• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது?? 1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

thilagamarul

நாட்டாமை
Joined
May 11, 2019
Messages
42
Reaction score
127
Location
Chennai
Part 01

புகழ் பெற்ற மகளிர் கல்லூரியின் முன்றாமாண்டு பொருளாதாரம் பயிலும் மாணவர்களின் வகுப்பறை.....ஸ்டாடிஸ்டிக்ஸ் வகுப்பை கர்ம சிரத்தையுடன் எடுத்து கொண்டிருந்தார் பேராசிரியர்......

Regression analysis helps us to understand how the typical value of the dependent variable changes when any one of the independent variables are held fixed…

பாடக்குறிப்பை கூறிக் கொண்டே ஒவ்வொரு மாணவியின் முகத்தை பார்த்து கொண்டே வந்தவர் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்த பெண்ணிடம் நிலைத்தது. ஆசிரியர் பார்ப்பதை உணர்ந்த பக்கத்தில் இருந்த பெண் அவளை ரகசியமாய் தட்டியும் பயனில்லை. அதையும் பார்த்தவர் அவள் இந்த உலகத்திலேயே இல்லை என்பது தெளிவானது.

அன்றைக்கு என்ன கலர் என்றே சொல்ல முடியாத ஒரு கலரில் உடை அணிந்திருந்ததால், “Girl next to the red chudidhar 3rd row get up…”

ரெட் சுடிதாருக்கு தூக்கி வாரி போட தனக்கு பக்கத்தில் இருந்தவளை பார்த்தால் அவள் அப்பொழுதும் அசைந்தபாடில்லை. மேம் மனம் மாறி தன்னை கூப்பிட்டு விடுவார்களோ என பயந்தவள் அவளின் தொடையில் கிள்ள ஆஆ என அலறியபடி திரும்பினாள். அப்போதும் என்ன என்று முறைக்க, “மீரா மேம் கூப்பிடுறாங்க” என்றாள் மென் குரலில்.

மேமை பார்த்தபடி எழ,

“வாட்ஸ் யுவர் நேம்??”

திருதிருவென விழித்தவள் ஒரு வேளை அட்டெண்டன்ஸ் எடுக்கிறார்களோ...என்று “மீரா எஸ் மேம்” என்றவுடன் வகுப்பறையே சிரிக்க, ஆசிரியரின் முறைப்பில் அமைதியானார்கள்.

“கம் ஹியர்”

ஐயோ எதுக்கு கூப்பிறாங்கன்னு தெரியலையே?? பயந்து கொண்டே வந்தவள் “எஸ் மேம்” என்றாள்.

“டேக் தி சாக்பீஸ் அண்ட் ரைட் regression பார்முலா”

போச்சு போச்சு மொதல்ல regression எதுல வரும்?? யோசனையுடன் சாக்பீஸ் எடுத்தாள்.

“டோன்ட் வேஸ்ட் மை டைம், கோ அண்ட் ரைட்”

சரி தெரிந்ததை எழுதுவோம் என்று நினைத்தவள்.

Y = f ( X X X X X X X X X X X X)

போர்டின் கடைசி வரை X போட, முதலில் ஆர்வமாக பார்த்த மாணவிகள் பிறகு பொங்கி வந்த குபீர் சிரிப்பை அடக்கியபடி இருக்க ஆசிரியருக்கும் சிரிப்பு வர பார்த்தது அடக்கி கொண்டே, “லீவ் மை கிளாஸ்” அன்றைக்கு நல்ல மூடில் இருந்ததால் மரியாதையாய் வெளியில் அனுப்பியவர், எஞ்சிய வகுப்பை முடித்து கிளம்பினார். அடுத்து வந்த உணவு இடைவேளையில் தன் இடத்தில் வந்து அமர மாணவிகள் இவளை பார்த்து சிரிக்க கடுப்பானாள் மீரா.

அதிலும் பக்கத்திலிருந்த உயிர் தோழிகள் (??) அந்த ரெட் சுடிதார் வித்யாவும் இந்த பக்கம் இருந்த கிரீன் சுடிதார் வீணாவும் சேர்ந்து சிரிக்க,

“எதுக்குடி இப்போ சிரிப்பு”

“இல்லை மீரா நீ சாக்பீஸ் எடுத்ததும் மிரண்டுட்டேன், புள்ளை எங்கயோ இருந்தாலும் கிளாஸ் கவனிச்சிருக்கே, காதல் கொண்டேன் தனுஷ் மாதிரி கடகடன்னு regression புல்லா எழுதிடுவியோன்னு நினைச்சேன், ஆனா போட்ட பாரு X, ஆமா அதென்ன நாலு ட்ரிப்ள் X எதாவது சிம்பாலிக் வார்த்தையா??” வீணா

“வேணாம் வீணா மனுஷி நிலைமை புரியாம கடுப்பை கிளப்பாத??”

“என்னடி பெரிய நிலைமை??” வித்யா

அமைதியாக பதில் சொல்லாமல் தனது டிபன் பாக்ஸ் எடுத்து வைத்தாள். அதன் வாசத்திலேயே சிக்கன் பிரியாணி என்று அறிந்து கொண்ட முன் பெஞ்ச் உஷா அப்படியே யூ டர்ன் போட்டு இவர்கள் புறம் திரும்பினாள்.

“ஏய் மீரா ஏண்டி இப்படியிருக்க?? நம்ம அப்பா அம்மா நம்மளை கஷ்டப்பட்டு படிக்க அனுப்புறாங்க, நல்லா படிச்சாதானே நல்ல வேலைல சேர்ந்து சொந்த கால்ல நிக்க முடியும். ஸ்டாட்ஸ் (statistics) ரொம்ப ஈஸி கொஞ்சம் கஷ்டப்பட்டு படிச்சா சென்டம் அடிச்சிடலாம்.”

“சிக்கன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு பயபுள்ள என்ன பேச்சு பேசுது பாரு” வித்யா வீணாவின் காதை கடித்தாள்.

“உஷா என்னோட கஷ்டம் யாருக்கும் புரியாது??” மீரா

“அப்படி என்னடி கஷ்டம் உனக்கு” பிரியாணியை பார்த்து கொண்டே ஏக்கமாக கேட்டாள் உஷா.

“ஏய் உஷா வேணாம் சிக்கன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு உயிரை விட்டுடாதே” வித்யாவும் வீணாவும் எச்சரித்தும் பலனில்லை

“நீங்கள்லாம் பிரெண்ட்ஸாடி ஒரு பிரெண்ட் கஷ்டத்துல இருந்தா அதை தீர்த்து வைக்கணும், தீர்வு சொல்லணும், எதுவும் முடியலையா அவங்களுக்கு ஆதரவா இருக்கணும். ஆனா நீங்க பண்றது எனக்கு பிடிக்கல....மீரா இவங்ககிட்ட கொஞ்சம் உஷாரா இரு என்றபடியே கை பிரியாணி பக்கம் போக.....”

“அந்த டப்பாவை அப்படியே தள்ளி வைத்தவள் இனிமேல் என் உயிருள்ளவரை உஷா நீதாண்டி, நீயே கேளு என் கதையை...” மீரா

“ம்ம்ம் சொல்லு”

“எங்க பக்கத்து வீட்ல ஒரு பையன் இருக்கான்”

என்னது பையனா??

“அவன் பேர் கண்ணன்”

கண்ணனா??

“என்னடி நீ அதிர்ச்சி பைத்தியமா?? எல்லாத்துக்கும் ஷாக் கொடுக்குற?? சொல்றத நிதானமா கேளுங்க அதுவரைக்கும் யாரும் சாப்பாட்டிலே கை வைக்க கூடாது” மீரா

ஐயோ நம்ம தயிர் சாதத்தை கூட சாப்பிட விடமாட்டா போலிருக்கே உஷா பசி மயக்கத்தில் “சொல்லுடி” என்றாள்.

“அவன் பேரு கண்ணன் என் பேரு மீரா எவ்ளோ பேர் பொருத்தம் செம்ம இல்லை..”

“சரி அப்புறம்”

அவன் செம்ம ஸ்மார்ட், நல்ல உயரம், கலர், நம்ம ராணா மாதிரி இருப்பான்.

அப்படியே மீராவை பார்த்தாள் உஷா, உயரம், நிறம், கூந்தல் பார்த்து வியப்பதற்கு எதுவுமில்லை அவளிடம் சராசரி பெண். ரோட்டில் வெளியில் பார்க்கும் ஆயிரக்கணக்கான பெண்களில் ஒருத்தி மாதிரி தான்.

“சரி அப்புறம்” இவளிடம் இப்படி சிக்கிடோமே என்னும் பார்வையில் கேட்க

“எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு, ஷாலை திருகி கொண்டே நான் அவரை லவ் பண்றேன்” என கூற

“சரி இதுல என்ன பிரச்சனை??”

“நான் என்ன பண்ணாலும் திரும்பி கூட பார்க்க மாட்டேன்கிறான், அவன் பார்க்குறதுக்கு ஒரு ஐடியா கொடு”

ஏதோ நோட்ஸ் கொடு என்பது போல கேட்க உஷா உஷாரனாள்.

வித்யாவும் வீணாவும் எப்படி சிக்கியிருக்கோம்னு பாரு என்பதை போல லுக் விட

இதற்கு மேல் பிரியாணி கிடைக்காது என்னும் முடிவுக்கு வந்த உஷா, பசி மயக்கத்தில், கோபம் தலைக்கேற “சீ பெண்ணா நீ பிசாசு இன்னைக்கு என்னை சாப்பிட விடாம பிரியாணியை மூடி வச்சில்ல அது மாதிரி தான் உன் காதலும் ஊத்தி மூட போகுது, பக்கி நீயெல்லாம் ஒரு ஆளுன்னு ஆறுதல் சொல்ல வந்தா படிக்கிற வயசில லவ் பண்றியா?? என்ன வயசு உனக்கு....” கத்த துவங்க.......

எல்லாம் லவ் பண்ற வயசுதான் நீ ஏன் எப்படி கத்துற இந்தா இதை சாப்பிடு என டக்கென தன் பிரியாணி டப்பாவை நீட்ட

நொடியில் சாந்த சொருபியாய் மாறிய உஷா வேகமாக சாப்பிட்டு, “மீரா I கேன் understand யுவர் பீலிங்க்ஸ், ஆனா பாரு அவங்கவங்க பிரச்சனைக்கு அவங்கவங்களுக்குதான் தீர்வு தெரியும்...சரியா?? anyway பிரியாணி நல்லா இருந்தது bye”

கிளாஸில் மானம் இழந்து, பிரியாணி இழந்து, தோழிகளின் கிண்டலில் சிக்கி சின்னபின்னமாகியிருந்தாலும் எதிலும் பாதிப்படையாத மீரா கண்ணனிடம் மனதிற்குள் கேட்டாள்.

“டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது???”
 




thilagamarul

நாட்டாமை
Joined
May 11, 2019
Messages
42
Reaction score
127
Location
Chennai
1558106407960.png1558106417193.png
மீரா அண்ட் கண்ணன்

hi friends

காலேஜ் பர்ஸ்ட் டே போற பீலிங்.....படித்து கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் பிரெண்ட்ஸ்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top