• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode தஞ்சம் மன்னவன் நெஞ்சம் 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Priya kumar

SM Exclusive
Joined
Mar 6, 2019
Messages
350
Reaction score
2,215
Location
Madurai
View attachment 9759



அத்தியாயம் 6


மதுமதிக்கு அன்று தேர்வு நாள் பற்றிய அறிவிப்பு வெளியானது.மதுமதி பட்டமேற்படிப்பில் கணினி மேலாண்மை தேர்வு செய்திருந்தாள். மறுநாள் இறுதித் தேர்வு என்று இருந்த நிலையில் அன்று மாலை வீடு வரும்போதே நல்ல காய்ச்சலில் வந்தவள், ஒரு வாரத்திற்கு வைரஸ் காய்ச்சலால் படுத்துவிட்டாள். இறுதித் தேர்வை எழுத முடியாமலே போய்விட்டது.

எனவே அடுத்த செமஸ்டரில் தேர்வினை எழுத முடிவு செய்திருந்தாள்.அஞ்சுகத்திடம் தேர்வினை பற்றிக் கூறியதும் வெற்றிவேலிடம் தெரிவிக்கச் சொல்லி இருந்தார். இரவு உணவிற்குப் பின் மாடி ஏறி வந்தவள் வெற்றிவேலின் முன் சென்று விட்டத்தைப் பார்த்துக் கொண்டே ,”மண்டே எனக்கு எக்ஸாம் இருக்கு ...மதுரைக்கு போகணும்…” என்றாள்.

அதற்கு எந்த பதிலும் இல்லாது போகவே அவனைப் பார்த்தாள் மதுமதி…. அவன் ஏதோ ஒரு கோப்பை புரட்டிக்கொண்டே வரவு செலவு கணக்குகளை பார்த்துக்கொண்டிருந்தான்.
“உங்ககிட்ட தான் சொல்றேன்….” பல்லைக் கடித்துக்கொண்டு கூறினாள் மதுமதி.

அவளது குரலில் கோபத்தைக் கண்டவன்
நிமிர்ந்து…..”ம்ம்ம்…..என்ன சொன்ன…. ஏதோ அந்த விட்டத்தில இருக்கிற பல்லி கிட்ட பேசிகிட்டு இருக்கனு நெனச்சேன்….”

‘நீ என் முகத்தை பார்த்து பேச வில்லை ‘ என்று குற்றச்சாட்டு மறைந்திருந்தது.. அவன் பேச்சில்…

‘ஜோக்கா…. சரி அப்புறமா கண்டிப்பா சிரிக்கிறேன்….. ‘என்று பதிலடி கொடுத்திருப்பாள்...பழைய மதுமதி ஆக இருந்திருந்தால்….

ஆனால் தற்போதைய மதுமதியால் அப்படி அவ்வளவு இலகுவாக அவனிடம் பேசி விட முடியாது…அவன் பேசியது காதில் விழாதது போலவே….

“ மண்டே எக்ஸாம் இருக்கு... மதுரைக்கு போகணும்….” என்றாள் மீண்டுமாக….
“ சரி போயிட்டு வந்துடலாம்….வேறு என்ன வேணும்னு சொல்லு ….செய்யிறேன்…. “ என்றான் .

“நீங்க எதுவுமே செய்யாமல் இருக்கிறது தான் எனக்கு வேணும்... அப்புறமா நானே சென்டருக்கு போய்க்கிறேன் …..யாருடைய உதவியும் எனக்கு வேணாம்….”

“ ஏய்….ரெண்டரைமணி நேர டிராவல்….தனியாய் எப்படி போவ…” கோபத்தின் சாயல் தென்பட்டது வெற்றிவேலிடம்…
“ யார்ன்னே தெரியாதவங்கள விட நல்லா தெரிஞ்சவங்கதான் எனக்கு கெடுதல் செஞ்சிருக்காங்க...எனக்கு தனியா போய்க்க தெரியும்…. “ பிடிவாதமாய் கூறிவிட்டுப் போய் படுத்து விட்டாள் மதுமதி. “ச்சே…..” வெற்றிவேலின் கோபத்தில் கட்டிலில் கிடந்த தலையணை பறந்தது….

தேர்வு நாள் வந்தது ….கூடவே மதுமதி தேர்வுக்கு செல்ல கூடாது என்று எதிர்ப்பும் வந்தது... அவள் சற்றும் எதிர்பார்த்திராத இடத்திலிருந்து….

விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சியினர் அன்று வேலை நிறுத்தம் என்று அறிவித்திருந்தனர் .அரசாங்க பந்த் இல்லை என்பதால் தேர்வில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் பந்த் நாளன்று மதுமதி தனியே வெளியே சென்று எந்தவிதமான அசம்பாவிதங்களிலும் மாட்டிக்கொள்ளக் கூடாது... என்று அஞ்சுகம் கூறிவிட்டார் மதுமதி ….எவ்வளவோ கெஞ்சி பார்த்தும் அவர் அசைந்து கொடுக்கவில்லை. மதுமதிக்கு இயலாமையில் கண்ணீர் துளிர்த்துவிட்டது.

இதைக் கண்ட குலசேகரன், “அம்மாடி மது …..இதுக்குப் போயி ஏன் கண்ணக் கசக்குற தாயீ...நான் உன்னைய பத்திரமா கூட்டிட்டு போயி பரிட்சை எழுத வச்சு கூட்டியாந்துருவேன்…” என்றார்.

இதனை கேட்டு கொதிப்படைந்த அஞ்சுகம் தன் நெற்றிக்கண்ணை திறந்து கணவரை உறுத்து விழித்தார். அவர் பார்வைக்கு மட்டும் சக்தி இருந்திருந்தால் குலசேகரன் அந்த இடத்திலேயே பிடி சாம்பலாய் போயிருப்பார் .இதனை கண்ட குலசேகரன்,

“ இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன்னு... இவ இந்த முறை முறைக்கிறா….” என்று சிந்தனையில் ஆழ்ந்தார் குலசேகரன் .

மகனுக்கும் மருமகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லாமல் இருப்பதை கவனித்து கொண்டு தான் வந்தார் அஞ்சுகம். அவர்களது பந்தத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வது எப்படி என்று சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில்தான் தேர்வு அறிவித்திருப்பதைப் பற்றி கூறினாள் மதுமதி.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மருமகளை மகனோடு தேர்வுக்கு அனுப்பி வைத்தால் எப்படியும் அவர்கள் பேசித்தான் ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே ….மதுமதி அந்த எண்ணத்தில் மண்ணைக் கொட்டி ,’தான் தனியாக செல்லப் போவதாக’ அறிவித்தாள்….

இந்நிலையில் அன்று பந்த் அறிவிக்கப்பட்டு விடவே மதுமதியின் பாதுகாப்பு கருதி அவள் தேர்வுக்கு செல்வதானால் வெற்றி வேலுடன் மட்டும் தான் செல்ல முடியும் இல்லாவிட்டால் தேர்வுக்கு செல்ல வேண்டாம் என்று ‘ செக்’ வைக்க முடிவு செய்து இருந்த வேளையில் குலசேகரன் இடையில் புகுந்து குட்டையை குழப்பினால் அஞ்சுகம் வெகுண்டெழத் தானே செய்வார்.

“இல்ல ...இல்ல... உங்களுக்கு இன்னைக்கு வயலில் வேலை இருக்கு இல்ல... மறந்துட்டியளா…” என்று குலசேகரனை ஒரு பார்வை பார்த்தார் .

அந்தப் பார்வையில் ஆமாம் என்று கூறாவிட்டால் இன்று முழுவதும் சோறு கிடையாது என்ற செய்தி இருந்தது.குலசேகரனுக்கு வீட்டு சாப்பாட்டைத் தவிர வெளிச் சாப்பாடு எதுவும் உடம்பிற்கு ஒத்துக் கொள்ளாது ….எனவே அதில் அரண்டு போனவராக ….
“ஆமா... ஆமா...மது இன்னைக்கு வயலில் ஏகப்பட்ட வேலை இருக்கு... நான் அதை மறந்தே போனேன் பாரு….என்று கூறிவிட்டார்.

மது வேறுவழியில்லாமல் கதிரை ஏறிட்டுப் பார்த்தாள் …. கதிருக்கு அஞ்சுகம் ஏதோ திட்டமிடுகிறார் என்று புரிந்து விட்டது….எனவே அவள் பார்வையை சந்திக்காமல் நழுவி விட்டான்…

இறுதியாக இருப்பது வெற்றிவேல் மட்டும் தான் ….அவனோ தனக்கும் இதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை எனும் பாவனையில் தன் தட்டில் வைக்கப்பட்டிருந்த சாம்பார் சட்னியில் குளித்திருந்த இட்லியில் கவனமாக இருந்தான்..
மதுமதி அந்தச் சூழ்நிலையை வெறுத்தாள்.. அன்று வீராப்பாக ‘ உன்னிடம் இருந்து எனக்கு எந்த ஒரு உதவியும் வேண்டாம்’ என்று கூறிவிட்டு இன்று எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவனிடம் சென்று நிற்பது….

இயலாமையினால் தளர்வாக மாடி ஏறி சென்று விட்டாள்... அவளை பின்தொடர்ந்து மேலே சென்ற வெற்றிவேல், கைகளால் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த மதுமதியை நெருங்கிச் சென்று ,
“கிளம்பு…” என்றான்.
அவனுடைய குரலில் நிமிர்ந்து பார்த்தவளிடம், “ எக்ஸாமுக்கு நேரம் ஆச்சுல்ல... கிளம்பு…” என்றான்..
அடுத்த பருவமுறையில் பாடத்திட்டங்கள் மாறக்கூடும்..அதன் பின்னர் இவள் தேர்வு எழுதுவது சிரமமாகிவிடும்.எனவே மதுமதி தன் மாமனார் மாமியாரிடம் விடை பெற்றுக் கொண்டு தேர்வுக்கு கிளம்பி விட்டாள்...

அவர்களை வழி அனுப்பி விட்டு திரும்பிய குணசேகரனுக்கு அப்போதுதான் அஞ்சுகத்தின் திட்டம் புரிந்திருந்தது.
மனைவியிடம் சென்று பேச விழைந்தவரைக் கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டார் அஞ்சுகம் .

“இப்ப எதுக்கு மூஞ்சிய திருப்பறவ…” என்றார் குலசேகரன்.
“பேசாம போயிருங்க…. எனக்கு நல்லா வந்துரும் வாயில... சின்னஞ்சிறுசுக கல்யாணம் ஆகி இத்தனை நாள் ஆகியும் ஆளுக்கொரு திசையாக பிரிஞ்சு இருக்குக... இதை பார்க்கவா பெரிய மனுஷங்கன்னு நாம இருக்கோம்... ரெண்டு பேரையும் சேத்துப்புடணுமுன்னு நான் தலையால தண்ணி குடிச்சுக்கிட்டு இருக்கேன் ….நீங்க உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை... உள்ளே புகுந்து கெடுக்காமல் இருக்கலாம்... என்றவரை, என்றும் போல் மனைவியின் பொறுப்பினை பார்த்து சிலாகித்துப் பார்த்தவர் …

"சரி விடுடி...நான் தேன் கூறுகெட்டுப் போய் பண்ணிட்டேன்….விட்டுத்தள்ளு..." என்று அவரிடம் தழைந்து பேசினார்...

மனைவியிடம் தழைந்து போகும் கணவன்மார்கள் வாழ்க்கையில் என்றுமே தோற்பதில்லை... கணவனை பார்க்க விடாமல் தாங்கிப் பிடிக்கும் மனைவிகளும் இன்றும் என்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்…

மதுமதியினை தேர்வு அறைக்குள் அனுப்பிவிட்டு அங்கேயே இருந்து அவள் தேர்வு எழுதி முடித்தவுடன் மீண்டும் அழைத்து வந்தவன் ஒரு உணவகத்தின் முன்பு காரை நிறுத்தினான்…
அதை கண்ட மதுமதி…”எனக்குப் பசிக்கல….”என்று அறிவித்தாள்.

“ எனக்கு பசிக்குது…” என்று கூறியவன் காரின் அவள் பக்க கதவை திறந்து விட்டு நின்று கொண்டே இருந்தான்... வேறு வழியின்றிதான் காரிலிருந்து இறங்கினாள் மதுமதி …
ஆனால் உணவு மேசையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த உணவுகளை பார்த்ததும் அவள் அனுமதி இன்றியே அவள் கரங்கள் உணவினை வயிற்றுக்குள் அனுப்ப துவங்கிவிட்டது... அப்போதுதான் தன் பசியை அவள் உணர்ந்தாள்.உணவு முடித்து மீண்டும் கார் பயணத்தை தொடர்ந்த போது மதுமதி கண்களை சுழற்றிக் கொண்டு வந்தது .

தேர்விற்கு இரவு வெகுநேரம் கண்விழித்து படித்ததால் அப்படியே தூங்கிவிட்டாள்மதுமதி... கார் பயணத்தின் குலுக்கலில் தன்னையும் அறியாமல் வெற்றிவேலின் தோளில் சாய்ந்து விட்டாள். அவள் சாய்ந்து கொள்ள வசதியாக சற்று இறங்கி அமர்ந்தான் வெற்றிவேல். வீடு வந்து சேர்ந்த பின்பும் மதுமதி கண் விழிக்கவே இல்லை.

அவளை எழுப்ப மனமின்றி அவளை தூக்கிக்கொண்டு அறை வரை சென்று விடலாம் என்று எண்ணி அவளை நெருங்கியபோது கண் விழித்து விட்டாள் மதுமதி…

தன் தோளிலும் இடையிலும் இருந்த வெற்றிவேலின் கரங்களைக் கண்டவள் வெகுண்டெழுந்தாள்….
“இதுக்காக….இதுக்காகத்தான் உங்க கூட வர மாட்டேன்னு சொன்னேன்….” தூங்கிட்டு இருக்கும்போது...ச்சே…. இனிமே என்னை தொட்டீங்க….நடக்கிறதே வேற... “ என்று கூறிவிட்டு கோபத்துடன் தன் அறைக்குச் சென்று விட்டாள்.

மறுநாள் தானேஅவன் கையை வளைவிற்குள் நெருங்கி நிற்க போவதை அறியாமல்…..


-தொடரும்...

சென்ற அத்தியாயத்திற்கு லைக்ஸ் மற்றும் கமண்ட்ஸிட்ட அனைத்து நட்புக்களுக்கும் பற்றபல நன்றிகள்...படித்து விட்டு தங்கள் மேலான கருத்துக்களை பகிருங்கள்...தங்கள் கருத்துக்களை ஆவலுடன் எதிர் நோக்கும் பிரியா குமார்
 




Attachments

Last edited:

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top