தேடுகிறேன்

#1
"தொலைத்த
இடம் தெரியும்
தொலைந்த பொருள்
தெரியும்
தொலைநோக்கியால் கூட
தொடர்பு கொள்ளமுடியவில்லை
என் இதயத்தை"

"தொலைத்த பொருளை
தன்னுடையதாய்
என்னுடையவன்
மாற்றிக்கொண்டான்
அவன்
இதயத்துள்
அடைக்கலம் அளித்து
அழகாய் அடைக்காக்கிறான்"

"இருக்கும் இடம்
அறிந்தும் எடுத்திட
முடியவில்லை
என் இதயத்தை
என்னவன் தான்
இதயத்திற்க்கு
நேசத்தால்
நீண்ட மதில்
கட்டிவிட்டானே"

"தேடுகிறேன்
தொலைத்தை இதயத்தை
என் கையில் சேருமா
என் இதயம்?
என்னவன் காதலில்
காணாமல் போகுமா?
விடை தேடி நான்"
 

Advertisements

Latest updates

Top