• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது 3.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
பகுதி – 3

குட்டி போட்ட பெண் சிறுத்தை போல சூரி தங்கள் அறையில் இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்தாள். அவள் தோழிகள் அனைவரும் அலுவலகத்திற்கு கிளம்யிருந்தனர்.

சூரி விரும்பாத ஒரே சூழல் தனிமை மட்டுமே. எதிரில் ஏதாவது முகங்கள் இருந்து கொண்டே இருக்க வேண்டும் அவளுக்கு. விழித்திருக்கும் பதினாறு மணி நேரத்தில் குறைந்தது பதினைந்து மணி நேரமாவது இதழ்கள் சிரிப்பில் மலர்ந்தே இருக்கும்.

அவள் பிறந்து வளர்ந்த வீடு அப்படி. அவளின் சொந்த ஊர் திருநெல்வேலியில் உள்ள எலந்தம்பாடி. அவள் தாத்தா ஒரு கூத்து பட்டறை கலைஞன்.

சூர்யா சிறுவயதில் இருந்தே அவள் தாத்தாவின் நாடக ஒத்திகை கொட்டாயில் தான் குடியிருப்பாள். அவளின் தாத்தா ஹாஸ்ய உணர்வு மிக்கவர்.

பெரும்பாலும் ஹரிசந்திர, இராமாயண நாடகங்களை மட்டுமே மையக் கருவாய் எடுத்து கூத்து நடத்தும் ஆட்கள் மத்தியில் இவர் கும்பகர்ணன் கதையையும், கிருஷ்ண லீலை கதைகளையும் மையக் கருவாய் எடுத்து ஊர் திருவிழாவின் போது ஒட்டு மொத்த கிராமத்தையும் சிரிப்பில் ஆழ்த்துவார்.

ஹாஸ்யம் என்ற கலையை சூரி கற்றுக் கொண்டது அவள் தாத்தாவிடம் தான். ‘ஏலே மனுசப்பயலுக்கும் மிருவத்துக்கும் உள்ள ஒரே வித்தியாசம் சிரிப்புதாம்லே.’ இது தான் அவர் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தைகள்.

அவருக்கு பின் அவர் குடும்பத்தில் யாரும் கூத்துகட்ட முன் வரவில்லை. அவரின் மூன்று மகன்களும் அப்போதே பள்ளிப்படிப்பை முடித்து கிடைத்த அரசாங்க உத்தியோகத்தில் தொற்றிக் கொண்டனர்.

ஆனால் சூர்யாவிற்கு கூத்து கலையின் மேல் அலாதி விருப்பம். அதிலும் தன்னை தானே கேலி செய்து அடுத்தவர்களை நகைக்க வைக்கும் கதாபாத்திரங்களை விரும்பி ரசிப்பாள்.

அது அப்படியே அவளில் இறங்கி, மற்றவர் முன்னிலையிலும் வெளிப்பட துவங்கியது. பள்ளியில் தினம் இவள் வீட்டில் குறும்பு செய்து அடிவாங்கும் நிகழ்வை கூட, கண்ணை விரித்து, மூக்கை சுருக்கி நாடகம் போல நடித்துக் காட்ட இவளை சுற்றி எப்பொழுதும் ஒரு கும்பல் இருந்து கொண்டே இருக்கும். அந்தக் கூட்டத்தில் இருந்து கிளம்பும் வெடி சிரிப்பு அவ்விடத்தையே அதிர வைக்கும்.

அந்த ஹாஸ்யமே சூரியின் அடையாளம் ஆகிப் போனது. திருநெல்வேலியில் பள்ளி படிப்பு முடிந்ததும், சூர்யா பொறியியல் கல்லூரியில் இணைய திருச்சி சென்றாள்.

அங்கு தான் அவளுக்கு ரம்யா, ராகவி, கார்த்தி மூவரும் நண்பிகள் ஆயினர். கல்லூரியிலும் சூரிக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உண்டென்றாலும், இவர்கள் மூவரும் கொள்ளகை வகையிலும், ( உண்டு உறங்குவது, உறங்கி எழுந்து உண்பது, அழகான ஆண்களை தேர்ந்தெடுத்து ஜொள்ளுவது) உடன்பட்டு போனதால் இவர்களின் பிணைப்பு மிகவும் கெட்டிபட்டு போயிற்று.

ஒருவழியாய் கல்லூரி முடிந்து இவர்கள் நால்வருக்கும் ஒன்றே போல , சென்னையில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை கிடைக்க, தோழிகள் நால்வரும் ஒரே அறையில் தங்கி, தங்கள் கல்லூரி வாழ்கையை இங்கும் தொடர்கின்றனர்.

இப்படி இவர்கள் வாழ்வு மகிழ்ச்சியாய் சென்று கொண்டிருக்க, ஆறு மாதங்களுக்கு முன்னால் சூரியின் வாழ்வில் புயலென வீசி சென்றவன் தான் பிரியன்.

அவள் பணியில் இணைந்த நாள் முதலே சூரியின் கலகலப்பு தன்மை பிரியனுக்கு அவள் பால் ஒரு ஈர்ப்பை தோற்றுவித்து இருந்தது.

பிரியன் அதிக காலம் கடத்தவெல்லாம் இல்லை. தன் எண்ணத்தை மிக எளிமையாய் கலாச்சார உடை அணிந்து வர சொன்ன நாளொன்றில் சூரியிடம் வெளிப்படுத்திவிட்டான்.

சூரிக்கு மறுக்க அவ்வளவாக காரணம் ஏதுமில்லை. அலுவலகத்தில் இணைந்த நாள் முதல் தோழிகளுடன் சேர்ந்து கூட்டாய் கண் வைத்த அழகன். காதலிக்கிறேன் என்று வந்து நின்றால் கசக்கவா செய்யும்.

இவள் தோழிகளின் அடிவயிற்றில் நெருப்பை மூட்டிவிட்டு, சூரி பிரியனுடன் காதல் செய்ய துவங்கினாள். நாளொரு பேரங்காடி, வாரம் ஒரு கடற்கரை, மாதம் ஒரு சினிமா என இவர்களின் காதலும் புஷ்டியாய் வளர்ந்தது.
திடீரென்று பிரியன் இவளிடம் பேசுவதை குறைத்தான். வெளியே அழைத்தால் எப்பொழுதும் ஏதாவது ஒரு மழுப்பலான பதில். இவனின் தவிர்த்தலுக்கு காரணமும் வெகு விரைவில் வெளிப்பட்டது அலுவகம் முழுக்க அறிய.

பிரியனுக்கு திருமணம். ஆம் அவன் வீட்டில் அவனுக்கு பெண் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். அதுவரை நேரத்தை கழிக்கவே அவன் சூர்யாவை தேர்வு செய்தது.

அலுவக மாடியின் உச்சியில் நின்று சூர்யா அவனிடம் நேருக்கு நேர், “ஏன்..?’’ என்று கேட்ட போது அவன் அந்த பதிலை தான் சொன்னான்.

“லவ் பண்றவங்க எல்லாரும் கல்யாணம் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்ல சூரி. எனக்கு உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ண தோணுச்சி. ப்ரோபோஸ் பண்ணேன். நீ அக்சப்ட் செஞ்ச. தட்ஸ் இட். இப்போ எனக்கு வேணாம்னு தோணுது. சோ ப்ரேக் அப் பண்ணிக்கலாம். அவ்ளோ தான்.’’ என சொல்ல சூர்யா தன் பலம் முழுவதையும் வலது கரத்திற்கு கொண்டு வந்து ஓங்கி ஒரு அறை கொடுத்தாள்.

அதிர்ச்சியில் கன்னத்தை தாங்கிப் பிடித்த பிரியனோ, “என்ன இருந்தாலும் உன் குடும்பம் ஒரு கூத்தாடி குடும்பம் தானே. வீதியில் ஆடுறவங்களை எல்லாம் எங்க வீட்ல மருமகளா ஒத்துக்க மாட்டாங்க.’’ என்ற வார்த்தைகளை நஞ்சென இறக்க முதன் முறையாய் இதயத்தில் அடி வாங்கினாள் சூர்யா.

பிரியனிடம் தன் தாத்தாவை பற்றி பெருமையாய் சொல்லி இருந்தாள் சூர்யா. அதை இவன் இப்படி திரித்துக் கொள்வான் என்று அவள் எண்ணவே இல்லை. அன்றிலிருந்து அவளின் இயல்பே மாறிவிட்டது. மிகவும் மௌனியாகிவிட்டாள். அவளின் இந்த மாற்றத்தை தாங்க முடியா தோழிகள் அவள் மனதில் இருப்பதை வெளியே கொண்டு வர, கார்த்தியின் பிறந்த நாள் அன்று, குளிர்பானத்தில் அவள் அறியாமல் மதுவை நிரப்பி கொடுத்துவிட்டனர்.

மதுவின் ஆதிக்கத்தில் சூரி பிரியன் பேசிய வார்த்தைகளை ஒன்று விடாமல் நண்பிகளிடம் ஒப்புவிக்க, ரட்சகன் பட சிரஞ்சீவியை போல அவர்களின் ரத்த நாளங்கள் அதி வேகமாய் முறுக்கேறியது.

ஆள் ஆளுக்கு அவனை வைக்கப் போரில் ஏற்றி எழுத முடியா வார்த்தைகளால் வைய, அதி தீவிர யோசனையில் இருந்த கார்த்தியோ, “இவனை எல்லாம் இப்படியே விட கூடாது சூரி. பழி வாங்கியே ஆகணும்.’’ என்று மிளிற்ற துவங்கினாள்.

அவளும் சூரிக்கு உருவாக்கி இருந்த கலவையில் கொஞ்சம் சுவை பார்ப்பதாய் எண்ணி நிறைய உள்ளுக்குள் சரித்து இருந்தாள்.

கார்த்தியின் வார்த்தைகளை ராவி ஆமோதித்தாள். “ஆமா சூரி இவனை எல்லாம் இப்படியே விடக் கூடாது. ஏதாச்சும் பெருசா செய்யணும். அவன் வாழ்நாள் எல்லாம் வருத்தப்படுற மாதிரி.’’ என்று தன்னுடைய ஆதரவு கரத்தினையும் நீட்டினாள்.

ரம்மியோ, “என்னடி அவனை அடியாள் வச்சி தூக்கிடலாமா..? அப்படியே லேசா கை காலை கூட திருப்பி விட்ரலாம்.’’ என தனக்கு தெரிந்த வழிகளை முன் வைக்க, இம்முறை கார்த்தி எழுந்து சூரியின் அருகில் வந்தாள்.

“அதெல்லாம் டெம்ப்ரவரி பெயினா தான் இருக்கும் கார்த்தி. நீ உன்னோட எதிரியை தொடாம அடிக்கணும். அந்த அடியில அவனுக்கு மனசு பயங்கரமா வலிக்கணும்.’’ என்று ஆழ்ந்து சொன்னாள்.

அந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கத்தில் சூரி மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவளின் அடுத்த ஒற்றை கேள்வி, “அதுக்கு என்ன செய்யணும் சொல்லு..!’’ என்பதாய் தான் இருந்தது.

தன் குரலின் ஒலி அளவை கொஞ்சமும் மாற்றாத கார்த்தி, “அவனோட ஒரே அண்ணனை கரெக்ட் பண்ணி அவனையே கல்யாணமும் பண்ணனும்.’’ என சொல்ல மற்ற மூவரும் கார்த்தியை அதிர்ந்து போய் பார்த்தனர்.

அதிர்ச்சியில் இருந்து முதலில் மீண்டவள் ரம்மி தான். “என்னடி சொல்ற..? இதெல்லாம் பிராக்டிகலா ஒத்து வருமா. சும்மா எதையாவது பேசணும்னு பேசாத.’’ என்று எரிந்து விழுந்தாள்.

“எல்லாம் வரும். ஏன் வராது. இந்த பசங்க மட்டும் அக்கா கழட்டி விட்டா தங்கச்சியை கரெக்ட் பண்றது இல்லையா. அவ்ளோ ஏன் அக்கா செத்துட்டா உடனே இளிச்சவாய் தங்கச்சி தானே அடுத்த பொண்டாட்டி. பசங்களுக்கு ஒரு ரூல். பொண்ணுங்களுக்கு ஒரு ரூலா.

இதோ பாரு சூரி பிரியன் மேரேஜுக்கு நான் போயிருந்தேன். உடனே நான் எனக்கு பிடிச்ச காஜூ கத்லியை அமுக்க தான் போனேன்னு நீங்க நினைக்கலாம். அதுவும் ஒரு காரணம். ஆனாலும் பிரியன் பொண்டாட்டி மொக்கையா இருந்தா போட்டோ எடுத்துட்டு வந்து நம்ம அபீஸ் வாட்ஸ் அப் க்ரூப்ல போட்டு கலாய்க்கலாம்னு பார்த்தேன்.

பொண்ணை போட்டோ எடுக்கும் போது தான் மச்சி அவனை பாத்தேன். ஆள் செம பிகர். சும்மா வெண்ணை கட்டி மாதிரி மூஞ்சி. ஸ்டாபெரி ஜாம் கலர்ல உதடு...அப்புறம்.’’ கார்த்தி இன்னும் என்ன எல்லாம் சொல்லி இருப்பாளோ அதற்குள் இடையிட்ட ரம்மி, “ஏய் நீ மேட்டருக்கு வாடி..’’ என கேட்டை போட, ஒரு கணை கனைத்துவிட்டு மீண்டும் தன் கதையை தொடர்ந்தாள்.

“அவ்ளோ பேரழகன்டி. அதுவும் ஆள் சாதாரண ஆள் இல்ல. நம்ம சென்னை சிட்டி அசிஸ்டன்ட் கமிஷ்னர். முக்கியமான தகவல் சாருக்கு இன்னும் கல்யாணம் ஆகல. அவர் பேர் முகிலன். லூசு பிரியன் இருக்கான்ல அவனோட அம்மா இவருக்கு சித்தி.

இப்ப சொல்லு இப்ப சொல்லு... முகிலனை நீ கரெக்ட் செஞ்சி கல்யாணம் செஞ்சா அந்த பக்கி பிரியன் உன்னை எப்படி கூப்பிடுவான். அண்ணி... அண்ணின்னு கூப்பிடனும். அதுவும் முகிலனை பார்த்தாலே அங்க சுத்தி இருந்தவங்க எல்லாரும் அப்படி ஒரு மரியாதை கொடுத்தாங்க.

உன்னை எவன் கூத்தாடி வீட்டு பொண்ணுன்னு சொல்லி ஒதுக்கிட்டு போனானோ அவன் வீட்ல இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் உன்னை மருமகளே.. மருமகளேன்னு கூப்பிடனும். அதை கேட்டு அவன் சாகனும்.

முகிலனுக்கு இப்போ அம்மா அப்பா யாரும் உயிரோட இல்ல. ஒரே அக்கா பூனேல இருக்காங்க. அவர் தனியா தான் ஒரு அப்பார்ட்மென்ட்ல தங்கி இருக்கார். சோ இவரை மட்டும் நாம கரெக்ட் செஞ்சா போதும். பேமிலி பத்தி எல்லாம் பெருசா வொரி செஞ்சிக்க வேண்டாம். சரியா.’’ கார்த்தி தன் உரையை சரியா போட்டு முடித்தாள்.

ஆனால் மற்ற தோழிகள் ஆச்சர்யப்படும் வகையில் சூரி இந்த திட்டத்திற்கு உடனே உடன்பட்டு நின்றாள். அடுத்த நாள் முதல் துவங்கியது இவர்களின் கரெக்ட் செய்யும் படலம்.

தோழிகள் முதலில் அவனை நேரடியாய், மற்றும் சமூகவலை தளங்களில் பின் தொடர்ந்து அவனின் விருப்பு வெறுப்புகளை கண்டறிந்தனர். அதில் அவர்கள் அறிந்த விஷயம், முகிலன் பிராணிகளை நேசிப்பவன். துணிவை ரசிப்பவன். நேர்மைக்கு தலை வணங்குபவன்.

முதல் இரண்டு தர வரிசைப்பட்டியல் கவிழ்த்து விட, மூன்றாவதாய் என்ன செய்வது என்பதே அவர்களின் தற்போதைய கவலை.

தற்சமயம் சூரிக்கு இருக்கும் உறுதி, மற்ற தோழிகளையே சற்று அச்சத்தில் ஆழ்த்தி இருந்தது.

அறையின் அழைப்பு மணி ஒலிக்க, தன் நினைவலைகளில் இருந்து கலைந்த சூரி மெதுவாய் நடந்து சென்று கதவை திறந்தாள். அவள் முன் பதிவு செய்திருந்த துரித உணவு வந்திருந்தது.

உணவிற்கான தொகையை செலுத்தியவள், உணவினை உண்டு முடித்ததும், அறைக்குள் அடைந்து கிடப்பது பிடிக்காமல், அருகில் இருக்கும் பூங்காவிற்கு ஒரு நடைப் பயணம் கிளம்பினாள்.

சூரி அப்போது அறியவில்லை. அது தான் தன் வாழ்க்கைப் பயணத்தை மாற்றப் போகும் நடைப் பயணம் என்பதை.

கரெக்ட் செய்யப்படுவான்.

 




Rahidevideva

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
119
Reaction score
227
Location
IN
Ivanga pazhi vaanga use pandra idea sinna pilla thanamaa illa irukku. Kadaisila nermai use panni plan podudhungala.
Aduthu enna bulb vaanga pogudhungalo:unsure:...

Aanalum andha logic akkaaaku badhila thangachi maadhiri thambikku badhila annan, semma. Logical aavum irukku. ;)
 




Jaa sha

மண்டலாதிபதி
Joined
Jul 28, 2018
Messages
301
Reaction score
1,103
Location
Karaikudi
ப்ளாஸ்பேக் சூப்பர்...
காஜு கத்லிய அமுக்கவா போனேன்..
பிரியன் பெல்லோ அண்ணினு கூப்ட தான் இம்புட்டு கரக்ட்டிங்க் படலமா..
பூங்காவில் என்ன மாற்றம் வருது செல்லகுட்டிக்கு... முகில்ஸ் வெயிட்டிங்கா... ரெண்டு எபி சும்மா போன 3 வது சுள்ளுனு கியர போடுமே மீனுக்குட்டி...
மீன்ஸ் விடாம இப்டி இந்த பக்கம் உன் எழுதது சேவை தொடரனும் உன் அதி தீவிர விசிறிக்காக... ப்ளீஸ்...மீன்ஸ்..
கண் குளிர இருக்கு ...இப்பதான்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top