• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சீரடி சாயிபாபா ஆரத்தி - ஒரு அறிமுகம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
(7) ஸ்ரீஸாயிநாத மஹிமா ஸ்தோத்ரம்

1. ஸதா ஸத்ஸ்வரூபம் சிதானந்தகந்தம்
ஜகத்ஸம்பவஸ்தான ஸம்ஹார ஹேதும்
ஸ்வபக்தேச்சயா மானுஷம் தர்சயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

2. பவத்வாந்தவித்வம்ஸ மார்த்தாண்டமீட்யம்
மனோவாகதீதம் முனிர்த்யான கம்யம்
ஜகத்வ்யாபகம் நிர்மலம் நிர்குணம் த்வாம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

3. பவாம்போதி மக்னார்திதானாம் ஜனானாம்
ஸ்வபாதாச்ரிதானாம் ஸ்வபக்திப்ரியாணாம்

உடுத்தியுள்ளாய். தலையில் ஜடையும் அதன்மேல் கிரீடம் போன்று நாகமும் விளங்குகிறது.

4. எவர் உன்னைத் தினமும் தியானம் செய்கிறார்களோ, அவர்கள் வீடுகளில் லட்சுமி தேவி இரவும், பகலும் எப்போதும் தொடர்ந்து நீங்காது வசிக்கிறாள். அவர்களது கஷ்டங்களை போக்கி நவநிதிகளையும் அளித்து சுகவாழ்வு அருளுகிறார்கள்.

5. ஓ! குருராயா! உங்கள் அழகிய உருவத்தை பார்க்கும் பொழுது எல்லாம் நான் பரமானந்தத்தை அநுபவிக்கிறேன். ஹரியின் குணங்களை போற்றிப்பாடும் பாட்டுகளால் அவர்களது உடலை பூரண ஆனந்த சுகத்தில் ஆழ்த்துகிறீர்கள்.

(7) ஸ்ரீசாயி நாத மஹிம்ன ஸ்தோத்ரம்

1. எப்பொழுதும் ஆனந்தத்தோடு கூடிய உருவத்துடன் உண்மையான அவதாரமாய் பேரின்ப பெரு உணர்வோடு விளங்கி, இந்த உலகத்தை தோற்றுவித்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் புரியும் ஈஸ்வரா. பக்தர்களின் விருப்பத்திற்கு பணிந்து, மனித உருவெடுத்து வந்த இறைவா! வணங்குகிறேன்! என் இறைவனாய் சத்குருவாய் விளங்குபவரே.

2. அஞ்ஞான இருட்டை போக்கும் சூரியன் நீ. மனம், சொற்கள் ஆகியவற்றிற்கு அப்பால் நின்று எட்டாதவர். உங்களையே சதா தியானம் செய்யும் ஞானிகள் மட்டும் உம்மை தொடர்பு கொள்ள முடியும். உலகெங்கிலும் வியாபித்துள்ளவரும், முக்குணங்கள் அற்றவருமான சாயிநாரை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே!

3. சம்சாரக் கடலில் மூழ்கியுள்ள மக்களில் தங்கள் பாதங்களை சரணடைந்தவர்களையும், தங்களிடம் பக்தி செலுத்துபவர்

ஸமுத்தாரணார்த்தம் கலௌ ஸம்பவந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

4. ஸதா நிம்பவ்ருக்ஷஸ்ய மூலாதிவாஸாத்
ஸுதாஸ்த்ராவிணம் திக்தமப்யப்ரியம் தம்
தரும் கல்பவ்ருக்ஷாதிகம் ஸாதயந்தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

5. ஸதா கல்பவ்ருக்ஷஸ்ய தஸ்யாதிமுலே
பவேத் பாவ புத்யா ஸபர்யாதி ஸேவாம்
ந்ருணாம் குர்வதாம் புக்திமுக்தி ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

6. அனேகாச்ருதாதர்க்ய லீலாவிலாஸைஹி
ஸ்மாவிஷ்க்ருதேசான பாஸ்வத் ப்ரபாவம்
அஹம்பாவஹீனம் ப்ரஸந்நாத்மபாவம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

7. ஸதாம் விச்ராமாராமமேவாபிராமம்
ஸதா ஸஜ்ஜனை: ஸம்ஸ்துதம் ஸன்னமத்பி:
ஜனாமோததம் பக்த பத்ர ப்ரதம் தம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

8. அஜன்மாத்யமேகம் பரம் ப்ரஹ்ம ஸாக்ஷாத்
ஸ்வயம் ஸம்பவம் ராமமேவாதீர்ணம்
பவத் தர்சனாத் ஸம்புநீத: ப்ரபோ(அ) ஹம்
நமாமீச்வரம் ஸத்குரும் ஸாயீநாதம்

களையும், இந்தக் கலியுகத்தில் பிறவிக் கடலினின்றும் எங்களை கரையேற்ற வந்த சாயிபாபா உம்மை வணங்குகிறேன். என் இறைவனாய், சத்குருவாய் விளங்குபவரே.

4. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் வசித்துவந்து, அதன் கசப்பான இலைகளை அம்ருதமாக மாற்றி கசப்பாகவும் விரும்பத்தகாததாகவும் இருந்த அந்த மரத்தை கற்பக மரத்தைக் காட்டிலும் உயர்ந்ததாகச் செய்த இறைவா! என் இறைவன் சத்குருவை வணங்குகிறேன்.

5. வேப்பமரத்தடியில் எப்பொழுதும் உட்கார்ந்திருந்து தங்களையே கற்பக விருட்சமாக எண்ணி தங்களிடம் பக்தியோடு தொண்டு செய்யும் மனிதர்களுக்கு, புக்தி, முக்தி போகங்களை அளித்திடும் இறைவா. என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

6. இதற்கு முன் கேட்கப் படாதவையும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட அற்புதங்களை நிகழ்த்தி, அளவிட முடியாத உமது சக்தியை தெரியப்படுத்தியவரும், அகங்காரமற்ற வரும், எப்போதும் மகிழ்ச்சியோடு கூடிய ஆத்ம பாவத்தோடு விளங்கும் இறைவா! என் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

7. மகான்களின் நிரந்தர இளைப்பாறும் இடமாகவும், எப்பொழுதும் நல்ல மனிதர்களால் போற்றப்படுபவரும், மக்களுக்கு மகிழ்ச்சியையும், நல் வாழ்வையும் அளிப்பவருமான இறைவா! எம் இறைவன் சத்குரு சாயிநாதரை வணங்குகிறேன்.

8. பிறப்பு, இறப்பு அற்ற பரப்ரம்மமே! ஆரம்பமும் முடிவும் இல்லாதவராக தானாகவே தோன்றிய ஸ்ரீராமரே! ஓ! ப்ரபு! உமது தரிசனத்தால் நான் புனிதமடைந்தேன். என் இறைவா! சத்குருசாயிநாதா! வணங்குகிறேன்.

ஸ்ரீஸாயிச க்ருபாநிதே அகில ந்ருணாம், ஸர்வார்த்த
ஸித்திப்ரத யுஷ்மத் பாதரஜ: ப்ரபாவமதுலம்
தாதா (அ) பி வக்தாக்ஷம: ஸத்பக்த்யா சரணம்
க்ருதாஞ்சலி புட: ஸம்ப்ராபிதோ (அ) ஸ்மி ப்ரபோ
ஸ்ரீமத் ஸாயீபரேச பாதகமலாந் நான்யச் சரண்யம் மம

ஸாயி ரூபதா ராகவோத்தமம்
பக்தகாம விபுதத்ருமம் ப்ரபும்
மாயயோபஹத சித்த சúத்தயே
சிந்தயாம்யஹமஹர் நிசம் முதா
சரத் ஸுதாம்சúப்ரதிமப்ரகாசம்
க்ருபாதபத்ரம் தவ ஸாயிநாத
த்வதீய பாதாப்ஜ ஸமாச்ரிதானாம்
ஸ்வச் சாயயா தாபமபாகரோது
உபாஸனா தைவத ஸாயீநாத
ஸ்தவைர் மயோபாஸனினா ஸ்துதஸ்த்வம்
ரமேன் மனோ மே தவ பாதயுக்மே
ப்ருங்கோ யதாப்ஜே மகரந்தலுப்த:
அநேக ஜன்மார்ஜித பாபஸம்க்ஷயோ
பவேத் பவத் பாத ஸரோஜதர்சனாத்
க்ஷமஸ்வ ஸர்வான் அபராதபுஞ்ஜகான்
ப்ரஸீத ஸாயீச குரோ தயாநிதே
ஸ்ரீஸாயீநாத சரணாம்ருத பூதசித்தா:
தத்பாதஸேவனரதா: ஸததம் ச பக்த்யா
ஸம்ஸார ஜன்ம துரிதௌக விநிர்கதாஸ்தே
கைவல்ய தாம பரமம் ஸமவாப்னுவந்தி
ஸ்தோத்ரமேதத் படேத் பக்த்யா

9. ஓ! சாயீசா! கருணைக்கடலே! எல்லா மக்களுக்கும் அவர்களின் எல்லா ஆசைகளையும் முழுமையாக்குபவரே. உம்முடைய பாதத் தூசின் சக்தியை பிரம்மாவால் கூடக் கூற முடியாது. நல்லபக்தியோடு, கைகளை குவித்து உமது பாதங்களை சரணடைந்தேன். ஸ்ரீசாயிநாதக் கடவுளின் பாதங்களின்றி வேறு புகலிடம் எதுவும் எனக்குத் தெரியாது.

10. சாயியின் உருவத்தைத்தாங்கிய புகழ்பெற்ற இராகவனே (இராமனே), பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றித் தரும் ப்ரபோ! மாயையால் சூழப்பட்ட என் சித்தத்தை தூய்மைப்படுத்தி, மன மகிழ்ச்சியோடு உம்மை இரவும் பகலுமாக தினமும் நினைக்கிறேன்.

11. சரத்காலத்து சந்திரனைப் போல ஒளிவிடும் பாபா! உமது கருணையென்னும் இலைகளை குடையாகக் கொண்டு உம் விருப்பங்களை அண்டி வந்தவர்களுக்கு உமது கருணை நிழலைத் தந்து அவர்களின் மூன்றுவித தாபங்களினின்றும் காப்பாற்றுங்கள்.

12. ஓ! சாயிநாதா! இத்தகைய வழி முறைகளாலும், துதிகளாலும் உம் திருவடிகளை போற்றிப் பணிந்து நிற்கின்றோம். தேனைவிரும்பும் வண்டு மலரை சுற்றிச் சுற்றி வருவதுபோல் என் மனம் எப்பொழுதும் தங்கள் பாத கமலங்களையே நாடி நிற்கட்டும்.

13. உமது பாதங்களை தரிசிப்பதன் மூலமாக அநேக பிறவிகளில் செய்த பாவங்கள் எல்லாம் அழிந்து போகின்றன. எனது பாவச் செயல்களையெல்லாம் மன்னித்தருள்வாயாக, எம்மை ஏற்றுக்கொள்வீர் சத்குருவே! தயா நிதியே!

14. ஸ்ரீ சாயி நாதரின் பாத அம்ருதத்தால் சித்தம் சுத்தியடைந்த பக்தர்கள் தங்கள் பாதங்களைப் பற்றி எப்பொழுதும் சேவை

யோ நரஸ் தன்மனா: ஸதா
ஸத்குரோஸ் ஸாயீநாதஸ்ய
க்ருபா பாத்ரம் பவேத் த்ருவம்
ஸாயீநாத க்ருபா ஸ்வர்த்ருஸத்
பத்ம குஸுமாவலி:
ச்ரேயஸேச மன: சúத்யை
ப்ரேம ஸூத்ரணே கும்பிதா
கோவிந்தஸூரிபுத்ரேண காஸீநாதாபிதாயினா
உபாசனீத் யுபாக்யேன ஸ்ரீஸாயீ குரவே (அ) ர்பிதா
(இதி ஸ்ரீ ஸாயீநாத மஹிம்ன ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம்)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
சீரடி சாயிபாபா ஆரத்தி பாடல்கள் பகுதி - 4

(8) ஸ்ரீகுரு ப்ரஸாத யாசனா தசகம்

1. ருஸோ மம ப்ரியாம்பிகா, மஜவரீ பிதாஹீ ருஸோ
ருஸோ மம ப்ரியாங்கனா, ப்ரியஸுதாத்மஜாஹீ ருஸோ
ருஸோ பகினி பந்துஹீ, ச்வசúர ஸாஸுபாயீ ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

2. புஸோ ந ஸூநபாயீ த்யா, மஜ ந ப்ராத்ருஜாயா புஸோ
புஸோ ந ப்ரிய ஸோயரே, ப்ரிய ஸகே ந க்ஞாதீ புஸோ
புஸோ ஸுஹ்ருத நா ஸகா, ஸ்வஜன நாப்தபந்தூ புஸோ
பரீ ந குரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

3. புஸோ ந அபலா முலே, தருண வ்ருத்தஹீ நா புஸோ
புஸோ ந குரு தாகுடே, மஜ ந தோர ஸானே புஸோ
புஸோ நச பலேபுரே, ஸுஜன ஸாதுஹீ நா புஸோ
பரீ ந குரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

புரிந்து சம்சாரத் துயிரிலிருந்து விடுபட்டு மேலான இன்பமும் முக்திநிலையும் அடைகின்றனர்.

15. பக்தியுடன் முழு ஈடுபாட்டுடன் சாயி நாதரைப் பற்றிய இந்தத் துதி மலையை எப்பொழுதும் அவர்கள் வாழ்நாள் முடியும் வரை படிக்கும் எல்லாமக்களும் சத்குரு சாயி நாதரின் திருவருளுக்கு பாத்திரமாவர்கள் என்பது உறுதி.

(8) ஸ்ரீகுரு ப்ரஸாத யாசனா தசகம்

1. எனது அன்புத்தாய், தந்தை, மனைவி, மகன், மகள், சகோதர, சகோதரி, மாமனார், மாமியார் எவர் என் மீது கோபப்பட்டாலும், தத்தகுருவான என் தாய் சாயி நாதர் மட்டும் என் மீது எப்போதும் கோபப்படாமல் இருக்கட்டும்.

2. எனது மருமகள், சகோதரன் மனைவி, பிரியமான உறவினர்கள், வாரிசுதாரர்கள், நெருங்கிய நண்பர்கள் நெருங்கிய சுற்றத்தினர், உற்றார், உறவினர் எவரும் என்னைப் பற்றி அக்கறை கொள்ளாமல் போனாலும் குருவாகிய தாய் சாயி மட்டும் என் மேல் ஒரு போதும் கோபப்படாமல் இருக்கட்டும்.

3. பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், வயது முதிர்ந்தவர்கள் என்னைவிட வயதில் பெரியவர்களும், சிறியவர்களும், நல்லவர்களும், கெட்டவர்களும், மழலைகளும் பரிசுத்தமான சாதுக்களும், விரோதிகளும்.

4. ருஸோ சதுர தத்வவித், விபுதப்ராக்ஞ ஞானீ ருஸோ
ருஸோஹீ விதுஷீ ஸ்த்ரியா, குசலபண்டிதாஹீ ருஸோ
ருஸோ மஹிபதீ யதீ பஜக தாபஸீஹீ ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

5. ருஸோ கவி ரீஷீ முனீ அநக ஸித்த யோகீ ருஸோ
ருஸோ ஹி க்ருஹதேவதா, நி குலக்ராமதேவீ ருஸோ
ருஸோ கல பிசாச்சஹீ, மலின டாகினீஹீ ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

6. ருஸோ ம்ருக கக க்ருமீ, அகில ஜீவஜந்தூ ருஸோ
ருஸோ விடப ப்ரஸ்தரா அசல ஆபகாப்தீ ருஸோ
ருஸோ க பவனாக்னி வார அவனி பஞ்சதத்வே ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

7. ருஸோ விமலகின்னரா அமல யக்ஷிணீஹீ ருஸோ
ருஸோ சசிககாதிஹீ, ககனி தாரகாஹீ ருஸோ
ருஸோ அமரராஜஹீ, அதய தர்மராஜா ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

என்னைப் பற்றி விசாரிக்காமல் என் மீது அக்கறை கொள்ளாமல் போனாலும் குரு சாயி நாதராகிய தாய் மட்டும் ஒரு போதும் என்மீது கோபங்கொள்ளாமல் இருக்கட்டும்.

4. புத்திசாலிகளான வேதாந்திகள், அறிவு மிகுந்த ஞானிகள், கல்வியறிவு பெற்ற பெண்கள், தேர்ந்த பண்டிதர்கள், அரசன், துறவி, பக்தன், தவம் புரிபவன் ஆகிய அத்தனைபேரும் என்பால் முகம் சுளித்தாலும் தத்தகுருநாதராகிய ஸாயீ தாய் மட்டும் ஒருபோதும் என்மீது கோபங்கொள்ளாமல் இருக்கட்டும்.

5. கவிகள், ரிஷிகள், முனிவர்கள், களங்கமற்ற சித்தயோகிகள், வீட்டு தெய்வங்கள், கிராம தேவதைகள், கொடிய பிசாசுகள், பாவியான பாகினி முதலிய தேவதைகள் எல்லோரும் என் மீது கோபமடைந்தாலும் தத்தகுரு சாயிநாத தாய் மட்டும் என் மேல் ஒரு போதும் கோபம் கொள்ளாமல் இருக்கட்டும்.

6. மிருகங்களும், பறவைகளும், கிருமிகளும் ஏன் உயிரினங்கள் மொத்தமுமே என் மீது கோபங்கொள்ளட்டும். மரங்கள், கற்கள், மலைகள், நதிகள், கடல், ஆகாயம், காற்று, நெருப்பு, தண்ணீர், பூமி ஆகிய ஐந்து தத்துவங்களும் என் மேல் கோபங்கொண்டாலும் சத்குருவான சாயி அன்னை மட்டும் என் மேல் ஒருபொழுதும் கோபங்கொள்ளாமல் இருக்கட்டும்.

7. தூயகின்னரர்களும், களங்கமற்ற யட்சிணகளும், சந்திரன், சூரியன் முதலான நவக்கிரகங்களும், வானில் உள்ள நட்சத்திரங்கள் அனைத்தும், அமரத்வம் கொண்ட இந்திரன், கருணையில்லாத எமன் ஆகிய அனைவரும் என் மீது கோபங்கொண்டாலும் சத்குருவான சாயி அன்னை மட்டும் என் மேல் ஒரு போதும் கோபங்கொள்ளாமல் இருக்கட்டும்.

8. ருஸோ மன ஸரஸ்வதீ, சபலசித்த தேஹீ ருஸோ
ருஸோ வபு திசாகிலா, கடிண கால தோஹீ ருஸோ
ருஸோ ஸகல விச்வஹீ, மயி து ப்ரஹ்மகோல ருஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, மஜவரீ கதீஹீ ருஸோ

9. விமூட ம்ஹணூநீ ஹஸோ, மஜ ந மத்ஸராஹீ டஸோ
பதாபிரூசி உல்ஹஸோ, ஜனனகர்தமீ நா பஸோ
ந துர்க த்ருதிசா தஸோ, அசிவபாவ மாகே கஸோ
ப்ரபஞ்சி மன ஹே ருஸோ, த்ருட விரக்தி சித்தீ டஸோ

10. குணாசிஹி க்ருணா நஸோ, ந ச ஸ்ப்ருஹா கசாசீ அஸோ
ஸதைவ ஹ்ருதயீ வஸோ, மனஸி த்யானி ஸாயீ வஸோ
பதீ ப்ரணய வோரஸோ, நிகில த்ருச்ய பாபா திஸோ
ந தத்தகுரு ஸாயீ மா, உபரி யாசனேலா ருஸோ

(9) புஷ்பாஞ்சலி

ஸ்ரீகுருதேவ தத்தா

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸஞ்சத
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

8. எனது வாக்கு, சபலமுடைய எனது சித்தம், உடல், எல்லாத்திசைகளும் எங்கும் பரவியுள்ளகாலம், மூன்று உலகங்கள், இந்தப் பிரபஞ்சமே என்னிடம் கோபித்தாலும் சத்குருவான என் சாயித்தாய் மட்டும் என்மீது ஒருபொழுதும் கோபங்கொள்ளாமல் இருக்கட்டும்.

9. என்னை முட்டாள் என்று கருதி பிறர் சிரிக்கட்டும், பொறாமை என்றும் பாம்பு என்னைக் கடிக்காமல் இருக்கட்டும். குருவின் பாதங்களில் உள்ள பற்று மகிழ்ச்சியை தரட்டும். ஆனால் பிறப்பு என்ற சகதியில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பேனாக. யார் மீதும் கெட்ட எண்ணங்கள் கொள்ளாமல் இருப்பேனாக. மனம் இந்த உலகை மறக்கட்டும். என் சித்தத்தில் தங்கள் மீது உறுதியான பக்தி மலரட்டும்.

10. விருப்பு வெறுப்பற்ற அன்பு ஒன்றால் மட்டுமே தூய்மைப்படுத்தப்பட்ட என் மனம் என்னும் கோவிலில் நிலையாக என்றும் எழுந்தருள்வாய், சாயி என் மனதில் தியானத்தில் வசிப்பாய். குருவின் பாதங்களில் அன்பு பொங்கட்டும். உலகம் முழுவதும் பாபாவாகவே காட்சி அளிக்கட்டும், சத்குருவான சாயி அன்னை மேலே கூறப்பட்டுள்ள வேண்டுகோள்களை பிரார்த்தனைகளை கோபங்ககொள்ளாமல் நிறைவேற்றிதரட்டும்.

(9) புஷ்பாஞ்சலி

ஸ்ரீகுருதேவ தத்தா

ஹரி: ஓம் யக்ஞேன யக்ஞமயஜந்த தேவாஸ்தானி
தர்மாணி ப்ரதமாந்யாஸன்
தே ஹ நாகம் மஹிமான: ஸஞ்சத
யத்ர பூர்வே ஸாத்யா ஸந்தி தேவா:

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாது குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்யந்தாயா ஏகராளிதி

ததப்யேஷ ச்லோகோ (அ) பி கீதோ மருதம்
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா:
ஸபாஸத இதி

ஸ்ரீநாராயண வாஸுதேவ ஸச்சிதானந்த
ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜய

(10) ப்ரார்த்தனா

கரசரண க்ருதம் வாக் காயஜம் கர்மஜம் வா
ச்ரவண நயனஜம் வா மானஸம் வா (அ) பராதம்
விதிதம விதிதம் வா ஸர்வமேதத்க்ஷமஸ்வ
ஜய ஜய கருணாப்தே ஸ்ரீப்ரபோ ஸாயீநாத
ஸ்ரீஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ் கீ ஜய்

ஓம் ராஜாதிராஜ யோகிராஜ
பரப்ரஹ்ம ஸாயீநாத மஹராஜ்
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு
ஸாயீநாத் மஹராஜ் கீ ஜய்

ஓம் ராஜாதிராஜாய ப்ரஸஹ்யஸாஹினே
நமோ வயம் வைச்ரவணாய குர்மஹே
ஸ மே காமாந் காமகாமாய மஹ்யம் காமேச்வரோ
வைச்ரவணோ ததாது குபேராய வைச்ரவணாய
மஹாராஜாய நம:

ஓம் ஸ்வஸ்தி ஸாம்ராஜம் பௌஜ்யம் ஸ்வாராஜ்யம்
வைராஜ்யம் பாரமேஷ்ட்யம் ராஜ்யம்
மாஹாராஜ்யமாதிபத்ய மயம் ஸமந்தபர்யாயீ ஸ்யாத்
ஸார்வபௌம: ஸார்வாயுஷ்ய ஆந்தாதாபரார்த்தாத்
ப்ருதிவ்யை ஸமுத்ரபர்ய்ந்தாயா ஏகராளிதி:

ததப்யேஷ ச்லோகோ (அ) பி கீதோ மருதம்
பரிவேஷ்டாரோ மருத் தஸ்யாவஸங்க்ருஹே
ஆவிக்ஷிதஸ்ய காமப்ரேர் விச்வேதேவா:
ஸபாஸத இதி

ஸ்ரீநாராயண வாஸுதேவ ஸச்சிதானந்த
ஸத்குரு ஸாயிநாத் மஹாராஜ்கீ ஜய

(10) சேவடஸி ப்ரார்த்தனா

கைகள், கால்கள், உடல், வார்த்தைகள் ஆகியவற்றால் மட்டுமின்றி என் காதுகள், கண்கள், மனம் ஆகியவற்றால் நான் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தையும் மன்னித்து அருள்வீர்.

ஸ்ரீசச்சிதானந்த சத்குரு ஸ்ரீசாயிநாத
மகராஜிக்கு வெற்றி உண்டாகட்டும்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
4. சேஜ் ஆரத்தி (இரவு)

(1) பாஞ்சாஹீ தத்வாம்சீ ஆரதீ

1. ஓவாளூ ஆரதீ மாஜ்யா ஸத்குருநாதா, மாஜ்யா ஸாயீநாதா
பாஞ்சாஹீ தத்வாம்சா தீப லாவிலா ஆதா
நிர்குணாசீ ஸ்திதி கைஸீ ஆகாரா ஆலீ, பாபா ஆகாரா ஆலீ
ஸர்வா கடீ பரூனி உரலீ ஸாயீ மாஉலீ (ஓவாளூ)

2. ரஜ தம ஸத்வ திகே மாயா ப்ரஸவலீ, மாஜ்யாவர மாயா ப்ரஸவலீ
மாயேசியே போடீ கைஸீ மாயா உத்பவலீ (ஓவாளூ)

3. ஸப்தஸாகரீ கைஸா கேள மாண்டீலா, பாபா கேள மாண்டீலா
கேளூனியா கேள அவகா விஸ்தார கேலா (ஓவாளூ)

4. ப்ரஹ்மாண்டீசீ ரசனா கைஸீதாகவிலீ டோளா, பாபா தாகவிலீ டோளா!
துகாம்ஹணே மாஜா ஸ்வாமீ க்ருபாளூ போளா (ஓவாளூ)

(2) ஆரதீ ஞானராயாசீ

ஆரதீ ஞானராஜா, மஹாகைவல்யதேஜா
ஸேவிதீ ஸாதுஸந்த, மனு வேதலா மாஜா (ஆரதீஞானராஜா)

4. சேஜ் ஆரத்தி (இரவு)

(1)

1. சத்குரு சாயிநாதா! ஆரத்தி காட்டுகிறேன். தீப ஆரத்தி காட்டுகிறேன். ஐந்து தத்துவங்களாகிய தீபத்தை உங்களுக்கு காட்டுகிறேன், குணங்கள் அற்ற நிலையில் இருக்கும் சாயி நீங்கள் எவ்வாறு ஒரு உருவமெடுத்த நிலையில் தோன்றினீர்கள். எங்கும் நிறை பாபா! காலத்தின் முடிவில் தொடப்படாமல் மீதம் இருப்பவர் என் அன்னை சாயி மட்டுமே.

2. மாயையால் தோன்றியவையே ரஜஸ, தமஸ, சத்வ குணங்கள். மாயையின் வயிற்றில் மாயையாகிய உலகம் எவ்வாறு உண்டானது? மாயையால் சூழப்பட்டுள்ளான்.

3. எவ்வாறு ஏழு கடல்களையும் நீ விளையாடும் மைதானமாகக் கொண்டு, பிறகு உன் திரு விளையாடல்களை மேலும், மேலும் விரிவாக்கிக் கொண்டாய். (சத்குரு) எவ்வாறு இந்த தெய்வீக விளையாட்டு படைப்பு முழுவதும் பரவியது?

4. பார்க்கும் கண்களின் மூலம் உன் படைப்பையும், பிரபஞ்சத்தையும் காணச் செய்தாய். எனது ஸ்வாமி சத்குருநாதர் சாயி நாதர் அருள் மிகுந்தவரும், கபடம் இல்லாதவரும் என்கிறார் ஞானி துக்காராம்.

(2)

ஞானேச்வர் மகாராஜுக்கு ஆரத்தி காட்டுகிறேன். மகா கைவல்யதேஜா, சாதுவான மகாத்மாக்கள் உங்களை வணங்குகிறார்கள்! என் மனம் உன்னிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. (ஆரத்தி)

1. லோபலே ஞானஜகீ, ஹித நேணதீ கோணீ
அவதார பாண்டுரங்க, நாம டேவிலே ஞானீ (ஆரதீ...)

2. கனகாசே தாட கரீ, உப்யா கோபிகா நாரீ
நாரத தும்பர ஹோ, ஸாமகாயன கரீ (ஆரதீ...)

3. ப்ரகட குஹ்ய போலே, விச்வ ப்ரஹ்மசி கேலே
ராம ஜனார்தனீ, பாயீ மஸ்தக டேவிலே (ஆரதீ...)

(3) ஆரதீ துகாராமாசீ

1. ஆரதீ துகாராமா, ஸ்வாமீ ஸத்குருதாமா
ஸச்சிதானந்த மூர்தி, பாய தாகவீ ஆம்ஹாம் (ஆரதீ...)

2. ராகவே ஸாகராத, ஜையே பாஷாண தாரிலே
தைஸே ஹே துகோபாசே, அபங்க ரக்ஷிலே (ஆரதீ...)

3. துகிதா துலநேஸீ, ப்ரஹ்ம துகாஸீ ஆலே
ம்ஹணோநீ ராமேச்வரே, சரணீ மஸ்தக டேவிலோ (ஆரதீ...)

(4) ஜய ஜய ஸாயீநாத

1. ஜய ஜய ஸாயீநாத ஆதா பஹுடாவே மந்திரீ ஹோ
ஜய ஜய ஸாயீநாத ஆதா பஹுடாவே மந்திரீ ஹோ
ஆளவிதோ ஸப்ரேமே துஜலா ஆரதீ கேஉனி கரீ ஹோ
ஜய ஜய ஸாயீநாத ஆதா பஹுடாவே மந்திரீ ஹோ

1. அறியாமையால் நாங்கள் தவித்துக்கொண்டு இருக்கும் பொழுது அறிவைப் புகட்டி அறியமையை நீக்க மனித உருவில் அவதரித்த பாண்டுரங்கா, ஞான மூர்த்திரங்கா. (ஆரத்தி)

2. கைகளில் தங்கத்தட்டுக்களை ஏந்திக் கொண்டு கோபிகைகள் ஆரத்தி காட்டுகிறார்கள். நாரதரும், தும்புருவும் சாமகானம் பாடுகிறார்கள்.

3. பிரம்மா இந்த பிரபஞ்சத்தை படைத்தார் என்ற இரகசியத்தை உலகம் அறியச் செய்தாய். ராம ஜனார்த்தன ஸ்வாமி உமது பாதங்களில் தலை சாய்த்து வணங்குகிறார்.

(3)

1. துக்காராமருக்கு ஆரத்தி காட்டுகிறேன். ஸ்வாமி சத்குருராயா! சச்சிதானந்த மூர்த்தியாய் இருப்பவரே உமது பாததரிசனம் தந்து எங்களுக்கு கருணைகாட்டு.

2. இராமபிரான் கடலில் கற்களை மிதக்கச் செய்தது போல துக்காராமின் அபயங்களை (துக்காராமின் அபயங்களை தேகூ நகருக்கு அருகில் இந்திரயாணி ஆற்றில் வீசப்பட்டன.) நீரில் மிதக்கச் செய்து காப்பாற்றினாய் (ஆரத்தி)

3. புகழில் துகாராம் பிரம்மத்திற்கு இணையானவர் ஆவார் என்று கூறுகிறார் ராமேச்வர். (ராமேச்வர் துகாராமின் மீது பொறாமை கொண்டு ஆற்றில் புத்தகங்களை எறிந்தார்.) துகாராமின் பாதங்களில் தலையை வைக்கிறார். (ஆரத்தி)

(4)

1. சாயி நாதரே! உமக்கு வெற்றி உண்டாகட்டும். இப்போது இந்தக் கோவிலில் உறங்குங்கள். நாங்கள் உங்களுக்கு அன்போடுகாட்டும் ஆரத்தியை ஏற்றுக்கொள்ளுங்கள். (ஜய்) இப்பொழுது வந்து இந்தக் கோவிலில் உறங்குங்கள்.

ரஞ்ஜவிஸீ தூ மதுர போலுனீ மாய ஜஸீ நிஜ முலா ஹோ
போகிஸி வ்யாதீ தூச ஹருநியா நிஜ ஸேவக துக்காலா ஹோ
தாவுனி பக்த வ்யஸன ஹரிஸீ தர்சன தேஸீ த்யாலா ஹோ
ஜாலே அஸதில கஷ்ட அதீசய துமசே யா தேஹாலா ஹோ

2. க்ஷமா சயன ஸுந்தர ஹீ சோபா ஸுமன சேஜ த்யாவரீ ஹா
க்யாவீ தோடீ பக்த ஜனாஞ்சீ பூஜனாதி சாகரீ ஹோ
ஓவாளிதோ பஞ்சப்ராண ஜ்யோதி ஸுமதீ கரீ ஹோ
ஸேவா கிங்கர பக்த ப்ரீதி அதர பரிமள வாரீ ஹோ

3. ஸோடுனி ஜாயா துக்க வாடதே ஸாயீ த்வச்சரணாம்ஸீஹோ
ஆக்ஞேஸ்தவ தவ ஆஸீப்ரஸாத கேவுனி நிஜ ஸதனாஸீ ஹோ
ஜாதோ ஆதா யேஊ புனரபி த்வச்சரணாஞ்சே பாஸீ ஹோ
உடவூ துஜலா ஸாயீமாவுலே நிஜஹித ஸாதாயாஸீ ஹோ

(5) ஆதா ஸ்வாமீ ஸுகே

1. ஆதர ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா அவதூதா, பாபா கரா ஸாயீநாதா
சின்மய ஹே ஸுகதாமா ஜாஉனி பஹீடா ஏகாந்தா
வைராக்யாசா குஞ்சா கேஉனி சௌக ஜாடீலா,

தன் இனிய பேச்சால் குழந்தையை மகிழ்வுறச் செய்யும் தாய் போல நீ உனது இனிய பேச்சுக்களால் எங்களை மகிழ்விக்கிறாய். உனக்குத் தொண்டு செய்பவர்களின் துன்பங்கள், துயரங்களை நீ ஏற்றுக் கொண்டு அவர்களை காக்கிறாய். விரைந்து ஓடிவந்து உம்பக்தர்களின் துன்பங்களை அழித்து அவர்களுக்கு உன் தரிசனம் தருகிறாய். எங்கள் கஷ்டங்களை ஏற்று வருந்தும் சாயி இப்பொழுது ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். (ஜய்)

2. பொறுமை என்னும் அழகிய ஒளி வீசும் மலர்களால் ஆகிய இந்தப் படுக்கையின் மீது உட்காருங்கள். உமது பக்தர்கள் பூஜை முதலிய சிற்சில சேவைகளை செய்ய அனுமதிப்பாய். பஞ்சப்ராணன்களாகிய நல்ல எண்ணங்கள் என்னும் தீபத்தை உனக்குக் காட்டுகிறேன். உனது அடியார்களான எங்களது பக்தியே உங்களுக்கு அத்தர் முதலான வாசனைப் பொருட்கள் அதையும் பன்னீரையும் இந்த எளிய வேலைக்காரன் சமர்ப்பிக்கிறேன்.

3. சாயிநாதா! உனது திருவடிகளை வணங்கிவிட்டு திரும்பிப் போக வருத்தமாயிருக்கிறது. உம் அருள் ஆசிகளுடனும், ஆணையுடனும் பிரசாதத்தைப் பெற்றுக் கொண்டு இப்பொழுது எங்கள் வீடுகளுக்கு திரும்புகிறோம். மீண்டும் மீண்டும் உங்களை தரிசிக்க எங்களுக்கு நல்வாழ்க்கை கிடைக்க பக்தியுடன் திரும்பவும் வருவோம். தாயான சாயி நாதராகிய உங்களை எழுப்பி எங்கள் நலனை நாடுவோம். (ஜய்)

(5)

1. பாபா சாயிநாதா! ஸ்வாமி! அவதூதா! அமைதியாகத் தூங்குங்கள்! கோவிலில் நாங்கள் செய்யும் ஆரத்தியை அன்போடு ஏற்றுக் கொள்ளுங்கள். சின்மயமான சுகம் தரும் தனிமையில் தூங்குங்கள்! வைராக்யம் என்னும்

பாப சௌக ஜாடீலா
த்யாவரீ ஸுப்ரேமாசா சிடகாவா திதலா (ஆதா ஸ்வாமீ)

2. பாயகட்யா காதல்யா ஸுந்தர நவவிதாபக்தீ,
பாபா நவவிதா பக்தி
ஞானாச்யா ஸமயா லாவுனி உஜளல்யா ஜ்யோதீ (ஆதா...)

3. பாவார்த்தாசா மஞ்சக ஹ்ருதயாகாஸீ டாங்கிலா,
பாபா காஸீ டாங்கிலா
மனாசீ ஸுமனே கருனீ கேலே சேஜேலா (ஆதா...)

4. த்வைதாசே கபாட லாவுனி ஏகத்ர கேலே,
பாபா ஏகத்ர கேலே
துர்புத்தீச்யா காடீ ஸோடூனி படதே ஸோடீலே (ஆதா...)

5. ஆசா த்ருஷ்ணா கல்பனேசா ஸோடூனி கலபலா,
பாபா ஸோடூனி கலபலா
தயா க்ஷமா சாந்தீ தாஸீ உப்யா ஸேவேலா (ஆதா...)

6. அலக்ஷ்ய உன்மனீ கேஉனீ பாபா நாஜுக துச்சாலா
பாபா நாஜுக துச்சாலா
நிரஞ்ஜன ஸத்குரு ஸ்வாமீ நிஜவிலே சேஜேலா (ஆதா...)

ஸத்குரு ஸாயீநாத் மஹாராஜ் கீ ஜய்
ஸ்ரீகுருதேவ தத்த

(6) ப்ரஸாத மிளண்யாகரிதா (அபங்கம்)

1. பாஹே ப்ரஸாதாசீ வாட, த்யாவே துவோனியா தாட
2. சேஷ கேவுனீ ஜாயீன, துமசே ஜாலியா போஜன
3. ஜாலோ ஆதா ஏகஸேவா, தும்ஹா ஆளவிதோ தேவா (இருமுறை)

துடைப்பத்தால் நீங்கள் படுக்கும் இடத்தை சுத்தம் செய்தோம்! அன்பு எண்ணங்கள் என்னும் நீரால் அதை தெளித்து சுத்தம் செய்தோம். (சாயி)

2. ஒன்பது வித பக்தி என்ற அழகிய விரிப்பினை விரிக்கின்றோம். ஞான மென்ற விளக்கில் சோதியை ஏற்றினேன். (சாயி)

3. என் இதயத்தில் பக்தியென்ற ஊஞ்சலை தொங்கவிட்டேன். என் மனம் என்ற பூவினால் படுக்கை தயாரித்து அதன்மேல் விரித்தேன். சுத்தமான களங்கமற்ற மனத்தால் உனக்கு படுக்கையை விரித்தேன். (சாயி)

4. இரண்டு (த்வைதம்) என்ற நினைவை நீக்கி உங்களுடன் ஒன்றானோம். கெட்டபுத்தி என்ற குணத்தை விட்டு விட்டு உங்களிடம் ஓடிவந்தோம். (சாயி)

5. ஆசைகள், ஏக்கம், தாகம், (தாபம்) கற்பனைகள் ஆகியவற்றை நீக்கி, கருணை, பொறுமை, சாந்தி ஆகிய பணிப் பெண்கள் சேவை செய்கிறார்கள். (சாயி)

6. பற்றற்ற நிலை, நினைத்துப் பார்க்க முடியாத தெய்வீக சிந்தனை என்ற இரண்டு சால்வைகளை போர்த்திக் கொண்டு துயில் கொள்வீர். என் உள்ளம் கவர்ந்த சத்குரு ஸ்வாமி துயில் கொள்வீரே. (சாயி)

(6)

நான் பிரசாதத்திற்காக காத்திருக்கிறேன். எனக்கு கழுவப்பட்ட ஒரு தட்டு கொடுங்கள், நீங்கள் சாப்பிட்டு முடித்தபின் உங்கள் தட்டில் மீதமுள்ள உணவை நான் சாப்பிடுகிறேன். உங்களை அன்புடன் பிரார்த்தித்ததினால்

4. துகாம்ஹணே ஆதா சித்த, கருனி ராஹிலோ நிச்சித (இருமுறை)
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
(7) ப்ரஸாத மிளால்யானந்தர (பதம்)

1. பாவலா ப்ரஸாத ஆதா விடோ நிஜாவே,
பாபா ஆதா நிஜாவே
ஆபுலா தோ ச்ரம களோ யேதஸே பாவே

2. ஆதா ஸ்வாமீ ஸுகே நித்ரா கரா கோபாலா,
பாபா ஸாயீ தயாளா
புரலே மனோரத ஜாதோ ஆபுலே ஸ்தளா

3. தும்ஹாம்ஸீ ஜாகவூ ஆம்ஹீ ஆபுல்யா சாடா,
பாபா ஆபுல்யா சாடா
சúபாசúப கர்மே தோஷ ஹராவயா பீடா (ஆதா...)

4. துகா ம்ஹணே திதலே உச்சிஷ்டாசே போஜன,
உச்சிஷ்டாசே போஜன
நாஹீ நிவடிலே ஆம்ஹாம் ஆபுல்யா பின்ன (ஆதா...)

ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய
ஓம் ராஜாதிராஜ யோகீராஜ பரப்ரஹ்ம
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரூ ஸாயீநாத மஹராஜ்
ஸ்ரீ ஸச்சிதானந்த ஸத்குரு ஸாயீநாத மஹராஜ்கீ ஜய்

நான் உங்களோடு ஒன்றாகி விட்டேன் துக்காராம் கூறுகிறார். என் மனம் பக்தியால் இங்கேயே நிச்சயமாக தங்கிவிட்டது.

(7)

1. பாண்டுரங்க விட்டலே! பிரசாதத்தை எடுத்துக் கொண்டு விட்டாய். இப்பொழுது உறங்கச் செல். நீ எவ்வளவு களைத்திருக்கிறாய் என்பதை எங்களால் உணர முடிகிறது.

2. ஸ்வாமி! இப்பொழுது நன்றாக உறங்குங்கள். கோபாலா! பாப சாயி! எங்கள் விருப்பங்கள் இப்பொழுது நிறைவேறி விட்டன. நாங்கள் எங்கள் வீடுகளுக்கு திரும்பச் செல்கிறோம்.

3. எங்கள் தேவைகளுக்காக உங்களை எழுப்புவது எங்கள் பொறுப்பு. எமது நன்மை, தீமை ஆகிய இருவகைச் செயல்களில் உள்ள துன்பம் தரும் குற்றங்களை அழிப்பாயாக துகாராம் சொல்கிறார். நாங்கள் உங்களிடமிருந்து வேறுபட்டவர்களாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் சாப்பிட்ட மீதமுள்ள உணவை பிரசாதமாக பெற்றுக் கொண்டோம்.

ஓம் ராஜாதி ராஜ யோகி ராஜ பரப்ரஹ்ம ஸ்ரீ சச்சிதானந்த சத்குரு
சாயிநாத மஹாராஜ் ஜெய்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
ஓம் சாயி நமோ நம
ஸ்ரீசாயி நமோ நம
ஜெய் ஜெய் சாயி நமோ நம
சத்குரு சாயி நமோ நம
அதிகம் மந்திரம் சொல்ல முடியாதவர்கள் இந்த 4 வரிகளை சொன்னால் பயன் அளிக்கும்
எனக்கு நோய் குணமாக சாயின் கருணை உதவியது .
 




SaiDivya

புதிய முகம்
Joined
Apr 28, 2020
Messages
9
Reaction score
1
Location
Chennai
நெய்வேதிய மந்த்ரா

குருவே சாய்! குருவே சாய்!
எனக்கு உணவு அளிக்கும் எந்தன் குருவே சாய்!
இந்த நைவேத்தியத்தை தாழ்மையுடன் படைக்கிறான் சாய்!
இதை ஏற்று கொண்டு என் வாழ்வில் ஒளி வீசுவார் சாய்!
பழம் பால் தேன் படைத்துள்ளேன்!
கங்கை யமுனை காவேரி நீர் படைத்துள்ளேன்!
வெத்தலை பாக்கு ஏலக்காய் படைத்துள்ளேன்!
இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு
என் துன்பம் துடைக்க வாரும் சாய்!​
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top