• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டாம்பாய் (Tomboy)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

crvenkatesh

நாட்டாமை
Joined
Jan 26, 2019
Messages
52
Reaction score
172
Location
Chennai
#திருவல்லிக்கேணி தேவதைகள் (கற்பனை தானுங்கோ)

உங்களுக்கு ஜெயந்தியை ஞாபகம் இருக்கா? என்னோட அன்னமாச்சார்யா கேசட்டை வாங்கிச் சென்றுவிட்டு அதைத் திரும்பத் தரும்போது எதிர்வீட்டு உத்தரா (அவளோட எதிரி - என்னோட......) பார்க்கும்படியாக தந்து எங்கள் காதலை (?) வளர விடாமல் கருகச்செய்த வில்லி.

நான் அதற்கு அப்புறம் எப்படியெல்லாமோ தாஜா பண்ணியும், மன்னிப்புக் கேட்டும் உத்தராவின் கோபம் அடங்கவில்லை. என்னை வேண்டுமென்றே அவாய்ட் செய்தாள்.
என்னுடைய சகல முயற்சிகளும் ஃபெயில் !

என்னுள்ளே ஒரு கோபப் பொறி விழுந்து நாளாக நாளாக பெரிய ஜ்வாலையாக உருவாகிக் கொண்டிருந்தது. உத்தராவை சமாதானப்படுத்த முடியாத இயலாமை ஜெயந்தி மேல் கோபமாக மாறியது. அவளை எப்படியாவது பழி வாங்க வேண்டும் பனிஷ் செய்ய வேண்டும் என்று ஒரு எண்ணம் உருவாகி வைராக்யமாக ஆனது.

அவளைக் கண்காணிக்க ஆரம்பித்தேன். எப்படியாவது எங்கேயாவது மாட்டாமல் போக மாட்டாளா என்ன?

இந்த ஜெயந்தி இருக்காளே அவளுக்கும் உத்தராவுக்கும் என்ன விரோதம் தெரியுமா? உத்தரா எத்தனை பெண்மையோ ஜெயந்தி அத்தனை டாம்பாய். முன்னவள் இடுப்புத் தெரியாமல் பாவடைத் தாவணியில் போனால் இவள் ஸ்கர்ட்/பாவாடை ஆம்பிளைச் சட்டையில் இருப்பாள்.

அவளும் பார்ப்பதற்கு ஓகேவாகத் தான் இருப்பாள். இருந்தாலும் அந்த திவ்யா பாலன் ட்ரெஸ் சென்சினால் எங்கள் குழுவினர் சற்று ஒதுங்கியே இருந்தார்கள். இதிலே அவள் நானவை (அதாங்க நம்ம சாந்தியின் பக்தன்) அப்படி இப்படிப் பார்ப்பாள் என்பது எங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் நகைச்சுவை. நானாவுக்கு கோபமாக வரும். சுந்தரோடு சண்டை போட்டு சாந்தியை நூல் விட்டுக் கொண்டிருப்பவன் இவளை எப்படிப் பார்ப்பான்?

நான் அவளை வாட்ச் செய்ய ஆரம்பித்தவுடன் எனக்கு அவளது ருடீன் சற்று புரிபட்டது. அவள் எப்போது கோவில் போவாள் எப்போது லைப்ரரி (நம்ம லைப்ரரி!) போவாள் எப்ப பைகிராஃப்ட்ஸ் ரோடு போவாள் என்றெல்லாம் அத்துப்படி ஆனது.

அவளைக் கோவிலில் வைத்து மடக்கலாம் என்றால் கொஞ்சம் ரிஸ்க். நரசிம்மர் சன்னதி பின்னால் இருக்கும் இடம் தவிர பாக்கி எல்லா இடத்திலும் நான் மாட்டிக்கொள்ளும் சான்ஸ் அதிகம். பைகிராஃப்ட்ஸ் ரோடும் ரூல்டு அவுட்.

சரியான இடம் லைப்ரரி தான் என்று முடிவு செய்தபின் தினமும் கவனிக்க ஆரம்பித்தேன். அவள் லைப்ரரி மூட அரை மணி நேரம் இருக்கும்போதுதான் வருவாள். அப்போது ஆட்களும் சற்று குறைவாக இருப்பார்கள். அதுதான் சரி என்று முடிவு பண்ணி ஒரு நாள் லைப்ரரி எதிர் ரோட்டில் வெய்ட் செய்தேன். சரியாக அரை மணி முன்னர் அவள் வந்தாள். அவள் உள்ளே சென்ற ஐந்து நிமிடம் கழித்து நான் உள்ளே சென்றேன்.

லைப்ரரி இன்சார்ஜ் 'என்னடா இன்னிக்கு லேட்?' என்றார். ஒரு அசட்டுச் சிரிப்புடன் கொண்டு வந்த புக்ஸை டேபிளில் வைத்து விட்டு உள்ளே போனேன். எனக்குத் தெரியும் ஜெயந்தி காதல் கதை மாத நாவல் செக்ஷனில் தான் இருப்பாள் என்று. அதே மாதிரி அவள் அங்குதான் இருந்தாள்.

சட்டென்று நிழலாடியதும் அவள் திரும்பிப் பார்த்தாள். என்னைக் கண்டு அவள் முகம் கறுத்தது . (பை தி வே, அவள் நல்ல கலர்).

"டேய்! என்ன ஒண்ணும் செய்யாதடா... இல்லேனா கத்திருவேன்" என்றாள்.

என் கோவம் எல்லை மீறியது. "என்னடி செய்வ?" என்றபடி அவளை என்னை நோக்கி இழுத்தேன். தரையில் சில புக்ஸ் இருந்ததை நாங்கள் இருவருமே கவனிக்கவில்லை. அவள் கால்கள் அந்த புக்ஸ் மீது பட்டு அவள் பேலன்ஸ் தவறி என் மீது சாய்ந்தாள். நானும் நிலைதடுமாறி கீழே விழுந்தேன். அவள் தென்றல் புகாத இலக்கிய காதல் போல முழுவதுமாக என் மீது விழுந்தாள். என்னுடைய சம்மதம் இல்லாமலேயே என் இதழ்கள் அவளின் இதழ்களை நலம் விசாரித்தன. இதெல்லாம் ஒரு அரை நிமிடம்தான் இருக்கும். அதற்குள் சத்தம் கேட்டு லைப்ரரியன் வந்து எங்களைத் தூக்கிவிட்டு காப்பாற்றி (???) விட்டார்.

அதன் பிறகு நான் பல நாள் லைப்ரரி பக்கம் போகவே இல்லை. இப்படி இருக்கையில் ஒருநாள் கோவிலில் ஆண்டாள் சன்னதி அருகில் நான் அமர்ந்து இருக்கையில் திடீரென்று அங்கு ஜெயந்தி வந்தாள்.

அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அன்று தான் நாங்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளுகிறோம்.

இருவர் கண்களும் கலந்தன. நான் அவளிடம் "சாரிடி " என்று சொன்ன அதே exact சமயத்தில் ஜெயந்தி " தாங்க்ஸ்டா" என்று சொன்னாள்.

அந்தக் கணத்தில் அந்த டாம்பாய் எனக்கு மிக அழகாகத் தெரிந்தாள்.

வீயார்
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden

Nice??
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
CRVenkatesh சார்
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top