக்கு ஆரத்தி எடுக்கும் பொறுப்பு லெட்சுமி மற்றும் கீர்த்தியினுடையது.


“ இருவரும் ஆரத்தி எடுக்க துணை மாப்பிளையாய் நின்ற அர்ஜுனுக்கு தான் கீர்த்தியிடம் இருந்து கண்ணை எடுப்பது பெரும் பாடயிற்று “

இருவரும் ஆர்த்தி எடுத்து முடிக்க கமல் வந்து தன் உடன் பிறவா தமக்கையின் கையை பற்றி உள்ளே அழைத்து சென்றான் “

“ அர்ஜுனினின் அம்மா அப்பொழுதே முடிவு செய்து விட்டார்.அடுத்த மருமகள் கீர்த்தி தான் என்று கீர்த்தி மருத்துவம் இறுதியாண்டு படிக்கறாள்
(பொண்ணு டாக்டர் மாப்பிள்ளை இன்சினியர் நல்ல ஜோடி)


(ஆமா எங்க நம்ம உதயா ஐபிஸ் காணோம்)

“ டேய் உதயாவுக்கு கால் பண்ணியா எங்க கானோம் என நிரஞ்சன் கேட்க கால் பண்ணிடேன் வந்துருவான் என் அர்ஜுன் பதில் சொன்னான் “

மனுஷன நிம்மதியா சைட் கூட அடிக்கவிடமாட்டேங்குறான் என முனுமுனுத்துக் கொண்டே(வேற யாரு நம்ம கீதுவத்தான் நம்ம கதையில சிக்கிட்டு தப்பிக்க முடியுமா என்ன)
ஆரத்தியை வாசலில் ஊற்ற வந்த லெட்சுமி கீர்த்தியிடம்


“ என்ன கீர்த்தி சின்ன மச்சான் டோட்டல் சரண்டர் ஆகிட்டார் போல கண்ணாலே சம்மதம் கேட்குறாரு சொல்லிடுடி பாவம் “

என்னத்த சொல்ல எனக்கும்தான் பிடிசச்சுருக்கு ஆனா அவங்க முதல்ல வந்து சொல்லட்டும் அப்புரம் பார்ப்போம் ‘என கூற இருவரும் சிரிக்க

“ ஹலோ கொஞ்சம் அங்கிட்டு போய் சிரிச்சா என் பைக்க பார்க் பண்ண முடியும் “ என்ற கணீர் குரலில் இருவரும் திரும்பி பார்க்க அங்க வேற யாரு நம்ம உதயா சார் தான் (என்ன பையன் அவசரத்துல கிளம்பினதுனால காக்கி ட்ரஸ்லயே வந்துட்டார் அவரோட ராயல் என்பில்டுல)

“ போலிஸா நாங்க இங்க யாரும் இங்க பாதுகாப்பு கேட்கலையெ நீங்க எதுக்கு வந்து இருக்கிங்க “ என லெட்சுமி துடுக்காக கேட்க(அதான போலிஸ்காரன் கிட்ட கூட நீயெல்லாம் அடக்கி வாசிக்க மாட்ட)

“ விஷேசத்துக்கு வந்தவங்கள வாங்கனு கேட்காம வாசலிலே வைச்சு கேள்வி கேட்கிறீயே நீ யாரு “என உதயா கேட்க (நல்லா கேளு திருந்துதானு பாப்போம் ஹிரோவா கொக்கா )

“நான் பொண்ணோட தங்கச்சி “ என லெட்சுமி பதில் சொல்ல

“பொண்ணோட தங்கச்சிச்சு ஓவரா வாய் பேசுனா அவள தூக்கி ஜெயில்ல போட சொன்னாங்க அதான் வந்தேன் “ என உதயா கூற

“ பாப்பு எதுக்கு இப்படி யார்யார்கிட்ட எல்லாம் பேசுற வா “ என கீர்த்தி இழுத்து சென்று விட்டாள் லெட்சுமியை

“ விடு கீது எப்படி பேசுறான் பாரு அவன் இவன் பெரிய பருப்பு “ என கூறி சத்தமிட

“ விடு நம்ம நிவி நிச்சயம் டி நம்மளாலே எந்த பிரச்சனையும் வரக்கூடாது டி பிளிஸ் பாப்பு என் செல்லக்குட்டில விடு டி பிளிஸ் என கெஞ்ச “

“சரி போய் தொலையட்டும் என “ விட்டால் லெட்சுமி

இங்க நம்ம ஹிரோ கனவு காண போய்ட்டாரு

“ ஆளு கருப்பா இருந்தாலும் கலையா இருக்கா, நல்லா பேசும் போது கண்மை போட்ட கண்ண நல்லா தான் உருட்டுறா “
கண் நல்லா மீன் மாதிரி இருக்கு ,மூக்கு நல்லா கிளி மூக்கு,
உதடு லிப்ஸ்டிக் போடல ஆனா இது தான் அவளுக்கு நல்லா இருக்கு ”
நல்லா ஒல்லியா இருக்குறனால தான் அந்த சேலை அவளுக்கு அவ்ளோ
கரெக்டா இருக்கோ நல்லா அப்டியே பொம்மைக்கு சேலை கட்டுன மாதிரி”
கல்யாணத்து அப்புறம் எப்படியாவது வெயிட் போட வைக்கனும் “


“ அட பாவி இப்போ தான அந்த பொண்ண பாத்த அதுக்குள்ள வா என அவன் மனசாட்சி கேள்வி கேட்க “

“ அவ பொண்ணு இல்ல என் பொண்டாட்டி என சொல்லி சிரித்து கொண்டே அவன் அண்ணங்களை காணச் சென்றான் ”
( பாவம் உன்னை யாராளையும் காப்பாத்தவே முடியாது போ


அண்ணன் தம்பி மூனு பேரும் இந்த மூனுக்கிட்டையும் மாட்டிக்கிட்டு என்ன பாடு பட போறிங்க்களோ ஆண்டவனுக்கே வெளிச்சம் )

நிச்சயம் எல்லோரும் தனிதனியாக நின்று பேசி கொண்டிருக்க லெட்சுமியும்,கீர்த்தியும் பேசி கொண்டிருக்க அந்த வழியாக வந்த உதயா அதை கேட்டான் ( ஒட்டு கேட்குது பயப்புள்ள )

“ லெட்சு நீ கரஸ்ல கூட கோர்ஸ் பண்ணலாம்ல டா ,இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியெ இருக்க போற சொல்லு “ என கேட்க

“ என்னடா கீது நீயும் இப்டி பேசுற நான் என்ன வேணும்னே வாடா இப்படி
பண்றேன் தம்பி நான் போலிஸ் ட்ரெயினிங் போறேன் அப்படினு சொல்றான் அம்மாவாலையும் நிறைய வேலை பார்க்க முடியாது,இந்த மாதிரி சமயத்துல முதல்ல குடும்பத்த பாப்போம் அப்புறம் மத்தத பத்தி யோசிப்போம் “ என லெட்சுமி கூற


“ இல்லை பாப்பு நீ பின்னாடி ஃபீல் பண்ணுவடா நம்ம படிச்சுருக்கலாம்னு “
டாடி உயிரோட இல்லைங்கறத தவிர வேற எந்த கவலையும் என்ன பாதிக்காது டா கீது,இப்போ இந்த நிமிஷம் அம்மா இறந்தாகூட நான் அந்த அளவுக்கு ஃபீல் பண்ணாலும் இந்த அளவுக்கு வேதனைபட மாட்டேன் டா கீது “


“ அப்பா இறந்த்து எல்லா விதத்துலையுமே என்ன பாதிச்சுருச்சுடா என்னோட படிப்பு போய்,நான் எவ்ளோ நேசிச்சு ஒவ்வோரு பேச்சு போட்டிக்கும் போய் எல்லா மேடையையும் எனக்கான மேடையா மட்டும் பண்ணணோ அது எதுமே இப்போ இல்ல,அது மட்டும் இல்ல இனிமே மேடை ஏறி என்னால பேச முடியுனு கூட தோணலை கீது,நான் வாழ்ந்த வாழ்க்கைக்கு தலை கீழா ஒரு லைப் டா இது,எதை பத்தியும் யோசிக்காம
பணம் அப்படின்ற ஒரு விஷயத்துக்கே கவலை படாம இருந்த நான் தாண்டா இன்னைக்கு பணத்துக்காக வேலைக்கு போய் கஷ்டப்படுறேன்,அதுவும் இந்த வசயல வேலைக்கு போகும் போது எல்லாரோட பார்வையும் ஓரெ மாதிரியும் இருக்காது டா,இதெல்லாம் விட
வேற எந்த வகையிலயாவது கஷ்ட படுவேன்னு நினைக்கிற “
என அழுகையுடன் லெட்சுமி நிறுத்த கண்ட அவள் அக்காவிற்க்கு


” தன் நெஞ்சில் ஆணி வைத்து யாரோ ஓங்கி குத்துவது போன்ற ஓரு உணர்வு “
இது எல்லாத்தையும் வைச்சுக்கிட்டு எப்படி பாப்பு இப்படி நார்மல் இருக்கிற மாதிரி இருக்க “ என கீர்த்தி கேட்க


“ அதுவா கீது செல்லக்குட்டி l
மானம் ரோஷம்லாம் டீல்ல விட்டாச்சுடா
பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா
வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா
இந்த பாட்டை வைச்சு தான் டா “ என கூற


“ சாரி பாப்பு நான் எதாவது உன் மனசை கஷ்டபடுத்திருந்தா சாரி “என கூற

“போடி லூசு சரி வா உன்னோட ஆளு என்ன பண்ணுறார்ருனு பார்க்கலாம்”
என கூறி இழுத்து சென்றால்.


இவை எல்லாவற்றையும் கேட்டு கொண்டிருந்த உதயாவுக்கு தான் “இனிமே இவளுக்கு ஒரு அப்பாவா நம்ம இருக்கனும் “
என உறுதிமொழி எடுத்து கொண்டான் (இப்ப தான் சார் நீங்க உண்மையான ஹிரோ)
(இங்கு ஒரு வழியாக அர்ஜுன் கீர்த்தி கிட்ட பேசப்போறரு பா
என்னனு கேட்ப்போம் சாரி படிப்போம்)


“ ஹாய் என் பெயர் அர்ஜுன் ”உன் பெயர் “

“ கீர்த்தி “

‘ இங்க பாரு கீர்த்தி எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சு இருக்கு சும்மா ஸுகூல் பையன் மாதிரி கையில லவ் லெட்டர் வைச்சுக்கிட்டு உன் பின்னாடி சுத்த முடியாது “என கூற

“ ஏன் சார்க்கு அது கூட பண்ண முடியாதோ “ என கீது கேட்க

அதெல்லாம் நீ என்ன லவ் பண்னுரியானு தெரிஞ்சுக்கனும்னா தான்

எனக்கு தான் அது தெளிவாவே தெரியுமே நீ என்ன தான் லவ் பண்ணுரெனு அப்ரம் என்ன “

“ அதெல்லாம் இல்ல நான் உங்கள எல்லாம் லவ் பண்ணலை “

“ ஓ அப்டியா மேடம் ஒன்னும் பிரச்சனை இல்ல கல்யாணம் பண்ணி உன்ன அமெரிக்கா கூட்டிட்டு போய் அங்க என்னோட பொண்ணு பிறக்கற வரைக்கும் லவ் பண்ணலாம், அப்படி இல்லைனா அடுத்து ஒரு பையன் பெத்து நம்ம லவ் பண்ணலாம் கீது “ என கூறி சிரிக்க

“ என்னது “ என விழி விரித்து கேட்டவளின் விழி விரிந்த அழகில் கவரபட்டவனாய்
அவளை இழுத்து அவள் கண்களில் முத்தமிட்டு


” ஐ லவ் யூ டி என் பொண்டாட்டி “
என கூறியவனிடம் இது எப்போல இருந்து என நெஞ்சில் வாகாக சாய்ந்து கொண்டு கேட்டவளிடம்


“ எது டி ‘ என வினவ

“ இந்த பொண்டாட்டி தான் “
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
அதுவா இப்போ தான் இரண்டு வீட்டுலையும் சம்மதம் சொன்னாங்க அண்ணன் கல்யாணம் முடிஞ்ச அடுத்த முகூர்த்தத்துல நமக்கு கல்யாணம்”

அவள் மறுபடியும் விழிவிரிக்க ஏய் கண்ண விரிச்சு விரிச்சு என்ன கெட்ட பையன் ஆக்காதடி கல்யாணம் வரைக்கும் உன் மாமாவ நல்ல பிள்ளை கெத்த மெயிண்டையின் பண்ண விடுடி பிளிஸ் “
என கூற


“ சரி பொழைச்சு போங்க போங்க “ என கூற
இருவரும் சேர்ந்து சிரித்தனர்.


(சரி நம்ம ஹிரோவ எங்க ஆளையே காணோம் இந்தா இருக்கான்)
அங்கு ஒரு மறைவான இடத்துல லெட்சுமிய குறுக்கு விசாரணை பண்ணி கொண்டிருந்தான் உதயா


“ உன் பெயர் என்ன “

‘ லெட்சுமி “

ஹம் லெட்சுமி நான் உங்கிட்ட ஒன்னு சொல்லனும்

“ அதுக்கு முன்னால நான் யாருனு சொல்லிடுறென் “

“ நான் மாப்பிள்ளையோட தம்பி பேரு உதயா ஐபிஸ் முடிச்சுருக்கேன் இப்போ கையர் போஸ்டிங்காக வைட் பண்ணிக்கிட்டு இருக்கேன் “

“ ஸ்டாப் இதெல்லாம் என் கிட்ட ஏன் சொல்லுறீங்கனு தெரிஞ்சுக்கலாமா “

“ நாளைக்கு உன்னோட புருசன் என்ன பண்ணுறானு கேட்டா நீ சொல்லனும் இல்ல அதுக்காக தான் “

“ உங்களுக்கு என்ன பைத்தியமா நீங்க இப்படி பேசுறது எங்க வீட்டுக்கு தெரிஞ்சது உங்கள என்ன பண்ணுவாங்கனு
தெரியுமா “


புருசன் பொண்டாட்டிக்குள்ள வேற யாரும் வர மாட்டாங்க டி என் கருவா டார்லிங் ”

“ஆமா இவர் அப்படியே பால் கலரு சொல்ல வந்துட்டாரு “

“ அப்பறம் கருவா டார்லிங் நமக்கு இன்னும் ஆறு மாசத்துல கல்யாணம் இரண்டு வீட்டுலயும் பேசி சம்மதம் வாங்கியாச்சு “

“ என்ன எல்லாருமா சேர்ந்து விளையாடுறிங்களா என்னை கேட்காம என்னோட கல்யாணத்த முடிவு பண்ண நீங்க
யாரு?


இப்போவே போய் இந்த கல்யாணத்த நிறுத்த போறேன் “
என வேகமாய் கிளம்பியவளின் கைகளை பிடித்து இழுத்தவன்


“ உன்ன நல்லா தெரிஞ்சுக்கோ நீ தான் என் பொண்டாட்டி நா தான் உன் புருசன் இதை எவனாலையும் மாத்த முடியாது உன் தம்பி போலிஸ் டிரைனிங் அட்டன் பண்ணனும்னா அவன் மேல கேஸு இருக்க கூடாது
புரிஞ்சுதா “


“ உன் தம்பி வாழ்க்கை உன் கையில வரட்டா மாமா உன்னை அப்றம் பாக்குறேன் “
என கூறி விட்டு நகர்ந்தவனை கண்டு அவள் கால்கள் நகர மறுத்தன


“ சாரிடி கருவா உன்னை சம்மதிக்க வைக்க எனக்கு வேற வழி தெரியல் நீ வீட்ல சம்மதம் கேட்கும் போது மாட்டேன்னு சொல்லிருவியோ அப்படின்ற பயத்துல தாண்டி உன் கிட்ட அப்படி பேசுணேன் கண்டிப்பா என்ன ஒரு நாள் உனக்கு புரிய வைப்பேண்டி சாரிடி”

எனக் கூறிக் கொண்டே சென்றவனுக்கு தெரியாது தன்னவளின் எண்ண ஓட்டத்தை பற்றி
அது தெரியும் போது நம்ம வாழ்கைக்கு நம்மளே குழிதோண்டிக்கொண்ட உணர்வு வரும் என்பது மறுக்க முடியாத உண்மை



வீட்டிற்க்கு வந்தவுடன் பத்ரா லெட்சுமியிடம் ” லெட்சுமி உனக்கு மாப்பிள்ளை முடிவு பண்ணியாச்சு மாப்பிள்ளை பெயர் உதயா “

நம்ம நிவி மாப்பிள்ளையோட தம்பி தான் நீங்க மூனு பேரும் ஒரே வீட்டுக்கு வாழ போறதுல எங்க எல்லாருக்கும் எவ்வொளோ சந்தோசம் தெரியுமா ?

“நீங்க மூனு பேரும் சந்தோசமா இருக்கனும்,அப்புறம் நம்ம மாப்பிள்ளை ரொம்ப நல்லவர் தெரியுமா ?
கமலுக்கு போலிஸ் டிரெயினிங்க்கு என்னலெல்லாம் பண்ணனும்னு சொல்லி கொடுக்கிறேன் சொல்லிருக்காரு “ என பத்ரா மாப்பிள்ளை புராணம் பாட


“ சரி எல்லாருக்கும் மாப்பிள்ளையை பிடிசு இருக்கு சரி எங்கிட்ட ஒரு வார்த்தை கேட்கனும்னு தோணலைல யாருக்கும் “ என லெட்சுமி பாய

“ உன்னை பெத்த அம்மா நான் உன் வாழ்க்கை எப்படி அமையனும்னு எனக்கு தெரியும்,
மாப்பிள்ளைக்கு உன்ன பிடிச்சுருக்கு அதை உங்கிட்ட சொல்லி உன் பின்னாடி சுத்தி உன் பெயரையும் கெடுத்து அவர் பெயரையுமா கெடுத்துக்கிட்டாரு இல்லைல முறைப்படி அவங்க அம்மா,அப்பாவ வைச்சு பொண்ணு கேட்டாங்க்கா’ “
அதுவும் இப்போ நீ இருக்குற மனநிலைல உடனே கல்யாணாம் வேணாம் இன்னும் ஒரு ஆறு மாசம் போட்டும் இப்போதக்கு பரிசம் மட்டும் போட்டுக்கலாம், வரதட்சனையும் எதுவும் வேணாம் என் பொண்டாட்டிக்கு நானே எல்லாம் பார்த்துபேன் அப்படினு சொல்லுறாரு’


“ நாங்க உனக்கு வரதட்சனை இல்லாம கட்டி கொடுக்குறதுக்காக மட்டும் இப்டி செய்றோம்னு நினைக்காத நாங்க உனக்கு செய்ய வேண்டிய எல்லா கடமையும் கரெக்டா செய்ஞ்சுருவோம் ,ஆனா இப்படி ஒரு மாப்பிள்ளையைய தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது “

“ அதுனால நல்ல வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத பாப்பா “
என கூறி சென்று விட்டார்.
ரூம்மில் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை “
என கூறி சென்று விட்டார்.
ரூம்மில் வந்து கட்டிலில் விழுந்தவளுக்கோ தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை


“ இவன் எங்க இருந்து வந்தான் ஒரேநாள்ல் குடும்பத்தையே அவன் புராணம் பாட வைக்கிறான்,ஆனா அவன் எங்கிட்ட வந்து நான் உன்ன காதலிக்கிறேன்னு சொல்லவே இல்லையே ,அவன் ஆசைப்பட்டத அடைய போற மாதிரி தான பேசுனான் .

‘ இனி இந்த விசயத்துல் எந்த முடிவும் நம்மளால எடுக்க முடியாது “

“ இதுல கமலோட வாழ்க்கை மட்டும் இல்ல நிவியும்,கீர்த்தியும் வேற இருக்காங்க இதுக்கு ஒரு நல்ல முடிவு நீங்க தான் அப்பா சொல்லனும் என்னால முடியல டாடி பிளிஸ் என கூறி கொண்டே களைப்பில் தூங்கி விட்டால் “

‘ பெண்ணின் பெருமையை பேசியவள் தான்
இன்று பேச்சையும் மறந்த பேதையாய் ஆனாய்
தன் குடும்பத்தின் நலன் காக்க
தன் ஆசைகளையும் கனவுகளையும் தன்னுள்ளே
புதைத்துக் கொள்ளுவது கூட பெண்ணின் பெருமை தான்
இதற்கு இவள் மட்டும் விதிவிலக்கா என்ன ?
அந்த வார இறுதியில் லெட்சுமியையும் கீர்த்தியையும் பொண்ணு பார்க்க வருவதாக இருக்க் அன்றெ இருவருக்கும் பரிசம் போடுவதாக இருந்தது.


“ லெட்சுமி இப்பொழுதெல்லாம் யாரிடடும் அதிகம் பேசுவதில்லை அதற்கு மேல் அவளின் பழைய கேலிகள் எதுவும் இல்லை “

அன்று நிச்சய நாள் கீர்த்தி-அர்ஜூன் ஜோடிக்கு இனிமையானதாகவும் உதயாவிற்கு இன்பமானதாகவும் லெட்சுமிக்கு படபடப்பு மிகுந்ததாகவும் இருந்தது.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து அனைவரும் வந்துவிட்டனர்


“ அனைவரும் கூடி இருக்க நம்ம இரண்டு மாப்பிள்ளைகள் மட்டும் எங்கடா நம்ம பொண்டாட்டிய காணோம் என் தேடி கொண்டீருந்தனர் “

( ஸ்டாப் நம்ம ஹிரோவ வர்ணிக்க வேண்டாமா )

வெள்ளை நிறத்தில் உடலோடு ஒட்டி இருந்த சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து ஒரு போலிஸ்ற்க்கே உரிய மிடுக்குடன் அமர்ந்திருந்தவனை கண்டு யாருக்கும் அவன் மீது இருந்து கண்ணை எடுக்க முடியவில்லை.

“ பெண்கள் இருவரையும் நிவேதா அழைத்து கொண்டு வர நிரஞ்சனின் பார்வை வேறு எங்கு இருக்கும் நிவேதாவிடம் தான் “

எல்லோரும் ஆசிர்வதித்து பெண்கள் இருவரையும் புடவை மாற்றி வரச்சொல்ல

“ புடவை மாற்றி வந்தவர்களிடத்திலிருந்து நம்ம மாப்பிள்ளை இரண்டு பேருக்கும் கண்ணை எடுக்க முடியவில்லை “

லெட்சுமியும் ,கீர்த்துவும் கலர் பட்டு உடுத்திருக்க அதை கண்ட மாப்பிள்ளை இருவருக்கும் தான் கண்களை எடுக்க முடியவில்லை.

நம்ம ஹிரோ கவிதை சொல்லுறாருப்பா வாங்க கேட்போம்

“உன் கண்ணில் தீட்டீருக்கும் மையின் அழகில்
மயங்குதடி என் மனம்


உன் கூந்தலில் வாசம் செய்யும் மல்லிகை

மணத்தில் என் மனம் சரணடைந்ததடி உன்னிடம்

உன் மேனி தழுவி நிற்கும் சேலை மீது

செல்ல கோபம் கொண்டேனடி

என் காதில் ஒலிக்கும் உன் கொலுசொலியில்

காதல் நான் கொண்டேனடி

உன்னை மடி தாங்கி என் மரணம் வரை

மகிழ்ச்சியாய் இருக்க வருவாயோ நீ என் மனைவியாக ?

( இதை நீ அவக்கிட்ட சொல்லி இருந்தாலும் புண்ணியம் உன் மனசுக்குள்ள சொல்லி முடியலைடா எங்களுக்கு உங்களோட )

நிச்சய தாம்பூலம் மாற்றியவுடன் மணமக்களை மோதிரம் மாற்றிக்கொள்ள சொல்ல

“ உதயாவும்,அர்ஜூனும் தன்னவளின் கரங்களை பற்றி மோதரமிட அதில் அவர்கள் இருவரின் பெயரும் இருந்தது “

“ மெதுவாக யாரும் அறியாமல் லெட்சுமின் உள்ளங்கையினை வருட டப்பக்கென்று அவள்
நிமிர்ந்து பார்க்க அப்பறம் தான் தெரிந்தது போலிஸ் அவரை நிமிர்ந்து பார்க்க வைக்க நடந்த் நாடகம் என்று “


“ அங்க ஒரு ஜோடி கண்ணாலே காதல் பேசிக்கிட்டு இருந்துச்சு வேற யாரு நம்ம கீதுவும் அர்ஜூனும் தான் “

“ அர்ஜூன் தன்னவளுக்காக வங்கி வந்த புது மாடல் போனை பரிசாக கொடுக்க
நம்ம ஹிரோ அதுக்கும் ஒரு படி மேல போய் ஒரு தங்க சங்கிலி இதய வடிவில் டாலரோடு திறந்தால் உள்ளே இருவரது புகைப்படமும் இருக்குமாறு வாங்கி வந்து இருந்தான்.அதை தன் அன்னையின் கையில் கொடுத்து அவளுக்கு அணிவித்து விடசொல்ல இருவரையும் திருஷ்டி களித்து விட்டு அதை அவள் கழுத்தில் அணிவித்துவிட்டார்.( ஹிரோ கலக்குறீங்க போங்க )


இருவரையும் தனியாக சென்று பேச சொல்ல

“ ஹாய் கருவா டார்லிங் இன்னைக்கு சூப்பரா இருந்தடி மாமாவோட தூக்கத்தை கெடுத்துட்ட போ இன்னைக்கு உன் மாமாவுக்கு சிவராத்திரி தான் போ “

“ என்னடி வாய் ரெஸ்டே கொடுக்கமாட்ட இப்போ ஏன் டி பேசவே மாட்டேங்குற “

“ நான் பேசிட்டா மட்டும் இந்த கல்யாணம் நின்னுடுமா என்ன ?”
அவள் கேட்ட நொடி அவளை அடிக்க கை ஓங்கி இருந்தான் உதயா


“ அவளை வேகமாக அருகில் இழுத்தவன் ஒன்னை மட்டும் நியாபக்கத்துல வைச்சுக்கோ
நான் உன் புருசன் இதை யாராலையும் மாத்த முடியாது சின்ன பொண்ணு அவளுக்கு டைம் கொடுக்கணும் அப்படின்ற காரணத்துனால தான் உனக்கு ஆறு மாசம் டைம் இல்லை அடுத்த மூகூர்த்தத்துலேயே உனக்கும் எனக்கும் கல்யாணம் முடிவு பண்ணிருபேன் “
அவளை இழுத்த வேகத்தில் தள்ளி நிறுத்தியவன்


” உன் மனசை தொட்டு சொல்லுடி உனக்கு அன்னைக்கு என்ன பார்த்தவோடனே என்ன பிடிக்கலைனு அன்னைக்கு தான் உன் கண்ணே சொல்லுச்சே உனக்கு என்னை பிடிச்சிருக்குனு இப்போ ஏண்டி மறைக்கிற சொல்லுடி “ என அவளை உலுக்க

“ஆமா அன்னைக்கு பிடிச்சுதான் இருந்துச்சு ஆனா என்னைக்கு நீங்க ஆசைபட்டது நிறைவேறனும் அப்படிங்குறதுக்காக என் அக்காவோட வாழ்க்கையும் என் தம்பியோட வாழ்க்கையும் பகடை காயா மாத்தினிங்களோ அப்போவே நான் உங்கள வெறுத்துட்டேன் “

“ எனக்கு இப்போ பதினெட்டு வயசு தான் ஆகுது ,என் தம்பிக்கு ஒரு நல்ல அக்காவா நான் என் கடமைய முடிச்சுட்டேனா இல்ல எங்க அம்மாக்கு ஒரு நல்ல பிள்ளையா தான் இருந்துட்டேனா இதுல கல்யாணம் பண்ணி இதுனால வேற அவங்கள கடனாக்கி நான் கஷ்டப்படுதனுமா சொல்லுங்க ?”

“ கமல் தான் நமக்கு மூத்த பிள்ளை உங்க அம்மாவுக்கு நீ என்ன எல்லாம் பண்ணி பார்க்கனும்னு ஆசைபடுறியோ அதெல்லாம் என் பொண்டாட்டியாவும் இருந்து நீ பண்ணாலாம் தப்பில்லை.”
 




THAZHAI KANI

அமைச்சர்
Joined
Jul 22, 2019
Messages
1,211
Reaction score
2,878
Location
MADURAI
“ நான் என்னமோ உன்னை வெறும் பொண்டாட்டியா மட்டும் நினைக்கல,உன் அப்பா உன் மேல எவ்ளோ பாசம் வைச்சிருந்தாரோ அந்த பாசத்தயெல்லாம் உனக்கு மறுபடியும் கொடுக்கனும் அதுக்கு நீ என் கூட இருக்கனும் டி “

“ புரிஞ்சிக்கோடி நீ என்னோட எல்லாமா எனக்கு வேனும் டி எனக்கு பிள்ளையா என் பொண்டாட்டியா,என்னோட ஃப்ரண்டா எல்லாமா வேனும் டி பிளிஸ் டி “

ஐ லவ் யூ டி எனக் கூறி இறுக அனைத்தவனை விலக்க தோனாமல் அமைதியாக கண்ணீர் வடித்து கொண்டு நின்றால் “
கீழே எல்லாரும் தேடுவாங்க வா போகலாம் என் கூறி கைபிடித்து அழைத்து சென்றான்.


“ ஏன் டி நிவி நமக்கு அப்பறமா ஜோடி சேர்ந்தவன் எல்லாம் சந்தோசமா இருக்காங்க
நீ என்னடான என்னை கண்டுக்கவே மாட்டேங்குற ஏண்டி என்னை பார்த்தா எப்படி டி தெரியுது “என் நிரஞ்சன் வினவ


“ என்ன கொஞ்சம் சைட் அடிக்கலாம்னு தோனுது “என்ன பண்ணலாம் என் யோசித்தவளை யோசிக்காமல் இழுத்தவன்

“ ஏண்டி அவங்க எல்லாம் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்னு யோசிக்கிறாங்க
நீ என்னடான இன்னும் சைட் அடிக்கவா வேணாமானு யோசிக்கிற உன்னை என கூறி
அவள் இதழில் இதழ் பதித்தவன் விடுவிடுவிக்க தான் வெகு நேரம் ஆகிற்று மூச்சு வாங்க விலகி நின்று முறைத்தவளை அருகில் இழுத்து அவள் இடையோடு அணைத்தவன்


“ ஐ லவ் யூ டி “ நிவி மா என கூறியவனிடம் வெக்கத்தை மறைக்க அவன் மார்பில் தஞ்சம் புகுந்தவளை நிமிர்த்தி உனக்கும் என்னை பிடிச்சுஇருக்காடி என கேட்க “

“ இல்லையே என கூறி சிரித்து கொண்டே ஓடிவளை கண்டு தானும் சிரித்து கொண்டே தலை கோதியபடி நின்றான்”
அனைவரும் கிளம்பும் சமயம் மூன்று ஜோடிகளும் கண்களாளே விடை பெற்றுக்கொண்டது
எல்லாரும் சென்றவுடன் தனிமையில் அமர்ந்து யோசித்த லெட்சுமிக்குதான் இது என்ன டா நமக்கு வந்த சோதனை என்று தான் இருந்தது எங்கருந்து வந்தான் என் இப்படி நம்மள குழப்புறான் இவன் நல்லவனா கெட்டவனா என யோசித்து கொண்டிருக்க (நீ இப்படியே யோசி நாங்க அதுக்குள்ள உனக்கு கல்யாணமே பண்ணிவச்சுருவோம், உதயா நீ இனி மர்கயா மர்கயா போயா உதயா )


சித்திரம் சிந்தும்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தாழைக்கனி டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
தாழைக்கனி டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top