• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

டேய் உன்னை எப்படிடா கரெக்ட் பண்றது 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Meghna suresh

நாட்டாமை
Joined
May 26, 2019
Messages
83
Reaction score
873
Location
India
பகுதி – 4

பூங்காவின் நுழை வாயிலில் மிதந்து வந்த நீர்க் குமிழிகளை கண்டதும் சூர்யாவின் மனது, அதுவரை இருந்த வெறுமை நீங்கி, ஒரு குழந்தையின் உற்சாகத்தை தத்தெடுத்தது.

சூர்யா குழந்தை போல, சில நீர்க் குமிழிகளை பிடிக்க முயன்று உடைத்தாள். சில குமிழிகளை வாயால் ஊதி இன்னும் கொஞ்சம் மேல பறக்க வைக்க முயன்றாள். என்ன செய்தாலும் காற்றடைத்த நீர்க் குமிழியின் வாழ்வு சில நொடிகள் மட்டுமே அல்லவா.

குமிழியை உருவாக்கிக் கொண்டிருந்த சிறுவர்களிடம், அந்த ஊதுகுழலை கடன் வாங்கி தானே சில குமிழ்களை உருவாக்கி அதோடு விளையாட துவங்கினாள்.

பெயருக்கு பூங்காவிற்கு அழைத்து வந்துவிட்டு, தங்கள் அலைபேசியோடு பெற்றவர்கள் அமர்ந்திருக்க, பெரும்பாலான குழந்தைகள் அங்கே தனிமையில் தான் விளையாடிக் கொண்டு இருந்தனர்.

சூர்யா ஒவ்வொரு குழந்தையிடமும் நின்று ஏதேனும் சேஷ்டைகள் காட்ட, கொஞ்ச நேரத்தில் அவளை சுற்றி ஒரு கூட்டம் கூடிவிட்டது.

குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட, கையில் இருந்த கைக்குட்டையின் மூலம் வித விதமான உருவங்களை அவள் செய்து காட்ட குழந்தைகள் கைதட்டி குதூகலித்தனர்.

சில வாண்டுகள் தங்கள் கைக்குட்டையில் அவள் செய்தது போல செய்ய முயன்று, வந்த அரைகுறை உருவங்களை அவளிடம் காட்டி பாராட்டும் பெற்றனர்.

பழகிய கொஞ்ச நேரத்திலேயே சூர்யா என்ற அவளின் பெயர் அவர்கள் மத்தியில் பிரபலமாகிவிட்டது. “சூர்யா அக்கா இங்க பாருங்க.. சூர்யாக்கா எங்க வீட்ல ஒரு குட்டி தம்பி இருக்கானே..’’ இப்படி அவள் பெயர் சொல்லி, கன்னம் தடவி ஆள் ஆளுக்கு அவள் கவனத்தை தங்கள் பக்கம் கவர முயன்றனர்.

கூட்டத்தில் மிகவும் இளைய வாண்டு ஒன்று, “கா... நீங்க ‘டொம்’ விழுந்தாச்சா... டாக்டர் அங்கிள் ஊசி போட்டாங்களா..?’’ என்றபடி அவள் கையில் இருந்த கட்டை வருடியது.

“இல்லடா தங்கம். அக்காவுக்கு அடிபட்டதே பெரிய கதை. ஹே.. ஒரு ஐடியா அக்காவுக்கு எப்படி அடிபட்டுச்சுன்னு நான் உங்களுக்கு நடிச்சு காட்டவா. செம காமெடியா இருக்கும்.’’ என்றவள் எழுந்து குழந்தைகளுக்கு மத்தியில் சென்று நின்றாள்.

பசும் புல்வெளியில் இளம் தளிர்கள் என குழந்தைகள் அமர்ந்திருக்க, நடுவில் நின்றவளோ, முதலில் தான் இலகுவாய் குளம்பி அங்காடி வாயிலில் நின்றது முதல், திருடன் வந்தது, துரத்தி சென்றது, அவன் கத்தியால் கீறியது, மயங்கி விழும் முன் வந்த முகிலனை பார்த்தது என்ற அனைத்து நிகழ்வுகளையும் ஒற்றை ஆளாய் மாறி மாறி நடித்துக் காண்பித்தாள்.

இத்தனைக்கும் அவள் வாய் திறந்து ஒரு வார்த்தையை கூட உச்சரிக்கவில்லை. ஒற்றை ஆளாய் முக, உடல் மொழி பாவனையில் ஹாஸ்யம் சேர்த்து நடித்து காட்ட குழந்தைகள் விழுந்து விழுந்து சிரித்தனர்.

அதுவும் அவள் பீதியாகி மயங்கி விழுந்த காட்சிக்கு, அவள் வெளிபடுத்திய பாவனையில் குழந்தைகள் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தனர். நாடகம் முடியவும் குழந்தைகள் எழுந்து நின்று கை தட்ட சூர்யா, அரை அங்குலம் குனிந்து அவர்கள் பாராட்டை ஏற்றாள்.

முதலில் பிள்ளைகள் மட்டுமே இருந்த இடத்தில் இப்பொழுது சில பெரியவர்களும் நின்றுக் கொண்டிருக்க, “ஓகே சுட்டீஸ். பாய். அக்காவுக்கு நேரம் ஆச்சு. நாம இன்னொரு நாள் மீட் பண்ணலாம். சரியா.’’ என்றவள் அங்கிருந்து கிளம்ப முயன்றாள்.

குட்டிகள் அனைவரும் அவளிடம் தனித்தனியாய் கை கொடுத்து விடை பெற, தன் முன் நீண்ட வலிய கரத்தினை கண்டு சூர்யா துணுக்குற்று நிமிர்ந்தாள். நிமிர்ந்தவளின் உள்ளம் ஆயிரம் வோல்ட் மின்சார அதிர்ச்சியை உள் வாங்கியது.

இதுவரை அவன் முகத்தில் அவள் பார்த்தறியா சிநேக சிரிப்போடு முகிலன் நின்றுக் கொண்டிருந்தான். காவலர் சீருடை அவன் கம்பீரத்தை இருமடங்காய் அதிகரித்து இருந்தது.

எதிர்வினை ஆற்ற முடியாமல் அவள் உறைந்து நிற்க, அவனே அவள் கரம் பற்றி குலுக்கினான். அப்பொழுது தான் அவன் தோள்களில் தொற்றி இருந்த குழந்தையை கண்டாள்.

“எங்க பாப்பா உங்களுக்கு விஷ் பண்ண சொன்னாங்க. ரொம்ப நல்லா ஆக்ட் பண்றீங்க. சைன் லாங்குவேஜ் தெரியுமா..?’’ அவன் கேள்வி கேட்க, சிரமப்பட்டு தன் உதடு பிரித்தாள்.

“இல்ல... அதெல்லாம் தெரியாது சார். எங்க தாத்தா கூத்து நடத்துவார். சின்ன வயசுல இருந்து அவங்க ப்ராக்டீஸ் பண்றதை எல்லாம் பார்ப்பேன். அவ்ளோ தான். தாங்க்ஸ் சார்.’’ என்றவள் திரும்பி நடக்க, அவளின் கரம் பற்றி இழுத்தாள் முகிலனின் தோளில் தொற்றி இருந்த நித்ய கல்யாணி.

சூரி முதலில் சமநிலை தவறி, பின்பு சரியாய் நிற்க, தன் மாமனின் தோள்களில் இருந்து தலையை முடிந்த அளவு குனிந்து சூரியின் கன்னத்தில் அழுத்தமாய் முத்தமிட்டாள் நித்யா.

அவளின் அதிரடி செய்கையை எதிர் பார்க்காத முகிலனும், சற்றே தடுமாறி சமநிலைக்கு மீண்டவன், அவளை பார்த்து ‘நீ செய்தது சரி அல்ல’ என்று விழிகளால் மொழிய, அந்த குழந்தையோ பதிலுக்கு மனிப்பு வேண்டுவதை உணர்த்த தன் காது மடலை கட்டை, மற்றும் ஆள்காட்டி விரல் கொண்டு பற்றினாள்.

இவர்கள் ஏன் இப்படி பேசிக் கொள்கிறார்கள் என்பது சூர்யாவிற்கு கொஞ்சமும் புரியவில்லை. ஆனாலும் முடிந்த அளவு அங்கிருந்து கிளம்பவே விரும்பினாள். அவனின் அருகாமை அவளுள் பதட்டத்தை கிளப்பியிருந்தது.

மீண்டும் சூர்யா முகிலனிடம், “நான் வறேன் சார்.’’ என்றவள் குழந்தையின் கன்னத்தில் லேசாய் தட்டிவிட்டு விடை பெற, “தப்பா எடுத்துக்காதீங்க. சாரி . எங்க நித்திக்கு கொஞ்சம் குறும்பு அதிகம்.’’ என்று விட்டு முகிலன் நட்பாய் சிரிக்க, சூரியின் உள்ளத்தில் அதே மின்சார பாய்ச்சல்.

“இட்ஸ் ஓகே சார். சின்ன குழந்தை தானே. நான் ஒன்னும் தப்பா எடுத்துக்கல‘’ என்றுவிட்டு சூர்யா மெலிதாய் முறுவலிக்க, “நாளைக்கும் இதே நேரம் இங்க வருவீங்களா..?’’ என்று தன் அடுத்த கேள்வியை கேட்டு சூர்யாவை தேங்க வைத்தான்.

அவன் அப்படி கேட்டதும் சூர்யாவின் முகம் அப்பட்டமாய் அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. அவள் அதிர்ந்த முகத்தை கண்டவன், “ இன்னைக்கு நித்தி அதிகம் சுத்த வைக்காம ஒரே இடத்துல இருந்தே சாப்பிட்டா. அதான் கேட்டேன். சி லைக்ஸ் யுவர் மோனோ ப்ளே. வேற எதுக்கும் கேக்கல. தப்பா இருந்தா சாரி.’’ என மீண்டும் மன்னிப்பை வேண்டினான்.

சூர்யா சற்றே சமன்பட்ட மனதோடு, “இட்ஸ் ஓகே சார். எனக்கு இன்னும் ஒன் வீக் ஆபிஸ் லீவ் தான். முடிஞ்சா கண்டிப்பா வறேன்.’’ என்றவள், “பாய் நாட்டி..’’ என்று நித்தியின் மூக்கை பிடித்து ஆட்டிவிட்டு பூங்காவை விட்டு வெளியேற துவங்கினாள்.

வெளியேறி நடக்கையில் எப்படி உணர்கிறோம் என்று அவளுக்கே புரியவில்லை. கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக இவன் நம்மிடம் நின்று ஒரு வார்த்தையாவது இயல்பாக பேச வேண்டும் என்று தோழிகளோடு இணைந்து கட்டம் கட்டி திட்டம் போட்டதென்ன.

அத்தனையும் பாய் போட்டு தரையோடு தரையாய் படுத்துக் கொள்ள, இன்று எவ்வித எதிர்பார்ப்பும் இல்லா இந்த சந்திப்பு அவளை முற்றிலும் நிலை குலைய வைத்திருந்தது.

உண்மையில் இப்போது அவளுக்கு அவளை குறித்தே பயம் வந்திருந்தது. முகிலனுக்கு பேரங்காடியில் திருடனின் பின்னால் ஓடிய பெண் என்ற அளவில் கூட அவள் முகம் அவன் மனதில் பதியாதது ஏனோ ஒரு வகையில் ஆறுதலாய் கூட இருந்தது.

அறையை அடைந்ததும் இழுத்துப் போர்த்திப் படுத்துக் கொண்டாள். அன்றைக்கு தோழிகள் பணி முடித்து திரும்பியதும் நிகழ்ந்தனவற்றை முழுதாய் ஒப்பித்து முடித்தாள்.

“நீ சொன்னது சரி தான் கார்த்தி. இந்த முகிலன் எல்லாம் என் லைப்புக்கு சரிபட்டு வர மாட்டார். அவர் கொஞ்சம் பக்கத்துல வந்தாலே பட படன்னு இருக்கு. என்னவோ ஒரு மாதிரி என்னால ரிலாக்சாவே இருக்க முடியல. பேசாம பிளானை எல்லாம் வித் ரா பண்ணிட்டு அண்ணன் அனுப்பி இருக்க போட்டோஸ்லாம் பார்த்து யாரையாவது சீக்கிரம் சூஸ் பண்றது பெட்டர்ன்னு தோணுது.

கல்யாணம் ஆனாலே எல்லாம் சரியாயிடும்னு நினைக்கிறேன். யாரோ ஒருத்தனை பழி வாங்குறதா நினச்சி.. நமக்கு கொஞ்சமும் ஒத்து வாராத ஒருத்தர் பின்னாடி தெரு தெருவா தேவையில்லாம சுத்துற மாதிரி இருக்கு. சாரி இதுல உங்களை எல்லாம் வேற அலைய வச்சிட்டேன்.’’ என்று சூரி உணர்ந்து மன்னிப்பை வேண்ட, மற்ற மூவரும் அவள் அருகில் வந்து அமர்ந்தனர்.

அவள் கரத்தின் மேல் தன் கரம் கொண்டு அழுத்திய ரம்மியோ, “ஹே..! என்ன இதெல்லாம். நமக்குள்ள எப்பவும் நோ தாங்க்ஸ்.. நோ சாரின்னு நீ தான சொல்லுவ. இட்ஸ் ஓகே பேபி. உனக்கு வேண்டாம்னா பிளானை ட்ராப் பண்ணிடலாம். சூரி ஹாப்பி அண்ணாச்சியா இருந்தா போதும்.’’ என்றவள் சற்றே எம்பி சூரியின் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.
“ஹே... சூரி பிளானை ட்ராப் பண்ணிட்டா. அடுத்த பிளானுக்கு இனி விடிய விடிய யோசிக்கமா குறட்டை விட்டு தூங்கலாம்.’’ என ராவி குதூகலிக்க, அவள் புட்டத்தில் ஒரு எத்து விட்ட கார்த்தி, “விடிய.. விடிய கொரியன் சீரியல் பாத்துட்டு கதை விடுது பாரு நாயி’’ என்று கலாய்த்தாள்.

தன் பின்புறத்தை தேய்த்துக் கொண்டே எழுந்து நின்ற ராவி, “ஏதோ ஒன்னு... முழிச்சிட்டு இருந்தேன் இல்லடி. சூரி இந்த வைக்கபோர் மூட்டை என்னை உதைக்குறா என்னன்னு நீ கேக்க மாட்டியா?’’ என விளையாட்டாய் கண்களை கசக்கினாள்.

“சரி..! சரி..! அமைதியா இருங்கடி. ரொம்ப நாளைக்கு அப்புறம் சூரி செம ஜாலி மூடுக்கு ட்ரான்ஸ்பராகி இருக்கா. சோ இன்னைக்கு எல்லாருக்கும் என்னோட ட்ரீட். சொமாட்டோல ஆர்டர் பண்ணலாம். வாங்க..! வாங்க..! என்ன வேணும்னு சொல்லுங்க.’’

சூர்யா சொன்ன அடுத்த நொடி, ராவி முதலில் தாவிக் கொண்டு வந்து ஐஸ்கிரீம் வகையில் மட்டும் ஒரு நான்கு வகை ஐஸ்கிரீம்களை முன் பதிவு செய்தாள்.

வெகு நாட்களுக்கு பின் அந்த அறை ஆட்டமும், பாட்டமுமாய் அமர்க்களப்பட்டது. அதுவும் பாவனைகளின் ராணியான சூர்யாவை, ‘கண்ணே.. தொட்டுக்கவா.. கட்டிக்கவா.. கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா..’ என்ற வனிதாமணி பாடலுக்கு ஆட விட அவள் முகம் வெளிப்படுத்திய பாவங்களில் மூவரும் அவளை சுற்றி சுற்றி வந்து ஆடினர்.

அதிலும் கார்த்தி, “மச்சி.. நான் மட்டும் பையனா இருந்தேன்னு வையேன். இந்நேரம் உன்னோட குலு குலு.. ஜலு ஜலுன்னு என்ஜாய் பண்ணி இருந்து இருப்பேன். ஆனாலும் உன் புயூச்சர் ஹஸ்பன்ட் ரொம்ப லக்கி பெலோடி. உன் மூஞ்சை பார்த்தாலே மனுசனுக்கு மூடு தாறு மாறா ஏறும்.’’ என்றுவிட்டு ஒரு மார்க்கமாய் கண் அடித்தாள்.

“ஏறும்டி ஏறும்..! இப்ப நான் கொடுக்குற உதையில உன் வயிறு அப்படியே உச்சி கபாலத்துக்கு ஏறும். நக்கலா பண்ற.. நில்லுடி காட்டெரும,,!’’ என்று அவளை துரத்திக் கொண்டு ஓடினாள்.

யார் யாரை எதற்கு அடிக்கிறார்கள் என்று புரியாமலேயே தலையணைகளை ஆயுதமாய் கொண்ட அவர்களின் விளையாட்டு போர் துவங்கியது. களைப்படைந்து சண்டை ஓயும் போது, அவர்கள் ஒரே படுக்கையில், ஒருவரின் மேல் ஒருவர் சரிந்தபடி ஒன்றாய் உறங்கியும் போனார்கள்.

உறக்கத்தில் விழுவதற்கு சரியாய் ஒரு நொடிக்கு முன்னால், “நீங்க நாளைக்கும் இதே நேரம் இங்க வருவீங்களா..?’’ என்ற முகிலனின் முகம் சூர்யாவின் மனத்திரையில் தோன்றி கேள்வி எழுப்பியது.

“நாளைக்கு ரூமை விட்டு எங்கயும் போக கூடாது.’’ என்று திடமாய் மனதிற்குள் முடிவெடுத்தவள் அதே திடத்தோடு உறங்கியும் போனாள்.

அப்போது அவள் அறியவில்லை. போடும் எந்த கோட்டிற்க்குள்ளும், வாழ்வானது கட்டுப்பட்டு நிற்பதில்லை என்பதை.

கரெக்ட் செய்யப்படுவான்.




 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
மேக்னா சுரேஷ் டியர்
 




Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
Vetri karama Suri mugil meeting agiyachu???
 




Baladurga Elango

அமைச்சர்
Joined
May 7, 2018
Messages
1,666
Reaction score
2,833
Location
Chennai
Nithi deaf and dumb pola. Let's see super update
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top