• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

New சிவா மனசுல சக்தி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
சிவா மனசுல சக்தி.

அந்த இரவு நேரத்தில் ஒரு விசாரணைக்காக அந்த

பப்பிற்குள் நுழைந்தாள் சக்தி தன் தோழிகளோடு. அங்கே அதன் உரிமையாளரிடம் ஒரு கேஸ் விஷயமாக, குறிப்பிட்ட தேதியில் உள்ள cctv footage வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.

“சாரி மேடம்! அன்னைக்கு நடந்த அத்தனை சம்பவ புட்டேஜ் இன்ஸ்பெக்டர் வாங்கிட்டு போய்ட்டார் மேடம், என்கிட்ட இப்போ அந்த புட்டேஜ் இல்லை மேடம்” என்று பணிவுடன் அவர் கூறவும், அவள் தன் தோழிக்கு கன்னசைவை காட்டவும், அவள் ஒரு ஆடியோ ஒன்றை ஓட விட்டாள்.

அதைக் கேட்ட அந்த உரிமையாளர் முகம் வியர்க்க தொடங்கியது, இது எப்படி இவர்கள் கையில் என்று யோசிக்க தொடங்கினார்.

“எப்படி எங்க கைக்கு இந்த ஆடியோ கிடைச்சது? இதை எப்படி ஹேண்டில் பண்ணுறது? இப்படி யோசிக்காம, ஒழுங்கா எனக்கு அந்த புட்டேஜ் கொடுத்துட்டு போய்கிட்டே இருங்க, இல்லைனா அப்புறம் நடக்கிற எதுக்கும் நான் பொறுப்பு இல்லை” என்று சக்தி கூறவும், அவர் அப்பொழுதும் கொடுக்க யோசித்தார்.

“சக்தி! இவர் கொடுக்க இவ்வளவு யோசிக்கிறார், இவர் வீட்டுல தான இப்போ சுபா நம்ம ஆளுங்க கூட இருக்கா, பேசாம டோட்டல் குடும்பத்தை தூக்க சொல்லலாமா?” என்று அவள் தோழி வினவவும், அவர் அரண்டு விட்டார்.

“மேடம்! வேண்டாம், என் ஃபேமிலியை ஒன்னும் செய்யாதீங்க, அவங்களுக்கு எதுவும் தெரியாது. நான் இப்போ அந்த புட்டேஜ் எடுத்து தரேன், ஆனா யாருக்கும் நான் தான் கொடுத்தேன் அப்படினு சொல்லிடாதீங்க” என்று கூறிக் கொண்டே அதை எடுத்துக் கொடுத்தார்.

அவளின் தோழி ஒருத்தி அதை வாங்கி சரி பார்க்கவும், எல்லாம் சரியாக இருக்கும், அங்கே அவரிடம் சில விஷயங்களை சொல்லிவிட்டு வெளியேறினர்.

பப்பில் இருந்த சில பானங்கள், அவளின் இரு தோழிகளை ஈர்க்கவும், மெதுவாக சக்தியை பார்த்தனர். அவளின் பார்வையோ, குடித்து தொலையுங்கள் என்றுவிட்டு அங்கு நடப்பவற்றை கவனிக்க தொடங்கினாள்.

“சக்தி! இந்த லூசுங்களை எதுக்கு இப்போ குடிக்க ஒத்துகிட்ட? என்ன பிளான் இப்போ?” என்று அவளை அறிந்தவளாக கேட்டாள் அவளின் சகோதரியும், தோழியுமான சுமதி.

“சுமதி! இன்னொரு தடவை நீ அவங்களை லூசு அப்படினு சொன்னா, உன்னை அடிக்க நான் யோசிக்க மாட்டேன். சூரியா, நிலா இரண்டு பேரும் என் கூட வேலை பார்கிறவங்க மட்டும் இல்லை, தே ஆர் மை ப்ரெண்ட்ஸ் காட் இட்” என்று கண்கள் சிவக்க அவள் கூறவும், சுமதி கப்ஸிபென்று அடங்கினாள்.

இப்படித்தான் பதில் வரும் என்று தெரிந்தும், கேட்ட தன் மடமையை எண்ணி நொந்து கொண்டாள். அவள் எண்ணியது போல், சக்தி ஒரு முடிவோடு தான் அங்கே அமர்ந்து இருந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போல், அங்கே அப்பொழுது தன் படை சூழ உள்ளே நுழைந்தான் சிவா என்கிற சிவனேஸ்வரன். அவளுக்கு எதிராக இந்த கேசை எடுத்து வாதாட போவது அவன் தான்.

சென்னையில், லீடிங் கிரிமினல் லாயர் பாஷ்யம் சிஷ்யன் இவன். இவன் இதுவரை எடுத்த கேஸ் அனைத்தும் ஜெய்த்து காட்டி இருக்கிறான். ஆகையால், எப்பொழுதும் அவனை சுற்றி ஜூனியர் கூட்டம் ஒன்று திரிந்து கொண்டே இருக்கும், அவனிடம் கற்றுக் கொள்ள.

ஆனால், அவனோ அவர்களை எல்லாம் ஒரு எல்லையில் நிறுத்தி இருந்தான். கற்றுக் கொள்ள வேண்டும் எனில், கேஸ் நடக்கும் பொழுது பாய்ண்ட் எடுத்து வைத்துக் கொண்டு கற்றால் போதும், தள்ளியே இருங்கள் என்று நிறுத்தி இருந்தான்.

ஆனால் சிலர் அவனை சுற்றி வர தொடங்கினர், அவனின் ஜூனியர் என்று வெளியில் சொல்லிக் கொள்ள. அது அவனுக்கு பிடிக்கவில்லை என்றாலும், அடிபட்டு திருந்தட்டும் என்று அந்த கூட்டத்தை கண்டுகொள்ள மாட்டான்.

இப்பொழுதும், அந்த கூட்டம் அவனை பின் தொடர்ந்து வந்து இருந்தது. அதை பார்த்த சக்திக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை. தனக்குள் சிரித்துக் கொண்டு, அவனை நோட்டம் விட தொடங்கினாள்.

அவன் அங்கே அந்த உரிமையாளரிடம், சில கேள்விகளை கேட்க அவர் இவளை கை காட்டவும், அப்பொழுது தான் அவன் இவளை கவனித்தான்.

நேராக அவளிடம் வந்தவன், தனியாக பேச வேண்டும் என்றான். அவளோ, காரில் போகும் பொழுது பேசலாம் என்று கூறி தன் தோழிகள் பட்டாளத்தோடு அவனோடு வெளியேறினாள்.

“சக்தி! நான் தனியா பேசணும் உன் கிட்ட” என்று அழுத்தி கூறவும், அவளோ இவர்களை வீட்டில் இறக்கி விடுவது என் பொறுப்பு, என்னை நம்பி வந்தவர்கள் என்று கூறி அவனையும் அழைத்துக் கொண்டு, தன் பிஎம்பிள்யூ காரை எடுத்தாள்.

பின் இருக்கையில் அவளின் தோழிகள் மூன்று பேர் இருக்க, முன்னால் இவள் கார் ஓட்ட அவள் அருகில் சிவா. அவள் தனது மூன்று தோழிகளை வீட்டில் விடும் வரை காரில் மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது.

காரில் இவர்கள் மட்டும் இருக்க, சிவா பேச்சை தொடங்கினான்.

“அந்த ஃபுட்டேஜ் எனக்கு வேணும், எனக்கு கொடுத்திடு. நீ இந்த கேஸ் ல இருந்து விலகி போ, இல்லைனா உனக்கு தான் ஆபத்து” என்றான்.

“அதை நான் பார்துப்பேன், நீங்க கவலை பட வேண்டாம். உங்க அக்கறைக்கு மிக நன்றி, வேற எதுவும் பேச வேண்டுமா?” என்று கேட்டாள்.

“சக்தி! உன் மேல நான் அக்கறை படாம வேற யார் அக்கறை எடுத்துப்பாங்க? இப்படி பேசாத, இன்னும் ரெண்டு மாசத்துல நம்ம கல்யாணம், இப்போ இந்த கேஸ் ல எவ்வளவு பெரிய ஆட்களோட மோதி இருக்க அப்படினு தெரியுமா உனக்கு?” என்று அழுத்தி கேட்டான்.

“எல்லாம் தெரிஞ்சு தான் எடுத்து இருக்கேன், பாதிக்கப்பட்டது ஒரு அப்பாவி பொண்ணு, அவளுக்கு நீதி கிடைக்க வேண்டாமா?” என்றவளை கூர்ந்து பார்த்தான் இப்பொழுது.

“எது? அந்த குடிகார பொண்ணு அப்பாவியா?” என்று நக்கலாக கேட்கவும், அவள் அந்த ஆளில்லா ரோட்டில் காரை ஓரமாக நிறுத்தினாள்.

“நீயும் தான் குடிக்கிற, அப்போ நீ கெட்டவனா?” என்று அவள் அழுத்தமாக கேட்கவும், அவன் முறைத்தான்.

“எதுக்கு இப்போ என்னை இளுக்கிற இதுல? கேஸ் வித்டிரா பண்ணிடு சக்தி, பிளீஸ்” என்றவனை அவள் விடுவதாக இல்லை.

“நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு முதலில், அப்புறம் எதுக்காக இதை எடுத்து இருக்கேன் சொல்லுறேன்” என்று மகா அழுத்தத்துடன் சக்தி.

அவளின் பார்வை சற்று அழுத்தத்துடன் தன்னை பார்ப்பதை பார்த்து ஒரு பெருமூச்சு விட்டு அவளுக்கு பதில் அளிக்க தொடங்கினான்.

“குடிக்கிற எல்லோரும் கெட்டவங்க இல்லை, மன அழுத்தம் தாங்காம குடிக்கிறான் ஒரு பக்கம், குடி தான் வாழ்க்கை அப்படினு குடிக்கிறான் ஒரு பக்கம். இதுல நான் முதல் வகை, எனக்கு மன அழுத்தம் ஏற்படும் பொழுது எப்போவாவது தான் குடிக்கிறேன்”.

“ரெண்டாவது வகை உள்ளவன், அதுக்கு அடிமையாகி குடிக்கிறானே தவிர அவனும் முழு கெட்டவன் கிடையாது” என்று அவன் கூறவும், அவள் சிரித்தாள்.

“நீ உனக்கு மன அழுத்தம் வந்தா குடிப்ப, அது தப்பில்லை. ஆனா அதே ஒரு பொண்ணு செய்தா, அவங்களை நீ எதோ கெட்டவங்க ரேஞ்சுக்கு பேசுவ அப்படித்தானே” என்றவளை இப்பொழுது அதிசயமாக பார்த்தான்.









 




Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
“எப்போ இருந்து நீ இப்படி குடிமகளுக்கு எல்லாம் சப்போர்ட் செய்ய ஆரம்பிச்ச. எனக்கு தெரிஞ்ச சக்திக்கு, இப்படி குடிகிறவங்களை வசை பாடியே தீர்ப்பா,இப்போ என்னாச்சு சக்தி?” என்று கேட்டான் சிவா.

“இப்போவும் நான் அதே சக்தி தான், ஆனா நான் இப்போ பேசுறது இந்த கேஸ் பத்தி” என்று கூறிய சக்தியை கூர்மையுடன் பார்த்தான்.

“அந்த பொண்ணு அன்னைக்கு அந்த பப்பிற்கு வந்தது முதல் தடவை. அன்னைக்கு தான் முதல் முறையா குடிச்சு இருக்கா, எசாக்டா சொல்லணும் அப்படினா குடிக்க வச்சு இருக்காங்க” என்று கூறிவிட்டு அதன் ஃபுட்டெஜ் எடுத்து காட்டினாள் அவனிடம்.

அதை பார்த்தவனுக்கு பயங்கர அதிர்ச்சி, அவன் கையில் சேர்த்த ஆதாரங்கள் வேறு, ஆனால் இங்கே நடந்ததோ வேறு. அவனின் குழம்பிய முகத்தை பார்த்து, அவள் எல்லாவற்றையும் விளக்கி கூறினாள்.

இப்பொழுது அவள் மீது இன்னும் அதிகமாக காதல் வயப்பட்டான், ஆம் அவளின் மேல் உள்ள காதலினால் தான் இந்த கேஸ் விஷயமாக அவன் இவ்வளவு தூரமாக அவளிடம் கெஞ்சியது.

ஆனால், அவள் இந்த கேசை அடி நுனி முதல் எல்லாவற்றையும், தன்னை விட நன்றாகவே ஆராய்ந்து இருப்பதை பார்த்து அவளுக்கு இந்த துறையின் மீது உள்ள காதலை நன்றாக உணர்ந்தான்.

“ஆல் தி பெஸ்ட் சக்தி! நான் கண்டிப்பா உனக்கு ஹெல்ப் பண்ணுறேன், அப்புறம் ஒன்னு கேட்கணும் கோச்சிக்க கூடாது” என்றவனை பார்த்து இப்பொழுது சிரித்தாள்.

அந்த சிரிப்பில், நீ கேளு கோபப்படனுமா வேண்டாமா அப்படினு நான் டிசைடு செய்து கொள்கிறேன் என்று அவனுக்கு புரியவும் அவனும் சிரித்தான்.

“இப்போவும் குடிக்கிறவங்களை கண்டாலே பிடிக்காது அப்படினு சொல்லுற, அப்புறம் எப்படி குடிக்கிற ப்ரெண்ட்ஸ் உனக்கு?” என்று அவன் சந்தேகத்தை கேட்கவும், அவள் சிரித்தாள்.

“அவங்க ரெண்டு பேரும், அமெரிக்கால இருந்துட்டு வந்தவங்க. இங்க வந்து ரெண்டு வருஷம் ஆகிடுச்சு, மெதுவா இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமா குறைச்சிகிட்டு வராங்க”.

“அங்க பார்ட்டி, மீட்டிங் எல்லாம் இதை குடிச்சு பழகிட்டாங்க. வந்த புதிதில், எப்போவும் குடிப்பாங்க. ஆனா எனக்கு பிடிக்கல அப்படினு தெரியவும், ரீசன் கேட்டாங்க குடிகிறதால வர பாதிப்புகள் பத்தி சொன்னேன், அப்புறம் இதால பாதிக்கப்பட்ட குடும்பங்கள் எல்லாம் எத்தனை அப்படினு ஒரு லைவ் ஷோ காட்டினேன், திருந்திடாங்க”.

“இன்னும் முழுசா நிறுத்தல, ஆனா கண்டிப்பா நிறுத்த வச்சிடுவேன்” என்று கூறிய சக்தியை பார்த்து இப்பொழுது வியந்தான்.

“அப்போ, நானும் நிறுத்திடுவேன் போலயே இந்த பழக்கத்தை. சீக்கிரம் இதுக்காகவே இன்னும் கொஞ்சம் முன்னாடி, ஒரு மாசத்துலையே உன்னை கட்டிக்கிறேன்” என்றவனை பார்த்து அழகாக சிரித்தாள்.

“நிஜமா இதான் காரணமா! இல்லை வேற காரணமா?” என்று சக்தி கேட்கவும், அவன் குறும்பாக சிரித்தான்.

“ரெண்டு காரணம், முதல் காரணம் இந்த குடியை சீக்கிரம் நிறுத்திக்கலாம். ரெண்டாவது தான் ரொம்ப முக்கியம், இந்த சிவா மனசுல இந்த சக்தி எப்படி நிறைஞ்சு போய் இருக்கான்னு உனக்கு நான் காட்ட வேண்டாமா?” என்று கண்ணடித்து கூறியவனை பார்த்து இப்பொழுது வெட்கம் கொண்டாள்.

அதன் பின் அந்த கேஸில் இவள் வாதாடி, அந்த பெண்ணிற்கு நடந்த அநியாயத்தை எடுத்து கூறியதோடு, இந்த குடியால் நாட்டுக்கும் வீட்டுக்கும் எவ்வாறு எல்லாம் கேடு என்பதை இதன் மூலம் நிரூபித்தாள்.

இந்த கேஸ் நடக்க விடாமல் செய்ய இருந்த அந்த பெரிய தலைகளை எல்லாம், சிவா தன் நண்பர்கள் உதவியுடன் சக்திக்கு எந்த ஆபத்தும் நேராமல் பார்த்துக் கொண்டான்.

அது மட்டுமில்லாமல், வேறு சில கேஸ்களில் அந்த பெரிய தலைகளை எல்லாம் மாட்டிவிட்டு, அவர்கள் கவனம் இங்கே சக்தியின் மேல் படாமல் பார்த்துக் கொண்டான்.

அடுத்த ஒரு மாதத்தில், சிவாவின் பிடிவாதத்தில் இவர்களின் திருமணம் நடந்து இருந்தது. சக்தியை கைப்பற்றிய சிவா மனதில் மட்டும் இல்லை, சக்தியின் மனதிலும் சிவா நிறைந்து இருந்தான், காரணம் அவளுக்காக அவன் குடியை நிறுத்திக் கொண்டான்.

இனியும் குடிப்பது இல்லை, மன அழுத்தம் வந்தால் இனி சக்தியே சரணம் என்றதில் அவளுக்கு வெட்கம் வந்தாலும், அவளின் மேல் அவன் கொண்ட காதலை நினைத்து அவள் மனதில் சிவா உயர்ந்து இருந்தான்.

முற்றும்..
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D சூப்பர் ஷார்ட் ஸ்டோரி, உமா டியர்
வெளிநாட்டில் குடித்து பழகியதால் இங்கேயும் குடிக்கும் தோழிகளை திருத்துவதைப் பற்றி அழகாக சொல்லியிருக்கீங்க
 




Last edited:

Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,688
Reaction score
35,222
Location
Vellore
முதல் முயற்சி போல தெரியல சகி, கதையை நேர்த்தியாய் கையாண்டு இருக்கீங்க, குடியின் பாதிப்பை சுட்டி காட்டி, காதலை தளும்பாம தந்திருக்கீங்க. அருமை சகி ??????❤ ❤❤
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top