• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திருப்பம்

  • Thread starter திருப்பம்
  • Start date

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

திருப்பம்

Guest
கோவாவின் அவுட்டரில் அமைந்த, அந்த சுமாரான ஓட்டலின் நான்காவது மாடியின், ஓர் அறையில் ஒலிக்கும் பாடல் அந்த ப்ளோர்யே அதிர செய்து கொண்டிருந்தது. அந்த அறையை கடந்து செல்கையில், அங்கு தொங்கிய 'டூ நாட் டிஸ்டர்ப்' போர்டை பார்த்து அந்த சர்வர் வாய் விட்டே திட்டி விட்டு நகர்ந்தான். அந்த அறையினுள் இருந்த ரவிக்கோ அவன் கண் முன்னிருந்த பாரின் சரக்கை தவிர எங்கும் கவனம் கலைய வில்லை.
" என்ன தான் பணம் நாளும் கணக்க தாண் செய்யுது, எல்லா நோட்ஸும் தவுசண்ட் நாள சமாளிச்சிட்டோம், எப்படிடா கரெக்ட்டா மாட்ட போறோம்னு கண்டு புடிச்ச.."

தன சுருட்டை சுண்டி இழுத்த வாறே பேசினான் ஜெர்ரி, " நான் தான் சொன்னேனே எனக்கு எதோ உறுத்துதுன்னு.. அதுவும் நேத்து காலைலயே நூர் கமிஷனரை பாக்க போயிருக்கானு நியூஸ் வந்ததும் கன்பார்ம் பண்ணிட்டேன், அதான் உனக்கு கால் பண்ணி வீட்டை விட்டு வெளிய வர சொன்னேன். நான் நெனச்ச மாதிரியே நம்ம அர்ரெஸ்ட் பண்ண வீட்டுக்கு போலீஸ் வந்ததும் நாம இங்க வந்துட்டோம்.." மீண்டும் சுருட்டை இழுக்க முயல, அது அணைந்து போய் இருந்தது.

" நாராயணண்ட்ட சொல்லிருக்கலாம்.." மிக்ஸிங் ஊத்தியவாறு சொன்னான் ரவி,

" அவருக்கு பேமிலி குழந்தைனு ஏகப்பட்ட லக்கேஜ் .. ஓட முடியாது.. நம்மையும் மாட்டி விட்ருவாரு.."

" அவரு பங்க கொடுக்க போறியா .. என்ன " சிறிய நக்கலும் ரவியின் கேள்வியில் ஒளிந்திருந்தது..

" எல்லாம் சால்வ் ஆனா குடுக்கலாம் "

" ஏன்டா அவ்வளவு நல்லவனா நீ.."

தன் சுருட்டை பற்ற வைத்தவாறே சிரித்தான் ஜெர்ரி.

" சியர்ஸ்...." இருவரின் க்ளாஸும் வலிக்காமல் முட்டிக் கொள்ள, தன் கிளாஸை குடிக்க முனைகையில் ரவிக்கு தோன்றியது, ' ஒரு வேளை நம்மள போடு தள்ளிட்டு நம்மட்ட இருந்து எடுத்து நாராயணன் பங்க கொடுத்துருவானோ' தன் கிளாஸை ஒரு முறை வினோதமாக பார்த்தான், ' ச்சி .. நம்ம ஒன்னும் பண்ண மாட்டான்.. ' மனசாட்சி மறுத்தாலும், ஜெர்ரி குடிப்பதை உறுதி செய்த பின்னரே, தன் தொண்டைக்கு சரக்கை காட்டினான் ரவி.

****************************

சீரியலின் முக்கியமான கட்டத்தில் மூழ்கி இருந்த மேரியை , காலிங் பெல் சத்தம் வெறுப்பேற்ற.. முனகிய வாறே கதவை திறந்தாள்.

" ஹாய்.. ரொம்ப லேட்டா வந்துட்டேனா " நூர் புன்னகைத்தாள்.

" அதெல்லாம் இல்ல வாங்க மணி ஒன்பது தானே.. நியூஸ் பாத்தேன், நாராயணன் துப்பாக்கியை துடைக்கும் போது , தெரியாம வெடிச்சதுல செத்துட்டாராமே.."

" அப்டி தான் சொல்லிருக்காங்க மீடியாக்கு , ஐஜி க்கு ரிட்டையர்டு ஆகுற நேரத்துல போலீஸ் இமேஜ் கேட்டு போக கூடாதுனு ஆசை.. என்னவோ இமேஜ் ரொம்ப வாழுற மாதிரி.." அழுத்துக் கொண்டாள் நூர்.

" ஒ அப்போ அது பொய்யா..? "

" ம்ம்.. அந்த ஆளு சூசைட் பண்ணிகிட்டான் , நேத்து நைட் வர அதுலதான் பிஸி.. மத்தவங்களாம் எங்க.."

" மாமி துவைக்குறாங்க.. நிஷா அனிவெர்சரிக்கு விஷ் பண்லேனு அவ புருஷன துவைச்சுட்டு இருக்கா.. போன்ல.."

கல்யாண வாழ்க்கையின் காமெடியை நினைத்து மனதுக்குள் சிரித்தவாறே, " ஓ அப்டியா .." அன்றைய தேதி சட்டென மறந்து போக, அவள் மொபைல் '8 நவம்பர் 2016' என டிஸ்பிலேயில் தெரிவித்தது. அன்றைய தேதியை மொபைலில் குறித்துக் கொண்டாள் , அடுத்த முறை விஷ் பண்ணுவதற்கு.

" மத்தவங்களாம் என்ன ஆனாங்க மேடம்.."

" ஹும் .. எந்த நாயோ நேத்தே ஜெர்ரிக்கு இன்பர்மேஷன் கொடுத்திருக்கு, அவனும் ரவியும் எஸ்கேப் ஆயிட்டாங்க .. காசுக்கு கொலக்கிறதுக்கு டிபார்ட்மென்டல நாய்க்கா பஞ்சம் " சோபாவில் அமர்ந்தாள் சோர்வாக.

" அப்போ அடுத்து என்ன மேடம் பண்றது.."

சில நிமிடம் மவுனித்தவள், போலி புன்னகையுடன் தொடர்ந்தாள், " இனி ஒன்னும் பண்ண முடியாது, பணம் கிடைச்சா மட்டும் தான் இந்த விஷயம் வெளியவே வரும், அது வரை அவனை தேடி அலைய வேண்டி தான். கொஞ்ச நாள்ல எல்லாரும் மறந்துருவாங்க, கேசும் க்ளோஸ் ஆய்டும். " விரக்தி அவள் விழிகளில் நிறைந்திருந்தது.

" அவங்கள புடிக்கவே முடியாதா மேடம்.."

" அவ்ளோ பணத்தோட இந்தியால கல்லறைக்கு உள்ள கூட ஸ்டார் ஹோட்டல் சொகுசுல வாழலாம், சோ பேச்சுக்காக வேணா முடியும்னு சொல்லலாம், என்ன நீங்க கஷ்ட பட்டதுக்காச்சும்..."
' டமார்ர்ர்ர் ..' என கதவு திறக்கும் ஓசை அவளை நிறுத்த, வேகமாய் வந்த நிஷா நூரை சற்றும் கொண்டு கொள்ளாது, ரிமோட்டை தேடி பிடித்து சேனலை மாற்ற, ' சீரியலில் இவ்வளவு வெறியா..' என நினைத்த நூர் டீவியை பார்த்ததும் உறைந்து போனாள் , அவள் விழித்திரையை மறைத்திருந்த விரக்தி விலக, இதழ்களும் விரிந்தது புன்னகையில்.

***************************************

மறுநாளில் காலை சூரியன் ஜன்னல் வழியாக எட்டி பார்க்க, எரிந்து போன சிகரெட் துண்டுகளுக்கும் காலியான சரக்கு பாடில்களுக்கும் நடுவில் கண் விழித்தான் ரவி. போதை இன்னும் அவனை விட்டு விலகாமல் முரண்டு பிடித்து கொண்டிருந்தது. நேத்து எரித்த சிகரெட் குடும்பத்தில் ஏதேனும் தப்பி பிழைத்ததா என தேடித் பார்த்தான். ஏமாற்றமே கிடைத்தது. தன் பர்சை தேடி , திறந்தான். உள்ளே பணமின்றி, பொக்கை வாய் கிழவனை போல கொட்டாவி விட்டது. ' நம்மிடம் இல்லாத பணமா ' என்று கொள்ளையடித்த பணத்திலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

டப்பென ரூபாயை வைத்து , " ஏக் சிகரட் பாக்கெட் " என்றான். கடைக்காரன் ரூபாயை திருப்பி அதே ஒலியில் டப் என வைத்து இந்தியில் ஏதோ சொன்னான். அவன் சொன்னதில் நஹி நஹி மட்டும் புரிந்தது 'போதையில் தமிழே ததுங்கினதோம் ஆடும் இதுல இந்தி வேறயா , சில்லரை இல்லையோ' என நினைத்தவன் மீண்டும் ரூபாயை அவன் கையில் திணித்து

" பத்து பாக்கெட்.. சில்லரை வேணாம் " என வராத இந்தி வாயிலும், மவுன பாசை கையிலுமாக சொல்லி முடித்தான். மீண்டும் புரியாத இந்தி இம்முறை பெரிய சலிப்புடன். 'என்னடா எலவா போச்சு' என வாய் விட்டே சலித்தான் ரவி.

" என்ன சார் தமிழா.." என்றான் பக்கத்தில் நின்ற லாரி ட்ரைவர்.

இவன் ஆமாம் என தலையை ஆட்ட, நிலைமையை புரிந்த ட்ரைவர். " என்ன சார் நியூஸ் பாக்கலியா.. ஆயிரம், ஐநூறுலாம் இனி செல்லாது, ஏதோ டிமாண்டி..ஸ்டேஷனாம்"

'டி..மாண்டி... ஸ்டேஷனா' புரியாமல் விழித்தவன் கண்ணில் அன்றைய பேப்பர் ஹெட்லைன்ஸ் விழ ,

PM ANNOUNCES DEMONETISATION.. 1000 AND 500 NOTES BANNED

வாசித்து முடிக்கவும் தலை சுற்ற தொடங்கியது, இம்முறை போதையில் அல்ல அதிர்ச்சியில்.

" என்ன சார்.. இடி விழுந்த மாதிரி பாக்குறிங்க.. ஒன்னும் மேட்டர் இல்ல, இந்த நோட்டை எடுத்துட்டு போய், பாங்க்ல ஆதார் கார்டு, ஒட்டு அட்டை, பர்த் சர்டிபிகேட், டெத் சர்டிபிகேட் எல்லாம் கொடுத்து, நாலு மைல் க்யுல , நாய் மாதிரி நின்னிங்கனா , நாளைக்கு சாயங்காலத்துல மாத்தி கொடுத்துருவாங்க.. ரொம்ப ஈஸி. " அவன் சொன்னது ஏதும் ரவி காதில் விழ வில்லை ங்கோஈஈ.... என இரைந்தது.

" நம்ம ஊரா போய்ட்டிங்க.. இந்தாங்க.." சிகரெட்டை நீட்டினான்.

" அடிச்சிட்டு பாதி கொடுங்க.."

ரவி சிகரெட்டை பார்த்தான், அவன் முகத்தை பார்த்தான், பாக்கு கரை படிந்த பற்களில் சிரித்தான். மீண்டும் சிகரெட்டை பார்த்தான் வாங்க சொல்லி கை உறுத்தியது.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
ஜாலன் டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஜாலன் டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top