சிப்பிக்குள் முத்து epi-1

juliyana

Author
Author
#1
அவளால் இன்னும் நம்பமுடியவில்லை தன தாய் தன்னை விட்டு போய்விட்டார் என்பதை அவரை சேர்த்த ஹாஸ்பிடலில் உள்ள டாக்டர் சக்தி தான் அவளது நிலையை கண்டு பரிதாபம் பட்டு கொண்டிருந்தார். தன்னுடைய தாயை ஒத்த அழகான கண்கள் . நீளமான கூந்தல் .பால்போன்ற நிறம். மொத்தத்தில் சிப்பிக்குள் விழுந்த மழைத்துளி. பாவம் இந்த பெண் எப்படி இனி இருக்கப்போகிறாள் என்று . ஏனென்றால் அப்பொழுதுதான் தற்கொலைக்கு முயன்றவளை காப்பாற்றி இருந்தார்கள். விழிகளில் உயிர்ப்பில்லாமல் நடைப்பிணமாக ஆனாலும் குழந்தை தனம் மாறாத அழகியாய் தெரிந்தாள் .சக்தி அவளிடம் " கயல் ஹாஸ்பிடல் ல இருந்து உன்ன டிஸ்சார்ஜ் பண்ணப்போறோம் மா நீ எங்க போனும்". அவளோட தாய் கூட இருந்த அந்த சின்ன வாடகை வீட்டுக்கு அவளுக்கு போக முடில அவ அம்மா அன்புக்கரசி இல்லாம.அக்கா உங்களுக்கு தெரிஞ்ச லேடீஸ் ஹாஸ்டல் ல சேத்துவிடுங்க அப்டியே ஒரு வேலைவாங்கிகுடுத்தீங்கனா நா என்னோட படிப்பை தொடர வசதியாயிருக்கும் ப்ளீஸ் கா.ஒகே கயல் நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் உனக்கு பண்றேன். ஆனா ஆன்மாவாய் இருக்கும் அன்பு வேறு திட்டம் வைத்திருந்தாள் .தான் இருக்கும் போது தனக்கும் தன மகளுக்கும் கிடைக்காததை இப்பொழுது தன் மகளுக்கு கிடைக்கவேண்டும் கொடுக்க வேண்டும் என்று சபதம் எடுத்தாள் . நிறைவேறாத ஆசையுடனும் தோல்விகளுடனும் வலிகளுடனும் இறந்ததினால் அவளால் இந்த உலகை விட்டு போகமுடியவில்லை.அதே நாள் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி ஒரு ferrari car அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது .அதிலிருந்தவன் கைகளில் அது திக்குமுக்காடி கொண்டிருந்தது. அவன் பெயர் அரவிந்த்.நெடிய உடல் வெகு. கூர்மையான கண்கள் .அகன்ற நெத்தி . மொத்தத்தில் அவன் தோற்றமே அவனை ராஜவம்ச இளவரசன் போல் காட்டிவிடும். அவன் தான் சத்தியமூர்த்தி குரூப் of companies மேனேஜிங் டைரக்டர்.அது அவனது பரம்பரை தொழில். அவனது தாத்தா சத்யமூர்த்தி பரம்பரை கோடீஸ்வரர் ராஜவம்ச வாரிசு ஆனால் அதில் அவருக்கு ஈடுபாடு இருக்கவில்லை. சொந்தமாக ரியல் எஸ்டேட் அண்ட் construction கம்பெனி தொடங்கினார் .அதில் வெற்றியும் கண்டார் .அதன்பின் அவரது மகன் பிரகாஷ் சத்யமூர்த்தி அதன்பின் நமது ஹீரோ அரவிந்த் கையில் இப்பொழுது கம்பெனி.
தொழில் விஷயத்தில் அவனிடம் யாராலும் ஜெயிக்க முடியாத படி அசுர வேகத்தில் வளர்ந்திருந்தான். அந்த கம்பீரமான தோற்றத்திற்குள் கடினத்தன்மை மட்டும் தான் இருந்தது. மருந்துக்கும் புன்னகை இல்லை . அவனது மொபைல் அழைப்பை எடுத்தவன் அதில் அவனது தந்தை எண்ணை கண்டவுடன் சொல்லுங்க dad மாம் எப்படி இருகாங்க கான்ஸியஸ் வந்துடிச்சா டாக்டர் என்ன சொன்னாங்க என்ன கேள்விகளை அடுக்கினான். அவனின் தந்தை கு அவனிடம் அதை எப்படி சொல்ல என்று தயங்கினார் . ஏனென்றால் அவனுடைய அம்மா தான் அவன் உலகம் .அவன் United Sates ல் படித்துக்கொண்டிருந்த நாட்களில் கூட ஒரு நாள் கூட அவன் அம்மாவிடம் பேசாமல் இருந்ததில்லை. அந்த அளவிற்கு தாய் மேல் பாசம் கொண்டவன். அவனால் இதை தாங்கமுடியுமா என்று பிரகாஷ் யோசித்த நேரம் Dad ப்ளீஸ் சொல்லுங்க என்று என்று அவன் கத்தி விட்டான் . அதற்குமேல் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை . அரவிந்த் உன் அம்மா கு ஹார்ட் அட்டாக் பா.இதுதான் முதல் தடவைனால டாக்டர் உயிருக்கு ஆபத்தில்லை ஆனா இனிமே கவனமா பாத்துக்க சொல்லிருக்காங்க பா. அவனால இதை கேட்டவுடனே இந்த உலகமே நினமாதிரி ஒரு உணர்வு. வினை விதைத்தவன் வினை அறுப்பான் னு சொல்றமாதிரி பிரகாஷ் என்னைக்கோ செஞ்ச வினை அவரை பின்தொடருது இனியும் தொடரும் .அவர் செய்த தவறுக்கு கடவுள் குடுத்த தண்டனை அவருக்கு குழந்தை இல்லாதது . அவருடைய தங்கையின் இழப்பு என்னும் ரெண்டு.அந்த இழப்புக்கு பின் தான் அரவிந்த் அவருடைய மகனானது . தன்னுடைய தங்கையும் அவரது கணவரும் விபத்தில் இறந்த பின்பு அவர்களுடைய 6 மாத குழந்தை அரவிந்த் கு இவர்களே தாய் தந்தை ஆனார்கள் .அவனுடைய 5 வயதில் இந்த உண்மை அரவிந்த் கு தெரிவிக்கப்பட்டது. அதன்பின் அவன் அவர்களை நிஜ தாய் தந்தை ஆகவே கருதினான். பிரகாஷ் என்றோ செய்த தவற்றிக்கு கடவுள் குடுத்த தண்டனை முடிந்தது. ஆன்மா கொடுக்கப்போகும் தண்டனை தொடரப்போகிறது.
 

Premalatha

General
SM Team
#2
கொஞ்சம் paragraph paragraph ஆக போடுங்க மா.. படிக்க சுலபமாக இருக்கும் ..

All the best for your first novel 🌹🌹
 

Advertisements

Latest updates

Top